(Reading time: 14 - 28 minutes)

ன்ன செய்திருக்கலாம்னு தெரியலை…பட் தோணுது….” ஒரு நொடி இடைவெளியிட்டவன் “உன்ட்ட கொஞ்சம் அவிவ் பத்தி பேசனும் இசை….” என்றான். குரலில் தயக்கம் இருந்தது.

சண்டைக்கோழியாவே இவள பார்த்து பழகிட்டான்ல அதான் போல…..அம்மா மருமகனின் பொறுமைக்கு கொடுத்த அவார்டும் ஞாபகம் வருகிறது.

சரி நம்மளால அந்த அவார்டு வாங்க முடியாட்டாலும்….அவனை திரும்பவும் அவார்டுக்கு எலிஜிபிளாக்காம இருக்க ட்ரை பண்ணுவோம் என முடித்துக் கொண்டாள்.

“அவிவை கடைசி வரைக்கும் உன்னோட சொந்த குழந்தைனு நம்ப வைக்க முடியும்னு நினைக்றியா இசை…?”

சுருக்கென்றது மனதுக்குள். அவள் பேசவோ யோசிக்கவோ விரும்பாத ஒரு டாபிக். கசக்கும்….ஆனால் இதுவரை இந்த பயத்தையெல்லாம் மனம் விட்டுப் பேசிக் கொள்ள இவளுக்கு யாரும் இருந்தது இல்லை…பேசித்தான் பார்ப்போமே ஒருவேளை பயமும் கசப்பும் போக ஏதாவது வழி கிடைத்தால்…..?

“தெரியலை நிக்கி…… ஆனா அவன் மனசு உடஞ்சு போறதை, எனக்கு யாருமே இல்லையேன்னு ஃபீல் பண்றதை என்னால தாங்க முடியாது….” அவள் குரலில் அவள் மனதின் வலி அப்படியே இல்லையெனினும் வெளிப் படத்தான் செய்கிறது.

“அதெல்லாம் வளர்க்கிற விதத்துதுல, நாம அவன்ட்ட பேசிக்ற முறையிலதான் இருக்குமா….சிங்கிள் பேரண்டா அடாப்ட் செய்துட்டு பின்ன அவனை எதை சொல்லி சொந்த குழந்தைனு நம்ப வைக்க….? அப்டியே அவன் நம்புற மாதிரி எதாவது பொய் சொல்லி வச்சாலும்….அந்த பொய்யோட  பேஸ்ல வர்ற நிம்மதி எவ்ளவு நாள் நிலைக்கும்….? வேறவங்க வழியா உண்மைய தெரிஞ்சுக்றத விட நம்ம வழியாவே அவன் அதை கேட்டுறது நல்லது இல்லையா?”

எச்சில் விழுங்கினாள் இசை.

“வேறவங்கன்னா? “ மதுர் எதுவும் குழந்தையிடம் உளறி வைத்தனோ? இல்லை உளறிவிடுவான் என இவன் நினைக்கிறானோ?

“யாரையும் ஸ்பெசிஃபிக்கா சொல்லலை…… என் மம்மிக்கும் நிக்கி அங்கிளுக்கும் வெட்டிங்……நான் இப்ப நிக்கி அங்கிள்ட்ட மியூசிக் கத்துகிறனேன்னு சொன்னேன்…..மம்மிக்கும் அங்கிள்கும் வெட்டிங்லாம் நடக்காது…..நீ பொய் சொல்றன்னு என் க்ளாஸ்ல எல்லோரும் சொல்லிட்டாங்க…..நீங்க என் மியூசிக் க்ளாஸுக்கு வாங்கன்னு சொல்லிட்டு இருந்தான் அவிவ். புரிஞ்சுப்பன்னு நினைக்கிறேன்…. “

கசந்து போய் அவனைப் பார்த்தாள் இசை.

“அவனுக்கு இப்ப அது எதுவும் புரியலை….புரியுறதுக்கு முன்ன நாம அவன்ட்ட பேசனும்….அதோட நாமளே அவன் அடாப்டட் சைல்டுனு எல்லோருக்குமா அனவ்ன்ஸ் செய்துட்டா நல்லா இருக்கும்னு படுது….”

