(Reading time: 22 - 44 minutes)

த்திரத்துடன் நிமிர்ந்த துளசி, "எதையும் பாதியில் விடுவது என் பழக்கமில்லை.. நாய் வேடம் போட்டால், குறைத்து தானே ஆக வேண்டும்" .. முகத்தை திருப்பி கொண்டாள்.

சில தினங்களாக கடந்த மௌனப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.. அப்பாடி என்று ஒரு பெருமூச்சு எடுத்த சரண், "இதோ பார்.. உன் காலையும், கையையும், கட்டி இங்கு உன்னை யாரும் தூக்கி வரவில்லை.. திரும்ப திரும்ப நடந்ததையே பேசாதே.. இனி என்ன.. என யோசித்துப் பார்.. இந்த குழந்தை சர்வ நிச்சயமாக பிறக்கும்.. அதனால் வீண் பிடிவாதம் பிடிக்காதே.. மேலும் மேலும் உனக்கு நீயே தொல்லைகளை வளர்த்து கொள்ளாதே.. சற்று சிந்தித்துப் பார்.. எப்படியும், இது என் குழந்தை, நீ என் மனைவி.. பின் சாதாரணமாகவே வாழ்க்கையை அதன் போக்கில் எதிர் கொள்ள பழகு" என்றவனை இடைமறித்த துளசி,

"ஆமாம், சாதாரணமாக எல்லாவற்றையும் மறந்து விட்டு, குழந்தை குட்டி என்று பிறந்தவுடன் குடித்தனம் நடத்த வேண்டும்.. அதுதானே உங்கள் எண்ணம்" என்று ஆத்திரமாக சொன்னவளை..,

ஒரு வெற்றுப் பார்த்தவன்.. "நான் அப்படி சொல்லவில்லை, நீயாகவே எதாவது நினைத்து, உன்னையும் துன்புறுத்திக் கொண்டு, பிறரையும் துன்புறுத்தாதே.. மற்றபடி உனக்கே தெரியும், என்னால் அந்த சூழ் நிலையில் வேறென்ன செய்திருக்கக் கூடுல் என்று.. அட்லீஸ்ட் நாம் நண்பர்களாக இருக்கலாமே, அதற்கென்ன தடை" என்றவனை, சிறிது தயக்கத்துடன் பார்த்தவள் தன் மனமே இடித்துரைக்க மௌனமாக இருந்தாள்

"மற்றும், இந்த மாதிரி கூச்சல், வேறுபாடுகள், குழப்பச் சிந்தனைகள் அனைத்தாலும் பிறக்கப் போகும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம்.. அதனால், அமைதியாக, எந்தப் பிரச்சனைகள் குறித்தும் சிந்திக்காமல், சற்று, ஃப்லெக்சிபிளாக இருக்கப் பழகு.. குழந்தைக்கும் ஓர் ஆரோக்கியமான் சூழல் கிடைக்கும்".

மெதுவாக, "பார்கலாம்" என்று கண்களை மூடிக் கொண்டு இருக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்து கொண்டாள் துளசி.

ழக்கம் போல ஐந்து மணிக்கு முழிப்பு வந்து விட்டது துளசிக்கு.. ஆனால் மனம் சோம்பலாக இருந்தது.. நேற்று மாலையில் ரிசப்ஷனுக்கு நிறைய நேரம் நின்று கொண்டிருந்ததாலோ என்னவோ, லேசாக கால் வலிப்பது போல் உணர்ந்தாள்.. புரண்டு புரண்டு படித்தவள், இன்னும் சிறிது நேரம் தூங்கலாமா? என்று எண்ணி கால்களை நீட்டிக் கொண்டு கண்களை மூடி தூங்க முயற்சித்தாள்.

