(Reading time: 13 - 25 minutes)

" ன்ன ?"

“ In All My Life , I had a Choice of Hate and Love… I chose love and I’m here ... நானும் அப்படித்தான் .. என்னால எதையும் சீக்கிரமாய் தூக்கி எறிஞ்சிட்டு போக முடியாது ! என் ஒரு வார்த்தையில் தான் நம்ம குடும்பத்தின் நிம்மதி இருக்குன்னு அந்த ஒரு நிமிடத்திலே என்னால் உணர முடிஞ்சது .. அப்படி இருக்கும்போது , நான் எப்படி அனைவருக்கும் கசப்பான உணர்வை கொடுக்குற செய்தியை சொல்லுவேன் ?" என்றாள்  அவள் ..

" சோ , அதுக்காக மட்டும் தான் சொல்லலையா ?" என்று கேட்டான் அவன் ஓர் எதிர்பார்ப்புடன் .. " நான் என்ன சொல்ல வேண்டும் என்று விழைகிறான் இவன் ?" அவள் மனமும் பரபரத்தது .. கைகளை கட்டிக்கொண்டு அவன்முன்னே நின்றாள்  நந்திதா .. அவள் முகத்தையே அசையாமல் பார்த்தான் அபிநந்தன் .. அவளது விழிகளில் வழிந்த நேசமோ

" உன்னை விட்டு என்னால் எப்படி பிரிய முடியும் ?" என்று கேட்டது .. அவனது வலது கரம் , அவனது அனுமதியின்றியே  அவளின் பட்டு கன்னத்தை தொட்டு பார்த்தது ..

" பட்டு கன்னம் உனக்கு " என்று காற்றில் கரைந்த குரலில் கூறினான் அவன் .. விழி விரிய ஆச்சர்யமாய் பார்த்தாள்  நந்திதா .. அவனுக்கே அவன் சொன்னதன் அர்த்தம் அப்போதுதான் புரிய , சட்டென பாவனையை திருத்தி கொண்டு

" ஐ மீன் .. ரொம்ப செல்லமா வளர்ந்த பெண்ணாச்சே நீ ! உன்னை பெற்றவங்க கூட உன்னை அடிச்சு இருக்க மாட்டாங்க !" என்றான் குற்ற உணர்வு தொனித்த குரலில் ..

" மனதில் வாங்குகிற அடியை விட , கன்னம் வாங்கியது குறைவுதான் " என்றாள்  அவள் ..

" என்னை மன்னிச்சிரு " என்றான் அபிநந்தன் கலக்கமாய் .. அவனை அணைத்து  ஆறுதல் சொல்ல வேண்டும் போல இருந்தது அவளுக்கு .. இருந்தாலும் இது இவனது தற்காலிக முகம் அல்லவா ? இதை எண்ணி எப்படி நிம்மதி கொண்டுவிட முடியும் ? என்று தன்னையே வினவினாள் .. சட்டென இரண்டடி பின்னால் வைத்தவள்

" சாப்பிட வாங்க " என்றாள் ..

" என் மீது இன்னும் கோபமா ?"

" அது அவ்வளவு விரைவில் போய்விடுமா ?"

" அது விரைவில் போகுறதுக்கு நான் என்ன பண்ணனும் ?" என்றான் அவன் சிறுவன் போல ..

" என்னை கேட்டால் , எனக்கு எப்படி தெரியும் ?" என்று தோள்  குளுக்கியவள் , " சாப்பிட வாங்க சீக்கிரம் " என்றபடி அவன் பார்வையில் இருந்து  மறைந்தாள் .. அவளுக்கே தெரியும் இன்னும் சில நொடிகள் அவன்முன் நின்றால் என்ன ஆகிவிடும் என்று .. மனதில் சகியை நினைத்து கொண்டாள் ..

" நீ தூபம் போட்டு என்ன பயன் தீபு ? உன் அண்ணன் என்னை இப்படி மயக்கி வெச்சு இருக்காரே " என்று சிரித்து கொண்டாள்  ..

அதன்பின் வந்த இரண்டு நாட்கள் எப்போதும் போலவே கடந்திருந்தது .. நீண்ட நாட்களுக்கு பிறகு , மீண்டும் அபியின் முகம் பார்த்து பேச தொடங்கி இருந்தாள்  நந்திதா.. எனினும் தனது எல்லையை தாண்டவில்லை .. அனைவரின் முன்னிலையிலும் தன்னை கலகலவென காட்டி கொண்டவள் , கிடைத்த தனிமையில் எல்லாம் அவனிடம் இருந்து கொஞ்சம் ஒதுங்கி தான் போனாள் .. காயமும் நானே மருந்தும் நானே என்பது போல நடந்து கொண்டாள்  அவள் .

ன்றிரவு ,

" விஷானி .... ! " ,,,,," வைஷூ " ......" வினி ஓடாதே " இப்படி பல குரல்கள் செவியில் கண்களை இறுக மூடிக்கொண்டு " ஐயோ " என்று கத்தினாள்  விஷ்வாநிகா ..

" வினி ... வினி .... என்னாச்சு ?" என்று பதறியபடி அறைக்குள் நுழைந்தாள்  நந்திதா

" அண்ணி ... அண்ணி ... மறுபடியும் அதே கனவு " என்று பதறினாள் அவள் ..

" அழாதே வினி .. ஒன்னுமில .. இங்க பாரேன் .. என்னை பாரும்மா .. வெறும் கனவுதான் டா .. பயப்பட கூடாது சரியா ?" என்று அவளை தேற்ற முயன்றாள்  நந்து ..கைகள் நடுங்க அவளது இறுகிய அணைப்பில் மழையில் நனைந்த பறவை போல நடுங்கினாள் விஷ்வாநிகா .. சரியாய் அதே நேரம் , அதே கனவு அவள் வீட்டில் இருந்து சிறிது தொலைவில் இருந்த  அந்த வீட்டில் இருந்த ஒரு ஜீவனையும் உலுக்கியது ! உறக்கம் தொலைத்தவள் விஷ்வாநிகா மட்டும் அல்ல .. அந்த இன்னொருவரும் தான் ! அது யார் ?

குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:883}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.