(Reading time: 14 - 27 minutes)

"ப்பா!"-என்று புன்னகையோடு வந்தான்.

"இங்கே தான் இருக்கியா?வீட்டுக்கு போயிட்டியோ நினைத்து வந்தேன்!"

"வாங்கபா!எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன் மாயா!மேடம் ரொம்ப பிஸியோ வீட்டுப்பக்கமே எட்டி பார்க்க மாட்றீங்க?"

"எங்கேப்பா?உங்க பையன் தான் தினம் ஒரு வேலையை என் தலையில கட்டிடுறானே!"

"அப்படியா?ஏன்டா..என் செல்லத்தை இம்சை பண்ற?"-அவன் வாதிடும் மனநிலையில் இல்லை.அவன் கவனம் தீக்ஷாவிடமே நின்றது.ஆதித்யா புருவத்தை சுருக்கி அவனை பார்த்தார்.

"ஐயாவுக்கு என்னாச்சு?"-என்று மாயாவிடம் ரகசியமாக கேட்டார்.

அவள் சிரித்தப்படி கண்ணை மூடி திறந்தாள்.

அதன் அர்த்தம் எல்லாம் நல்லதுக்கே காரணம் பிறகு சொல்கிறேன் என்பதாகும்!!

அச்சமயம்,அவன் அறைக்கதவு தட்டப்பட்டது.

"உள்ளே வா தீக்ஷா!"-மாயா குரல் கொடுத்தாள்.

"நீ எப்படி இவங்க தான் கண்டுப்பிடித்த?"

"நம்ம ஆபிஸ்ல கதவை தட்டிட்டு உள்ளே வர ஒரே பொண்ணு தீக்ஷா மட்டும் தான்பா!"-தீக்ஷா கதவை திறந்தாள்.அவளை திரும்பி பார்த்த சரணின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.

அதன் காரணம் அவளது முக அமைப்பு அல்ல!!!

"ஸாரி சார்!நான் அப்பறம் வரேன்!"என்று வெளியே நகர பார்த்தவளை தடுத்தார் சரண்.

"ஒரு நிமிஷம்மா!"-அவள் நிமிர்ந்து அவரை பார்த்தாள்.

"இங்கே வா!"-ராகுல் கண்கள் இமைக்காமல் சரணை பார்த்தான்.தீக்ஷா அவரருகே வந்தாள்.

"நீ கமிஷ்னர் ரவிக்குமார் பொண்ணு தானே!"-அவள் ஆம் என்று தலையசைத்தாள்.அப்போது தான் ராகுலுக்கு அந்த விஷயமே தெரிந்தது.கமிஷ்னர் மகளா இவள்??எந்தவித ஆரவாரமும் இன்றி இருந்தாள்!!

"உன் அண்ணன் பேரு சித்தார்த் ரவிக்குமார்!அப்பறம் நீ தீக்ஷா ரவிக்குமார் ரைட்!"-அவள் தலையசைத்தாள்.

"என்னை உனக்கு ஞாபகமில்லை.."

"ம்ஹீம்!"

"நல்லா யோசி!நான் வாங்கிக் கொடுத்த பார்பி டாலை வைத்திருக்கியா?இல்லையா?"-அவ்வாக்கியத்தை கேட்டதும் அவள் முகம் பிரகாசமானது.

"அங்கிள் நீங்களா?ஸாரி அங்கிள் திடீர்னு பார்க்கும் போது சுத்தமா ஞாபகம் வரலை!ஸாரி...ஸாரி!"

"சரி...சரி...கூல்!ஆமா,நீ எப்படி இங்கே?"

"இங்கே தான் வொர்க் பண்றேன் அங்கிள்!"

"இங்கேயா?இவன்கிட்டையா?"-சரண் உரிமையோடு கூறவும் அவள் திருதிருவென விழித்தாள்.

"என்ன பார்க்கிற?அந்த பார்பி டாலை தர மாட்டேன்னு ஒரு காலத்துல ஒருத்தன் சண்டை போட்டான் ஞாபகமிருக்கா?"-அவள் ஆம் என்று தலையசைத்தாள்.

"அது இந்த திருடன் தான்!ராகுல் என் பையன்!"தீக்ஷாவும் ராகுலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

மாயா ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

"அப்பா எப்படி இருக்காரு?"

"நல்லா இருக்காரு அங்கிள்!"

"அப்பா அது என்ன கதைப்பா?"-இடைமறித்தாள் மாயா.

