(Reading time: 30 - 59 minutes)

" லோ , கேப்ல என்னை வாயாடின்னு சொல்றிங்களா ?" என்றாள்  .. கண்களில் சிரிப்புடன் அவள் கேட்ட விதம் அவன் மனதை யாரோ மயில் இறகால் வருடுவது போல இருந்தது .. இவளை இப்படி பார்த்து எத்தனை திங்கள் ஆகி விட்டது ..

" அதை நான் வேற என் வாயால் சொல்லனுமா செல்லம் ?"

" இனிமே என் கையாள தான் உங்களுக்கு சாப்பாடு ஞாபகம் இருக்கா தரு " என்று விரல் நீட்டி நிரட்டினாள்  மதுரா ..

" ஹா ஹா .. தெய்வமே ..நான் சரண்டர் " என்று சிரித்தான் கிரியும் .. அவன் சிரிப்பு சத்தம் கேட்டு அவன் பக்கம் தலையை திருப்பினான்  ஜீவவேல் ..

" என்ன கண்ணா .. அப்பாவை என்னடா பார்க்குறிங்க ? கல்யாணத்துக்கு அப்பறமும் எப்படி அப்பா தைரியமா சிரிக்கிற ? ன்னு பார்குரின்களா ? நீங்கதான் சீக்கிரமா வளர்ந்து அப்பாவை அம்மாகிட்ட இருந்து காபற்றனும் " என்று அவன் முகத்தில் நவரசமும் கொண்டு வர , அவன் சொன்னது புரியாவிடினும் அவன் முகபாவனையில் கையாட்டி சிரித்தான் ஜீவா ...

" அடேய் .. ஒரே நாளில் உங்கப்பா கட்சி ஆகிட்டியா நீ ?' என்று கேட்டவளுக்கு மனமே நிறைந்து இருந்தது ..

" அப்போ வேற வழி இல்லை .. நானும் உங்கப்பா  கட்சி " என்று கூறி அவன் தோளில்  சாய்ந்து கண்மூடினாள்  கவிமதுரா .. அதுக்கு அவள் திடீரென தன் மீது சாயவும் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாய் பார்த்த கிரி உல்லாசமாய் விசில் அடித்தான் ..

" ன்ன விளையாடுறியா சந்தோஷ் நீ ?" கோபமாய் கத்தினாள்  ஹரிணி .. சாஹித்யா முகத்தை பாவமாய் வைத்து கொள்ள அருளும் ஏதோ சிந்தனையில் இருக்க சித்தார்த்தோ  காய்கறி நறுக்கி கொண்டு இருந்தான் ..

" ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க ?" என்று அவன் சித்தார்த்திடன் இறைஞ்ச

" ஆளைவிடு சாமி " என்று கும்பிடு போட்டான் சித்தார்த் .. இருவரும் பார்வையால் பேசிகொள்வதை  கண்டு கணவனை முறைத்தாள்  ஹரிணி .. இத்தனை நாட்கள் நம்ம ஹரிணி கூட குப்பை கொட்டிய , மன்னிக்கவும் , குடும்பம் நடத்திய அனுபவத்தில் மனைவியின் பார்வையின் அர்த்தங்களை துல்லிதமாய் புரிந்து நடக்கும் அளவு திறன் படைத்திருந்தான்  சித்தார்த் .. இப்போதும்

" அய்யயோ ஹனி ... நான் எப்பவும் உன் கட்சி தான் " என்று அலறினான் .. கணவனை பார்த்து கண்சிமிட்டியவள் , " சந்தோஷ் நீ என்கூட வா " என்று அவனை தனியாய் அழைத்து கொண்டு மாடிக்கு சென்றாள் ..

" சந்தோஷ் "

"..."

" சந்தோஷ் "

" சொல்லுங்க அக்கா "

" உனக்கென்ன ப்ரோப்ளம் ?"

" ஒன்னும் இல்லையே "

" பொய் "

" அக்கா "

" நிஜம்மா என்னை அப்படி நினைக்கிறதா இருந்தா என்னனு சொல்லு ?  நேத்து தானே நீயும் சத்யாவும் வந்திங்க ? அருள் சொன்னான்னு சொல்லித்தான் நீ சத்யாவோடு வந்தியா ?"

" அக்கா .. அருள் சொல்லலன்னாலும்  நான் சஹியை  தனியா அனுப்பி இருக்க மாட்டேன் "

" அப்போ எதுக்கு இப்போ மட்டும் உடனே  கிளம்பனும்னு சொல்லுற ?"

"..."

" உன்னை தான் கேட்குறேன் "

"  ஒரு முக்கியமான வேலை இருக்கு அக்கா .. நான் ஒன்னும் சத்யாவை கூட்டிட்டு போறேன்னு சொல்லலியே .. அருளும் சத்யாவும் பொறுமையா வரட்டும் .. நான் மட்டும் இப்போ கெளம்பறேன்னு  சொல்றேன்..

