(Reading time: 28 - 55 minutes)

ன்ன தெரியும் உங்களுக்கு மதுர பத்தி…இல்ல எங்க லவ்வ பத்தி……? இத்தன வருஷமா நான் இப்டி இருந்திருக்றேன்னா அத்தன அளவுக்கு மதுர் முன்னால என்னைய லவ் பண்ணிருக்காங்கன்னு அர்த்தம்….பாவம் இப்ப அவங்க சிட்சுவேஷன் இப்டி ஆகிட்டு…..” என தொடங்கியவள் கட கடவென மதுரைப் பற்றி சொல்லி முடித்தாள்.

“நான் வேற மேரேஜ் செய்யலைனா அவங்களால நிம்மதியா இருக்க முடியாது….அதான் நான் இந்த மேரேஜ்க்கு சம்மதிக்க முக்கிய ரீசனே…”

அவள் சொல்ல….அவளை ஆழமாய்ப் பார்த்திருந்தான் நிக்கி.

சொல்லிய பின்புதான் இசைக்குமே உறைக்கிறது நிக்கிக்கு இது எத்தனையாய் குத்தும் என….

“ பிரவாயில்ல இத என்ட்ட நேரடியா சொல்ற அளவுக்கு என் மேல ஒப்பினியன் இருக்குதே…” சொல்லியவன் சட்டென திரும்பி நடந்துவிட்டான்.

இப்பொழுது இவள் எப்படி உணர வேண்டும் என இவளுக்குத் தெரியவில்லை….

போடா நானா வந்து என்னை மிரட்டி கல்யாணம் செய்துக்கோன்னு சொன்னேன்….இப்ப நல்லா அனுபவி….என கொக்கரிக்க வேண்டுமா?

அல்லது அவன் என்னதான் மிரட்டி இருந்தாலும், ஏதோ ஒரு வகையில் நான் சம்மதிக்கப் போய்தானே இந்த மேரேஜ் நடந்தது…. .அப்றம் இப்ப நிக்கிய நோகடிக்றது எப்டி நியாயம்னு நினைக்கவேண்டுமா?

ஆனாலும் மதுரைப் பற்றிக் குறை சொல்ல இவனுக்கு என்ன தகுதி இருக்கிறதாம்?

மனதை குடைந்தபடி இவள் வேலையைத் தொடர்ந்தவள்

“மம்மா” என்றபடி ஓடி வந்த அவிவின் சத்தத்தில் தான் மீண்டும் நடப்புக்கு வந்தாள். அவ்வளவு நேரமா ஆகிவிட்டது? கடிகாரத்தைப் பார்த்தாள். அது மணி 4 என்றது.

சே….நேரம் போனதே தெரியாம….கிட்சனைப் பார்த்தாள் அது படு பெர்ஃபெக்ட்….

“நீ போய் குளிச்சு ஃப்ரெஷப் பண்ணிட்டு வா….வேணும்னா ரெஸ்ட் எடு…..காலைல இருந்து இங்க தான் நிக்ற….நான் அவனுக்கு பால் ஆத்தி கொடுக்றேன்….இல்லனா இப்ப வேற என்ன கொடுக்கனும்னு சொல்லு செய்றேன்…”

அவிவுடன் வந்து நின்ற நிக்கி சொல்லியபடி தன் கையிலிருந்த சிறு கவரை இவள் முன் வைத்துவிட்டு ஃப்ரிட்ஜை நோக்கிப் போனான்.

அந்த கவருக்குள் இருந்த முல்லைப் பூ சரம் கண்ணுக்குத் தெரிந்தது. இவளுக்கு மிகவும் பிடித்தமான பூ.

இவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்?

“எனக்கு ஹார்லிக்‌ஸ்…. மில்க்ல ஹார்லிக்‌ஸ் போட்டு….” அவிவ் நிக்கியிடம் போய் நிற்க

கடகடவென சமையலறையை விட்டு வெளியேறினாள். செல்லும் போது அந்த பூ இருந்த கவரை மறக்காமல் தன் கையால் தூர தள்ளி விட்டுப் போனாள்.

