" போதும்போதும் .. ரெண்டு பெரும் என்னையே பொறாமைப்பட வைப்பிங்க போல .. ஏர்போர்ட் போக வேணாமா ? கிளம்பலாம் " என்று அவர்களை அவரவர் அறைக்கு தள்ளினாள் சாஹித்யா .. இப்படியாய் சந்தோஷ் மட்டும் தனி ஆளாய் சென்னையில் காலடி வைத்த நேரம் ஷீலாவுக்கு போன் பறந்தது ..
" ஹெலோ ஷீலா "
" சொல்லு அண்ணா "
" நாம நினைச்சது சரின்னு தோணுது "
" என்ன சொல்லுற ? "
" அந்த சந்தோஷ் தனி ஆளாய் சென்னை வந்துருக்கான் .. "
" நிஜம்மாவா சொல்லுற ? சாஹித்யா கூட வரலியா ?"
" ம்ம்ம்ம் இல்லை "
" அப்போ நாம நினைச்சதை சாதிச்சிறலாம் போலிருக்கே "
" சரி அண்ணா நீ எங்க இருக்க ? "
" வீட்டுக்குத்தான் வந்துட்டு இருக்கேன் ... "
" வேணாம் ... நீ நேர அன்பினொளிக்கு போ " என்றாள் ஷீலா திட்டவட்டமாய் ..
" எதுக்கு இப்போ அந்த சந்தோஷுடைய இடத்திற்கு என்னை அனுப்பற நீ ?"
" சந்தோஷ் கண்டிப்பா இன்னைக்கு அங்க போகாமல் வீட்டுக்கு தான் போவான் .. அவன் வர்றதுக்குள்ள நீ எப்படியாச்சும் சிவாகிட்ட பேசி அங்க வேலை கேளு "
" இது எப்படி சரி வரும் ?"
" ஏன் வராது ? நீ நான் சிவா சாஹித்யா அருள் எல்லாரும் ஒரே காலேஜ்ல தானே படிச்சோம் ..அதையே காரணமாய் வெச்சு பேசு "
" சத்யா அருளுக்கும் நமக்கும் ஆகாதுன்னு அவனுக்கு தெரியுமே ஷீலா "
" நடி அண்ணா .. நடிக்கிறது கூடவா கஷ்டம் உனக்கு ? நல்லவன் மாதிரி நடி .. சிவாவுக்கு உன்னை பிடிக்காமல் இருக்கலாம் ..அதே நேரம் அவனுக்கு அருள் மேலயும் கொஞ்சம் கசப்பான உணர்வு இருக்கு ..அது நமக்கு சாதகம் தானே ?"
" கலக்குற ஷீலா "
" புகழ்ந்தது போதும் .. சொன்னதை செய் ..நான் போனை வைக்கிறேன் "
போனை வைத்த ஷீலா வில்லத்தனமாய் சிரித்தாள் .. அப்படி என்னத்தான் அண்ணனுக்கும் தங்கைக்கும் பகமை உணர்வு ?
3 வருடங்களுக்கு முன்பு, அருள் சாஹித்யா இருவருமே ஒரே காலேஜில் வெவ்வேறு துறையில் படித்து கொண்டிருந்த நேரம் .. ஷீலாவும் சாஹித்யாவும் ஒரே வகுப்பில் படித்தனர் .. அதே போல அகிலும் அருளும் ஒரே வகுப்பு மாணவர்கள் ..
நண்பர்களோடு கும்மாளமிடுவது , கூடா நட்பு , சண்டை சச்சரவு இப்படி அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அண்ணன் தங்கையரை இயல்பிலேயே யாருக்கும் பிடித்தம் இல்லை .. ஆனால் , கல்வியில் ஷீலாவை காட்டிலும் அகில் சுட்டி .. ! திறமையானவன் தான் அவனும் .. பள்ளி பருவத்தில் இருந்தே கல்விதிறனால் நல்ல பெயர் பெற்றவனுக்கு அருள்மொழி எப்போதுமே பெரிய சவால்தான் .. அடிக்கடி அருளா அலல்து அகிலா என்ற சூழ்நிலை வரும்போதெல்லாம் அருள் வெல்வது அகிலுக்குள் வன்மை உணர்வை விதைத்தது ..
அதேபோல சாஹித்யாவின் வகுப்பில் , ஷீலாவிற்கும் அவள் தோழிகளுக்கும் எடுத்து காட்டாக சொல்கிறேன் என்ற பெயரில் ஆசிரியர்கள் ஒப்பிடுவது இயல்பாகவே பகைமை உணர்வை விதைத்து விட்டது .. அதனாலேயே கிடைக்கின்ற சமயத்தில் எல்லாம் அவர்களை எப்படி வீழ்த்தலாம் என்றுகாத்திருந்தனர் அண்ணன் தங்கை இருவரும் .. அப்படி அவர்களுக்கு கிடைத்த ஒன்றுதான் அருள்- சத்யாவின் நட்பு ..