"

" உனக்கு அருளும் சத்யாவும் சேர்ந்தது புடிக்கலயா சந்தோஷ் " பட்டென கேட்டாள்  ஹரிணி .. சந்தோஷ் மீது ஹரிணிக்கு சந்தேகம் இல்லை என்றாலும் கூட , இப்படி இடக்கு மடக்காய் கேட்டு வைத்தாள்  அவன் ஏதாவது உண்மை காரணத்தை சொல்லுவான் என்று எதிர்பார்த்தாள்  .. அவனோ எதிர்மாறாய்

" அக்கா , என் சூழ்நிலை எனக்கு தான் புரியும் ... நீங்க மட்டும் இல்லை இனி பல பேரு என்னை இப்படி கேள்வி கேட்க சூழ்நிலை வரலாம் .. அதை சந்திக்க நான் தயார் .. நீங்க என்கூட ஒரு நாள் தான் பழகி இருக்கீங்க .,. சோ அதை வெச்சு நீங்க என்மேல அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கனும்னு நான் எதிர்பார்க்க மாட்டேன் .. ஆனா , சத்யா மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கும்னு தெரியும் .. அவ தப்பான ஒருத்தனை காதலிச்சு இருப்பாளா ? அதை மட்டும் யோசிங்க போதும் ... நான் வரேன் " என்றபடி நடந்தான் சந்தோஷ் ..

" ச்ச .. மடையன் .. ஏதாச்சும் போட்டு வாங்கலாம்னு பார்த்தா நமக்கே பல்ப்  கொடுத்துட்டானே "  என்று பொரிந்தாள் ஹரிணி .. சந்தோஷ் நடந்து வந்த வாசலிலேயே கை கட்டி நின்றாள்  சாஹித்யா ..அடுத்து இவளை என்ன சொல்லி சமாளிப்பது என்று அவன் சிந்திக்கும்போதே அழகாய் புன்னகைத்தாள்  சாஹித்யா ...

" ரொம்ப முக்கியமான வேலையா சந்து "

" ம்ம்ம்ம் ஆமா டா குட்டி "

" சரி ப்ளைட்  எத்தனை மணி ?"

" இன்னும் டைம் இருக்கு டா "

" வாங்க  நான் உங்களுக்கு  திங்க்ஸ் பேக் பண்ண ஹெல்ப் பண்ணுறேன் "

" ஹே "

" என்ன சந்து ?"

" என் மேல கோபம் வரலைய சத்யூ "

" ம்ம்ம் நிறைய வந்திச்சு .. அப்பறம் யோசிச்சு பார்த்தேன் .. கண்டிப்பா  என்னை விட்டுட்டு போகணும்னு  முடிவு பண்ணி நீங்க கூட வந்து இருக்க மாட்டிங்க .. ஏதோ முக்கியமான காரணம் இருக்குதுன்னு எனக்கு புரியுது .. நான் வெயிட் பண்ணுறேன் .. ஏன்னா ஐ லவ் " என்று அவள் சொல்லி முடிக்குமுன்னே சந்தோஷின் இறுகிய அணைப்பில்   இருந்தாள்  சாஹித்யா .. அவள் எலும்புகள் நொறுங்கிவிடும் போல இருந்தது .. 

" சந்தூ " என சன்னமாய் அழைத்தாள்  அவள் .. அவள் குரல் அவளுக்கே கேட்டிருக்காத நிலையில் அவனுக்கு எப்படி கேட்கும் .. நொடிங்கள் நிமிடங்களாய் தொடர்ந்த நேரம்தான் அவளை விடுவித்தான் சந்தோஷ் .. இரு கரங்களாலும் அவள் முகத்தை ஏந்தி ஆழமாய் பார்த்தான் சந்தோஷ் ..

" நீ சொன்னது ரொம்ப சின்ன விஷயம் டா .. ஆனா எனக்கு இது எவ்வளவு பெருசுன்னு உனக்கு புரியாது .. இந்த நம்பிக்கை எப்பவும் என் மேல இருக்குமா சத்யூ ?"

" இதென்ன கேள்வி சந்தோஷ் ?"

" சொல்லு டா ப்ளீஸ் "

" கண்டிப்பா இருக்கும் "  .. சூரியனின் கதிரொளியில் உருகும் பனிபோல கவலை மறைய சிரித்தான் சந்தோஷ் .. சரியாய் அதே நேரம்  உள்ளே வந்தான் அருள் ..

"அருள் ..கோவமா மச்சான் ?"

" அறிவு கெட்டவனே .. மச்சான்னு சொல்ற, அப்பறம் என்கிட்ட என்னடா தயக்கம் உனக்கு? உன் ஆளு மட்டும்தான் உன் மேல நம்பிக்கை வைப்பாளா ? ஏன் நான் உன்னை நம்ப மாட்டேன் நெனச்சியாக்கும் ?" என்று கேட்டபடி நண்பனை தழுவி கொண்டான் அருள்மொழிவர்மன் .. இருவரும் நின்றிருந்த காட்சியில் நெகிழ்ந்தாள்  சாஹித்யா .. மெல்ல இயல்புநிலைக்கு திரும்பியவள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.