(Reading time: 28 - 55 minutes)

வளுக்கு இன்ஸ்ட்ரெக்க்ஷன் கொடுத்த படி  தனக்கு சாப்பிட எதாவது இருக்கிறதா என அடுப்படியை ஆராய்ந்தான் நிக்கி.

“ஆமா அப்டியே கொண்டு போய் விட்டுட வேண்டிய தான்…லன்ச் என்ன கொடுக்க? ஸ்னாக்‌ என்ன பேக் பண்ண ….கிட்சன் மட்டும் இருக்கு உள்ள ஒன்னுமே இல்ல….” நிக்கியை எதற்காவது திட்ட வேண்டும் அவளுக்கு. ஆக அடுத்த விஷயத்தை பிடித்துக் கொண்டாள் இசை.

ப்ரெட்டை எடுத்து டோஸ்ட்டரில் வைத்தவன்…..ஆம்லெட்டிற்காய் தவாவை எடுத்து அடுப்பில் வைத்தான்.

“உனக்கு பிடிச்ச மாதிரி கிட்செனை செட் செய்து தர நான் ரெடி….ஆனா என்ன வேணும்னு நீ தான் லிஸ்ட் தரனும்….பைதவே அவிவை ஸ்கூல்ல ட்ராப் பண்ணிட்டு வர்றப்ப வேணும்கிறதெல்லாம் வாங்கிகிடலாம்… இப்ப அவனை ட்ராப் பண்ணப் போறப்ப ஸ்னாக் எதாவது வாங்கி கொடுத்துட்டு வந்துடலாம்…..வீட்டுக்கு வந்து லன்ச் ப்ரிபர் செய்து கொண்டு போய் கொடுக்கனும்னாலும் ஓகே…இல்லை லன்ச் இன்னைக்கு மட்டும் அவனுக்கு எதாவது ஹோட்டல்ல வாங்கி கொடுத்துட்டு நாளையில இருந்து பேக் செய்து கொடுத்தாலும் ஓகே…”

ப்ரச்சனைக்கு சொலூஷன் சொல்லிய படி ப்ரெட் ஆம்லெட் தயார் செய்து அவளுக்கும் அவனுக்குமாய் இரு தட்டில் கொண்டு வந்து வைத்தவன்

“இல்ல என் சமையலே ஓகேனா இதுதான் எனக்கு வரும்…”

அவிவிற்கு அடுத்து உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

இதையா ஒருத்தன் தினம் தினம் சாப்டுகிட்டு இருக்கான்? மனதிற்குள் ஓடியது கேள்வி ஒன்று நல்லிசைக்கு.

தன் பின் ஜெட் வேகத்தில் கிளம்பி நிக்கி சொன்னபடியே மகனை பள்ளியில் விட்டு வரும் வழியில் முதலில் ப்ரவிஷன்ஸ் வாங்க நீல்கிரிஸ். இவள் தேவை என்று நினைத்த ஒவொன்றையும் ஆயிரம் முறை யோசித்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தாளானாயில் அவனோ ஒவ்வொன்றையாய் அவளிடம் கொண்டு வந்து காண்பித்து கேட்டுக் கொண்டிருந்தான்.

“இது வேணுமா?..... இது யூஸாகுமா?..... இத வாங்கலாமா? “

அவளது எஸ் நோவைப் பொறுத்து அதை ட்ராலியில் போடுவதும் அல்லது ராக்கில் திருப்பி வைப்பதுமாய்……

ஏதோ அவனிடம் சற்று இயல்பாய் பேசிப் பழகிவிட்டது நல்லிசைக்கு. அவளோட ஒரு சின்ன முடிவை கூட அவன் அப்ஜெக்ட் செய்யலைங்கிறது ரீசனா? இல்லை அவனோட எல்லா பர்சேசும் இவளையும் அவிவையுமே மைய படுத்தி இருந்தது காரணமா? இல்லை  அவனுக்கு சமையல பத்தி எதுவே தெரியலைங்கிற அந்த ஹிட்டன் மெசெஜா இல்லை இவை எல்லாமேவோ…..அவனிடம் கொஞ்சம் இயல்பாய் பேச செய்தன நல்லிசையை….

