(Reading time: 28 - 55 minutes)

ர்கியு செய்தாலோ அதட்டினாலோ குழந்தை தூங்குவது குதிரைக் கொம்புதான் என ஞாபகம் வர….நிக்கி தர்ற சாப்பாடை சாப்டலாம்…..ட்ரெஸ்ஸ போட்டுகிடலாம்…இத மட்டும் வைக்க கூடாதாமா என்ற மன கேள்வி வேறு சப்போர்ட் செய்ய அதை தலையில் வைத்துக் கொண்டாள் பெயரளவில்.

சற்று நேர ஆட்டத்திற்குப் பின்  அவிவை ஒரு வழியாக படுக்கையில் படுக்க வைத்தாள் இவள் அருகில்..

“ எனக்கு நியூ புக் ரீட் பண்ணி காமிங்க….”

என திடீரென ஞாபகம் வந்தவனாக எழுந்து ஓடியவன், அன்று அவனுக்கென நிக்கி வாங்கி வந்திருந்த புத்தகத்தை கொண்டு வந்து இவளிடம் தந்துவிட்டு படுக்கையில் படுத்துக் கொண்டான்.

இருந்த உடல் வலிக்கு கையை உயர்த்தி புத்தகத்தை தூக்கிப் பிடித்தபடி வாசிப்பது மிகவும் கஷ்டமானதாக தோன்ற

“நாளைக்கு வாசிக்கேன்டா செல்லம்…..இப்போ அம்மாவுக்கு கை வலிக்குதுடா குட்டிபா…..” இவள் மகனிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் போது உள்ளே எட்டிப் பார்த்தான் நிக்கி.

“அங்கிள் நீங்க ரீட் பண்ணுங்க…..மம்மாக்கு கை வலிக்காம்….” அப்புறம் உள்ளே வராமல் இருந்தால் அது நிக்கியா?

ஆனால் வந்தவன் எழ முயன்று கொண்டிருந்தவளை எழவிடாதவாறு மென்மையாய் கட்டிலோடு அமிழ்த்தியபடி வலப் புறத்தில் இவளுக்கு அடுத்தபடியாக அரை மில்லிமீட்டர் இடைவெளியில் கட்டிலின் ஓரத்தில் படுத்தான்.  

அதோடு  இவளுக்கு இடப் புறம் படுத்திருந்த அவிவும் புத்தகத்தைப் பார்க்கும் வண்ணம் நீட்டிப் பிடித்தபடி அதை வாசிக்க தொடங்கினான். அதாவது அவள் மேல் குறுக்காக ஓடியது அவன் கை, ஆனால் பட்டும் படாமலுமான இடைவெளியுடன்.

திடு திடு என அடித்துக் கொண்டது நல்லிசைக்கு. என்னதிது? இப்பொழுது இவள் என்ன செய்ய வேண்டும்.

குழந்தைக்கு இது ஒன்றும் விகல்பமாக வித்யாசமாக தோன்றவில்லை. அவன் கதை கேட்கும் ஆர்வத்தில் இருக்கிறான். இப்பொழுது இவள் ஏதாவது கோபமாக செய்தால் தான் அவனுக்கு வித்யாசமாக தோன்றிவிடும்.

அதோடு என்னதாயினும் குழந்தை முன் நிக்கியுடன் சண்டை போட கூடாது.

ஆனால் இவளுக்கு பட படவென வருகிறது.  இவள் முதுகு புறமாக இருந்த நிக்கியுடன் பேச இவள் திரும்ப வேண்டுமென்றால் கூட அவனை இடித்துக் கொண்டாக வேண்டும்.

மூச்சை பிடித்தபடி அசையாது படுத்திருந்தாள். கதை வாசிப்பு தொடர்ந்தது.

எவ்வளவு நேரம் தாங்க முடியும்?

மெல்ல ஞாபகம் வருகிறது ‘நாளையிலிருந்து நீ என் ரூம்க்கு வந்துடனும்னு சொன்னானே’ அதுக்குதானா இது?

