(Reading time: 27 - 54 minutes)

திடீரென உறைக்க சுயநிலைக்கு வந்தவள் அப்பொழுதுதான் கவனித்தாள் மூவரும் இவளைத்தான் கேள்வியாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

என்ன? தலை வால் புரியவில்லை. முந்தைய அதிர்ச்சியில் இருந்து இவள் இன்னும் வெளி வந்திருக்கவில்லை.

“அம்மா நீங்க சுகாவப் பார்க்கனும்னீங்களே…..ப்ரபு நீ லியாவ கூட்டிட்டு ஒரு வாக் போய்ட்டு வா…” அரண் தான் உதவிக்கு வந்தான். நிச்சயமாக ஜோனத்தை சட்டையை பிடித்து கேட்க இவளிடம் சில கேள்விகள் இருக்குது.

அவன் வெளியே லானிற்கு வந்தான் இவளுடன்.

“என்ன நினச்சுகிட்டு இருக்கீங்க….? உங்க அம்மாட்டல்லாம் சொல்லி வச்சுருக்கீங்க….? அண்ணாட்டயும் சுகவிட்டயும் மட்டும்தான் சொல்லுவேன்னு சொன்னீங்க “ பல்லை கடித்து தன் சத்தம் உயர்ந்துவிடக் கூடாதே என அடக்கிக் கொண்டு வார்த்தைகளை கடித்து துப்பினாள்.

“அப்டி சொன்ன மாதிரி எனக்கு எதுவும் ஞாபகம் இல்லையேப்பா…..அரண்ட்ட சொல்லிட்டு அம்மாட்ட சொல்லாம இருக்க முடியும்னு நான் நினச்சிருக்க கூட மாட்டேனே….? அவன் எல்லாத்தையும் அம்மாட்ட பேசுவானே……” டெய்ரி மில்க் இல்லைபா கிட் கேட் தான் கேட்டேன் என்பது போல் படு இயல்பாய் அவன்.

“ஆன்டிய போய் ஏமாத்றீங்களே…..” உறுமினாள் இவள்.

அமைதியாய் அவளைப் பார்த்தான். “அதென்ன ஏமாத்றதுல ஆன்டி வேற அரண் வேற……?”

ஓங்கி ஒரு அறைவிட்டிருந்தானானால் கூட இப்படி இருக்காது. இது கத்தி குத்து. என்ன சொல்வாள் இதற்கு. அது பிசினஸ் இது ரிலேஷன்ஷிப் என்றா? கண்டிப்பா இந்த ப்ராஜக்டுக்குப் பின் இவள் இந்த வேலையை தொடரப் போவதே இல்லை. நிச்சயமாய் இந்த வேலை தப்பான ஒன்றுதான்…..

“ஆன்டி பாவம் ஜோனத்…அவங்கட்ட மட்டுமாவது சொல்லிருவோமா? ப்ளீஸ்….” கெஞ்சினாள் அவள்.

“என்னன்னு…? எங்க ட்ராமாவுக்காக நீங்களும் அரணையும் சுகாவையும் ஏமாத்துங்கன்னா…?” கொன்றான் அவன்.

இவளை வார்த்தையால் வதைப்பதே இவன் வேலை.

கண்ணில் நீர் கட்டுகிறது. இந்த ப்ராஜக்டிலிருந்து  விடுபட்டு ஓட இவளை அனவரதனும் வல்லராஜனும் விடப் போவதில்லை. உள்ளே இருக்க இவன் விடப் போறதில்லை.

தலையை குனிந்து கொண்டாள். ப்ரபாத்திற்கும் அவள் கண்ணில் நீரைக் கண்டதும் இளகி விட்டதுதான். ஆனால் அம்மாட்ட உன்னை லவ் பண்றேன்னு உண்மையத்தான் சொல்லி வச்சிருக்கேன்னு இவட்ட எப்டி சொல்ல?

“இன்னும் கொஞ்சநாள்பா ….அப்புறம் அனவரதன் அங்கிள்ட்ட இங்க நடக்றதை நீ சொல்லி எல்லாம் சால்வ் ஆன பிறகு, எல்லோர்ட்டயும் விஷயத்தை சொல்லிகிடலாம்….” ஆறுதல்படுத்த முயன்றான்.

“இன்னும் ஏன் டிலே செய்யனும்…? இப்பவே அனவரதன் சார்ட்ட சொல்றேனே….” அடித்தவனிடமே காயம் ஆற ஆலோசனை கேட்டாள்.

“ம்…சொல்லு….ஆனால் அவர் ஒரே நாள்ல என்ன தெரிஞ்சிரும்னு கேட்பாரே…?” யோசனையாய் பார்த்தான். ஆனால் நிச்சயமாய் ஒரு கரிசனை இருந்தது அவனிடம்.

“ரொம்ப கில்டியா இருக்கு ஜோனத்….” முதன் முறையாக ஒரு ஆணிடம் மனம் திறக்கிறாள் அவள். ஆனால் அப்படித்தான் என அவள் உணரக் கூட இல்லை.

“அப்புறம் எப்டி இத ப்ரஃபெஷனா செலக்ட் செய்த….?” உள்ள இருக்க கசடெல்லாத்தையும் வாமிட் செய்துட்டா உடம்பு சரியாகிடும் என்பது அவன் நம்பிக்கை.

