(Reading time: 16 - 31 minutes)

ராம் “உனக்கொரு சர்ப்ரைஸ் கிப்ட். ப்ளீஸ் அணிந்து கொள்” எனவும் சரி என்றாள்;. பிறகு ராம் குளிக்ககச் செல்ல, பார்சலை பிரித்த மைதிலி ஆச்சர்யத்தில் வாயடைத்தாள். அழகான பேபி பிங்க் வண்ணத்தில் எம்ப்ராய்டரி வொர்க் செய்த டிசைனர் புடவையும் சரியாக அவள் அளவில் தைத்த ரவிக்கையும் இருக்க, புன்னகையுடன் அணிந்து கொண்டாள்.

குளித்து வந்த ராம் கருநீல ஜீன்ஸீம் இள மஞ்சள் நிற டீ ஷர்டும் அணிந்து வெளியே வந்தவனை விழியெடுக்காமல் பார்த்தாள.; ராம் பொதுவாக பார்மல் உடைகளையே அணிவதால், இந்த கேசுவல் டிரஸில் அவனைப் பார்க்கும் போது அப்போதுதான் கல்லூரியிலிருந்த வந்த இளைஞன் போலிருந்தான். மைதிலியிடம் ராம் ஒற்றைப் புருவத்தை ஏற்றி என்ன என்று வினவ ஒன்றுமில்லை என்று தலையாட்டினாள்.

ராம் மைதிலியைப் பார்க்க இப்போது அசந்து நிற்பது அவன் முறையாயிற்று. அந்த புடவையில் பிங்க் வண்ண ரோஜாவாக காட்சி அளித்தாள். தலைக்கு குளித்ததால் அவள் இருபக்கமும் கொஞ்சம் முடியெடுத்து பின்னி விட்டு கீழே லூசாக பின்னியிருந்தாள். அப்படியே அவளை அள்ளிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வை சற்று அடக்கி விட்டு அவளை வா என அழைத்தான்.

மைதிலி “இப்போது எங்காவது பார்டிக்குப் போகிறோமா” என்றாள்.

ராம் ஆமென தலையசைக்க எங்கே என்று வினவினாள். அவன் அவள் கண்ணைப் பொத்தி அழைத்துச் சென்று அந்த அறையின் பால்கனி ஸ்கிரீனை விலக்கினான். அங்கே டேபிள் செட் செய்து அருமையான கேண்டில் லைட் டின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவளை அழைத்துச் சென்று சேரில் உட்கார வைத்து இருவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். வேண்டிய உணவு வகைகள் இருந்தாலும், தட்டு ஒன்று மட்டுமே இருந்தது.

ராம் தட்டில் பரிமாறி அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான். மைதிலியும் ராமிற்;கு ஊட்டினாள். இருவரும் அமைதியாக உண்டனர்;. பிறகு ராம் அவளை எழுப்பி அவளுக்கு மிகவும் பிடித்த மென்மையா ஹிந்தி பாட்டு இசை பிண்ணியில் ஒலிக்க மைதிலியை அணைத்து இருவரும் நடனமாடினர்.

சரியாக 12 மணிக்கு மீண்டும் அவள் கண்ணைப் பொத்தி டேபிளுக்குச் சென்றான். அங்கே இதய வடிவில் கேக் இருக்க உள்ளே “ஹாப்பி வெட்டிங் அனவர்சரி டே” என்று எழுதியிருந்தது. இருவருமாக அந்த சின்ன கேக்கை வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டினர். ராம் அவளை அணைத்து மெல்லிய இதழ் முத்தம் ஒன்றைக் கொடுத்தான். பிறகு உள்ளே சென்றவன் தன் பெட்டியில் வைத்திருந்த மெல்லிய வைர நெக்லஸ் அவள் கழுத்தில் அணிவித்தவன் அங்கே முத்தமிட்டான். மைதிலி தேகம் சிலிர்க்க விலகியவள் தன்னுடைய கைப்பையில் வைத்திருந்த மோதிரத்தை அவன் விரல்களில் போட்டு விட்டவள் அவன் கையில் முத்தமிட்டாள்.

