(Reading time: 14 - 27 minutes)

"நீ கொஞ்சம் வெயிட் பண்ணு!மாயா உன்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னா!இப்போ வந்துடுவா!"

"ஓ.கே.சார்!"

"உட்காரு!"

"பரவாயில்லை சார்!"

"வேணும்னா நான் நிற்கட்டுமா?"-சிரித்தப்படி அவன் கேட்க,அவள் தயங்கியப்படி அமர்ந்தாள்.

"அண்ட் இன்னொரு முக்கியமான விஷயம்!என்னை ராகுல்னு தான் கூப்பிடணும்!இந்த ஆபிஸோட முக்கியமான ரூல் அது!!பட்,நீ அதை மதிக்கிறா மாதிரியே தெரியலையே!"-அவன்அப்படி கூறியதும்,அவள் குழந்தையை போல தருதிருவென விழித்தது அவன் விழிகளை அவளிடமிருந்து விலகாமல் தடுத்து நிறுத்தியது.

"ராகுல்னே கூப்பிடு!"-சிரித்தப்படி கூறினான்.அவள் தலையசைத்தாள்.மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்தினான் அவன்.சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் கைப்பேசி அழைத்தது.அதன் திரையை பார்த்தவனின் முகத்தில் பரவசம்.

"மா!சொல்லும்மா!"

"சாப்பிட்டியா கண்ணா?"

"இல்லைம்மா!"

"ஏன்?"

"நீ ஊட்டிவிட்டா தான் சாப்பிடுவேன்!"

"டேய் வாலு!நான் என்ன அவ்வளவு தூரம் கை நீட்டியா ஊட்டிவிட முடியும்?வீட்டுக்கு வா!"

"பத்தே நிமிஷம் சின்ன வேலை முடிச்சிட்டு வந்திடுறேன்!"-அவன் பேசுவதை வைத்து அவன் அவனது தாயிடம் பேசுகிறான் என தெரிந்தது.எவ்வளவு அன்பை வைத்திருக்கிறான்?தீக்ஷாவிற்கு அவள் தாயின் நினைவு வந்தது.அவள் அவளது தாயின் அன்பை இதுவரை ஸ்பரிசித்ததே இல்லை.அவள் முகம் வாடுவதை எதேர்ச்சையாக கவனித்தான் ராகுல்.

"சரிம்மா வந்துடுறேன்!"-என்று இணைப்பைத் துண்டித்தான்.

"அப்பறம் என் அம்மா லஞ்ச்க்கு வர சொல்லிட்டாங்க!உன் அம்மா என்ன லஞ்ச் கொடுத்திருக்காங்க?"-அவன் எதேர்ச்சையாக கேட்பதைப் போல தூண்டில் போட்டான் அவள் கலக்கத்தின் காரணம் அறிய!!

அவள் வாட்டத்தோடு அவனை பார்த்தாள்.

"பயப்படாதே!நான் வாங்கி சாப்பிட மாட்டேன்!"

"இல்லை...அதுக்கில்லை..!"

"பின்ன?"

"எனக்கு அம்மா இல்லை!"-என்று பெருமூச்சுவிட்டாள்.அவனுக்கு தூக்கிவாரி போட்டது.

தன் தாயின் முகம் கொண்டவளுக்கு தாய்பாசம் கிடைக்கவில்லை என்ற செய்தி அவனை கலங்கடித்தது.

"அ...ஐ ஆம் ஸாரி!"

"பரவாயில்லை...நான் என் கேபினுக்கு போறேன் ப்ளீஸ்!"-அவன் மறுப்பேச்சின்றி தலையசைத்தான்.மனதின் ஓரம் ஏதோ அழுத்தியது.அவள் அன்பிற்காக ஏங்குகிறாள் என்பது அவனுக்கு மட்டும் வெளிச்சமானது!!எவ்வளவு துன்பத்தை மனதில் வைத்து எவ்வளவு இனிமையாக பழகுகிறாள்??அவன் மனம் இனி அவள் அவனோடு இருக்கும் காலங்களில் முழு அன்பையும் அவள் அடைய வேண்டும் என்று அவன் புத்தி அறியாமல் கூறியது!!!

(அறிந்திருந்தால் செய்ய விடாதே!)

அவள் இருதயத்தில் ஏதோ ஒன்று பலமாக அழுத்தியது.

இத்தனை ஆண்டுகளாய் அவளுக்கே தெரியவில்லை அவள் தாயின் மீது இத்தனை அன்பு வைத்திருக்கிறாள் என்று!!!ஒரே நொடியில் அந்த அன்பை வெளி கொணர்ந்துவிட்டான்!!

இதுவரை தீக்ஷாவிற்கு தன்னுடைய ஆசாபாசங்களை முழுதும் பகிர்ந்து கொள்வதற்கு யாரும் கிட்டியதில்லை.அவளும் பெண்ணல்லவா??

ஒரு எல்லை வரையில் மட்டுமே தந்தையிடமும்,நண்பனிடமும்,தமையனிடமும் கூற முடிந்தது!!!