அவன் கையை விலக்கி, மேலே இடித்தாலும் பிரவாயில்லை என சற்று உருண்டு எழுந்தவள், “குட் நைட் அவிவ்மா….” என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறினாள். நிக்கி கதை வாசிப்பை தொடர்ந்தான். பாதியில் நிறுத்த நிச்சயமாய் பிள்ளை விடமாட்டான்.

வீட்டில் அவிவை தனியாக படுக்க வைத்து தான் பழக்கம். ஆக அது விஷயமில்லை. ஆனால் நிக்கி ரூமில் தங்குவதாவது?

அவிவ் அறையை விட்டு வெளியே வந்தவள் அந்த அறையை வெளியிலிருந்து தாழ் போட்டாள். சாவியை வைத்து பூட்டினாலாவது உள்ளிருந்து வேறு சாவி கொண்டு திறக்கலாம்….ஒருவேளை அவன் முன்னெச்சரிக்கையாய் டூப்ளிகேட் சாவியை கொண்டு போய் இருந்தானானால்….ஆனால் இதை என்ன செய்ய முடியும்…?

எதிரிலிருந்த நிக்கியின் ரூமில் போய் படுத்துக் கொண்டாள்.

நீ சொன்னத செஞ்ஜுட்டேன் நிக்கி….உன் ரூமுக்கு வந்துட்டேன்..ஆனால் பாவம் நீதான் இங்க வர முடியாது….மனதிற்குள் அவனை கொக்கரித்தபடி….

அவனது அறையையும் உள்ளே தாழ் போட்டுக் கொண்டு தூங்கிப் போனாள்.

அப்பொழுது வரை எல்லாம் நன்றாகத்தான்  இருந்தது.

னால் காலையில் இவள் விழித்த நொடி இவள் கண்ணில் பட்டது மிக அருகில் படுத்திருந்த நிக்கியின் வெற்று மார்பு.  அதில் இவளது தலை முல்லைப் பூ சருகாய் இரண்டு…..

மிரண்டவளுக்கு அப்பொழுதுதான் உறைக்கிறது….முதல் முறை புடவையில் தூங்கியவளின் புடவை,

 பின் செய்ததெல்லாம் அப்படியே தான் இருக்கிறது ஆனாலும் அது எங்கெங்கோ கலைந்து சுருங்கி……..அவசரமாய் அதை சரி செய்தபடி அடித்துப் பிடித்து எழுந்தால் அவள் படுத்திருந்த இடமெல்லாம் உதிரிப் பூக்கள்…..இவள் அருகில் அவன் ஆழ்ந்த நித்திரையில்…..

எப்படி யோசித்துப் பார்த்தும் அவள் படுத்த பின் நடந்த ஒன்றும் அவளுக்கு ஞாபகம் இல்லை….மாத்திரை எதையும் கலந்து கொடுத்துவிட்டானா?

ஆனால் நடந்ததை விளக்க ஞாபகம் வேறு ஒரு கேடா?

கதறி அழ ஆரம்பித்தாள் அவள்.

அவள் சத்தத்தில் அவசரமாய் எழுந்தவன் “என்னாச்சுமா….? என்னாச்சு லில்லு…. எங்கயும் வலிக்குதாமா?....ரொம்ப முடியலையா? கெட்ட கனவெதுவும் கண்டியா?...” கரிசனையாய் அவன் கேட்க கேட்க இன்னுமாய் எகிறியது ஆக்ரோஷம் இவளுள்.

“செய்றதெல்லாம் செய்துட்டு என்ன கேள்வி இது….?” கத்தினாள்.

ஒன்றும் புரியாமல் அவளையும் அவளை சுத்தியுமாகப் பார்த்தான்.

“என்னாச்சு ?”