“இதுவரைக்கும் செய்ததெல்லாம் கரப்ஷன் ரிலேட்டட்பா, தப்பா தோணலை, அதுவும் டீம் வொர்க் வேற….மேக்சிமம் யாரை குறி வைக்கமோ அந்த ஆள் வீட்டுகுள்ள  போய் சீக்ரெட்டா கேமிரா ஃபிக்ஸ்‌ செய்வோம்…இப்டி நேர்ல போய் யார்ட்டயும் பொய் சொல்லி ஏமாத்தனும்னு எதுவும் தேவை இருக்காது….ஆக இதுவும் அது மாதிரி ஒன்னுன்னு ஒரு ஃபீல்ல தான் எடுத்தேன்…..நான்தான் எல்லாம்னதும் ஒரு க்ரேஸ்….ப்ரொமோஷன், ஹைக்னு ஒரு ஸ்ட்ராங் அட்ராக்க்ஷன் வேற …. அதோட கேஸ் ஸ்டடி செய்றப்ப அண்ணாவ வேற பிடிக்கலையா…..அவங்கதான் சுகவிதாவ எதுவும் செய்துட்டாங்கன்னு தோணிச்சா அதான்….” யாரிடமாவது தன் மன உறுத்தலை கொட்ட வேண்டும் போலிருந்தது அவளுக்கு. இருந்த வேகத்தில் இவனிடம் கொட்டி தீர்த்துவிட்டாள்.

“ஏதோ சுகவிக்கு ஜஸ்டிஸ் கேட்டு போராடப் போறதா நினச்சுட்டு வந்துட்டேன்…இல்லனா நன் அனவரதன் சாரை அப்ரோச் செய்திருக்கவே மாட்டேன்….நியாயத்துக்காகத்தான பொய் சொல்றோம்னு வந்தேன்…இப்பதான் எதுக்காக சொன்னாலும் மனசு வலிக்கத்தான் செய்யும்னு தெரியுது….”

‘சோ பொண்ணு தப்ப ரியலைஸ் செய்தாச்சு….அப்டியே அதே ஸ்பீட்ல என் லவ்வயும் ரியலைஸ் செய்துடுமாம் என் செல்ல சிக்‌ஸர்’ மனதிற்குள் அவளை சீராட்டிக் கொண்டிருந்தான் அவன்.

“இப்போ அனவரதன் சாரும் வல்லராஜனும் மிரட்டுறாங்க …அதான் இங்க வரவேண்டியதாயிட்டு…நீங்க அனவரதன் சார்ட்ட சொல்லி என்ன இதுலருந்து ரீலீவ் செய்து விடமுடியுமா ப்ளீஸ்….” முதன் முறையாக நம்பிக்கையோடு ஒரு ஆணிடம் உதவி கோருகிறாள் சங்கல்யா.

 “ம்…ட்ரை பண்றேன்பா…” உனக்கு செய்யாம யாருக்கு செய்யப் போறனாம் சிக்‌ஸர் கேர்ள். செய்துட்டு வந்து சொல்றேன். மனதிற்குள் தன் ஆளுக்கு உறுதி கொடுத்தான் அவன்.

“தேங்க்ஸ் ஜோனத்…..இப்ப உள்ள போவமா…?”

சிக்கல் எல்லாம் தீர்வது போல் ஒரு உணர்வு சங்கல்யாவிற்குள். ஆனால் அதைவிடப் பெரிய சிக்கலினுள் சென்று மாட்டிக் கொண்டிருக்கிறாள் என அப்பொழுது தெரியவில்லை அவளுக்கு.

ன்று இரவு உணவுக்குப் பின் இவளுக்காய் ஒதுக்கப்பட்ட அறைக்குள் தனக்கு திடீரென முளைத்திருந்த உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் சங்கல்யா. கதவை தட்டும் சத்தம்.

 “யாரு…?”

“நான்தான்மா….” அன்பரசியின் குரல்.

“வாங்க ஆன்டி”

அவசர அவசரமாக கதவைத் திறந்துவிட்டாள். அவரைப் பார்க்கவே கூசுகிறது இவளுக்கு…சீக்கிரம் உண்மையை சொல்லிவிட வேண்டும்.

சில நிமிட இயல்பான உரையாடலுக்குப் பின் விஷயத்திற்கு வந்தார் அவர்.

“உனக்கு என் ஹெல்த் பத்தி நல்லா தெரியும்தானே லியாமா?”

“என்னாச்சு ஆன்டி…? இப்போ எதுவும் முடியலையா..? இங்க பக்கத்துலயே கார்டியாலஜிஃஸ்ட் உண்டு….” பதறினாள்.

“அதுக்கில்லமா….இப்ப ஒன்னும் புதுசா எதுவும் இல்ல….இது வேற…இன்னும் எவ்ளவுநாள் நான் இருப்பேன்னு தெரியலைமா….”

“என்ன ஆன்டி நீங்க…..இப்டில்லாம் பேசிகிட்டு….நூறு வருஷம் இருப்பீங்க நீங்க….” அவசரமாக அவர் கரத்தைப் போய் பிடித்துக் கொண்டாள்.

கில்டி கான்ஷியஸ் இப்போது கத்தியெடுத்து  ஜிங்க் ஜிங்க் சா என சுத்தி ஆடியது….இவர்ட்ட போய் பொய் சொல்லி வச்சுருக்கியே

”எனக்கு ப்ரபுவோட மேரேஜ போறதுக்குள்ள பார்க்கனும்னு ஆசை…. நானும் போய்ட்டா அவன் தனி ஆளா நின்னுடுவானேமா….”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.