(Reading time: 14 - 27 minutes)

07. சதி என்று சரணடைந்தேன் - சகி

ன்பு ஆராதிக்கப்பட வேண்டிய ஒன்று!!!

காற்று புகா இடத்திலும் அன்பெனப்படும் காதல் புகுகின்ற வித்தை விசித்ரம் தான்...!

இரவுபகல்,இன்பத்துன்பம்,ஊடல் கூடல் என சகலத்திலும் இசையென நிறைந்திருக்கிறது!!!

Sathi endru saranadainthen

இது என்ன மாயம்??

அன்பை வெறுத்தவர் என்று ஒருவரையும் நான் கண்டத்தில்லை.துறவிகளும் இறைவனிடத்தில் அன்பை பொழிகின்றனரே!!

எந்த மேதை பிரித்தாரோ!அறிவியல் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களுக்கு சமம் என்று!!!

அன்பு நீக்கமற நிறைந்துள்ள இடம் அனைத்திலும் உயிரற்ற பொருள்கள் தான் இருக்கிறதா???

மனம் முழுதும் ஒன்றி இருந்தது அவளுக்கு!!தனிமையில் அமர்ந்திருந்தவள் தன்னிச்சையாக சிரித்துக்கொண்டாள்.

எதிரில் நிற்கும் ஏதும் மனதில் பதியவில்லை.அப்படி செய்துவிட்டான் அவன்!!

புதியதாக பணியமர்த்தப்பட்ட போது பழகுபவர்கள் குறித்து தயங்கியவள்...இன்று அத்தயக்கத்தினை தியாகம் செய்தாள்.

ராகுலின் நடவடிக்கைகள் அவளை அப்படி மாற்றியது!!

உண்மையில் அவன் மனதளவில் குழந்தைதான்!!எவ்வளவு இனிமையாக பழகுகிறான்??அவன் கள்ளமில்லா சிரிப்பே ஆயிரம் கதைகள் கூறுமே!!!

அலுவலகத்தில் முதலாளி,பணியாள் என்ற பேதமில்லை.காவலரிடமும் தோழமை பாராட்டுகிறான்!!!

ஒரு மனிதனின் குணம் தாயின் வளர்ப்பில் இருக்கும் என்பர்!!!

நிச்சயம்...அவன் தாயின் வளர்ப்பு அசாத்தியமானது!!!

ஒருமுறை அவனுக்கு டீ எடுத்துவந்த ப்யூன் தவறி அவன் மேல் டீயை கொட்டிவிட்டார்.இன்னொருத்தராய் இருந்தால் அவ்வளவு தான்!!!ஆனால்,அவனோ!!

"என்னண்ணா உடம்பு சரியில்லையா?இப்படி பண்ணிட்டீங்களே!போய்,ரெஸ்ட் எடுங்க!அப்பறம் வேலை பார்க்கலாம்!"-என்று கனிவோடு அவரை அவன் அறையில் இருந்த சோபாவில் படுக்க வைத்தது உண்மையில் தீக்ஷாவை நெகிழ வைத்தது.

மற்றொரு முறை....

மாயா ஏதோ பேசியதற்கு அவன் தூங்கி வழிந்த நிகழ்வு..

பணியாளர்களோடு தினமும் மாலை அவன் அருந்தும் காபி!!தீக்ஷாவின் இதயத்தில் அவனை உயரிய இடத்தில் அமர வைத்தது.

ஆனால்,அவன் ஏனோ அவளிடம் மட்டும் இலகுவாக பழக மறுக்கிறான்!!அதுமட்டும் புரியவில்லை அவளுக்கு!!!அதை எண்ணும் போதே அவள் முகம் வாடியது.

"...லூசு!"-திடீரென கேட்ட குரலில் திகைத்துப்போய் சுயநினைவு வந்தாள் அவள்.

காம்பவுண்ட் சுவரின் மீது கௌதம் உட்கார்ந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"இங்கே வா!"-அவள் எழுந்து வந்தாள்.

கௌதம் அவளை நோக்கி கையை நீட்டினான்.அவள் அவனது கையை கயிறாக்கி ஏறி அவனருகே அமர்ந்தாள்.

"யாரையாவது லவ் பண்றீயா தீக்ஷா?"-எடுத்த எடுப்பிலே அவன் கேட்ட கேள்வி அவளை  தடுமாற வைத்தது.

"என்னடா என்னைப் பார்த்து இப்படி கேட்டுட்ட?"

"அப்போ யாரையும் காதலிக்கலை?"

"ம்ஹீம்!"

"அப்பறம் ஏன் பைத்தியம் மாதிரி தனியா சிரிக்கிற?திடீர்னு சோகமாயிடுற?என்ன விஷயம்?காத்து கருப்பு எதாவது..."

"டேய்!நான் என் ஆபிஸ்ல நடந்ததை நினைத்து சிரித்தேன்!"