சமைக்கவும் தெரியாம….சமைக்க ஆளும் இல்லாம இவன் எப்டி சர்வைவ் ஆனான்? என ஒரு கேள்வி சார்ந்த சின்ன இரக்கம் வந்திருந்தது அவளுக்கு அவன் மீது.

“கடையில வாங்கின தோசை மாவெல்லாம் குழந்தைக்கு கொடுக்க முடியாது….கிரைண்டர் வேணும்….” இவளது வார்த்தையில் அடுத்த ஷாப் விஜயம்.

இப்படியாக இவர்கள் ஷாப்பிங் முடித்து கிளம்பும் நேரம் லன்ச் டைம்.

“வீட்ல போய் சமைக்க டைம் சரியா வருமா..இல்ல ஹோட்டல்ல வாங்கிட்டு போயிடுவமா?”

நிக்கி கேட்கும் போது நல்லிசைக்கு நல்ல பசி. சாப்பாடை வாங்கி வீட்டுக்கு போகும் வரை ஏன் காத்திருக்க வேன்டு?

“ஹோட்டல்ல சாப்டுட்டுப் போய்டலாமே…”

“இல்ல….அது சரி வராது…..” ஒரே வார்த்தையில் முடித்தவன்….. ஹோட்டலில் பார்சல் ஃபூட் வாங்கிக் கொண்டு, அவிவ்க்கு தேவையான சாப்பாடையும் ஸ்கூலில் கொண்டு கொடுத்துவிட்டே வீட்டிற்கு அழைத்துப் போனான்.

அத்தனை நேரம் பசியில் இவள். இத்தனை நேரம் அவனிடம் உணர்ந்த அந்த கன்சர்னுக்கும் இதுக்கும்?

எரிச்சலுடனே சாப்பிட அமர்ந்தாள் வீட்டில். இவள் எதிரில் வந்து அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான் அவன். பசி குறைய அடங்கி வந்த எரிச்சலுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் பார்வை நிக்கியின் கண்களில் போய் எதேச்சையாய் விழுந்தது.

சற்று முன்  ஷாப்பிங் முடியும் வரை பார்த்த அவன் கண்களுக்கும் இப்பொழுதுக்கும் ஏதோ பெரும் வித்யாசம். என்ன அது???

“வழக்கமா லன்சுக்கு என்ன சாப்டுவீங்க?”

இவள் கேள்வியில் விழி உயர்த்தி அவளைப் பார்த்தான்.

“இல்ல கிட்சென்ல லன்ச் ப்ரிபேர் செய்ற மாதிரி எதுவுமே இல்ல…அதான் கேட்டேன்”

“நிறைய நாள் லன்ச் சர்வன் வீட்ல தான் இருக்கும்….அங்க என்னை பார்த்திருப்பியே நீ….”

அதற்குள் அவன் மொபைல் சிணுங்க அதனோடு எழுந்து போய்விட்டான் அவன்.

மீண்டும் அவன் இவளைத் தேடி வரும் போது இவள் கிட்சனை செட் செய்வதில் ஈடுபட்டிருந்தாள்.

வியர்க்க விறுவிறுக்க வேலை செய்து கொண்டிருந்தவள் தன் மீது வேகமாக காற்று படவும்  திரும்பிப் பார்த்தால், இவளை நோக்கி ஒரு டேபிள் ஃபேனை செட் செய்திவிட்டு அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான் அவன்.

“இப்ப காத்து வருதா?? நான் எதாவது ஹெல்ப் செய்யலாமா? சொல்லு நானும் செஞ்சு தரேன்…”

இவள் அருகில் வந்து நின்று கொண்டான்.

“வீட க்ளீன் செய்யவாது ஆள் இருக்காங்களா? இல்லை அதுவும் நான் தானா? ஒரு வேளை வேலக்காரி சரியா அமையலைனுதான் என்ன கொண்டு வந்துட்டீங்களோ?”

