(Reading time: 22 - 44 minutes)

"ரண் ஒன்று கூற வேண்டும்.. இந்த வாரக் கடைசியை ஒட்டி, ஒரு சின்ன ரிசெப்ஷன் வைத்து விடலாம்.. இல்லையென்றால், பிறரின் கேலிக்கு இடமாகி விடும்" என்றார்.

மகனுமே, அனைவருக்கும் எப்படி தெரிவிப்பது என்ற ஆலோசனையில் இருந்தவன், "நீங்கள் சொல்லுவது போல் செய்து விடலாம் அம்மா' என்றான்.

ந்த ரிசெப்ஷன் தினம் அழகாய் விடிந்தது. ஒரு வாரமாகவே அவர்கள் இருவரிடையும் ஓர் கண்ணுக்குத் தெரியாத பனித் திரை .

அன்று காலையிலேயே மருமகள் அறைக்கு வந்து விட்ட மாமியார், "துளசி உன் நடைப்பயிற்சி எப்படியம்மா இருந்தது என்று கேட்டவாறு ஒரு பெரிய கிளாஸ் மாதுளை ஜுசை அவள் கையில் திணித்தார்.

"ஆண்ட்டி, இது எதற்கு" என்று துவங்கியவளை இடைமறித்து , "இதோ பார், இனியொரு முறை ஆண்ட்டி என்றழைத்தால் எனக்கு கோபம் வரும். அழகாக அத்தை என்று அழைக்க பழகு.. இதோ பாரம்மா, மாதுளை ஜுஸ் ரத்த ஊற்பத்திக்கும், வாந்தியை கண்ட்ரோல் செய்வதற்கு நல்லது" என்றார்.

"துளசி, காலை பத்து மணியளவில் பியூட்டி பார்லரில் இருந்து வந்து விடுவார்கள்.. உனக்கு முகத்தை கொஞ்சம் பேசியல், மற்றும் சிறிது புருவம் திருத்தி சாயங்கால மேக்கப்புக்கு தயார் செய்வார்கள் என்றவரை இடைமறித்த துளசி,

"இதெல்லாம் எதற்கத்தை.. எனக்கு இவையெல்லாம் பழக்கமில்லை".

சியாமளாவோ, "இதோ பார், நான்கு பேர் வந்து போவார்கள்.. அவர்கள் முன்னிலையில் நீ சோர்வாகத் தெரிந்தால், தூண்டி துருவக் கூடும்.. அதனால் நீ கொஞ்சம் ஒத்துழை துளசி", என்றவர், "சரண் எங்கே ?"

அருகிலிருந்த டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து வெளி வந்தவனைப் பார்த்து , "நீயும் இங்கேதான் இருக்கிறாயா? உன் ரிசெப்ஷன் உடைய டிரெயல் பார்த்து விட்டாயா?"

"ஆம் அம்மா ஆகி விட்டது.. இனி சாயங்காலம் ரெடியாவது ஒன்றுதான் பாக்கி " என்றவன் வெளியே சென்றான்.

சியாமளா, "துளசி, நீயும் குளித்து பிரெக்பாஸ்ட் சாப்பிட்டு விட்டு, தயாராகிவிடு.. பார்லர் ஆட்கள் வந்து விடுவார்கள்" என்று கூறி சென்றார்.

சாயங்காலம் ஆறரை மணியளவில், அந்த பெரிய நட்சத்திர ஹோட்டலின் லானில் நுழைந்த தம்பதிகள் ஓரக்கண்ணால் ஒருவரை ஒருவர் நோட்டமிட்டபடி இருந்தனர்.

