(Reading time: 13 - 26 minutes)

" ரி அருள் , உங்க அத்தைகிட்ட நான் பேசுறேன் " என்றபடி அவர் காலில் விழுந்து ஆசி பெற்றாள்  வானதி .. அவர்  கொடுத்த காபியை மடமடவென குடித்தாள் .. அவனது கரங்களை பற்றிக்கொண்டு வரவேற்பறையில் அமர்ந்தாள் .. எதிரில் நிற்பது தனது அம்மா என்பதை மறந்து , அருளின் அத்தையார் என்று நினைத்து கொள்ள  முயன்றாள் .. அவளது கரங்கள் அவப்போது அந்த சங்கிலியை வருடின ..

வீட்டை பார்வையால் அளந்தாள்  வானதி ..ஆடம்பரத்திற்காக வாங்கிய பல பொருட்கள் இப்போது இல்லை .. வறுமை என்று சொல்வதற்கு , அவள் அவர்களை வறுமையில் விட்டு விடவில்லை .. " பின்னே எதுக்காம் இந்த கோலம் ?" மனதிற்குள் கேள்வி எழாமல் இல்லை ..

" மாமா சாப்பிட்டாரா அத்தை ?" இயல்பாய் கேட்டான் அருள் .. மூன்று நாட்களுக்கு முன்னதாகவே அந்த வீட்டிற்கு  வந்து தன்னை அறிமுகபடுத்தி கொண்டு இருந்தான் அருள் .. அவனது அன்பான குணம் வழக்கம் போலவே அவர்களை கட்டி போட்டது ..

" ம்ம்ம் சாப்பிட்டார் மாப்பிளை .. படுத்திருக்கார்  ..அவரால் தான் எழுந்து வர முடியாதே " என்று கண்ணீருடன் பதில் அளித்தார் வானதியின் தாயார் .. மாப்பிளை என்று வாய் நிறைய அழைத்தை மனதிற்குள் குறித்து கொண்டவள், தனது தந்தையால் நடக்க முடியவில்லை என்ற செய்தியில் அதிர்ந்து போனாள்  ..

" மாமாவை பார்க்கலாம் வரியா ??" என்றான் அருள் .. வானதியின் முகத்தில் கலவரம் தெரிய

" சரி கொஞ்ச நேரம் ஆகட்டும் " என்றான் .. வானதி எதுவும் பேசவில்லை என்றாலும் அருளின் பேச்சினையும் தந்து தாயின் பதிலையும் செவிமடுத்து கொண்டுதான் இருந்தாள் .. அவளுக்கு தெரியவேண்டும் என்பதற்காகவே நிறைய பேசினான் அருள் .. கோபம் மொத்தமும் கொஞ்சம் கொஞ்சமாய் உடைய , அவள் கண்களில் துளிர்த்தது முதல்  கண்ணீர் துளி .. அதை கண்டவன் , " சிக்னல் இல்லை .. நான் ஒரு கால் பண்ணிட்டு வரேன் " என்று வாசலில் நின்றான் ..

தனது தாயையும் , தனது தந்தை படுத்திருக்கும் அறையையும் தவிப்பாய்  பார்த்தாள்  வானதி .. சரியாய் அந்த நேரம் டம்ளர் விழும் சத்தம் கேட்கவும்

" அப்பா " என்று அழைத்தபடி அறைக்குள் ஓடினாள்  வானதி ... ஒரு வெற்றிபுன்னகையுடன் காரில் ஏறினான் அருள் ..

"இது போதும் நதி ... நீ கொஞ்ச நேரம் என் அத்தை மாமாவுக்கு மகளாய் இரு .. சீக்கிரமே வரேன் " என்று மனதிற்குள் சொன்னவன் காரை எடுத்து கொண்டு அருகில் உள்ள  அங்காடி கடைக்கு புறப்பட்டான் ..

You might also like - A-Aa-E-Ee... A quick fire feel gud romantic story...