அருள் சத்யா ஒருவரையும் ஒன்றாய் காணும்போதெல்லாம் அவர்களை இணைத்து வம்பு பேசி கொண்டிருந்தனர் இருவரும் .,.. அவர்களின் நட்பை அறிந்தவர்கள் அமைதியாகவும் , அறியாதவர்கள் இந்த வதந்திகளை நம்பி கொண்டும் இருந்தனர் ... இதற்கிடையில் சத்யா அருள் இருவரும் அமைதியாகவே போகவும் , அதில் தைரியம் பெற்று அவர்கள் காது படவே அவதூராய் பேச தொடங்கினாள் ஷீலா .. அப்படித்தான் ஒரு நாள்
" நீ டூர்க்கு வரலையா சத்யா ?" சோகமாய் கேட்டாள் ரோகினி ..
" ப்ச்ச்ச் இல்லை டீ "
" ஏன் டீ " -ஷன்மதி
" ஹே எங்க பர்த்டே வருது டா .. எப்பவும் நாங்க வீட்டுல தான் ஒண்ணா கொண்டாடுவோம் .. :"
" அதுகென்ன டீ ? இந்த வருஷம் நீயும் அருளும் பிரண்ட்ஸ் கூட கொண்டாடலாமல ?" என்றாள் கீதா ஆர்வமாய் ...
" ஹ்ம்ம் சரி பார்க்கலாம் டா .. நான் அருள்கிட்ட சொல்றேன் " என்று அவள் சொன்ன நேரம்
" நீ ஏன் அவனை கேட்கணும் சத்யா ? அருள் வான்னு கூப்பிட்டா நாய் மாதிரி பின்னாடியே வருவானே அவன் " என்று கூறினாள் ஷீலா .. அவள் குரலில் இருந்த எரிச்சலை விட அவனை நாய் என்று சொன்னதும் எங்கிருந்துதான் வந்ததோ சத்யாவிற்கு கோவம் .. வந்த கோபம் அனைத்தும் ஒரே அறையாய் ஷீலாவின் கன்னத்தை பதம் பார்த்து இருந்தது ...
" இது பாரு ஷீலா .. நானும் காலேஜ் லைப் ல இதெல்லாம் சகஜம்ன்னு நினைச்சு அமைதியா போனா நீ ஓவரா பேசிட்டே போற .. என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு .. என்னைபத்தி பேசிருந்த கூட அமைதியா இருந்திருப்பேன் ..இனிமே அருளை பத்தி ஏதும் பேசினே " என்று சத்யா கூறவும்
ஷீலா மீண்டும் ஏதோ சொல்ல வர , மற்ற தோழிகள் தான இருவரையும் தனி தனியாய் அழைத்து சென்றனர் ..அதே தினம் , அருள் வகுப்பில் அந்த வருடத்தின் போட்டோகிராபி போட்டிக்கு அவர்களது வகுப்பை பிரதிநிதித்து யார் போகலாம் என்று பேச்சு வார்த்தை நடந்தது .. கடைசியாய் அகீல் இரண்டாம் பட்சம் ஆகி , அருளே தேர்ந்தெடுக்கபட அவன் மீது ஏககடுப்பில் இருந்தான் அகில் ...
இப்படியாய் ஒரே நாளில் இருவருமே அவமானபட்டதாக உணர்ந்ததின் விளைவுதான் இத்தனை திட்டங்கள் ! அதுவும் இத்தனை நாட்கள் கடந்தும் அருளும் சத்யாவும் இணைபிரியாமல் இருப்பதை பார்க்க இருவருக்குமே உவப்பாக இருந்தது .. ஒருவழியாய் சந்தோஷ் மூலமாய் அடுத்து என்ன செய்வது என்று திட்டம் தீட்ட தொடங்கினாள் ஷீலா !
அதே நாளில்,
" முகம் என்ன மோகம் என்ன
மனம் சொன்ன வேதம் என்ன வேறென்ன " எஸ் பி பியின் குரலோடு இணைந்து பாடிக்கொண்டு காபி போட்டு கொண்டிருந்தார் கார்த்திக் ..
" நித்தி .... நித்தி செல்லம் "
" ஷ்ஷ்ஷ்ஷ் கார்த்தி ..சிவா வீட்டில் இருக்கான் " ஹாலில் அமர்ந்தபடி தன்னை செல்லமாய் அழைத்த கணவனை எச்சரித்தார் நித்யா ..
" அய்யே .. உன் மகன் இருந்தா எனக்கு என்னடி .. என் பொண்டாட்டிய நான் கொஞ்சுறேன் "
" முருகா ..இந்த காதல் மன்னன் தொல்லை தாங்கல ... நம்ம பையனுக்கே கல்யாண வயசாச்சு ஞாபகத்துல இருக்கட்டும் " என்று மீண்டும் குரல் கொடுத்தவரின் கைகளில் காபியை திணித்தார் கார்த்திக்..
அதே நேரம் துள்ளலாய் நடந்து வந்தான் சிவா ..." குட் மோர்னிங் அப்பா , அம்மா " என்று இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டான் ..
" என்னப்பா , காலையிலேயே அம்மாவை சீண்ட ஆரம்பிச்சுட்ட மாதிரி இருக்கு .. "