"அரைமணி நேரமா இங்கே ஒருத்தன் உட்கார்ந்திருக்கறதுக்கூட தெரியாம சிரிக்கிற?அப்படி என்ன நடந்தது?சொல்லு..நானும் சிரிக்கிறேன்!"-அவள் திகைத்தாள்.கௌதம் ஏதோ உணர்ந்தவனாய்!!!

"சரி விடு..உனக்கு எதுவும் பிரச்சனை வராம இருந்தா போதும்!!!"

"தீக்ஷா!"

"என்ன?"

"எனக்கு ஒரு உதவி பண்றீயா?"

"என்ன?"

"அக்ஷயா விஷயத்தை எப்படியாவது கொளுத்தி போடேன்!"

"ஆமா...!லவ் பண்றன்னு சொன்ன?அவக்கூட போன்ல கூட பேசினதா தெரியலையே!"

"அவ என்னை கண்டுக்கவே மாட்டா!எப்போ பார்த்தாலும் வொர்க்!பட்...ஷி ரியலி லவ்ஸ் மீ!"

"ம்...முதல்ல ஜெர்னலிஸ்ட் மேடம்க்கு பொண்ணை பிடிக்கணும்"

"தேவி...நாடி வந்த அடியவரை காத்தருள்!"

"நிச்சயமா!!என் அருள் என்றும் உன்னோடிருக்கும் மகனே!!!"

அங்கே இருவரும் சிரித்த சிரிப்பு கூடய விரைவில் துக்கமாக மாற போவதை அவர்கள் அறியவில்லை.

"...அக்ஷயா!"-அந்த கிளப்பில் அமர்ந்திருந்தவளை அழைத்தாள் அவள் தோழி நந்திதா!

"ஏ..நந்து!அவ் ஆர் யூ!"

"கூல் படி!வாட் அபௌட் யூ!"

"எக்ஸ்ட்ராடினரி!"

"எங்கே உன் பியான்சி?வரலையா!"

"கம் ஆன்...நான் சந்தோஷமா இருக்க வந்திருக்கேன்!அவனை ஏன் ஞாபகப்படுத்துற?அவனுக்கு இதெல்லாம் பிடிக்காது!அதுக்காக என் சந்தோஷத்தை இழக்க முடியுமா?"-அவளும்,அவள் பேச்சும்,அவளின் ஆடை அலங்காரமும் சுத்தமாய் எனக்கு பிடிக்கவில்லை.

"நீ அவனை லவ் பண்றல்ல?"

"இல்லை..பட் அப்ஃபேர் இருக்கு!எனக்கு அவனோட ஸ்டேடஸ் மேலே தான் லவ்!"

"கேள்விப்பட்டிருக்கேன்!இந்தியாஸ் டப் டென் ரைட்டராமே!"

"யா..பட் எனக்கு இன்ரஸ்ட் இல்லை!"-(அடிபாவிகளா?ஒரு மனுஷனோட காதலோட இப்படியா விளையாடுவீங்க)

ங்கே இப்படி என்றால் அங்கே...

நம் அனு தான் கௌதம் மீது எவ்வளவு அன்பை வைத்திருக்கிறாள்!!!

அவனை அவள் பார்த்ததும் இல்லை.

அந்த இரவு நேரத்திலும் அவன் எழுதிய புத்தகத்தை வாசித்தப்படியே துயில் கொண்டிருந்தாள் அவள்.அப்புத்தகத்தை பொக்கிஷம் என பாதுகாத்தப்படி உறங்கினாள் அவள்.

இவனோ தவறானவளை காதலிக்கின்றான்!!

என்ன நடக்கிறது இங்கே?யார் யாரோடு சேர போகிறார்கள்???

அலுவலகத்தில் ஏதோ முக்கிய வேலையாக இருந்தாள் தீக்ஷா.

திடீரென ராகுலிடமிருந்து அழைப்பு வந்தது.

"தீக்ஷா!என் கேபினுக்கு வா!"-அவள் மனம் தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்தது.காரணம் விளங்கவில்லை.

விரைந்து அவன் கேபினுக்கு சென்றாள்.

"எக்ஸ்யூஸ்மீ சார்!"

"வாங்க!"-குரல் வந்தது.அவள் உள்ளே நுழைந்தாள்.அவன் கணினியில் மும்முரமாய் ஏதோ பார்த்து கொண்டிருந்தான்.அவளை நிமிர்ந்துக்கூட பார்க்கவில்லை.அவனிடம் ஏதோ வித்தியாசமாய் தெரிந்தது.என்ன அது?அவன் கண்ணாடி அணிந்திருந்தான்!!அவனுக்கு ஏதுவாய் சிறிய ப்ரேமில் கண்களை பாதுகாத்தது அது!!அதுவும்,அவனது வசீகரத்தை குறைத்ததாய் தோன்றவில்லை.

"அந்த ஆர்டிகள் ரெடியா?"

"ரெடி சார்!"-அவனிடம் நீட்டினாள்.அவன் அதை வாங்கிக்கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.