"ம்கூம்!"-சரண் தொண்டையை செறும சுயநினைவிற்கு வந்தான்.
"அப்பா!"
"ம்.."
"உனக்கும்,அம்மாக்கும் எப்படிப்பா லவ் வந்தது?"-ஆதித்யாவின் பார்வை கூர்மையானது.
"எதுக்கு?"
"சொல்லுப்பா!"
"அது எங்க சின்ன வயசில நடந்த விஷயம்!அம்மூவை வெறுப்பேற்றணும்னா எனக்கு அவ்வளவு இஷ்டம்!!ஒரு நாள் மழை சமயத்துல சுற்றி யாரும் இல்லை.நான் என்ன பண்ணேன் விளையாட்டா அவ பின்னாடி போய் பயமுறுத்தினேன்.அவளுக்கு இருட்டான்னா ஏற்கனவே பயம்!அந்த நேரம் கரண்ட்டும் இல்லை.அவ்வளவு தான் பயந்துட்டா!பயத்துல என்னை ஹக் பண்ணிக்கிட்டா!அங்கே ஆரம்பித்ததுடா எங்க லவ் ஸ்டோரி!அதுக்கு அப்பறம் ரொம்ப பரபரப்பா போன ஸ்டோரி அது!!"-கடந்தக்கால ஏக்கத்தில் கூறினார் சரண்.
"நீ எப்படி கண்டுப்பிடித்த அது லவ் தான்னு?"
"சிம்பிள்...லவ் பண்றவங்களை கண்டுப்பிடிக்க முதல் அஸ்திரம் அவங்க எதையுமே கவனிக்க மாட்டாங்க!"
"ஓ..."
"இப்போ நான் எவ்வளவு நேரம் கூப்பிட்டு இருந்தேன்!நீ காதுல கூட வாங்கலை அதுமாதிரி தான்!"
"என்னை நீ என்னை கூப்பிட்டியா?"-சரணுக்கு ஏதோ புரிந்து போனது!!
"தெரியுதுப்பார்!!நான் உன்னை கூப்பிடாமயே கூப்பிட்டேன்னு பொய் சொன்னேன்!அதையும் நம்பி நீ அதிர்ச்சியாகுற!அப்படின்னா எந்த அளவு நீ கவனிச்சிருக்கிற பார்!!"-நம்ம ஹீரோ வசமாய் மாட்டிக்கொண்டான்.
"யார்டா அது?"
"போப்பா உனக்கு வேற வேலையே இல்லை!"
"சும்மா சொல்லுடா!"
"அப்பா!"
"எனக்கென்ன இப்போவே சொன்னா காதலித்த பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழலாம்!இல்லைன்னா உன் அம்மா பார்க்கிற பெண்ணை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான்!"
"ஓவரா மிரட்டாதே!"
"நீ பாரு ஒருநாள் இவதான் என் மருமக கட்டுடா தாலியைன்னு சொல்ல போறா!அப்போ என்ன பண்றன்னு பார்க்கிறேன்!"-ராகுலை நன்றாக மிரட்டினார் சரண்.
"அதுக்கான காலமும் வந்துடுச்சுங்க!"-மதுவின் ஆனந்தமான குரல் கேட்டது.ராகுல் புருவத்தை சுருக்கி அவளை பார்த்தான்.
மது ராகுலின் அருகே அமர்ந்து அவன் கேசத்தை வருடினாள்.
"என் ராஜகுமாரனுக்கு சீக்கிரமே கல்யாணம் ஆக போகுது!"-ராகுலின் மனதில் இடிஇடித்தது.
"என்ன?"
"வர வெள்ளிக்கிழமை உனக்கு பொண்ணு பார்க்க போறோம்!"
"என்னம்மா சொல்ற?"
"நான் உன் லைப் பார்ட்னரை தேர்ந்தெடுக்க எவ்வளவோ வாய்ப்பு தந்தேன்!நீ அதை பயன்படுத்துறா மாதிரி இல்லை.அதான்...நானே பார்த்துட்டேன்!அவ எவ்வளவு அழகா இருக்கா தெரியுமா?நல்ல அடக்கமான நம்ம குடும்பத்துக்கு ஏற்ற பெண்ணாகவும் இருக்கா!"
"எனக்கு இதுல இஷ்டம் இல்லை!"
"உன் விருப்பத்தை இந்த விஷயத்துல மட்டும் நான் எதிர்பார்க்கவே மாட்டேன்!"
"அம்மா!"
"பார் ராகுல்....உன் வாழ்க்கை இப்படி தான் இருக்கணும்னு நீ எடுக்கிற முடிவுக்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன்!ஆனா,திருமண பந்தத்தை நீ மறந்துப்போனா நான் அதை வேடிக்கை பார்த்துட்டும் இருக்க மாட்டேன்!"-அவள் சற்று கடுமையாக பேச வாயடைத்துப்போனான் ராகுல்.