அவள் பார்வை இவன் மீது பட அவள் முகத்தில் இன்னுமாய் வலி கூடல்… அவள் பார்வை பட்ட இடத்தைப் பார்த்தான். தன் மீதிருந்த அந்த பூக்களைத் தட்டிவிட்டுக் கொண்டான்.

“இதுக்கா அழுற….?” சுற்றிலும் சிதறி இருந்த பூக்களைப் பார்த்தபடி

“பூன்னு தலைல வச்சுட்டு படுத்தா உதுரத் தான் செய்யும்…இதுக்கா இவ்ளவு அழுகை….வேற பூ இன்னைக்கு வாங்கித் தர்றேன்….” சொல்லிக் கொண்டவன் முக பாவத்தில் சட்டென புரிதலின் அடையாளம்…..வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான் அவன்.

அவன் சீரியஸான முகபாவம் சட்டென சிரிப்பாய் மாறிய விதத்திலேயே புரிந்துவிட்டது இவளுக்கு தான் வாங்கினது மாகா கேவலாமான பல்ப் என…

இசையிடம் அழுகை நின்று அசடு வழிதல் ஆரம்பம்.

“சரியான கேடி….உன் தாட் ப்ராஸஸ்லாம் எப்டி இருக்கு பாரு….” கேலியாய் சொன்னவன்

“ஆமா இப்டி பூ சிந்தி இருந்தா அதுக்கு இப்டித்தான் மீனிங்னு உனக்கு யார் சொல்லி கொடுத்தா?” என்று சீண்டினான்.

இவள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்க்க?

“எனக்குல்லாம் நான் சாகுற வரைக்கும் உன்கூட சந்தோஷமா வாழனும்னு ஆசைங்க மேடம்…நம்மளோடது லாங் டைம் ப்ளான்…அதை சொதப்புற மாதிரி இப்டி சின்னத்தனமான வேலையெல்லாம் செய்ய மாட்டேன்…” சிரித்தபடி ஒரு வித இலகு பாவத்தில் அவன்  சொன்னாலும் அது அழுத்தமான உண்மை என அவளுக்குப் புரிந்தது.

“மத்தபடி  டைம் வர்றப்ப இப்டிதான் பூ சிந்துமா இல்ல வேற என்ன மாதிரின்னு எக்ஸ்ப்ரிமென்ட் செய்து பார்த்துபோம்…ஓகே வா “

முகம் கன்றிக் கொண்டு போனது இவளுக்கு.

இதற்குள் எழுந்து நின்றிருந்தவன்

“ஆனா எனக்குள்ள ஒரு சின்ன தாட்….” அவன் சீரியஸ் டோனுக்கு வர அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“இவ்ளவு நேரம் வரைக்கும் எனக்கு இப்டி தோணவே இல்லடா கண்ணம்மா….ஆனா இப்ப நீ இப்டிலாம் சொன்ன பிறகு…..”

குனிந்து மென்மையாய் அவள் கன்னத்தில் இதழ் ஒற்றி நிமிர்ந்தான்.

எதிர்பாராத இந்த செய்கையில் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள் நல்லிசை.

“யூ கான்’ட் அண்டர்ஸ்டாண்ட் ஹவ் மச் ஐ லவ் யூ” என்றுவிட்டு கதவை திறந்து கொண்டு சென்றுவிட்டான் அவன்.

இதற்கு அவள் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்றே புரியவில்லை அவளுக்கு.

சற்றுநேரம் சிந்தனையற்று அமர்ந்திருந்தாள்.

அப்பொழுதுதான் உறைத்தது அவளுக்கு. கதவை எப்படி திறந்து கொண்டு உள்ளே வந்தான்?

இது அவள் படுக்க சென்ற அவனுடைய அதே அறைதானா?

எழுந்தோடிப் போய் பார்த்தாள். அந்த அறைதான். வெளியே சென்று அவிவ் அறையைப் பார்த்தாள். அது தாழ் திறக்கப் பட்டு கதவு சாத்தி மட்டுமாய் வைக்கப் பட்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.