" ம்மாடி ... இதுதான் நடந்தது ..இப்போவாச்சும் கோபம் போச்சா டார்லிங் ?" என்று சந்தோஷ் ஆடியோவில் கலகலவென சிரித்தாள் சாஹித்யா ..

" ஐ லவ் யூ டீ பொண்டாட்டி " என்றான் சந்தோஷ் ..என்னவோ அவன் அருகில் இருப்பதாய்  உணர்ந்தவள் ,

" லவ் யூ டூ புருஷா " என்றாள் ..

" இன்னொரு விஷயம் தெரியுமா , உன் கழுத்துல நான் போட்ட செயின் , அது தாலியே இல்லை "

" வாட் ??" என்று அதிர்ந்தாள்  சாஹித்யா ..

" சொதப்பல் ஷீலா "-அகில்

" என்னாச்சுன்னு சொல்லு அண்ணா "

" அந்த சத்யா சரியான கைகாரி தான் ..கடைசி வரை சந்தோஷை விட்டு தரல .. நாம போட்ட திட்டம் வேஸ்ட்... "

" சோ , அவ அழல ?? அப்படி தானே ?"

" ம்ம்ம் "

" ஹா ஹா "

" என்ன நீ சிரிக்கிற"

" அவ அழுவா அண்ணா .. அதுவும் இப்போதே ! உயிர் போற அளவுக்கு அவளுக்கு வலிக்கும் பாரு ..."

" என்ன சொல்லுற "

" அவ உயிருக்கு ஆபத்து "

" என்னம்மா சொல்லுற ?"

" அவ உயிர் அவளுடைய நண்பன்தானே ???"

" அருளுக்கு என்ன ??"

" அவன் சாக போறான் "

" ஷீலா "

" இரு இரு போனே வரட்டும் ..அதுக்கு பிறகு சந்தோஷமான நியுஸ் சொல்லுறேன் "

ங்கு அண்ணநும் தங்கையும் காத்திருக்க அங்கு சாஹித்யா சந்தோஷின் வார்த்தையில் குழம்பி போனாள் ..

" மக்கு இன்னுமா புரியல .. அந்த சங்கிலியை பாரேன் .. அது தாலி இல்ல .. அது தாலி மாதிரி இருக்கு ஒரு பென்டன்ட் ... அகிலை ஏமாத்தணும்னு தான் அப்படி பண்ணேன் .. மத்தபடி என் செல்லம் ஓகே சொல்லாம மாமா  தாலி கட்டுவேனா ?" என்று சந்தோஷ் சிரிக்க , கண்களில் ஆனந்த கண்ணீர் தேங்க , அந்த சங்கிலியின் மீது பார்வையை பதித்தவள் , இடது பக்கம் வந்த லாரியை கவனிக்காமல் போக ,

" சத்யா " என்று சந்தோஷ் இடைபுகுவதற்குள் , கண் இமைக்கும் நொடியில் அந்த லாரி அவளது காரை இடித்தது .. இரத்த வெள்ளத்தில் காரிலேயே மயங்கி போனாள்  சாஹித்யா " சாரி சந்தோஷ் " என்ற வார்த்தையுடன் ..

ந்த பேரங்காடியில் இருந்து வானதிக்காக ஆசையாய் புடவை வாங்கிவிட்டு வெளியில் வந்தான் அருள் ..

" நதி , இந்த சாரி பார்த்ததும் நீ எப்படி பிளாட்  ஆகுற பார்" என்றவன் , ஹாரன் சத்தம் கேட்டு நிமிரும்முன்னே ஓர் கார்  அவனை இடித்து தள்ளி விட்டு பறந்தது .. இரத்த வெள்ளத்தில் அவன் கிடைக்க அவனை சுற்றி கூட்டம் கூடியது .. அடுத்த நொடியே ஷீலாவின் கைப்பேசி ஒலித்தது .." டன் " என்ற கணீர்  குரல் !

தவம் தொடரும்

Episode # 20

Episode # 22

{kunena_discuss:838}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.