மதுர் பேசியதன் பின் விளைவோ இது? மதுர் மாதிரி இன்னும் எத்தனை பேர் என்னவெல்லாம் சொல்லமாட்டார்கள் அதுவும் குழந்தையிடமே கூட…… நிக்கியின் முடிவு சரியென்றே பட்டது.

“நாளைக்கு செய்துடலாமா?”

தலையை ஆட்டி வைத்தாள் இவள். மதுரனுக்கு அவிவ் பத்தி எல்லாம்  தெரிந்தும், என்னமோ இவள் இல்லிஜிடிமேட்டாய் அவிவை பெற்றெடுத்தது போல் பேசியதற்கும்….இந்த நிக்கி இவளிடம் ஒருவார்த்தை விசாரிக்காமல் இவள் மனம் வலிக்கா வண்ணம் அவிவை பற்றி அனைத்தையும் விசாரித்து வைத்திற்கும் பாங்கிற்கும்…..

பொய் எது நிஜம் எதுன்னு புரிஞ்சிகிற பக்குவம் எனக்கு இல்லை போல….  மனதில் இப்படி ஒரு எண்ணம் ஓடியது.

ஆனாலும் அன்றைய இரவுத் தூக்கம் வெகுநாளைக்குப் பின் நிம்மதியாக தோன்றியது.

றுநாள் இவர்கள் வெட்டிங் ரிஷப்ஷன் பார்டி ஹோட்டல் பார்க்கில். ப்ரஸ் பீபுளும் சிலர் அழைக்கப் பட்டிருந்தனர்.

இசை பற்றியும் அவள் பெற்றோர் பற்றியும் அவிவ் பற்றியும்   வெட்டிங் டோஸ்டில் விருந்தினர்களுக்கு  அறிமுகபடுத்தப்பட. க்ளீன் சேவ் சீக்‌ஸுடன் நின்றிருந்த இசையின் அப்பா  இசையைப் பற்றி குறிப்பிடும் போது என் மகள் திருமணத்திற்கு முன்னமே தத்து எடுக்கும் அளவிற்கு அன்பான தைரியமான இதயம் உள்ளவள். அப்படி எங்களுக்கு கிடைத்தவன் தான் எங்கள் பேரன்  அவிவ் என்றும் ஜென்டிலாக சொல்லி வைத்தார்.  

பார்டி இவர்கள் நோக்கத்தை நிறைவேற்றி நன்மையாகவே முடிந்தது. மறுநாள் பத்திரிக்கைகளில் இது தலைப்பு செய்தி இல்லை எனினும்…..செய்தியாய் இடம் பிடித்திருந்தது.  ஆனால் அவிவ் அடாப்டட் சன் என அறிவித்த இசையின் தந்தை செல்வநாதன் தலைக்குத்தான் அது தாங்க  முடியாத பின்விளைவை ஏற்படுத்தி தந்தது.

ஆம் அதிகாலை விழிப்பு வந்து விழித்த இசையின் அருகில் நிக்கி இல்லை. இத்தனை மணிக்கு இவன் எங்கு போனான் என்ற நினைவில் வெளியே வந்தவள் காதில் ஒரு கடினமான குரல் சத்தம் குறைத்து சீறிக் கொண்டிருந்தது விழுந்தது.

“இப்ப கூட அவிவ் யாருன்னு ஒத்துக்க மனசு வரலைல?” எத்தனை சிறு குரலாய் சுருக்கி இருந்தாலும் அது யார் குரல் என புரியாமலில்லை இசைக்கு. வேக வேகமாய் குரல் வந்த திசை நோக்கி ஒடியவள் கண்களில் அருகிலிருந்த சிட் அவுட்டில் நின்றிருந்த இவள் தந்தையின் தலையில் பிஸ்டலை வைத்தபடி நின்றிருந்த அவன் கண்ணில் பட்டான்.

இவள் வாய் திறந்து அலற நினைத்த நொடி பின்னிருந்து இவள் வாயைப் பொத்தி தன்னோடு சேர்த்து பிடித்தது ஒரு கையும் அதன் தோளும். அங்கிருந்த கர்டனுக்கு பின்னாக இழுத்துச் சென்றது அது அவளை.

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:878}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.