(Reading time: 13 - 26 minutes)

என்ன தவம் செய்து விட்டேன் – 21 - புவனேஸ்வரி கலைச்செல்வி

ன்னை நம்பி தனியா வந்ததுக்கு எனக்கு இந்த அறை தேவை தான் ..”மீண்டும் அழுத்தமாய் உரைத்தாள் சாஹித்யா…அடிப்பட்ட பறவையாய் துடித்து அவள் விழிகளுக்குள் தஞ்சம் அடைந்தான் சந்தோஷ் .. என்ன தோன்றியதோ அவளுக்கு,சட்டென இதழ்களை இறுக மூடி கொண்டாள்  சாஹித்யா..

“என்ன செய்து விட்டேன் நான் ? என்ன ப்ரச்சனையாய் இருந்தாலுமே நான் சந்தோஷ் மீது கொண்ட  நம்பிக்கையை இழக்க மாட்டேன்னு அவங்கிட்டயே சொன்னேனே ! ச்ச…”  என்று மனதிற்குள் அவள் வாதம் செய்த நேரம், பலமாய் யாரொ கை தட்ட, மறைவிலிருந்து வெளி வந்தான் அகில்… இருவரையும் பார்த்து சிரித்துக்கொண்டே கைகளை தட்டினான் அவன்..

“ ஷபாஷ் சந்தோஷ்..புத்திசாலிதான் நீ…! அருள் இருக்குரவரை உங்க கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லைன்னு நான் சொன்னதை வைச்சே , அடுத்து என்ன பண்ணனும்னு ப்லான் போட்டு,இப்படி யாருமில்லா காட்டுக்குள்ளே அவளுக்கு தாலி கட்டிட்டியே ..யூ ஆர் க்ரேட்…” என்றான் .. சாஹித்யா, முகத்தில் கோபம் கொப்பளித்தது ..சந்தோஷோ தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்ல என்பது போல நின்றான்…

Enna thavam seithu vitten

“ எனிவே வாழ்த்துக்கள் மிசர்ஸ் சந்தோஷ்… பைனலி,உங்க கல்யானத்தை பார்க்க எனக்கு மட்டும் தான் கொடுத்து வெச்சு இருக்கு …” என்றான் அவன் கிண்டலாய் .. அவன் பேச்சுக்கு சற்றும் அசராமல் சாஹித்யாவிடம் இருந்து பதில் வந்தது ..

“இல்லையே அகில் அண்ணா, உங்களுக்கும் முன்னாடி எங்க கல்யாணத்துக்கு சாட்சியா இருந்தது அந்தமுருகர் தான் .. நானும் இவரும் சந்திச்சது கூட அந்த முருகர் சன்னிதானதுத்துல தான் ..எங்களை சந்திக்க வெச்ச முருகருக்கு,  எங்களை எப்படி சேர்க்கனும்னு தெரியாதா?”

“ என்ன சாஹித்யா ,உன்னை நீயே ஆருதல் படுத்திக்கிறியா ?”

“ ஆறுதலா? ஹா ஹா …எதுக்கு ஆறுதல் ? என் கழுத்துல தாலி கட்டினது யாரு ? ரோட்ல போறவரா ? என் சந்தோஷ்… எப்பவும் சந்தோஷ் எனக்கு தான் சொந்தம்… நான் சந்தோஷுக்கு சொந்தம் … இந்த தாலி சம்ப்ரதாயத்துக்கு முன்னாடியே எப்பவோ அவர் என் கணவர் ஆகிட்டார்… நான் எப்பவோ அவருக்கு மனைவி ஆகிட்டேன்.. இப்போ நீங்க பார்த்து எல்லாம் ஜஸ்ட் உங்களுக்கான சீன் தான் ..மத்தபடி , இதுவே ரொம்ப லேட்டு தான்” என்றாள் சாஹித்யா இடக்காய் … முகத்திலெந்த  மாறுதலையும் காட்டிகொள்ளவில்லை சந்தோஷ்,ஆனால்  மனதளவில் இப்போது அவளை தட்டாமாலையாய் சுற்றி கொண்டிருந்தான் அவன் .. அவன் முகத்தை பார்த்தபடியே

“ மிஸ்டர் அகில்.இஃப் யூ டொன்ட் மைண்ட்,நாம நாளைக்கு சந்திக்கலாம்… நான் என் கணவர் கூட  கொஞ்சம் தனியா டுயட் பாடனும்னு ஆசை படுறேன்..சோ பூஜை வேளையில் கரடியாய் நிற்காதிங்க” என்றவள் அவனை பேச விடாமல்,சந்தோஷின் கரங்களை தனது கரங்களோடு கோர்த்து கொண்டு  காரில் ஏறினாள்… அகில் அவர்களை இருவரையும் பின்னால் நின்று கொண்டு முறைப்பதை அவர்களால்  உணர முடிந்தது…எனினும் அதை சட்டை செய்யாமல் கார் புறப்பட்டது…

சாஹித்யா ஓட்டிகொண்டு வந்த கார் சாலையில் பறந்தது என்றுதான் சொல்ல வேண்டும் .. அத்தனை வேகமாய் காரோட்டினாள்  அவள் .. அவளின் மனநிலையை சந்தோஷால் புரிந்துகொள்ள முடிந்தது .. ஆனால் அவன் அந்த மௌனத்தை கலைக்கவோ , அல்லது  தன்னிலை விளக்கம் கொடுக்கவோ விரும்பவில்லை .. கண்களை இறுக மூடிஉ கொண்டு சீட்டில் தலைசாய்த்து படுத்துகொண்டான் அவன் .. என்னத்தான் சாலை மீதி கவனம் இருந்தாலும் , ஓரக்கண்ணால் அவனை பார்த்து கொண்டுதான் இருந்தாள்  அவள் .. " என்னதான் பிரச்சனை இவனுக்கு ? பண்ணுறதும் பண்ணிட்டு பச்சைகுழந்தை மாதிரி முகத்தை வெச்சுகிறத பாரேன் " .. அவன்மீது கோபம் இருந்தாலும் கூட, அவனை ரசிக்காமல் அவளால் இருக்க முடியவில்லை .. என்ன நினைத்தானோ , ஏதோ உந்துதலில் விழிகளைத் திறந்தான் சந்தோஷ் . சட்டென பார்வையை விளக்கி கொண்டாள்  சாஹித்யா..