அதற்கு மேல் தாளாத ராம் அவளை அணைத்துத் தன் கைகளில் ஏந்தி படுக்கைக்குச் சென்றான். அவளை பெட்டில் கிடத்தியவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக்கி ராமைத் தன்னோடு அணைத்தாள் மைதிலி. அவளை விதவிதமாகக் கொஞ்சினான். நான்கு வருடங்களாக அடங்கிக் கிடந்த உணர்வுகள் பொங்கிப் பெருக இருவரும் ஒருவரெனக் கலந்தனர். அங்கே நேரம் விரைந்தோடியது. மெதுவாக உணர்வுக் குவியல்கள் அடங்க, இருவரும் உறங்கும் போது சூரிய உதயம் ஆரம்பமாகியது.

மெதுவாக கண்விழத்த போது சிம்லாவிலேயே கிட்டத்தட்ட சூரியன் உச்சிக்கு வந்திருந்தது. நாணத்தோடு எழுந்தவள் குளித்து விட்டு வரும்போதும் ராம் உறங்கிக் கொண்டிருக்கவே அவனை அசைத்து எழுப்பினாள். கண்விழித்த ராம் புது மலரென நின்றிருந்தவளை மீண்டும் அணைத்து கதை பேச ஆரம்பிக்க அவனை குளிக்க அனுப்பினாள்.

வரிசையாக போன் வர ஆரம்பிக்க எல்லோரும் வாழ்த்தினர். சந்தோஷ் ராமிடம் “என்ன மச்சான், ஹனிமூன் எப்படியிருக்கு? என்று ஏதோ கேட்க ராம் மைதிலியிடம் கண் சிமிட்டிவிட்டு மெல்லிய குரலில் பேச, மைதிலி அவனை தோளில் தட்டினாள்.

ராமிடம் மைதலி “நீங்கள் என்னிடம் இதுவரை இவ்வளவு ஆசையாகப் பேசியதில்லை ராம்” என்க, “ஆமாம்டி செல்லம். முதலில் எல்லாம் என்னவோ இப்படித் தோன்றியதில்லை. அதற்கு காரணம் குடும்பத்தில் நான் சிறியவர்களுக்கு உதாரணமாக இருப்பதால் சில சின்ன சின்ன ஆசைகளை அடக்கிக் கொள்வேன். உன் மேல் காதல் என்பதை நான் உணராததற்கு முக்கிய காரணம் அதுதான். என்னைப் பொறுத்தவரை காதல் என்பது பதின்பருவத்தில் வரும். அதற்கு ஆயுள் கிடையாது. உன்னிடம் தோன்றியதற்கும் பெயரும் காதல்தான் என்பதை பிறகுதான் தோன்றியது.

முதலில் அந்த ஜெர்மன் ஒப்பந்தம் கையெழுத்தானபோது உன்னை பிரசவத்திற்கு பிறகு அங்கே அழைத்துச் செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன். உன்னோடு தனியாக இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று. ஆனால் நீ என்னை விட்டுச் சென்ற பிறகு, ஜெர்மனில் தனியாக இருக்கும் போது உன் போட்டோவை வைத்துக் கொண்டு விதவிதமாகக் கொஞ்சுவேன்..” எனவும் மைதிலி அவன் மேல் சாய்ந்தாள்.

ராம் வந்தவுடன் சாப்பிட்டு விட்டு முதல் நாள் போல் வெளியே போகலாம் என நினைத்தவளைத் தடுத்து ரூமிலேயே தங்கி நிறைய பேசினர். மைதிலியின் நெடு நாளைய ஆசையான ராமை அவளுக்காக மட்டும் பாட வைத்துக் கேட்டாள். அவன் மைதிலியைப் பாடச் சொல்ல அவள் தன்னுடைய மிகவும் விருப்பப் பாடலான,

“காதல் கவிதைகள் படித்திடும் நேரம்

இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்

அமுதம் வழிந்தோடும் அழகில் கரைந்தாட ” என்று பாட, இருவருமாக சேர்ந்து பாடினர்.

அவனுக்குப் பிடித்த பாடல் பாடுமாறு கூற, அவன்

“என்னதான் சுகமோ நெஞ்சிலே

இதுதான் வளரும் அன்பிலே

ராகங்கள் நீ பாடி வா பண்பாடும்

மோகங்கள் நீ காணவா எந்நாளும்

காதல் உறவே…

தெய்வீக பந்தத்திலே நான் கண்ட சொர்க்கம் இது

காதல் உறவே…

ராம் மைதிலி இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க இனிய தென்றல் வீசியது.

முற்றும்

Episode 12

{kunena_discuss:887}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.