(Reading time: 17 - 34 minutes)

"போ!"தீக்ஷா தயக்கத்தோடு குளிக்க சென்றாள்.

திரும்பி வருகையில்,

அவளது அறையை சுத்தப்படுத்தி கொண்டிருந்தாள் சம்யுக்தா.

"என்ன அண்ணி நான் பண்ண மாட்டேனா?"

"ம்ஹீம்!இன்னிக்கு எங்க இளவரசிக்கு ஸ்பெஷல் நாள்!நீ பண்ண கூடாது!"

"என்ன அண்ணி சொல்ற?"

"இன்னிக்கு உன்னை பொண்ணு பார்க்க வராங்க தீக்ஷா!"-திடுக்கிட்டாள் அவள்.

"எ...என்ன சொல்ற?"

"ம்..மாமா உன்கிட்ட சொல்லலை?"-அவளுக்கு தன்னை சுற்றி நடப்பது அனைத்தும் சூன்யமாய் தெரிந்தது.

"சீக்கிரம் ரெடியாகு!இந்த புடவையை கட்டிக்கோ!"

"அண்ணி...எனக்கு!"

"புடவை கட்ட தெரியாதா என்ன?"

"ஐயோ அண்ணி?"

"தீக்ஷா பேச நேரமில்லை!அவங்க வந்துட போறாங்க!சீக்கிரம்!!"

சம்யுக்தா அவளை விரைவுப்படுத்தினாள்.

அவளால் எதிர்த்தும் பேச முடியவில்லை.கற்சிலை போல தயாரானாள்.அவள் மனம் அடியோடு பலத்தை இழந்தது.

மிதமான அலங்காரத்தில் தீக்ஷாவை தயார் படுத்தினாள் சம்யுக்தா.

"ரொம்ப முயற்சி பண்ணாதே!வெட்கம் வந்தா வெட்கப்பட்டுவிடு!நான் ஒண்ணும் கிண்டல் பண்ண மாட்டேன்!"-தீக்ஷாவிற்கு அழுகை வந்தது.விதி அவளுக்கு எதிராய் செயல்பட்டது.முதலில் கனவில் கரம் பிடித்தவனை விலக்கியது.இப்போது இன்னொருவனை கரம் பிடிக்க வைக்கிறது!!!

"தீக்ஷா செல்லம்!"-சித்தார்த்தின் குரல் கேட்டது.அவள் முன்னால் வந்து நின்றவன்.

"ஐயோ!என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கு!"-என்று நெட்டி முறித்தான்.

"ஏன் சித்து என்கிட்ட சொல்லலை?"

"ஒரு சின்ன குட்டி சப்ரைஸ்!"-தீக்ஷா தலை குனிந்துக்கொண்டாள்.

"என் பிரின்சஸ்க்கு சீக்கிரம் கல்யாணம் ஆகப்போகுது!"

-அவர்கள் பேசியப்படி இருக்க,கார் வரும் சப்தம் கேட்டது.

"அவங்க வந்துட்டாங்க போலிருக்கு!நீ தீக்ஷாவை ரெடி பண்ணு!"-என்று சம்யுக்தாவிடம் கூறிவிட்டு சித்தார்த் கீழே சென்றான்.தீக்ஷாவிற்கு வாழ்வே சூன்யமாய் போனது!!மரணதேவன் இக்கணமே தன்னை ஏற்க மாட்டானா?என்று தோன்றியது.

நீண்ட நேரமாய் தன் தாயின் முகத்தைப் பார்த்தப்படியே அமர்ந்திருந்தாள்.

"சம்யுக்தா அவளை கூட்டிட்டு வாம்மா!"-குரல் கேட்டது.

"வா தீக்ஷா!"-சிலையாய் கிளம்பினாள் அவள்.

மாடியிலிருந்து இறங்கி வந்தவள் கண்களில் தென்பட்டான் கௌதம்.அவன் முகம் மலர்ந்திருந்தது!!அவன் குடும்பத்தினரும் ஆனந்தத்தில் லயித்திருந்தனர்.

தீக்ஷா பெருமூச்சை விட்டாள்.

கௌதமின் தாயார் அவளிடம் காபி கோப்பை அடங்கிய தட்டை நீட்டினார்.

"பையன் ஹீரோ மாதிரியே இருக்கான்!"-என்று காதில் கிசுகிசுத்தார்.

அவள் வெறுப்போடு தட்டை வாங்கினாள்.

தலைக்கவிழ்ந்தப்படி அங்கிருந்து ஒருவரிடம் நீட்டினாள்.அவர் அதை எடுக்கவில்லை.

"பார்பி கேர்ளுக்கு இன்னும் கோபம் போகலை போல!"-என்று பரிச்சயமாய் வீசியது அவர் குரல்.குழப்பத்தோடு நிமிர்ந்தாள்.அமர்ந்திருந்தது ஆதித்யா!!!

