(Reading time: 30 - 59 minutes)

" ..."

" நான் விலகனும்னு நினைத்தும் அவ முகம் என்னை விலக விடலை வானதி .. அதனால்தான் என்னால் முடிந்தவரை அவளை கண்காணிச்சுகிட்டே இருந்தேன் .. எந்த சூழ்நிலையிலும் என்னால் அவ வாழ்க்கையில் நுழையமுடியாமல் போனது  விதின்னு சொல்லவா ? இல்ல என்னனு சொல்லன்னு தெரில " என்றான் கிரி வலியுடன் ...

" ஐ எம் சாரி அண்ணா .. உங்களை கஷ்டபடுத்தனும்னு நான் இதை கேட்கல .. உங்களுக்கு அண்ணியின் மனசு எப்பவுமே புரியும் என்ற உண்மையை உணர வைக்க தான் அப்படி சொன்னேன் .. எல்லா சூழ்நிலையிலும் அவங்களை புரிஞ்சு வைச்சு இருக்குற உங்களுக்கு தான் இப்பவும் அண்ணி எப்படி பேசுவாங்கன்னு புரியும் .. காத்திருக்கிறேன்னு  பேர் பண்ணி இன்னும் எத்தனை நாள் தள்ளி இருக்கறதா இருக்கீங்க ? அண்ணி மனசில் கண்டிப்பா நீங்க இருக்கீங்க ? அன்னைக்கு ஹோட்டல்ல உங்களை பார்த்த பிறகு அவங்க முகத்தில் எத்தனை மாற்றம் தெரியுமா ? அண்ட் அந்த மாற்றம் எல்லாமே முகத்தில மட்டும்ன்னு எனக்கு தோனல "

" சரி டா .. இப்போ என்ன செய்யலாம்னு  சொல்ல வர்ற ?"

" ஒரு தாலி வாங்கிட்டு வர எவ்வளவு நேரம் ஆகும் உங்களுக்கு ? "

" வானதி ?????!!!!"

" சும்மா எல்லாத்துக்கும் கண்ணை கண்ணை உருட்டாமல் பதில் சொல்லுங்க அண்ணா "

" நகை கடை பக்கம் தான் ..  " என்றான் கிரி தீவிரமாய் ..

" அப்போ நல்ல தாலியா வாங்கிட்டு வாங்க "

" எதுக்கு ?"

" ம்ம்ம்ம் பிள்ளையார் சிங்களா இருக்காரே ..அதான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் .. சும்மா கேள்வி கேட்காமல் போயி வாங்கிட்டு வாங்க "

" மதுரா கிட்ட பேச வேணாமா ? அட்லீஸ்ட் அம்மா அப்பா ? அத்தை மாமா ? நல்ல நாள் பார்க்க வேணாமா  ?ஏற்கனவே ஜாதகம்பார்க்காமல் ........."

" ஷ்ஷ்ஷ்ஷ் ..... அண்ணிகிட்ட நான் பேசறேன் .. பெரியவங்களுக்கு என் ப்ளான்  ஏற்கனவே மேலோட்டமாய் தெரியும் தான் .. முதற்கடவுள் விநாயாகரின்  பிறந்தநாளை விட நல்ல நாள் எப்போ வந்துவிடும் ? அண்ட் ஜாதகம் ..அந்த ஜாதகப்படி நடக்க வேண்டியது நடந்து முடிஞ்சது ..."

" ஆனாலும் "

" ஆனாலும் ஆகலைனாலும்ன்னு கதையே வேணாம் .. சீக்கிரம் போங்க ... உங்க பின்னாடி  சந்தோஷ் , அருள் ன்னு எவ்வளோ பேரு கல்யாணம் பண்ணிக்கிற லிஸ்ட் ல இருக்கோம் தெரியுமா ? சுபாஷ் அண்ணாவுக்கு கூட உங்களுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணி அப்பாவும் ஆக போறோமே நு எவ்வளவு வருத்தம் தெரியுமா ? உங்க ரெண்டு பேரின் கல்யாணம் நிறைய பேருடைய சந்தோசத்தை துவக்கி வைக்கும் ..மன பாரத்தை கடவுள் மேல  போட்டுடு , மாப்பிளையாய் திரும்ப வாங்க மாப்பிளை சார் " என்றாள்  வானதி .. இருந்தும் தயக்காமாய் இருக்க , தூரத்தில் இருந்து அவன் தந்தையை பார்த்தான் .. கட்டை விரலை உயர்த்தி தலை அசைத்து அவர் சமிக்ஞை காட்டிட , சீரான வேகத்தில் சீறி பாய்ந்தது கிரிதரனின் கார் ...

டிக்கடி கவிமதுராவின் முகத்தை பார்த்து கொண்டே நடந்தாள்  வானதி .. அதை உணர்ந்த மதுராவும் ,

" இப்படி உட்காரலாமா வானதி " என்றாள் .. ஒரு புன்னகையுடன் அவளது அருகில் அமர்ந்து கொண்டாள்  வானதி ..