ன் அறைக்குள் போய் வெகு நேரம் ஷவரில் நின்றவள் சற்று இயல்புக்கு வந்த பின் காலை தன் வீட்டிலிருந்து அள்ளி வந்திருந்த தன் உடைகளிலிருந்து ஒரு சல்வாரை எடுத்துப் போட்டுக் கொண்டாள்.

இவன் முன்னால நைட்டிலலாம் அலைய முடியாது.

பிசுக் பிசுக் என ஒட்டியது அந்த சல்வார்  அவள் மேல்…..என்னவாயிற்று?

அப்பொழுதுதான் பார்த்தாள் கொண்டு வரும் போது அவிவிற்காக வாங்கி வைத்திருந்த நாட்டுத் தேனை விட மனமில்லாமல் எடுத்து வந்திருந்தது எப்படியோ திறந்து இவள் உடைகள் அத்தனைக்கும் தேனாபிஷேகம்.

மாற்றுவதற்கு ஒரு நைட்டியைக் கூட விட்டுவைக்கவில்லை தேன். என்ன செய்ய?

அனைத்து உடைகளையும் தேன் போக அலசிப் போட்டு, மீண்டுமாய் ஒரு முறை குளித்து காலையிலிருந்து போட்டிருந்த அந்த வியர்வை வாடை சல்வாரை மீண்டுமாய் உடுத்தி இவள் வெளி வரும் போது உடல் இத்து போனது போல் ஒரு உணர்வு

காலையிலிருந்து அத்தனை வேலை…..நேற்றுதான் விபத்தாகி மருத்துவ மனை விஜயம்…அதோடு ஒரு கொடும் திருமணம்….உடல் மனம் எல்லாம் தளர அப்படியே போய் கட்டிலில் விழுந்தாள்….

இப்படியே தூங்கிவிடக் கூடாது….அலசிய துணிகளை காயப் போட  வேண்டும்….மகனை வேறு கவனிக்க வேண்டும்…

“மாம்….” துள்ளிய படி உள்ளே வந்தான் அவிவ்.

மெல்ல எழுந்து உட்கார்ந்தாள்.

“என்னாச்சுமா….திரும்பியும் ஃபீவரா….?”

இவள் நெற்றியில் வந்து கை வைத்தான் பிள்ளை. இவள் அவனுக்கு அப்படித்தானே செய்வாள்.

வாசலில் நின்றிருந்திருப்பான் போலும். அவிவின் கேள்வியில் உள்ளே வந்த நிக்கி இவள் நெற்றியில் வந்து கை வைத்தான். முறைத்தபடி கட்டிலில் உள் தள்ளி நகர்ந்தாள் இவள்.

“எதையும் அளவா செய்ய மாட்டியா?” என்றவன் அவள் தலை முடியில் கை வைத்து பார்த்தான். சொத சொதவென அது இன்னும் ஈரமாயிருந்தது. வெளியில் போய் வந்தவன் கையில் ஒரு ஹேர் ட்ரையர்….

“முதல்ல முடிய காய வை….”

“மம்மா ட்ரஸ் எல்லாம் ஹனியாம்….அதான் இந்த ஸ்டிங்கிங் ட்ரெஸ்…..” நிக்கி வெளியில் சென்று வருவதற்குள் தனக்கு கிடைத்த தகவலை தப்பாமல் ஒப்பித்தான் பிள்ளை.

தன் மனைவியை கேள்வியாய் பார்த்தான் நிக்கி. எந்த பதிலும் இல்லை அங்கு.

அட்டாச் பாத்ரூமின் கதவை திறந்து பார்த்தான் அத்தனை துணிகளும் அலசப்பட்டு ஈரமாய்.

இப்பொழுதும் வெளியில் போய் வந்தவன் கையில் ஒரு புடவையும் அதை சார்ந்தவையும்.