"பார்பி கதை தானே!"

"ம்.."

"வா சொல்றேன்!"-சரண் மாயாவை அழைத்துக்கொண்டு ஹாலுக்கு சென்றார்.

ராகுல் இமைக்க மறந்து தீக்ஷாவை பார்த்தான்.

அவள் அவனது பார்வையை சமாளிக்க இயலாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

அவனுக்கு நினைக்கும் போதே சிரிப்பு வந்தது.அந்த வாயாடியா இவள்??

மெல்லியதாக சிரித்துக்கொண்டான்.

ந்த கதையை நான் கூறுகிறேன்...

இது எப்போது நடந்தது என்றால்...

ராகுலுக்கு ஒரு எட்டு வயதிருக்கும்!!!

சரணோடு அவன் சென்னைக்கு கோடை விடுமுறைக்காக வந்த காலம் அது!!!

அவன் கேம்ஸ் கேட்டதற்காக கடைக்கு அழைத்து சென்றார் சரண்.

அங்கிருந்த எதுவும் பிடிக்காமல் வெறுத்துப் போய் திரும்பியவனின் கண்ணில் பட்டது அந்த பார்பி பொம்மை.

நீல நிற உடையணிந்து முழங்கை வரை நீளத்தில்...கருநிற கூந்தலோடு அவனை கவர்ந்தாள் அந்த இளவரசி.

"அப்பா!எனக்கு அந்த பொம்மை வேணும்!"-என்று ஓடி சென்று அதை எடுத்த நேரத்தில் சரிபாதியாய் பங்கிற்கு வந்தது ஒரு சிறு பெண்ணின் கரம்.

அதுவே தீக்ஷா.

அவளுக்கு என்ன ஒரு ஐந்து வயதிருக்கும்!

நல்ல சதைப்பிடிப்போடு அழகான மஞ்சள் நிற ஏஞ்சல் உடையில் கண்களில் கோபத்தோடு அவனை பார்த்தாள்.இவனும் முறைத்தான்.

"அது என்னோட பொம்மை!"-ஆரம்பித்தனர் சண்டையை!!!

"இல்லை என்னோடது!!"

"என்னோடது!!"

"என்னோடது!!"-இருவர் தந்தையரும் நடந்தவற்றை பார்க்க,ஓடிவந்து தத்தம் பிள்ளைகளை பிடித்து இழுத்தனர்.அப்போது தான் சரண் தீக்ஷாவை முதன்முதலில் கவனித்தான்.

அவளின் முகம் கீதாவின் சிறு வயது முகம் போல் இருந்ததை எண்ணிஆச்சரியம் கொண்டான்.

இரண்டு தந்தையரும் பார்த்து கொண்டனர்.அவர்கள் முகம் மலர்ந்தது.

"சரண் சார் நீங்களா?"

"ரவிக்குமார் சார்!"

"நானே தான்!எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன்!நீங்க எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன்!"-நலம் விசாரித்துக்கொண்டனர்.ரகுவை கண்டறியும் போதும்,டெல்லியில் பயிற்சி போதும் ஏற்பட்ட நட்பு அது!!

"அப்பா!"-ராகுல் அவர்கள் பேச்சை தடை செய்தான்.

"அது என் பொம்மை!"

"நான் தர மாட்டேன்!இது என்னோடது!"

"என்னோடது!!"

"டேய் உனக்கு வேற பொம்மை வாங்கி தரேன்!விடுடா!"

"இல்லை சார்!நீங்க வாங்கிக்கோங்க!தீக்ஷா பொம்மையை கொடு!"

"ம்ஹூம்!கொடுக்க மாட்டேன்!"அவள் அதை தன்னோடு அணைத்துக்கொண்டாள்.

"பரவாயில்லை சார்!ராகுல் அப்பா உனக்கு வேற வாங்கி தரேன் சண்டை போடாதே!"

"அப்பா!"

"அம்மாக்கிட்ட சொல்லிடுவேன்!"

"போ!"-அவன் அவளை முறைத்தப்படி நின்றான்.

"என்ன சார் அம்மான்னா பயமா?"

"ம்ஹூம் அம்மான்னா பிடிக்கும்!அவ பேச்சுக்கு மட்டும் தான் அடங்குவான்!"

"நல்ல குணம் தான்!என் செல்லத்துக்கு நான் வேற பொம்மை வாங்கி தரேன்!கேளு என்ன வேணும்?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.