காலையில் லேட்டாக எழுந்து பழக்கமில்லாதவளுக்கு தூக்கம் வர மறுத்தது.. ஊஹீம், இது சரி படாது என்று எண்ணி எழுந்தவள், சன்னலருகே சென்று திரையை விலக்கி தோட்டத்தை நோக்கினாள்.. பால்கனியை ஒட்டி இருந்த மாமரத்தில் இருந்த பெயர் தெரியாத பறவையின் கூடு அவளை ஈர்த்தது.. கீச்கீச்சென்று கத்தியபடியே வாயை வாயை மெல்ல திறந்து குஞ்சுகள் சண்டையிட்டு சத்தம் செய்ய, சமாதானம் செய்வது போல் தாய் பறவை ஏதோ உணவை வாயில் வைத்தது.. போட்டி போட்டிடுக் கொண்டு குஞ்சுகள் உணவை கத்தியபடி வாங்கிக் கொண்டிருந்தன.

'இன்னும் சிறிது நாட்களில் பாசத்தோடு உணவு ஊட்டும் இந்த தாய் பறவை தன் குஞ்சுகளை அதன் போக்கில் சுதந்திரமாக விட்டு விட்டு பிரிந்து தன்போக்கில் சென்று விடும்.. நான் கூட இந்த தாய் பறவை போலத்தான், இன்னும் ஒன்பது மாதத்தில் எனக்குள்ளே வளரும் குழந்தையை இவர்களிடம் ஒப்படைத்து விட்டு, என் போக்கில் சென்று விடுவேன்.. ஆனால் ஒன்று, குஞ்சு பறவை போல் தனித்து நில்லாமல் தந்தையின் அரவணைப்பில் இருக்கும் என் குழந்தை.. இதில் நான் மட்டும் தனியாளாகிவிடுவேன்.'

'எதற்கு தான் இதற்கு சம்மத்திதேனோ? ' என்ற் மீண்டும் தன்னை நொந்தவள்,

'சே.. இனி என்ன யோசித்து என்ன பயன்? இதற்கு மேல், இதை பற்றி யோசிக்கக் கூடாது.. குழந்தை உருவாக ஆரம்பித்து விட்டது.. நாம் நினைப்பது அதற்கு தெரியும்.. என்னதான் வாடகைத் தாயாக இருந்தாலும், நம் சிந்தனைகள், செயல்கள் இந்த சின்ன கருவை எதற்கு பாதிக்க வேண்டும்'..

'நேற்று சரண் கூறியது சரியே.. குழந்தையை சுமப்பது என்று தீர்மாணித்தாயிற்று.. அதை நல்ல மனதோடு சுமப்பதே நல்லது.. எப்படியும் குழந்தை என்னில் பாதியல்லவா?.. நம் பாட்டி எப்பொழுதும் ஒன்று சொல்லுவாரே, எந்த வேலையும் எடுத்தாலும் அதை முழு மனதுடன், மனது ஒன்றி திருப்தியாக இருக்கும்படி செய்ய வேண்டுமென்று'..

'ஆம், இனி, எடுத்த இந்த வேலையை முழு மனதோடு குழந்தையை சுமக்க வேண்டும்.. நல்ல சிந்தனை, நல்ல சூழ் நிலையில் இந்த குழந்தை வளர்ந்தால் தான், நாளை வரப் போகும் இந்த குழந்தையையும் நல்ல குணத்தோடு பிறக்கும்.. இனி எந்த தீய எண்ணங்களும் எதிர்மறை கருத்துக்களும் கூடாது.. நல்லதே செய்.. அதை நன்றே செய்.. இந்த வீட்டு வாரிசை நல்ல முறையில் சுமந்து அவனிடம் ஒப்படைக்க வேண்டும்'..

'நேற்று தான், ரிசெப்ஷனில் பார்த்தோமே.. என்ன கூட்டம்.. எத்தனை வித விதமான மனிதர்கள்.. இந்த பாரம்பரியான குடும்பத்துடன் நட்புடன் பழகுவதே தங்கள் அதிர்ஷ்டம், பெரும் பாக்கியம் என்ற் வந்தவர்கள் ஒரு பக்கம், குடும்ப பிசினஸ், சரணின் அயோசியேட்ஸ் மற்ற கம்ப்யூட்டர் பெரும் புள்ளிகள் என மற்றொரு பக்கம்.'