ஸ்டவ்வை ஈர ஸ்பாஞ்சால் துடைத்தபடி இவள் கேட்க சட்டென அவள் கையைப் பிடித்து தன் புறமாக திருப்பி நிறுத்தினான் அவளை. கோபம் இருந்தது அப்பிடியில்.

“இதெல்லாம் உன்ன செய்ய சொன்னனா நான்…?” அவன் எதையோ ஆரம்பிக்க இவளுக்கோ மனம் எங்கோ போனது.

முன்பெல்லாம் மதுரனை சந்திக்கும் தருணங்களில் பெரும்பாலும் இப்படித்தான் ஒரு பொஷிஷனில் இருவரும் நின்று பேசுவது வழக்கம். இங்கு கிட்ச்சன் மேடையில் அவள் சாய்ந்திருக்கிறாள்…அப்பொழுதோ அவள் சாயுமிடம் பெரும்பாலும் காராயிருக்கும்….

என்ன இந்த நிக்கியைப் போல உரிமையாய் கைப் பிடிக்க மாட்டான் மதுர். அத்தனை கண்ணியம் காத்தவன், இன்று வேறு ஒருத்தியுடன்……சே…..பாவம் அவன் என்ன செய்வான்…..? இவள மாதிரி இதெல்லாம் ஞாபகம் இருந்தா இப்டியா இருப்பான்….?

கண்ணில் நீர் துளிர்த்திற்று.

சற்று அதட்டலாக ஆரம்பித்த நிக்கி இவள் கண்ணீரைப் பார்த்தவுடன் சட்டென இறங்கிவிட்டான்.

அவள் எதற்கு அழுகிறாள் என அவனுக்கு தெரியுமா என்ன?

“ஹேய்….இது உனக்கு மட்டுமில்ல எனக்கும் அனெக்‌ஸ்பெக்டெட் மேரேஜ் தான்…அதான் இதெல்லாம் என்னால யோசிக்க முடியலை…..வீட க்ளீன் செய்யலாம்  ஆள் வந்துட்டு போவாங்க….நீ அதப்பத்திலாம் கவலப் பட வேண்டாம்……நாளைக்குள்ள கிட்சனை செட் செய்து தர்ரேன்….நீ இப்ப ஆசைப்படவும் தான், சரி, சும்மா இருந்தா எதையாவது யோசிக்க தோணும் இதுலயாவது உன் மைன்ட் ஆக்குபையாகி இருக்கட்டுமேன்னு விட்டுட்டேன்….”

மௌனமாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள் நல்லிசை.

“உனக்கு பிடிக்காத எதையும் நீ செய்ய வேண்டாம்….”

இவள் கையைப் பிடித்து வாசலை நோக்கி இழுத்தான் அவன்.

“ப்ச்….விடுங்க…..நீங்க சொன்ன மாதிரி திஸ் வொர்க் ஹெல்ப்ஸ் மீ…” அவனிடமிருந்த தன் கையை உதறிக் கொண்டு  மீண்டுமாய் திரும்பி அடுப்பை துடைக்கத் தொடங்கினாள்.

“அப்ப ஏன் அழுத?... “

“…………………”

“கேட்கிறேன்ல பதில் சொல்லு…..”

“………………………………..”

“மேரேஜ் உன்னை கம்பெல் பண்ணி செய்தேன்தான்….பட் உன்னை வேற எதுலயாவது கஷ்ட படுத்றேனா…..எதுக்கு அழுதுட்டு இருக்க?...”

“ மதுர் நியாபகம் வந்துச்சு….”

“உன்ட்ட வந்து உளறிட்டுப் போனானே அந்த கிறுக்கன சொல்றியா…..?....அவன்…” நிக்கி எதோ பேசிக் கொண்டு போக நல்லிசையால் தாங்க முடியவில்லை.

இவன் மதுரனை குறை சொல்வதா?

திரும்பியவள் முழு உணர்ச்சி வேகத்தில் பொரிந்து தள்ளிவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.