"ஒழுங்கா நல்லப்பிள்ளையா சொல்ற பேச்சை கேளு!"
"அம்மா!என்னால..."
"பேசாதே!!உஷ்!!போய் தூங்கு!நேரமாகுது பார்!"-ராகுல் அரைமனதோடு எழுந்துப்போனான்.
"ம்..அவன்கிட்ட சொல்லிடலாம்ல?"
"இருங்க...எத்தனை நாள் அவனும் வீராப்பா இருக்கான்னு பார்ப்போம்!"
"என்னமோ உன் பாடு!அவன் பாடு!நான் ரகுவை வரவழைக்கிறேன்!"
"அந்த விஷயத்தை ராகுல்கிட்ட சொல்லாதீங்க!"
"ம்.."
-என்னமோ நடக்க போகிறது!என்னவென்று பார்ப்போம்!!!
ஆபிஸில் ஏதோ கப்பல் கவிழ்ந்ததை போல அமர்ந்திருந்தான் ராகுல்.
மாலை மணி ஏழு என்றது!! இன்னும் வீட்டிற்கு செல்லவில்லை அவன்.
தீக்ஷா அவனிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று அவன் அறைக்கு வந்தாள்.உள்ளே மாயாவும்,கார்த்திகேயனும் அவனை சமாதானம் செய்தப்படி இருந்தனர்.
"என்னாச்சு?"-அவள் கேட்கவும் இருவரும் கோரஸாக சிரித்தனர்.
அவள் ஒன்றும் புரியாமல் விழித்தாள்.அவன் அவர்களை முறைத்தான்.
"உனக்கு விஷயமே தெரியாதுல்ல?வா வா!!இப்படி உட்காரு!விவரமா சொல்றேன்!!"-அவளை அமர வைத்தான் கார்த்திகேயன்.
"நம்ம ஹீரோ சாருக்கு கல்யாணம் நடக்கப்போகுது!!"-அவன் கூறியதும் அவள் முகத்தில் படர்ந்த இருளை யார் கவனித்தாரோ இல்லையோ!மாயா கவனித்தாள்!!!
"கல்யாணமா?"
"ம்..நாளைக்கு பெண் பார்க்கும் படலம்!!"-அவள் மனம் உடைந்தது!!அதன் காரணம் நாம் அறிந்ததே!!!!அதன் காரணத்தினால் அவள் கண்கள் தன்னிச்சையாக கலங்கின.அவள் ராகுலை பார்த்தாள்.அவனோ,தலை கவிழ்ந்தப்படி டேபிளில் கிறுக்கி கொண்டிருந்தான்.
மாயாவும்,கார்த்திகேயனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.சூழ்நிலை உணர்ந்தவள்,முகத்தில் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு "கங்ராட்ஸ்!"என்றாள்.அவள் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவன் செயல்களை கட்டுப்படுத்தியது.
"எனக்கு நேரமாயிடுச்சி!நான் கிளம்புறேன்!"-அவள் வேகவேகமாக கிளம்பினாள்.
அந்த கேபினைவிட்டு வருவதற்குள் அவள் கண்கள் கண்ணீரை அதிகமாய் சுரந்தன.
நேராக காரில் ஏறி அழ ஆரம்பித்துவிட்டாள்.
'அவள் சிறுவயது முதல் எதன் மீதும் பற்றுக்கொள்ளாதவள்!!!காதல் மீதும் கூட!ஆனால்,அவன் அதை மாற்றிவிட்டான்.மனதின் ஓரம் தேடிய ஏதோ ஒரு நம்பிக்கையை அவனே கொடுத்தான்!இன்று அவனே அழித்துவிட்டான்.கடந்துவந்த இத்தனை வருடங்களில் அவள் உணர்வுகளை வெளி கொணர்ந்தவன் அவனே!!இன்று,அவற்றை ஒடுக்கிவிட்டான்.
அவளது மனதில் அலங்கரிக்கப்பட்ட இருதய சிம்மாசனத்தை சுற்றி இருந்த பலம் பொருந்திய பாதுகாப்புகளை மூர்க்கத்தனமாய் அறுத்தெறிந்து அச்சிம்மானத்தை அலங்கரிக்க அதில் மன்னனாய் அமர்ந்தவன் அவனே!!ஆனால் இன்று அதில் சதியாய் வேறொருத்தியை அமர வைத்துவிட்டான்.'
"இவனும் எனக்கு நிரந்தரமில்லையா??"
வாடியது பெண்மனம்.
தீக்ஷா காரை கிளப்பினாள்.முதல்முறையாய் வெறுமையானது போன்ற உணர்வு!!!
வீட்டிற்கு வந்தவள் யாரிடமும் பேசாமல் தனது அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டாள்.