லானில் ஓர் ஓரத்தில் அமைந்திருந்த அந்த மேடையை முழுவதும் ஆர்கிட் பூக்களால் அலங்காரம் செய்திருந்தினர்.. ஆர்கிட்ஸ் பல வண்ணங்களில் கிடைக்கும். அவர்கள் கத்திரிப்பூ மற்றும், கடல் நீல ஆர்கிட் மலர்கள் கொண்டு வளைவாக அந்த மேடையை அலங்கரித்திருந்தனர்.. ஆங்காங்கே உணவு மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன.. ஈவெண்ட் மேனேஜர்கள் நேர்த்தியான சீருடைகளில் அனைவரையும் வரவேற்று விதவிதமான குளிர் பானங்களை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.. சைனீஸ், நார்த் இன்டியன், நமது பாரம்பரிய உணவுகள், சாட் ஐட்டங்கள் என வைரைட்டியான உணவு மேடைகள் இருந்தன.. பின்னனியில், காதுக்கு இனிமையான சேக்சோபோன் இசை தவழ்ந்து கொண்டிருந்தது.

நளினமாக, ஆடம்பரமாக , அமைதியாக என பல்வேறு வித மனிதர்கள்.. அனைவருக்குள்ளும், ஒரே சிந்தனை.. சட்டென கல்யாணம் செய்ய என்ன அவசரம் என்ற யோசனைதான்.. அழைக்கும்போதே, சொல்லிவிட்டார் கிருஷ்ணன், பாட்டி மற்றும் இறந்த மகனைக் கருதி இந்த திருமணத்தை அமைதியான முறையில் நடந்து விட்டது என்று.. அப்படியும் சில முகங்களில் ஒரு சின்ன சபலம் ஏதாவது வம்பு கிடைக்கிறதா என்று.

மேடையில் நடு நாயகமாக நின்றிருந்தவர்களை கண்ட சியாமளா, 'மிகப் பொருத்தமான ஜோடி.. எது எப்படியோ என் மகன்களின் தேர்வு நிஜமாகவே நன்றாகவே இருக்கிறது' என்றெண்ணினார்.

ழகு கலை நிபுணரின் உதவியுடன் சன்னமான மேக்கப்பில் மிக அழகாவே ஜொலித்தாள் துளசி.. அவள் கோதுமை நிறம் சமீபத்திய உணவு பழக்க வழக்கங்களாலும், தாய்மையின் பொலிவிலும் மினுமினுத்தது.. பிறை போன்ற நெற்றியை அலங்கரித்த நீலக்கல் பதித்த வேலைப்பாடு மிகுந்த நெற்றி சுட்டி, அவள் திரும்பும் திசையெல்லாம் வர்ணங்களை வாரி வீசியது.. அழகிய கடல் வண்ண பச்சை நிறத்தில் ஆழந்த நீலக்கலர் பார்டருடன், தங்க கொடிகளையும் பூக்களையும் அலங்கரித்த குந்தன் வேலைபாடு செய்த பட்டு புடவையில் ஜொலித்தாள் துளசி.

அவனுக்கு மட்டும் என்ன குறை.. கரு நீல கோட் சூட்டில் கம்பீரமாக இருந்தான்.. அவனுக்குள் ஒரு சின்ன சலனம்.. அவளைப் பார்த்து அயர்ந்தவன், இவள் எவ்வளவு அழகு என்று நினைத்தவன்,, ' இவளை வேறு ஒரு சூழலில் சந்தித்திருக்க முடிந்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்..' பெருமூச்சு விட்டான்.

துளசியும் அவனைப் பார்த்து தனக்குள், 'இவன் தான் எத்தனை அழகானவன்.. அழகாக கம்பீரமாகவே இருக்கிறான்.. யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ? இங்கு வந்திருக்கும் ஒவ்வொறு இளம் பெண்களின் முகத்திலும், பொறாமை கண்களில் தெரிகிறது.. விட்டால், என்னை கொலை செய்து விடுவார்கள் போல இருக்கிறது.'

