(Reading time: 22 - 44 minutes)

ப்பொழுது சற்று பெரிதாக நகைத்த சரண், " ஹ்ப்பா.. இப்பொழுதுதான் துளசி, எனக்கு நிம்மதியாக இருக்கிறது.. எங்கே இந்த ஒன்பது மாதமும் தினம் தினம் உன்னுடன்.. வார்த்தையாட வேண்டுமோ என்று பயந்திருந்தேன்? கடவுள் இந்த சின்ன பையனைக் காப்பாற்றினார்.. உலகம் பிழைத்து போகட்டும்"

தினம் தினம் சண்டை போட என்ற வார்த்தைகளை கண்ணியமாக தவிர்த்தவனை புரிந்து கொண்டு,

"எதற்கு உலகம் பிழைக்க வேண்டும்.. நீங்கள் ஒருத்தர் என்னுடன் பிழைத்தால் போதாதா?" என்று சொல்லி விட்டு சட்டென்று நாக்கை கடித்தவள், 'அய்யோ, என்னை தப்பாக நினைத்து இருப்பானோ? நடை பயிற்சியை நிறுத்தி விட்டு அவன் முகம் நோக்கினாள்.

புரிந்தும் புரியாதது போல் அவள் பேசியதை கண்டு கொள்லாமல், "என்ன நின்று விட்டாய்.. அதற்குள் கால் வலிக்கிறதா?.. வேண்டுமானால் சிறிது நேரம் உட்காருகிறாயா?"

"இல்லை இல்லை" தலையாட்டியபடியே நடையை தொடர்ந்தாள்.

மீண்டும் சரண், "துளசி எனக்கு இப்பொழுதுதான் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது.. எனக்கு பெண்களுடன் பேசி அவ்வளவு பழக்கம் இல்லை.. எப்படி உன்னை சமாளிப்பது என்று பயந்து கொண்டிருந்தேன்.. அம்மாவிடம் மட்டும் தான் நான் நெருங்கி பழுகுவதே.. நல்ல வேளை, நீ இப்பொழுது சகஜமாகி விட்டாய்".

"வா, துளசி.. அந்த பெஞ்சில் உட்காரலாம்", என்று சட்டென்று அவள் கையைப் பற்றிக் கொண்டு இழுத்துக் கொண்டு அவளை அமர வைத்தவன், தானும் அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான்.

முதன் முறையாக அவள் கையை பற்றியவன் தன்னை உணராமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. துளசியோ, கணவனே ஆனாலும் ஆடவன் ஒருவனது முதல் ஸ்பரிசத்தில் மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்து முகம் சிவக்க தலையை குனிந்து கொண்டாள்.

"துளசி, உனக்கு இந்த வீடு பிடித்திருக்கிறதா? உனக்கு ஏதாவது வசதி குறைவு இருந்தால் என்னிடம் சொல்லு.. உனக்கு பிடித்தபடி செய்கிறேன்.. உனக்கு வேறு எது வேண்டுமானாலும் சொல்லு.. எனக்குத் தெரியும் நீ பாட்டியை ரொம்ப மிஸ் செய்கிறாய் என்று.. நாங்களும் கரணை மறக்க முடியாமல் தவிக்க்கிறோம்.. என்ன செய்வது.. காலம் எல்லாவற்றையும் மறக்க செய்யும்.. பார்ப்போம். துளசி.. நீ என்ன படித்திருக்கிறாய்.. சாரி.. பார், எவ்வளவு சீக்கிரமாக கேட்கிறேன்.. இந்த கரண் செய்து வைத்திருந்த குளருபடியில் உன்னை பற்றி பெரிதாக தெரிந்து கொள்ளவில்லை".

"உம்.. நான் பி.எஸ்.சி கணிதம் படித்திருக்கிறேன்.. அங்கே எங்கள் வீட்டு பக்கத்து பள்ளியில் மேத்ஸ் டீச்சராக சேரலாம் என்று இருந்தேன்.. அப்படியே மேத்ஸில் ஹயர் ஸ்டடீஸ் போஸ்டலில் செய்யலாம் என்று இருந்தேன்.. ஒர் வருடம் கழித்து, பி.எட். படிக்கவும் ப்ளான் செய்திருந்தேன்.. மற்றபடி கம்ப்யூட்டர் நாலேஜ் உண்டு.. கிராஃப்க்ஸ் அண்ட் அனிமேஷன் படிக்க வேண்டும் என்று ஆசையிருந்தது.. அதற்கெல்லாம் நிறைய செலவு ஆகும் என்றே மேத்ஸ் படித்தேன்.. பத்து பசங்களுக்கு ட்யூஷன் எடுத்துக் கொண்டிருந்தேன்.. பாட்டியை ரொம்பவும் டிஸ்டர்ப் செய்ய பிடிக்கவில்லை.. என்ன செய்வது, பாட்டியை கடைசிவரை என்னால் உட்கார வைத்து பார்த்துக் கொள்ள முடியவில்லை.." என்று வருத்தத்துடன் சொன்னவள், "அது சரி என்னைப் பற்றி ஒன்றுமே தெரியாமலா கழுத்தில் தாலி கட்டினீர்கள்"...