இரவு நேரத்தில் காரணமே இல்லாமல் கண்ணீர் சிந்திய நாட்களும் பல!!!

அதன் காரணங்கள் இப்போது தான் அவளுக்கே புரிகின்றன..

எவ்வளவு முயன்றும் அவள் விழிகள் ஈரமானதை அவளால் தடுக்க இயலவில்லை.

நடப்பவற்றை எல்லாம் தனது அறையில் இருந்த திரையை விலக்கி பார்த்துக் கொண்டிருந்தான் ராகுல்.அவள் கண்ணீர் விடுவதை அவன் இருதயம் தாங்க மறுத்தது.அவனால் அவளை சமானப்படுத்தவும் இயலாது!!எந்த உரிமையில் அவன் சமானதானம் செய்வான்??அவள் அழுவது தான் அவனுக்கு கீதா அழுவதை போன்று தோன்ற செய்வதறியாது திகைத்தான்.

இறைவன் தத்ரூபமாக உண்மையை பொய்யாக மாற்றவும்,பொய்யை மெய்யாக்குவதிலும் வல்லவன்.எதன் அடிப்படையில் ஆறாம் அறிவான மனதை மனிதர்களுக்கு அளித்தான் என்பது புரியவில்லை.எந்த மருத்துவ ஆராய்ச்சியும் நிரூபித்ததில்லை மனம் என்ற ஒன்று ஏன் அன்பிற்குரியோருக்காக ஏங்குகிறது என்று!!!அவர்களுக்காக அது ஏன் துடிக்கிறது??

இதயத்திற்கு மனதிற்கும் சம்பந்தமே இல்லையாம்!!ஆனால்,மனதை இதயத்தோடு ஒப்பிட காரணம்!இதயத்தின் ஓட்டம் நின்றால் மனிதனின் முன் மரண தூதுவன் நின்றுவிடுவான்.அதுபோல மனதின் ஓட்டம் நின்றால் இறைதூதுவன் அவனிடமிருந்து விலகிவிடுவான்.

உண்மையில் மனதை படிப்பது அசாத்தியமானதே!!!

எவ்வளவு பெரிய அதிசயத்தை நான் எனதாக்கி உள்ளேன்!!இனி,யாராவது கூறுவாரா நான் எதையும் செய்ய இயலாது என்று!!!

மாயா உள்ளே வந்தப்போது ராகுலை காணவில்லை.அவன் அறையில் இருந்த மற்றொரு சிறிய ஹாலில் போய் பார்த்தாள் அவள்.அமைதியாக அவன் கீதாவின் புகைப்படத்திற்கு முன் நின்று அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.அவளுக்கு அதன் காரணமும் விளங்கவில்லை.அவன் இப்படி இருந்து அவள் பார்த்ததுமில்லை.

"ராகுல்!"-மாயாவின் குரல் கேட்டதும் முகத்தை இயல்பாக்கி கொண்டு திரும்பினான்.

"எங்கேடி போன?முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னல்ல?"

"என்ன பண்ணிட்டு இருக்க?"

"நான் சும்மா தான் இருந்தேன்!அம்மாவை பார்க்கணும்னு தோணுச்சு அதான்!"

"பொய் சொல்லாதேடா!"

"ஏ...லூசு!நான் ஏன் பொய் சொல்ல போறேன்!"

"உனக்கு நான் சரிப்பட மாட்டேன்.நான் அம்மாவை வரவழைக்கிறேன்!!"-தனது கைப்பேசியில் ஏதோ தேடினாள்.

"ஏ...வேணாம்!மாயா ப்ளீஸ்!"

"அப்போ சொல்லு!"-ராகுல் தயங்கியப படியே கூறினான்.

"அவ அப்படி அழுததை பார்த்ததும்,என்னன்னு தெரியலை!என்னால முடியலை!!!அதான்..."-மாயாவின் மனதில் சந்தோஷம் துளிர்விட்டது.

இவன் அவளுக்காக ஏங்குகின்றான்!!அவள் கண்ணீரை இவனால் சகிக்க இயலவில்லை.

அவள் மனம் நிம்மதியடைந்தது.

"இதுக்கு போயா ஃப்பீல் பண்ற?வேணும்னா அவளை வந்து திட்டிட சொல்லட்டா!"

"திட்டி இருந்தாலும் வாங்கிருப்பேன்!அவ தான் என் கூட சரியா பேச கூட மாட்றாளே!"-மாயாவிற்கு சிரிப்பு வந்தது.

"சரி விடு...பார்த்துக்கலாம்!"

"ம்.."

"நீ சாப்பிட்டியா?"

"இல்லைடி!அம்மா கூப்பிட்டாங்க!நான் போகலை!"

"சரி அம்மாவை வர சொல்றேன்!"-அவர்கள் பேசிக்கொண்டிருக்க,

அவர்கள் அறை கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது.ராகுல் வெளியே எட்டி பார்த்தான்.அவன் விழிகள் விரிந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.