(Reading time: 17 - 34 minutes)

ன்று சிறு வயதில் ராகுலிடமிருந்து பிரித்த பொம்மை அவளை பார்த்து புன்னகைத்தது.

அதனை கையில் எடுத்தவள்,

"அன்னிக்கு அவன்கிட்ட இருந்து உன்னை பிரித்தேன்!இன்னிக்கு..."-அவள் பேசமுடியாமல் அழுதாள்.

டிராவிலிருந்து அவள் தாயின் புகைப்படம் எடுத்து அவரிடம் பேச தொடங்கினாள்.

"ஏன்மா எனக்கு இந்த சோதனை?நான் ஆசைப்பட்டது என்னிக்கும் எனக்கு கிடைக்காதா?முதல்ல நீ போன,இப்போ..."

"என்னால அவர் இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியலை!இதுமாதிரி நடக்கும்னு தெரிந்தும் ஏன் என் மனசுல ஆசையை வளர்த்துவிட்ட?போதும்....இனி,எதுவும் வேணாம்!ராகுல் நல்லப்படியா திருமண வாழ்க்கையை நடத்தினா போதும்!!வேற எதுவும் வேணாம்!"-

பாய்ந்துவரும் ஈட்டியானது மனிதனின் மார்பினை கிழித்து உயிரை பறிக்க போதுமானதாக உள்ளது.ஆனால்,அவனது நம்பிக்கை மற்றும் மனோதிடம் முதலியவற்றை அழிக்க ஒரு அஸ்திரம் உள்ளதா என்று ஆராய்ந்த போது,தெளிந்த அறிவினை உடைய சான்றோர்களுக்கே புதிராய் போனது அந்த அஸ்திரத்தின் பெயர் கேட்கும் தருவாயில்..அது என்ன புது அஸ்திரம்?பிரம்மாஸ்திரமா?பாசுபதாஸ்திரமா?இல்லை வஜ்ராயுதமா??இல்லை...அதன் பெயர் அன்பு!!!

இது என்ன விந்தை?அன்பு ஒரு அஸ்திரமா?அதுவும் மனித நம்பிக்கையை அழிக்கும் அஸ்திரமா?ஆம்...!அன்பானது, மனித உணர்வுகளை வெல்லும் பலம் கொண்டது!!கண்களுக்கு புலப்படா ஆன்மாவை வெல்ல கூடியது!!அன்பால் என்ன தான் செய்ய இயலும்??அன்பால் சர்வ நாடியையும் ஒடுக்க இயலும்.அம்மேன்மை பொருந்திய அன்பையே தவம் என்று அழைத்தனர் சான்றோர்.அன்புக்கொண்ட ஒன்றின் மீதே ஐம்புலங்களை மையமாக்குவோம்!!!வானை தொடும் இமயமானது நடுங்கும் பனியால் உறைய வைக்கும் என்பது உண்மை!!ஆனால் தன்னை உருக்கி இமயம் தரும் கங்கையானது அதே குளிர்ச்சியால் பவித்ரத்தை வாரி வழங்குகிறது என்பது பொய்யல்ல!!அதன் அடிப்படை அன்பே!!

நெருக்கமான அன்பிற்காக மனம் தன் நம்பிக்கையை உடைக்கவும் தயாராய் இருக்கும்!!காரணம்,அன்பு அமைதியாக ஆளுமைப்படுத்தும் அழகிய யுத்தக்களமாகும்!!

கீதாவின் புகைப்படத்தின் முன் நெடுநேரமாய் நின்றிருந்தான் ராகுல்.

அவளது சிரிப்பை இதுநாள் வரை அவன் நேரில் கண்டதில்லை!!ஆனால்,கண்டான்!!தீக்ஷாவின் முகத்தின் மூலம்!!

இன்று அவள் முகம் வாடியதை அவன் கவனிக்காமல் இல்லை!!அதன் காரணம் மட்டும் அவனுக்கு விளங்கவில்லை.

நாளைய தினம் வெள்ளிக்கிழமை!!அவனுக்கு பகீரென்றது!!!இதிலிருந்து தப்பிக்க மார்க்கமே இல்லையா??இல்லை...அவனது அதிகாரம்,ஆணவம்,கோபம் எல்லாம் அவன் தாயிடத்தில் தோற்று போனது!!!

ஒருவேளை கீதா உயிரோடு இருந்திருந்தால்,அவன் நிச்சயம் நடக்கும் நிகழ்வை ஏற்றிருக்க வாய்ப்புண்டு!!!அவளோ இல்லை!திருமண பந்தத்தின் மீதே வெறுப்பு வர வைத்த அவன் பிறப்பை அவன் எங்கு சென்று கூறுவான்??இன்னும் மனம் வலித்தது...

அன்று சரண் உரைத்தது..

"ராகுல் உனக்கும் கீதாவுக்கும் பிறக்கலை!உனக்கும் ஸ்ரேயாவுக்கும் பிறந்தவன்!"-அறியா பருவத்தில் அதுப்பற்றி ஒன்றும் தெரியாதவன்,ஒருநாள் ஸ்ரேயா,

"நீ எனக்கு பிறந்தவன் ராகுல்!!நான் தான் உன் அம்மா!"-என்ற கூற்றினில் தெளிந்து கீதா எழுதிய டைரி மூலம் சகல உண்மையையும் உணர்ந்தான்.அங்கு தொடங்கியது தந்தை-மகனின் பிரிவு.