" சொல்லு வானதி "

" அண்ணி "

" ஏதோ சொல்ல நினைக்கிற .. சொல்லு "

" கிரி அண்ணாவுக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறாங்க ...  நீங்க தான் அவர் கிட்ட பேசணும் "

" நா ... நானா ??" உ ..உனக்கு தெரியும்ல ..எல்லாமே " தயக்கமாய் அவளை ஏறிட்டாள் மதுரா ..

" தெரியும்தான் அண்ணி .. ஆனா "

" என்ன ஆனா ?"

" உங்களை தவிர யாரு சொன்னாலும் அவர்கல்யானம் பண்ணிக்க மாட்டார் ... அவர் உங்களை மனசுல வெச்சுதான் கல்யாணம் பண்ணிக்காமல் இருக்கார் .. "

" உனக்கே அது புரியுது .. அப்பறம் எப்படி என்னை பேச சொல்லுற ? அவர் என் மேல வெச்சுருக்கும் அன்பு நிஜமாச்சே   வானதி ..நான் அதையே காரணம் காட்டி அவரை கட்டாயபடுதுறது சரியாகாது .. அவர் கையாலே அவர் கண்ணை குத்துற மாதிரி " என்றாள்  மதுரா ..

" சோ , அவர் கடைசிவரை உங்களை நினைச்சுகிட்டு இருக்கணும்னு சொல்ல வரிங்களா அண்ணி ? அவருக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா ? இது சுயநலம் இல்லையா அண்ணி ?" லேசாய் அதட்டலாய் கூறினாள்  வானதி .. முகத்தில் அறைந்தார் போல இருந்தது கவிமதுராவிற்கு .. நிஜம்தானே  ? அவளது எதிர்பார்ப்பு என்ன ? கடைசிவரை கிரி தன்னை மட்டும் நினைத்து கொண்டு வாழவேண்டும் என்பதா ? நேற்று இரவு போனில் அவன் பேசாமல் போனபோது கூட இப்படி தானே சிணுங்கியது அவளது மனம் ? அன்று ஹோட்டலில்  அவளை தாங்கி பிடித்தவன் , கண் இமைக்கும் நேரம் விலகியபோதும் அவளுக்கு  ஏமாற்றமாய் தானே இருந்தது ? அப்படி என்றால் ,அவள் மனம் நாடுவது கிரியையா ? முடியுமா ? அவளால் இன்னொருவனின் மனைவியான பின்னும் கூட இவன் மீது நேசம் நிறைத்து வாழ முடியுமா ? பதட்டமாய் உணர்ந்தவள்  கண்களை இறுக மூடி தலைகுனிந்து கொண்டாள்  ...

" அண்ணி " மெல்ல அழைத்தாள்  வானதி ...

"..."

" இந்த நாடகம் போதுமே அண்ணி ... கிரி அண்ணா மனசில் நீங்க இருக்குற மாதிரி , உங்க மனதில் அவர் இருக்குறதும் உண்மைதான் .. நீங்க ரெண்டு பேருமே அளவுக்கு அதிகமான கஷ்டத்தை அனுபவிச்சாச்சு .. ஏன் இன்னமும் ஒருவருக்கு ஒருவர் தண்டனை தரனும் ? போதும் அண்ணி இந்த நாடகம் .. இனிமேலாவது புதிதாய் ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கலாமே "

" சொல்லறது சுலபம் வானதி .. ஆனா இது நடைமுறைக்கு ஒத்து வருமா ? நான் ஒரு குழந்தைக்கு தாய் ... ஜீவாவை பத்தி யோசிச்சியா ? கண்ணன் மாமாவும் மீரா அத்தையும் என்ன நினைப்பாங்க ? அதைவிடு , நான் தரூ மனசை எவ்வளவு நோகடிச்சு இருக்கேன் .. எனக்கு மன்னிப்பே கிடையாது " என்று குரல் உடைந்து அழுதாள்  கவிமதுரா .. ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது வானதிக்கு .. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றுதான் கவிமதுரா வருந்துகிறாள் தவிர , அவளுக்கு இதில் மறுப்பேதும் இல்லை .. அதுவே சாதகமான விஷயம் தானே ..

" ஜீவாவை பற்றி எப்படி மறப்பேன் அண்ணி .. கவிமதுரா மாதிரி ஒரு அம்மாவும் கிரிதரன் அண்ணா மாதிரி  அப்பாவும் கிடைக்க அவன் கொடுத்து வெச்சு இருக்கணும் .. கிரி அண்ணா நல்ல அப்பாவாக இருந்து நம்ம ஜீவாவை பார்த்துக்க மாட்டார்ன்னு நீங்க நினைக்கிறிங்களா ?"

"..."

" அப்படியே ஜீவாதான் உங்களுக்கு  தடைன்னா , நானும் அருளும் என் கல்யாணத்துக்கு அப்பறம் அவனை தத்து எடுத்துக்குறோம் " என்று அவள் கூறி முடிப்பதற்குள்

" வானதீ " என அதட்டினாள்  மதுரா ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.