(Reading time: 30 - 59 minutes)

என்ன தவம் செய்து விட்டேன் – 19 - புவனேஸ்வரி கலைச்செல்வி

கோவில் மணி ஓசை மூன்று முறை கணீரென ஒலித்தது.. கோவிலின் மணி ஓசையும் , ஒலிபெருக்கியில் ஒலிக்கும் பக்தி பாடலும், கோவிலுக்கே உரிய பரவச நிலையை அதிகபடுத்தியது .. கோவிலின் மண்டபத்தில் விமல் , வித்யா , கண்ணபிரான் மீராவதி  நால்வரும் குழந்தை ஜீவாவுடன் அமர்ந்து இருந்தனர்.. வானதியும் கவிமதுராவும் கோவில் பிரகாரத்தை சுற்றி வர கிரிதரன் " இதோ வரேன் " என்ற வாசகத்துடன் கடந்த பத்து நிமிடமாய் யார் கண்ணுக்கும் தெரியாமல் மாயமானான் ..

வானதியின் மனதினுள் ஆயிரம் கேள்விகள் .. கேள்விகள் என்பதை விட எதிர்பார்ப்புகள் தான் அதிகம் .. நடந்து முடிந்ததை பற்றி இன்னும் அலசி ஆராய அவளுக்கு எண்ணமில்லை .. அவளை பொருத்தவரை அடுத்தது என்ன ? என்ற கேள்விதான் வாழ்கையை சரியான பாதையில் கொண்டு செல்லும் .. இதோ இப்போதும் அனைவரும் எப்படி ஆரம்பிப்பது ? என்று யோசிக்கும் விஷயத்தை இவள் வெகு இயல்பாய் பிள்ளை சுழி போட தொடங்கிவிட்டாள்  .. 10 நிமிடங்களுக்கு முன்பு , குழந்தை ஜீவாவை பெரியவர்களிடம் விட்டுவிட்டு, வருவதற்காக வானதி கிரிதரன் இருவரையும்  காத்திருக்க சொல்லிவிட்டு நகர்ந்தாள்  மதுரா .. கிரியிடம் பேசவில்லைதான் என்றாலும் கூட , கிரி என்ற ஒருவன் அங்கு இல்லை என்பது போலவும் அவள் நடந்து கொள்ளவில்லை .. அவள் செல்லும்வரை அமைதியாய் இருந்தாள்  வானதி .. பின்னரே  கிரிதரன் பக்கம் திரும்பினாள்  ..

" சோ அண்ணா , இன்னும் எத்தனை நாளாய் இப்படி தூரம் நின்னு வேடிக்கை பார்கறதா இருக்கீங்க ? " நேரடியாய் அவனை பார்த்து கேட்டாள்  .. அவள் அண்ணா என்று உரிமையாய்  அழைப்பது அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது .ல். முகத்தில் கனிவு பரவ சிரித்தான் கிரிதரன் ..

Enna thavam seithu vitten

" இந்த சிரிப்பெல்லாம் இப்போ அவசியமா ? முதலில் என் கேள்விக்கு பதில் சொல்லுங்க அண்ணா "

" என்னன்னு சொல்ல டா? உனக்கு தான் எல்லாம் தெரியுமே .. மதுரா மனசு மாற வேணாமா ?"

" எப்படி எப்படி ? நீங்க மௌனம் பேசியதே சூர்யா ரேஞ்சுக்கு அமைதியின் சிகரமாய் இருப்பிங்க , அவங்க லைலா மாதிரி வந்து கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்லுவாங்களா  ?"

" ஹ்ம்ம் ஏதாச்சும் பிளான் போடணும் வானதி "

" சரியா போச்சு .. ஒரு ப்ளானும்  அவசியம் இல்ல "

" பின்ன ?"

" ஸ்ரேட்டா கல்யாணம் தான் !" இலகுவாய் சொல்லி சிரித்தவளை  இமைக்காமல் பார்த்தான் கிரி..

" என்ன அண்ணா அப்படி பார்க்கறிங்க ? "

" நீ ரொம்ப சீரியசான பொண்ணுன்னு நினைச்சேனே வானதி"

" அப்படியா ? இப்போ உங்க நினைப்பில் மாற்றம் வரவேண்டிய அளவுக்கு நான் என்ன சொல்லிட்டேன் "

" ப்ச்ச்ச் .. பின்ன என்னம்மா ?  மதுரா மனசுல என்ன இருக்குனு தெரியாமல் உடனே எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும் "

" அண்ணா , நிஜம்மா சொல்லுங்க அண்ணி மனசுல என்ன இருக்கும்னு உங்களுக்கா தெரியாது ?"

 ".."

" அவங்க மனசில் என்ன இருக்குனு தெரியாமலா இவ்வளவு நம்பிக்கையா இருக்கீங்க ?"

" .."

" சரி அதை விடுங்க .. என் கேள்விக்கு பதில் சொல்லுங்க .. "

" ம்ம்ம் கேளு "

" ஒருவேளை அரவிந்த் அண்ணாவும் , மதுரா அண்ணியும் சந்தோஷமா இணைந்து வாழ்ந்து இருந்தா , நீங்க அண்ணியை பின்தொடர்ந்து இருப்பிங்களா ?"

" ப்ச்ச்ச் இதென்ன கேள்வி வானதி "

" கேள்வி கேட்காமல் பதில் சொல்லுங்க !"