அங்கு ரவிக்குமாரை கண்டதால் குழப்பத்தோடு அமர்ந்திருந்த ராகுல் ஆதித்யாவின் கூற்றால் நிமிர்ந்துப் பார்த்தான்.நான்கு கண்களும் சந்தித்துக்கொண்டன.

இருவரும் அதிர்ச்சியின் விளிம்பை தொட்டு திரும்பினர்.

என்ன சொல்ல?அவர்களின் மனநிலையை என்னால் விவரிக்க இயலவில்லை.

அங்கிருந்த மாயாவால் சத்தியமாய் சிரிப்பை அடக்க முடியவில்லை.இருந்தாலும் பொறுமை காத்தாள்.தீக்ஷாவின் கண்கள் மெல்ல தாழ்ந்தன.

"என்ன இன்னும் அந்த பொம்மைக்காக சண்டை போடுறீங்களா?"-மீண்டும் கேட்டார் சரண்.

அவள் பதில் பேசாமல் புன்னகைத்தாள்.இச்சமயம் அதில் நாணம் மட்டுமே கலந்திருந்தது!!!

"நீ சொன்ன சதி இந்த பொண்ணாடா?"-மது ராகுலின் காதில் ரகசியமாய் கேட்பது போல் சற்று சத்தமாகவே கேட்டாள்.

அவனோ எதுவும் பேசாமல் கற்சிலையாய் அமர்ந்திருந்தான்.

ராகுல் அவளது முகத்தை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

அனைவருக்கும் காபி கொடுத்துவிட்டு சென்று சம்யுக்தாவின் பின்னால் ஒளிந்துக்கொண்டாள் தீக்ஷா!!அவள் மனம் தாறுமாறாய் துடித்தது.

"பையன் தீக்ஷாக்கிட்ட எதாவது பேச விரும்புறானா?"-ரவிக்குமார் கேட்டார்.

"ராகுல்?"

அவன் இல்லையென தலையசைத்தான்.

அதுவே அவள் மனதை காயப்படுத்த போதுமானதாய் இருந்தது.

ஆதித்யா ஏதோ புரிந்துக்கொண்டு,

"அவன் வெட்கப்படுறான் ரவி!விடுங்க அப்பறமா தனியா மீட் பண்ணி பேசிக்கட்டும்!"

"அதுவும் சரிதான்!"

"நாங்க கிளம்புறோம்!!ஒரு நல்ல நாளா சொல்றேன்!நிச்சயதார்த்தம் பண்ணிடலாம்!"

"சரி சரண்!"-அனைவரும் கிளம்பினர்.

மது செல்வதற்கு முன் தான் அணிந்திருந்த வளையல் ஒன்றை கழற்றி தீக்ஷாவின் கரத்தில் போட்டாள்.

"இது என் அத்தை போட்டிருந்தது!அவங்களுக்கு பிறகு எனக்கு வந்தது!இதுல ஒண்ணு உனக்கு தரேன்!இன்னொன்னு ராகுல் உங்க கல்யாணம் முடிந்ததும் அவனே உன் கையில போடுவான் சரியா?"-என்று நீ தான் எனது இல்லத்தின் மருமகள் என்று சொல்லாமல் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

ராகுலிடம் சுத்தமாய் பேச்சில்லை.அவன் தீக்ஷாவை திரும்பியும் பார்க்கவில்லை.

அவர்கள் சென்றதும் தனது அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள் சதி.மனதில் பட்டாம்பூச்சிகள் பறந்தன.கனவில் அல்ல நினைவிலும் மனம் கவர்ந்தவனையே மணக்க போகிறேன்!

அதுவரையில மரணதேவனை வேண்டி நின்ற மனது!!இன்று,மணக்கோலம் பூண்ட ஸ்ரீ ராமரை சரணடைந்தது எனலாம்!!

அவள் வேண்டுதல் வீண் போகவில்லை!!

அவள் தேடிய தேடல் தான் அவள் பிரப்தமாக பெற இருக்கிறாள்.

அவள் மனதை சுற்றிலும் ராகுல் மட்டுமே நிலைத்திருந்தான்.

ஆனால்,அவனது மனதில்...

துளியும் அவள் குறித்த சிந்தனை இல்லை.வீட்டிற்கு வந்தவன் உடனடியாக அலுவலகம் கிளம்பிவிட்டான்.

அவன் மனதில் அப்படி என்ன தான் உள்ளது??ஏன் தன்னவளை ஏற்க மறுக்கிறான்!!

உண்மையில்...

அவன் மனதிற்கு தீக்ஷாவை ன்றோ பிடித்துப்போனது!!தொல்லை செய்வது அவன் புத்தியே!!அதுவே,அவளை வெறுக்க வைக்கின்றது!!காரணம்,அவனது சங்கல்பம் மட்டுமல்ல!!அவனது ஆணவம் தன் சங்கல்பத்தை மீறி ஒரு நங்கையின் அன்பிற்குள் அடங்க மறுப்பதே!!இதை அன் சதி  தான் சரி செய்தல் வேண்டும்!!

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:877}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.