'சரணின் பெற்றோர்கள் தான் எத்தனை நல்லவர்கள்.. முதலில் சூழ் நிலை காரணமாக தன்னை தவறாக நினைத்திருந்தாலும், இப்பொழுது தன்னை நிஜ மருமகளாகவே ஏற்றுக் கொண்டு மகள் போல தாங்குகிறார்களே.. இவர்களுடன், சரணும் கூட நல்லவன் தான்.. தன்னிடம் நேற்று ஒரு தோழமையுடன், கண்ணியமாககவே நடந்து கொண்டான்.'

'இனி, அவன் கேட்டுக் கொண்டபடியே, நட்புடன் பழக முயற்சி செய்ய வேண்டும்.. இங்கு இருக்கும் நாள் வரை அனைவருடன் சுமுகமாகவே பழகி, சந்தோஷமாக வாழ வேண்டும்.. அதுதான் குழந்தைக்கு நல்லது.. மேலும், நம் இயல்பும் அது தானே' என்று எண்ணினாள்.

எண்ணியதை உடனே செயல்படுத்த நினைத்து, சட்டென்று, எழுந்து பல் துலக்கி, முகம் கழுவியவள், வாக்கிங் செல்லலாம் என்று எண்ணி, கதவை திறந்து வெளியே வந்தாள்.. வெளியே வாக்கிங் செல்லுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த சரணைக் கண்டவள், முகத்தில் புன்னகையுடன், "குட் மார்னிங் ராம்" என்றாள் மெதுவாக.

அந்த விடியற் காலையிலேயே துளசியை அவன் ரூம் வாசலில் கண்டவன் சற்று ஆச்சிரியமுற்று, "வெரி குட் மார்னிங் துளசி" என்று தன் ஜாகிங்க்கு செல்ல தயாரானான்,

"ராம் நானும், இன்று உங்களுடன் வாக்கிங் வரலாமா?"

'என்னடா இது, அதிசயமாக இருக்கிறது.. மேடம் தானாகவே வந்து பேசுகிறாள்... என்னவோ', என்று எண்ணியவன், "தாராளமாக.. வா போகலாம்.. நான் கொஞ்சம் வாக்கிங் செய்து விட்டு , பின்னர் ஜாகிங் செய்வேன்"

பேசியபடியே கீழே தோட்டத்திற்க்கு வந்தவர்கள் தோட்டத்தின் ஓரத்தில் வீட்டை சுற்றி இருந்த நடை பாதையில் நடக்கலானார்கள்.

ஒன்றும் பேசாமல் நடந்த துளசியை, "என்ன மேடம், இன்று நல்ல மூடில் இருக்கிறீர்களோ? என்னுடன் இணைந்து வாக்கிங் செல்ல பிரியப்படுகிறீகள்.. தினமும் வாக்கிங் செல்வீர்களோ?" என்று மெல்ல சீண்டினான்.

அவனது சீண்டலை உணர்ந்தவள், "உம்.. ஏன் நீங்கள் மட்டும் தான் ஊர் உலகத்தில் நடை பயிற்சி செய்வீர்களோ? இப்பொழுதெல்லாம் எல்லோரும், ஹெல்த் கான்ஷியஸ்சாக இருக்கிறார்கள்.. நான் கூட தினம் எங்கள் ஊரில், காலையிலேயோ, அல்லது மாலையிலேயோ ஏதோ ஒர் முறையாவது கோவிலுக்கு நடந்து பக்கத்து வீட்டு மாமியுடன் செல்வேன்.. வாக்கிங்குக்கு வாக்கிங்கும் ஆயிற்று, பெருமாளைச் சேவித்த புண்ணியமும் கிடைத்த மாதிரி ஆயிற்று."

சட்டென்று கண்களில் சின்ன மின்னல் தோன்ற, "சோ, மேடம் ஃபார்முக்கு வந்தாகி விட்டது" என்று மெல்ல நகைத்தான்.

" நேற்று இரவு யாரோ சார் தானே சொன்னது, நாம் நண்பர்களாக இருக்க வேண்டும்.. சூழ் நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழ்வது குழந்தைக்கு நல்லது என்று"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.