அப்பொழுது அங்கு வந்து சேர்ந்தாள் காருண்யா. "ஹாய் சரண்.. உங்கள் கல்யாண ரிசெப்ஷன் என்று கேள்விபட்டு, நானே இங்கு வந்து விட்டேன்.. என்ன தான் இருந்தாலும், என் கரணின் தம்பி அல்லவா? எனக்குத்தான் கொடுப்பினை இல்லை, உங்கள் வீட்டு மருமகளாக.. என்ன செய்வது? கரணுக்கு, என்ன தான் உயிர் கொல்லி வியாதியாக இருந்தாலும், ஏதோ கொஞ்சம் காலமாவது அவனுடன் வாழ ஆசைப்பட்டேன்.. என் ஆசையை அவனிடம் எடுத்துக் கூட சொன்னேன்.. எங்கள் கல்யாணம் பற்றி யோசிப்பதாக அன்று ஹோட்டலில் சந்தித்த பொழுது சொன்னான்.. ஆனால், பரிதாபம், அவன் இறந்த செய்தியே வந்தது.. அவனுக்கு தான் என்னுடன் வாழ கொடிப்பினை இல்லை, என்று எதெதோ உளறி விட்டு, எனிவே எனக்கும் அடுத்த மாதம் திருமணம்.. அமெரிக்க மாப்பிள்ளை, பத்திரிக்கை அனுப்புகிறேன், வந்து விட வேண்டும்... நீயும் தான் மா", என்று சொன்னவள், மனதிற்குள்,

'எல்லாம் என் நேரம், கரெக்டான சமயத்தில் இந்த கரண் இறப்பான் என்று நினைதேனா?, எப்படியாவது அவனுடம் செட்டில் ஆகி, அவன் போன பின்னால் மனைவி என்ற உரிமையில் பாதி சொத்தாவது அடிக்கலாம் என்று நினைத்தால், செத்து என் எண்ணத்தில் மண்னை வாரி போட்டு விட்டான், படுபாவி.. அவனை திட்டிக் கொண்டு .. 'இவளுகெல்லாம் வந்த வாழ்வைப் பார்.. பார்த்தால் பஞ்சத்தில் அடிபட்ட குடும்பம் போல் இருக்கிறாள் ', என்றவாறு சென்றாள்.

துளசிக்கு அந்த காருண்யா பேசிய பேச்சில், தலை வலியே வந்து விட்டது.. எப்பொழுது இந்த ரிசெப்ஷன் முடியும் என்றிருந்தது.. சரணுக்குமே அப்படித்தான்.. இந்த கரண், என்ன மாதிரி பெண்ணுடன் பழகி இருக்கிறான்.. நல்ல வேளை தப்பித்தான்.. அவளை ஒருவேளை திருமணம் புரிந்திருந்தால், அவ்வளவுதான்.. பேராசை பிடித்தவள்..

மேடையின் ஒரத்தில் நின்று பரிசுப் பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்த சியாமளா, துளசியின் முக மாற்றத்தை கண்டு அவள் அருகில் வந்தவர், ஜுசை வரவழித்து அவர்கள் இருவருக்கும் கொடுத்து விட்டு, "என்னம்மா துளசி, தலை வலிக்கிறதா.. முதலில் இந்த ஜுஸைக் குடி.. அவ்வளவு பேரையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கஷ்டப் படாதே.. போகப் போக மெதுவாக அனைவரையும் அறிந்து கொள்ளலாம்.. அதிக நேரம் நிற்காதே.. சிறிது நேரம் இருவரும் உங்கள் சேரில் உட்கார்ந்து கொள்ளுங்கள்" என்றவர் வலுக் கட்டாயமாக உட்கார வைத்தார்.

வருவோரும், போவோரும் என அந்த வரவேற்ப்பு, நல்ல விதமாக கழிந்தது.. விருந்தினர் அனைவரையும் அனுப்பி விட்டு, அனைத்து செட்டில்மெண்ட்களையும் முடித்த பெற்றோர் முதலிலேயே, சிறியவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டனர்... "துளசி சீக்கிரம், வீட்டிற்கு சென்று உடை மாற்றி ரெஸ்ட் எடும்மா." என்று அவர்களை அனுப்பி விட்டார்.

வீடு திரும்பும் பொழுது, சரண், "துளசி.. இன்று நீ மிக அழகாக இருக்கிறாய்..உனக்கு இந்த புடவை மிக பொருத்தமாக இருக்கிறது".

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.