(Reading time: 14 - 28 minutes)

வ்ளவு நாள் எப்டி இருந்த? என்ன செய்த? என்பதையெல்லாம் விட மாப்ள எப்டி வச்சிருக்றார்? சந்தோஷமா இருக்கீங்களா? என்பதுதான் ப்ரதானமாய் தெரிந்தது அதில். இடையிடையே மருமகனுக்கு பாராட்டு பத்திரங்கள் வேறு.

ஏனோ அம்மாவிடம் நிக்கியை குறை சொல்லவோ, இல்லை ஏதோ அசட்டையாக காண்பித்துக் கொள்ளவோ மனம் வரவில்லை. அம்மா சந்தோஷத்தைக் கெடுப்பானேன்? அது மட்டும் தான் காரணமா என்கிறது ஏதோ ஒன்று.

“அவர் ஃப்ரெண்ட் ஆஃபீஸ்லதான் நான் வேலை பார்த்தேன்…..ரொம்ப விரும்பி கல்யாணம் செய்துகிட்டார்….எனக்கு முதல்ல சுத்தமா அப்டி ஒரு நினைப்பே கிடையாது….என்னைவிட நிக்கிட்ட முதல்ல சேர்ந்துகிட்டது அவிவ்தான்….ரொம்ப கேரிங் பெர்சன்… ஆனா இப்போ நான் சந்தோஷமா இருக்கேன்….”

மனதில் பட்டதை சொல்லி வைத்தாள். உண்மைதானே நேற்று உலகமே முடிந்து போனது போல், கடவுளே இவளை கங்கணம் கட்டிக் கொண்டு வெறுப்பது  போல் இருந்த உணர்வுக்கு இன்று எத்தனை நிறைவான ஒரு உணர்வு, அதுவும் எத்தனை வருடங்களுக்கு பிறகு….

மதுரனை உயிரோடு பார்த்த உடனேயாவது இவள் தன் அம்மாவை தேடிப் போயிருப்பாள் தான்….ஆனால் அவிவை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை அப்பொழுது துளி கூட கிடையாது நல்லிசைக்கு…..

வலுக்கட்டாயமாக அவனை இவளிடமிருந்து பிடுங்கிவிட்டு இவளுக்கு வேறு திருமணம் செய்து வைக்க அப்பா நினைப்பார் என்ற பயம் இவளுக்கு.

இன்று செலிப்ரிடி நிக்கியின் மனைவியாய் அவர்கள் முன் நிற்பதால் அவர்களுக்கும் அவிவ் பாரமாக தோன்றவில்லை போலும்.

“ஆனாலும் அவிவோட உன்னைப் பார்த்தும் உன்னை விரும்பி கல்யாணம் செய்யனும்னா நிக்கி உண்மையிலேயே ரொம்ப தங்கமானவர் லிசிமா….” அம்மா மருமகனுக்கு அவார்ட் கொடுக்க சின்னதாய் சிரித்து வைத்தாள்.

உண்மைதானே என்றது உள் மனது. இவளை இவளாய் பார்ப்பவன்…

“உன்ன மாதிரியே இந்த அடாப்ஷன் விஷயத்துல அவருக்கும் விருப்பம் இருக்றது எவ்ளவு நல்ல விஷயம்……நிஜமாவே உனக்கேத்தவர் நிக்கி…. உன் குணத்துக்கு…அதுவும் சட்டு சட்டுனு வர்ற கோபம், பிடிக்ற பிடிவாதம் எல்லாத்தையும் தாண்டி உன்னை பிடிக்கனும்னா மாப்ள உண்மையிலேயே படு பொறுமைசாலியா இருக்கனும்………”

“அம்மா….” சிணுங்கினாள் இசை. ஆனால் மனமோ அம்மா சொன்ன கோணத்தில் நிக்கியை ஆராய்ந்து பார்த்து அக்ரி செய்கிறதுதான்.

மதியம் லன்சிற்கு உட்காரும் போது அவனருகில் சென்று அமர்ந்தாள் இசை. அவன் என்ன நினைப்பானோ என்று கொஞ்சம் கில்டியாக இருந்தது. நடிக்றதுக்கு மட்டும் நான் வேண்டுமோ என நினைத்தால்….

பகல் முழுவதும் அம்மா முந்தனையைப் பிடித்துக் கொண்டும் அப்பா பின் அலைந்து கொண்டும் இவள் பொழுது பறக்க, இரவு  நிக்கியின் ரூமிற்கு சென்ற பொழுது அந்த குற்றமனப்பானமை வரவில்லை. அந்த அளவிற்கு லன்சில் அவளிடம் சகஜமாக நடந்து கொண்டான் அவன்.

அம்மா அப்பா இங்கு இருக்கும் நேரத்தில் தனியாக படுக்கவெல்லாம் நிச்சயமாக முடியாது.

அதோடு இந்த அவிவ் குட்டி அப்டியே தன் தாத்தட்ட பசை போட்ட மாதிரி ஒட்டிகிட்டான்….பாட்டிக்கும் செல்லம்தானாலும் தாத்தா பாண்ட் படு பலமா இருக்குது….

இவள் மகனுக்கு குட் நைட் சொல்ல சென்ற போது படுத்திருந்த இவளது அப்பா மார்பில் சாய்ந்து அவர் தாடியை குடைந்து கொண்டிருந்தான் பேரன்

 “ப்ரஷ் மாதிரி இருக்கு தாத்தா….நல்லாவே இல்ல….”