" நிச்சயமா மாட்டேன் .. என் மனசுல மதுரா தான் இருந்திருப்பாள் .. ஆனா அது அவளது திருமண வாழ்க்கையை  பாதிக்காத அளவு பார்த்துருப்பேன் ..சொல்ல போனா அவ பக்கமே போயிருக்க மாட்டேன் !" மிக தெளிவாய் தீர்க்கமாய் பதில் வந்தது அவனிடம் ..

" அண்ணி அவங்க கல்யாணத்துக்கு பிறகு , அல்லது அதற்கு முன்போ , உங்க கிட்ட வந்து அவங்க சந்தோஷமா இல்லைன்னு நேரடியா சொல்லவே இல்லை .. அப்படி இருக்கும்போது நீங்க ஏன் கல்யாணத்துக்கு அப்பறமும்  அண்ணியை பின்தொடர்ந்து வந்திங்க ?"

" இதுக்கு அர்த்தம் உனக்கே தெரியும் வானதி ..நான்தான் எல்லாத்தையும் சொன்னேனே "

" ஆமா , இன்னொருமுறை எனக்காக சொல்லுங்களேன் "

" உப்ப்ப்ப் " என பெருமூச்சு விட்டான் கிரி ..பிறகு பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு பேசினான் ..

" ஓகே சொல்லுறேன் கேட்டுக்க .. மதுரா என்னை வேணாம்னு சொன்னதும் எனக்கு கோபம் வந்தது நிஜம்தான் ..அதுவும் என் ப்ரண்டை  என்னோடு இணைச்சு பேசினப்போ அவளை அறையனும்  போல கோபம் வந்தது ..அதற்கு காரணம் அவள் என்னை நம்பவில்லை என்பது விட , இன்னொரு பெண்ணோடு அவளால் எப்படி என்னை இணைத்து பார்க்க முடியுதுன்னு  கோபம் ... "

"..."

" ஆனா அந்த கோபம் எல்லாம் கொஞ்ச நேரம்தான் .. எனக்கு மதுராவை நல்லா தெரியும் ..இயல்பிலேயே அவ பிடிவாதக்காரி.. அவ கோவத்திற்கு பின்னாடி சந்தேகம் இருந்தது என்பதை விட , நான் இனி வேண்டாம்னு ஒரு பிடிவாதம் மட்டும்தான் இருக்குன்னு நான்  புரிஞ்சுகிட்டேன் .. எனக்கு குணம் ஆனதும் அவகிட்ட பேசி  சரி பண்ணிடலாம்ன்னு நம்பிக்கையில் இருந்தேன் .. அதே நேரம் அவளை அதிகம் தொந்தரவு பண்ணாமல் இருந்தேன் ..அவளுக்கே என்னை புரிஞ்சுக்க தனிமை கொடுப்போம்னு .. "

".."

" ஆனா , நான் ஹாஸ்பிட்டலில் இருந்து வந்ததும்  கவியை சந்திக்கிறது அத்தனை சுலபம் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு .. மாமா அத்தை கூட என் பக்கம் இல்லாத நிலையில் அவளை நெருங்குறது  ரொம்பவும் கஷ்டமாய் இருந்தது .. சரி என்னை விட்டு என் மதுரா எங்க போய்விடுவாள்ன்னு நான் அமைதியாய் காத்திருந்த நேரம்தான் அர்விந்த் - கவிமதுரா கல்யாணம் பற்றி எனக்கு தெரிய வந்தது "

" ..."

" எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லை .. என் மதுரா கண்டிப்பா இதுக்கு சம்மதிச்சு இருக்கவே மாட்டான்னு எனக்கு தெரியும் .. என் சந்தேகம் அரவிந்த் மேலதான் " என்றவனின் குரல் உள்ளே போயிருந்தது ..

" ம்ம் பரவாயில்லை சொல்லுங்க "என எடுத்து கொடுத்தாள்   வானதி ..

" அரவிந்த் அந்த அரசியல்வாதிக்கு வேண்டியவனாய் இருப்பானோன்னு நினைச்சேன் .. அது இல்லைன்னு தெரிஞ்சதும்  மதுராவின் எதிர்காலம் மேல உள்ள பயம் குறையவே இல்லை என்பதுதான் உண்மை .. என்னிடமே , கல்யாணம் வேணாம்னு தானே சொன்னா இவ ? அப்படி இருக்கும்போது அரவிந்த்திடன் என்னவெல்லாம் சொல்லி தொலைச்சா தெரியலையேன்னு ஒவ்வொரு நொடியும் பதறினேன் .. "

" ..."

" ஆனால் , என்னால் கண்காணிக்க முடிந்ததே தவிர எதையும் நிறுத்த முடியலை .. தோற்று போனேன் நான் .. படிப்பு விளையாட்டு , தொழில்ன்னு எல்லாத்துலயும் ஜெயித்தவன் என் வாழ்க்கையில் தோற்று நின்னேன் .. அவங்க கல்யாணத்தை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டு நின்ற துரதிர்ச்ட்டசாலி நான் .. எனக்கு தெரியும் .. என் மதுரா மனசுல சந்தோசம் இல்லை ..சம்மதம் இல்லை ..அரவிந்த் இல்லைன்னு எனக்கு தெரியும் .. "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.