" காரை நிறுத்து சத்யா "

"..."

" உன்னை தான் சொல்லுறேன் .. நான் இறங்கனும் ..காரை நிறுத்து " என்றான் சந்தோஷ் கடிமான குரலில் .. !

You might also like - Neengalum thupariyalam.. A series to bring out the detective in you...

ருளின் குறும்பு பேச்சினிலும் காதலிலும் தன்னை மறந்தவளாய் அவன் தோளில்  சாய்ந்திருந்தாள்  வானதி ..

அவன் அருகாமையில் எப்போது உறங்கி போனாள்  என்று அவளே அறியாமல் இருந்தாள்  .. அவளது முகத்தை ரசித்து கொண்டே நிம்மதியாய் கரோட்டினான்  அருள் .. அவன் காரோட்டும் வேகத்தில் அவள் தூக்கம் களைந்துவிட கூடாது என்பதில் தீவிரமாய் இருந்தான் அவன் ..

" நதி .... நதி செல்லம் "

" ம்ம்ம் .... ம்ம்ம் "

" கண்மணி அன்போடு காதலன் அருள் எழுப்புறேன் , எழுந்திரு கண்ணா " என்று செல்லமாய் அவளை கொஞ்சினான் அருள் .. மெல்ல விழிகளை சுழற்றியவள் , தான் காரில் இல்லை என்பதை உணர்ந்தாள்  .. கண்களை கசக்கி கொண்டே " எங்க இருக்கோம் அருள் ?" என்றாள் .. அவளது கரங்களை கன்னத்தில் வைத்து அழுத்தினான் அருள் ..அவள் விழிகளோடு விழி கலந்து ஆழ்ந்த குரலில் பேசினான் அருள் ..

" நதி "

" சொல்லு அருள் "

" உனக்கு என்னை பிடிக்குமா டீ ?"

" இதென்ன டா கேள்வி ?"

" ப்ச்ச்  பதில் சொல்லேன் "

" பிடிக்கும் பிடிக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் "

" அப்போ என்னை சார்ந்தவங்களையும் உனக்கு பிடிக்குமா டா "

" நீ என்ன மக்கா அருள் "

" ம்ம்ம்ம் உன் மேல மங்காத காதல் கொண்டுள்ள மக்குதான் .. சரி பதில் சொல்லு டா.. "

" அருள் கண்ணா , இந்த ஜீன்ஸ் படத்துல வர்ற மாதிரி உன் கை பட்ட குப்பையை கூட எனக்கு அவ்ளோ பிடிக்கும் .. அப்படி இருக்கும்போது , உன் சம்பந்தம்ப்பட்ட , உன் கூட இருக்குற இவ்வளவு ஏன் உன் அன்பான பார்வை யார் மேல படுதோ அவங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் போதுமா ?" கனிவாய் , காதலாய் இயல்பாய் சொல்லி அவன் நெற்றியில் செல்லமாய் முட்டினாள் ..

" ஆனா இப்போ எதுக்கு இவ்வளவு பீடிகைன்னு தான் புரியலையே டா " அவள் முகத்தை வலதும் இடதும்  திரும்பாதபடி கைகளால் சிறைப்பிடித்து வைத்த்டிருந்தான் அருள் ..

" நாம இருக்குற இடம் , என் அத்தை மாமா வீடுதான் ... இயல்பாகவே ரெண்டு பேருமே ரொம்ப நல்லவங்க டா .. ஆனா சூழ்நிலை அவங்களை எப்படியெப்படியோ  காட்டிருச்சு .. எனக்கு அவங்க ஞாபகமாகவே இருக்குன்னு தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன் .. நம்ம வாழ்க்கைக்கு அவங்க ஆசிர்வாதம் எனக்கு ரொம்ப முக்கியம் .. " என்றான் அருள் ..

" இதுல என்ன இருக்கு அருள் ? அவங்க என்னை கஷ்டப்படுத்துற மாதிரி பேசினாலுமே, நான் பொறுத்து போவேன் ..சரியா ?"

" ஒரு நிமிஷம் " என்றவன் தனது கழுத்தில் இருந்த சங்கிலியை அவளுக்கு அணிவித்தான் ..

" அருள் என்ன இது ?"

" அஹெம் அஹெம் , தாலி காட்ட எனக்கும் ஆசைதான் .. பட் அதுக்கு இன்னும் நேரம் இருக்கே டார்லிங் .. இப்போதைக்கு ஏதோ என்னால  முடிஞ்சது .. ஒருவேளை இங்க இருக்குற சூழ்நிலையை உன்னால சந்திக்க முடியாலைன்னா, இந்த சங்கிலி நீ அருளின் மனைவின்னு ஞாபகபடுத்தும் .. நான் எப்பவும் உன் கூடத்தான் இருக்கேன் இருப்பேன்னு  உனக்கு இது உணர்த்தும் " என்றான் அருள் .. அவனை தாவி அணைத்து  கொண்டாள்  வானதி ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.