“சிருஷ்டிதான் வாங்கி வச்சது நேத்து….முடிஞ்சா இப்போ இதை போட்டுக்க….ஆனா முதல்ல தலைய துவட்டு…”

சொன்னவன் அவள் முகத்தைப் பார்த்துவிட்டு “சேம்ப் நீங்க வாங்க அம்மா ஹேரை காய வைக்க…” என்றபடி ட்ரையரை பெட் அருகில் இருந்த ப்ளக்கில் மாட்டி அவிவ் கையில் குடுத்து அவனை அவளருகில் நிறுத்தினான்.

குழந்தைக்கு படு உற்சாகம். முடியை அளைய சொன்னாலே படு குஷியாகும் அவனுக்கு கையில் ட்ரையர் வேறு என்றால். பிஞ்சு கையால் அவன் இவள் முடியை அலைய, சுக அலைகள் இவளுக்குள். சிறிதாய் உற்சாகம் கூட தலை தூக்கியது.

முடி ஓரளவு உலர்ந்தவுடன், “டின்னர் சன்ட்விச் தான்….எடுத்துட்டு வர்றேன்….நீ இங்கயே சாப்டுறு…” என்றபடி நிக்கி கிளம்ப

“இல்ல…அவிவ் சாப்டுக்க மாட்டான்….நான் அடைக்கு ஊறப் போட்டேன்….அதை அரைச்சு தோசையா வார்க்கனும்…” மறுத்தபடி இவள் எழுந்தாள்.

“அவ்வளவு தான…இங்க இரு செய்து எடுத்துட்டு வர்றேன்…. “

“இல்ல சைட் டிஷ்…”

“ப்ச்….இருன்னு சொல்றேன்ல….” அவன் போய்விட்டான். பின்னாலயே ஓடியது இவள் வளர்த்து வைத்திருந்த வால்.

ட்ரெஸ் மாத்னாலே பாதி நல்ல ஃபீலிங் வருமோ என்ற அளவிற்கு இருந்தது அந்த வியர்வை உடையும், இவள் மனமும்.

மெல்ல எழும்பி புடவையைப் பார்த்தாள். இரத்த சிவப்பும், ஒரு வித ப்ளூவுமாய்….ப்ளவ்ஸ் ஏறத்தாழ இவள் அளவில் இருக்கும் போல்தான் இருந்தது. உடை மாற்றிக் கொண்டாள்.

அறையிலேயே படுத்துக் கொண்டாள். இப்பொழுது மூன்று பேருக்குமாக தட்டுகளை எடுத்துக் கொண்டு அவிவ். மற்றவைகளுடன்  நிக்கி.

சாப்பாடு சாப்பிடும் படியாக இருந்தது.

“இன்னைக்கு நாம என் ரூம்க்கு பிக்னிக் வந்துருக்கோம்….நாளைக்கு ஸ்விமிங் பூல் பக்கத்துல இருக்ற டேபிளுக்கு போவோம்…” அவிவ் இப்டி எதையோ பேசிக் கொண்டிருக்க, அவனுக்கு என்ன பதிலோ நிக்கி சொல்லிக் கொண்டிருக்க இவளுக்கு மனதிலோடியது ஒன்று.

என்னைய இவ்ளவு கேர் எடுக்றவன் சமையல் வேலைக்கு ஏன் ஆள் வைப்பேன்னும் சொல்ல மாட்டேன்றான்…..ஹோட்டல்க்கும் போகமாட்டேன்றான்??? வீட்டுக்குள்ள வேலைக்கு ஆள் வந்துட்டு உடனே போய்டனும்…..ஆனா வெளிய செக்யூரிட்டி மட்டும் அத்தனை பேர். ஒய்???

சாப்பிட்ட பாத்திரங்களை கீழே எடுத்துப் போனவன் பின்னால் வழக்கம் போல் ஓடினான் அவிவ்.

திரும்பி குழந்தை மட்டுமாகத்தான் வந்தான். கையில் அந்த முல்லைப் பூ.

“வைங்க மம்மா….எங்க ஜெயந்தி மிஸ் சொல்லிருக்காங்க….காட் கேவ் ஃப்ளார்ஸ் ஃபார் அஸ்னு…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.