“சரிடா கண்ணா, தாத்தா நாளைக்கு ஷேவ் செய்துடுறேன்….”

தாத்தாவுக்கும் பாட்டிக்கும் நடுவில் அவிவ் படுத்துக் கொள்ள சந்தோஷமாகவே இவள் நிக்கியிடம் வந்தாள்.

வனும் இவள் வரவை எதிர்பார்த்திருப்பான் என்று நன்கு தெரிகிறது. படுக்கையில் சாய்ந்த வண்ணம் எதையோ படித்துக் கொண்டிருந்தவன் உள்ளே நுழைந்த இவளை நிமிர்ந்து பார்த்தான்.

அம்மா இவளுக்காக கொண்டு வந்திருந்த மயில் கழுத்து நிற புடவையை அணியச் சொல்லி இருந்தார்.

“கல்யாணத்த தான் பார்க்கல….இப்பவாவது இத கட்டேன்….” சாயங்காலம் அவர் கேட்ட போது அது ஒன்றும் வித்யாசமாக படவில்லை. தலையில் இவளுக்கு பிடித்த அதே முல்லைப் பூவை வேறு வைத்து விட்டிருந்தார் அம்மா. இவளுக்கும் அது பிடித்திருந்தது.

அம்மா வீட்டில் எப்பொழுதும் புடவை பார்ட்டி. ஆக அவரோடு சேர்ந்து புடவையில் சுற்றி கொண்டு இருப்பது ஒன்னும் வித்யாசமாக படவில்லை. இப்பொழுது முந்தைய நினைவில் இவள் முகம் டிங் டி டிங்…..

“நா…நான் போய் ட்ரெஸ் சேஞ்ச் செய்துட்டு வர்றேன்….”

“ம்” என்றபடி தலையை அசைத்தான் அவன்.

ஏன் என்று தெரியவில்லை, காலையிலிருந்து அவனைப் பற்றி தொடந்து தோன்றிக் கொண்டிருக்கும் நல்ல நினைவுகளாலா….அதான் அம்மா மருமகனுக்கு என்னமா ஜால்ரா போடுறாங்க….இல்லை இவளிடம் எதெற்கெடுத்தாலும் விட்டு கொடுத்து போகும் அவனது இயல்பினாலா…..இப்பவும் ஒரு சின்ன கிண்டல் கூட இல்லாம இவளுக்கு பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டுறானே….

ஏனோ அவனிடம் பேச வேண்டும் என்று தோன்றுகிறது…

அவன் அமர்ந்திருந்த படுக்கையின் அடுத்த முனையில் சென்று அமர்ந்தாள். ட்ரெஸ் மாத்திட்டு நைட் ட்ரெஸில் அவன் முன் உட்கார்ந்து கதை அடிக்கவெல்லாம் இவளால் முடியாது.

“ரொம்ப தேங்க்ஸ் நிக்கி”

அவன் முகத்தில் நேற்று இவள் நன்றி சொன்ன போதிருந்த அதே முகபாவம்.

“உங்களுக்கு தேங்க்ஸ் சொன்னா பிடிக்காதோ?....தேங்க்ஸ் அன்ட் சாரி ரெண்டும் வேர்ட்ஸ் ஆஃப் ரிகன்சிலேஷன் தெரியுமா…..எந்த உறவையும் காப்பாத்தும்…… கடவுளுக்கு பிடிச்ச ரெண்டு வேர்ட்ஸ் அது…. தேங்க்ஸ்னா உங்களால நான் சந்தோஷமா இருக்கேன்னு அர்த்தம்…அத சொல்றதுல என்ன? அதுல என்ன டிஸ்டன்ஸ் வந்துடப் போகுது….க்ளோஸ்னஸ்தான் வரும்…” கிட்டத்தட்ட பொரிந்தாள். ஆனால் கோபமெல்லாம் இல்லை…ஏதோ ஒரு வேகம்….சலுகையான தொனி…

இவள் பேசுவதை கண் கொட்டாமல் பார்த்திருந்தவன் முகத்தில் ஒரு ரசனையும் மென்மையும்… கை நீட்டி இவள் நெற்றியில் கலைந்து கிடந்த முடியை மெல்ல ஒதுக்கினான்.

சிலீர் என்றது தொடுகை. சிலிர்த்தது  பெண் உடலும் மனமும். பிடிக்கிறதா பிடிக்கலையா தெரியவில்லை…..ஆனால் எதையும் அவன் மனம் புண்படும் வண்ணம் வெளிப்படுத்த விருப்பம் இல்லை.

தலை குனிந்து கொண்டாள்.

“தேங்க்ஸ் சொல்றது எனக்கும் பிடிக்கும்…… பட் உன்னை கஷ்டத்துல கொண்டு போய் நிறுத்துனதே நான் தானோன்னு எனக்கு ஒரு ஃபீல்…..அதான் இதை அக்‌செப்ட் செய்ய முடியலை…..”

நேற்றும் இதைப் போல்தான் ஏதோ சொன்னான். உன்னை அங்க அனுப்பிருக்க கூடாதுன்னு ஏதோ…

“இப்டில்லாம் ஆகும்னு உங்களுக்கு என்ன தெரியுமா…? இதெல்லாம் நடக்காம இருக்க நீங்க என்ன செய்துறுக்க முடியும்?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.