அவள் குரலின் வித்யாசத்தை உணர்ந்தவன் சட்டென்று முண்ட கோபத்துடன், " உம்.. உன் பாட்டி, மாப்பிள்ளை, என் பேத்தியின் கழுத்தில் தாலியை கட்டுங்கள் என்று காலில் விழாக் குறையாக கெஞ்சும் பொழுது, நான் சரியாக கேட்டிருக்க வேண்டும்.. பாட்டி, பாட்டி, உங்கள் பேத்தி என்னவெல்லாம் படித்திருக்கிறாள், இல்லையென்றால் படிக்காத மேதையா என்று" நக்கலாக சொன்னவனை,

"சாரி" என்றாள் துளசி, நிஜமாகவே.

ஒரு கணம் தன்னை நிதானப் படுத்திக் கொண்டவன், "ஓ. கே. லீவ் இட்.. துளசி, நீ இனி என்னுடன் தினமும் காலை வாக்கிங் வா.. மாலையில் என்னால் உன்னுடன் வர முடியாது.. முடிந்தால், அம்மாவுடன் சேர்ந்து இந்த தோட்டத்திலேயே நடை பயிற்சி செய்.. அம்மா கட்டாயம் மாலை வாக்கிங் தவறாமல் செய்வார்கள்.. உனக்கும் பொழுது போகும்.. அம்மாவிடம் பழகியது போலவும் இருக்கும்" என்றான்.

"உ..ம்.. சரி.. நீங்கள் தினமும் எப்பொழுது அலுவலகம் செல்வீர்கள்"

"காலையில் ஒன்பது அல்லது மேக்ஸிமம் ஒன்பதரைக்குள் ஆபிஸ் சென்று விடுவேன்.. முதலில் என்னுடைய கன்ஸ்ட்ரெக்ஷன் கம்பெனிக்குத்தான் செல்வேன்.. நான் எம்.ஆர்க். படித்திருக்கிறேன்.. எனக்கு கட்டிடங்களை டிசெனிங் செய்வது என்றால் ரொம்ப இஷ்டம்.. புது புது கட்டிட மாடல்களை வரைவதற்கு நிறைய நேரம் செலவழிப்பேன்.. நமது அலுவலகத்தில் நிறைய இன்ஜீனியர்கள் இதற்காக இருக்கிறார்கள்.. மதியம் கன்ஸ்ட்ரெக்ஷன் சைட்டுக்கு சென்று மேற்பார்வை இடுவேன்.. மற்றபடி நான்கு மணிக்கு மேல், அப்பாவின் டெக்ஸ்டெயில் பிசினஸ் பார்க்கப் போய் கொண்டிருந்தேன்.. இப்பொழுதெல்லாம், அப்பாவுக்கு ஹெல்ப் செய்ய அதிகம் முடிவதில்லை.. என்ன செய்வது, கரணது கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கு வேறு போக வேண்டியிருக்கிறது.. அது அவன் ஆரம்பித்த தொழில்.. அதை பார்த்து முடித்து விட்டு வீட்டிற்கு வர எப்படியும் ஒன்பது, சில சமயம் பத்து, பதினொன்று கூட ஆகிவிடும்.. என்ன செய்வது ரொமபவும் பிசி தான்.. ஆனால் ஒன்று, சனிக் கிழமை முழுவதும், அப்பா பிசினஸான டெக்ஸ்டெய்ல், மற்றும் அது சம்மந்தமாக ஏதாவது டூர் இருக்கும்", என்றவன்,

"யாரங்கே.. எங்கே சோடா, இல்லை கலர்?" என்று கேட்டு கை தட்ட, புரியாமல் விழித்த துளசியை பார்த்து சிரித்து விட்டு, "புரியவில்லையா? ரொம்ப பேசி விட்டேன், அதான்" என்று நிறுத்த,

"ஓ".... என்றவள் சின்ன புன்னகையை சிந்தி விட்டு, வேறு எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க,

"ஓ. கே. துளசி,.. என்னால் முடிந்தவரை உனக்கு எல்லா உதவியும் செய்கிறேன்.. மற்றபடி நீ என்னை ரொம்பவும் எதிர் பார்க்காமல் அம்மாவிடம் எல்லாம் கேட்டுக் கொள்.. உன்னை நல்லபடியாக அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள்.. நானும் முடிந்தவரை சீக்கிரம் வரப் பார்க்கிறேன்"

ஓன்றும் சொல்லாமல் உட்கார்ந்திருந்த துளசியைப் பார்த்தவன் ஒரு பெருமூச்சு விட்டு, " வா, துளசி உள்ளே போகலாம்.. இனி தாமத்தித்தால் லேட்டாகி விடும், இன்று ஜாகிங் போக டயம் இல்லை" என்று எழுந்தவன், அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றான்.

இணைந்து உள்ளே நுழைந்த இருவரையும், புன்னகையுடன் எதிர் கொண்டார் சியாமளா.

இனி....

Episode # 07

Episode # 09

{kunena_discuss:881}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.