(Reading time: 15 - 29 minutes)

தேவிம்மா இப்போத்தான் நானும், அண்ணனும் வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டோம் இல்லை.  அதால நீ வீட்டு வேலை செய்யறதை நிறுத்திட்டு படிக்கறதை மட்டும் பாரு போதும்.  வீட்டு வேலை, படிப்பு அப்படின்னு நீயும் இந்த நாலு  மாசமா ரொம்ப கஷ்டப்பட்டுட்ட”, மணி கூற, சூனியம் வைப்பவர்கள், மற்றவரை நல்லவர்களாக மாற்றக் கூட வைப்பார்களோ என்று யோசிக்க ஆரம்பித்தாள் தேவி.  தானாக தன் தந்தையும், அண்ணனும் மாற வாய்ப்பே இல்லை என்பதுதான் அவளுக்குத்  தெரியுமே. 

“நைனா நீயும் அண்ணனும் இப்போத்தான் வேலைக்கு போக ஆரம்பிச்சு இருக்கீங்க.  இந்த மாசம் முடிய இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு.  இந்த மாசம் சம்பளம் உங்க ரெண்டு பேத்துக்கும் கம்மியாத்தான் வரும்.  அதால நான் உடனே எல்லா வேலையும் விடல.  இந்த மாசம் நான் எல்லா வீட்டுக்கும் போறேன்.  உங்களுக்கு வர்ற சம்பளத்தை பாத்துட்டு அடுத்த மாசம் எப்படி செய்யலாம்ன்னு யோசிக்கலாம்”, தேவி கூற, மணிக்கும் அவள் கூறுவது சரி என்றே தோன்றியது. 

நல்லதம்பி செய்த கட்டாயத்தில் அவர்கள் வேலைக்கு சேர்ந்துவிட்டாலும், அவர்களால் தொடர்ந்து வேலை செய்வது என்பது முடியாத காரியமாகவே இருந்தது.  நான்கு நாட்கள் செய்த வேலையே, ஏதோ தொடர்ந்து நான்கு வருடங்கள் வேலை செய்த அயர்ச்சியைக் கொடுத்தது.   அடுத்தத்  திங்கள் அன்று எழு மணி வாக்கில் ஏதோ எடுப்பதற்காக கீழே வந்த நல்லதம்பி, தேவி தன் வீட்டில் வேலை செய்வதைப் பார்த்து, தான் அத்தனை சொல்லியும் கேளாமல் அவளை  வேலைக்கு அனுப்பிய மணியின் மீது கோவம் கொண்டான்.  எப்பொழுதும் போவதற்கு சற்று முன்னதாகவே போய் தோப்பில் மணியின் வரவிற்காக காத்திருக்கத் தொடங்கினான்.

“ஏன்யா நான் அம்புட்டு சொல்லியும் தேவியை எங்க வீட்டு வேலைக்கு அனுப்பி இருக்க இல்ல.....”, சிறிது நேரத்தில் தோப்பிற்கு வந்து சேர்ந்த மணி, வெற்றியிடத்தில் கோவத்துடன் கேட்டான் நல்லதம்பி.

“ஐயா கோவப்படாதீங்க, நான் நீங்க சொன்ன உடனேயே தேவியை வேலையை வீட்டு நிக்க சொல்லிட்டேன்.  அதுதான் இந்த மாசம் வரைக்கும் வேலை செஞ்சுட்டு வர்ற துட்டை வச்சு அப்பறம் முடிவு பண்ணிக்கலாம் அப்படின்னு சொல்லிடுச்சு”

“ஓ சரி.  உனக்கு அடுத்த மாசம் மொதோ வாரம் வரைக்கும்தான் டைம்.  அதுக்குள்ளாற தேவி வேலையை விட்டு நின்னிருக்கணும்.  அப்பறமும் வந்திச்சு, உனக்கு என்கிட்ட வேலை கிடையாது.  அப்பறம் சும்மாக்கூட நீ இந்தத் தோப்பு பக்கம் வரமுடியாது சொல்லிட்டேன்”, நல்லதம்பி எச்சரிக்க தங்கள் விதியை நொந்தபடியே அவன் கூறியதற்கு தலை அசைத்து வேலை செய்ய சென்றார்கள் மணியும், வெற்றியும்.

ல்லதம்பியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அந்த மாத இறுதியுடன் தேவியை வீட்டு வேலைகள் அனைத்திலும் இருந்து நிற்க சொன்னான் மணி.  அதை மறுத்த தேவி, காலையில்  மீனா வீட்டைத் தவிர, பள்ளிக்கு அருகில் இருக்கும் மற்ற வீடுகளில் வேலை செய்தாள்.  மாலை அவள் வேலை செய்து வந்த மற்ற வீடுகளில்  நின்று விட்டாள். இதனால் பள்ளியில் இருந்து நேராக வீட்டிற்கு வீட்டு வேலைகளை சீக்கிரமாக முடித்துவிட்டு,   தேவிக்கு படிக்க நிறைய நேரம் கிடைக்க அவளும் நேரத்தை வீணாக்காமல் சந்தோஷமாக படித்தாள்.  அந்த மாதத் தேர்விலும் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தாள். 

மீனாவிற்கு மட்டும் நல்லதம்பி தேவியை வேலைக்கு வராமல் செய்ததில் ஏதேனும் உள்குத்து இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது.  அவள் ஆள் வைத்து அவனைக் கண்காணித்ததில், அவன் தேவி இருந்த பக்கம் கூட திரும்பாமல் இருந்ததும், மற்ற பெண்களிடத்தில் வழக்கம் போல் அவன் கை வரிசையைக் காட்டியதும் தெரிய வந்தது.  சரி எப்படியோ அவன் தேவியைத் தொடரவில்லை என்ற நிம்மதியுடன் மீனாவும் அவள் கண்காணிப்பை கொஞ்சம் தளர்த்தினாள்.  இப்படியே ஒரு மாதம் ஓட நல்லதம்பி தன் அடுத்த ஆட்டத்தைத் தொடங்கினான். 

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:857} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.