அதிலும் அவள் ஒரு வார்த்தையையும் ராகுலை பழித்து கூறவில்லை.அவன் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் துல்லியமாய் எழுதி இருந்தாள்.சத்தியமாய்,வேறு பெண்ணிற்கு இவள் மனம் வருவது கடினம்.

அந்த டைரியை வெளியே எடுத்தான்.ஏதோ ஒரு பக்கத்தை புரட்டினான்.

"இன்னிக்கு என் வாழ்வில் மறக்க முடியாத நாள்,என் ராகுல் என்னைப்பார்த்து அம்மான்னு கூப்பிட்டான்..."-என்று தொடங்கி ஏதேதோ எழுதி இருந்தாள்.

மனம் கனத்தது அவனுக்கு!!!கண்ணீர் தேங்கியது!!!

"நினைத்தேன்!நீ இன்னும் தூங்கி இருக்க மாட்டன்னு!"-மதுவின் குரல் கேட்க அவசரஅவசரமாய் டைரியை டிராவில் வைத்து கண்களை துடைத்துக்கொண்டான்.

"டேய்!எவ்வளவு நேரம்டா முழிச்சிட்டு இருப்ப?"-என்று அவனை திருப்பியவள் அவன் முகவாட்டத்தை கண்டறிந்துவிட்டாள்.

"என்னாச்சு ராகுல்?"

"ஒண்ணுமில்லைம்மா!"

"பொய் சொல்லாதே!என்னை பாரு..!என் கண்ணை பார்த்து சொல்லு!"

அவன் தடுமாறினான்.

"என்ன கண்ணா ஆச்சு?"-அதற்கு மேல் முடியவில்லை.அவன் அழுதப்படி அவள் மேல் சாய்ந்தான்.

"கண்ணா என்னடா ஆச்சு?"

"எனக்கு அம்மா ஞாபகம் வந்துடுச்சிம்மா!"-மது திடுக்கிட்டாள்.

இத்தனை வருடத்தில் அவன்முறை கூட இப்படி கூறியதில்லை!!

"ராகுல்?என்னடா எதாவது பிரச்சனையா?"

-அவன் அந்த டைரியை எடுத்து காண்பித்தான்.அதைப்பார்த்தவளுக்கு மேலும் அதிர்ச்சி!!

"இது உன்கிட்டயா இருக்குது?"

"ம்.."-அவளிடம் பேச்சில்லை.

ராகுல் சிறுவயதில் இதை படிக்கிறான் என்று தெரிந்ததும் அவள் அதனை மறைத்து வைத்தாள்.ஆனால் அது மீண்டும் அவனிடத்தில்..!!

"பாரு கண்ணா!அம்மா உன் கூடவே தான் இருப்பாங்க!நீ ஏன் கவலைப்படுற?நீ தானே சொல்லுவ?மரணம் ஒரு சின்ன இடைவேளை அது நிரந்தரம் இல்லைன்னு!நீ அழுதா அவங்களால தாங்க முடியாதுடா கண்ணா!"-அவன் அழுதுவது நிச்சயம் மதுவால் தாங்க முடியவில்லை.

"நீ முதல்ல வந்து தூங்கு!"-அவள் அந்த டைரியை வாங்கி வைத்தாள்.

"நான் உன் மடி மேல படுத்துக்கிட்டாம்மா?"-அவன் கேட்கவும் அவள் இதயம் உருகி போனது.

"படுத்துக்கோடா!"-மது அமர்ந்துக்கொள்ள ராகுல் அவள் மடி மேல் படுத்துக்கொண்டான்.ஏனோ தாயின் அரவணைப்பில் மனம் சிந்திக்க மறந்தது.அவள் அன்பினில் சிறு குழந்தையை போல உறங்க தொடங்கினான் ராகுல்.மது அவனது கேசத்தை வருடினாள்.

அப்படியே அவளும் தூங்கினாள்.

றுநாள் காலை...

தீக்ஷாவின் பொழுது இனிமையாக இல்லை.

"தீக்ஷா!"-சம்யுக்தாவின் குரல் கேட்டது.

எழுந்து சென்று கதவை திறந்தாள்.

"தீக்ஷா நீ.."-ஏதோ கூற வாயெடுத்தவள் அவள் முகத்தை பார்த்ததும் வாயடைத்துப் போனாள்.

"ஏன் முகம் வாடியிருக்கு?"திடுக்கிட்டது அவளுக்கு!!

"ராத்திரி எல்லாம் தூக்கமே இல்லை அண்ணி!"-சமாளித்தாள்.

"ம்...இனியும் வருவது கஷ்டம் தான்!"-சம்யுக்தா கூறியது அவளுக்கு விளங்கவில்லை.

"என்ன சொல்ற?"

"சொல்றேன்!முதல்ல குளிச்சிட்டு வா!"-அவள் விழித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.