(Reading time: 13 - 26 minutes)

" லவ் யூ அருள் "

" ஐ லவ் யூ டூ டா கண்மணி "  அவள் கைகளை பிடித்து கொண்டு அந்த அறையில் இருந்து வெளி வந்தான் அருள் ..

" காரை நிறுத்துன்னு சொல்றேன் ல ?"  எதுவும் பேசாமல் காரை நிறுத்தினாள்  சாஹித்யா .. சந்தோஷ் அவளை பார்த்து நேராய் திரும்பி அமர , அவன் வாயை திறக்குமுன்னே கை அமர்த்தி பேசினாள்  சாஹித்யா ..

" இது பாருங்க சந்தோஷ் .. அகில் யாருன்னு எனக்கு தெரியும் .. அதனால் தான் நான் உங்களை விட்டு கொடுக்காமல் பேசினான் .. ஆனா, அவன் பேசின விஷயத்துல ஒரு துளி உண்மை இருந்தாலும் நீங்க என்னை மறந்திட வேண்டியதுதான் .. "

You might also like - Rose and Thorn... Free English romantic story 

" சத்யா "

" இருங்க நான் சொல்லி முடிச்சிடுறேன் .. நான் உங்களை நேசிச்சதும் , நேசிக்கிறதும் உண்மைதான் .. என்னை நான் கோவிலில் அறைந்து கொண்டதற்கு காரணமே , உங்களை கை நீட்டி அடிக்க எனக்கு மனசு வரல ! அந்த அளவுக்கு நான் உங்களை நேசிக்கிறேன் .. இப்பவும் அந்த காதல் போயிடுச்சு , உங்களை மொத்தமா தூக்கி எறிஞ்சுட்டேன் அப்படின்னு என்னால வசனம் எல்லாம் பேச முடியாது ..அப்படி பேசினா , அது உண்மையாகவுய்ம் இருக்காது .. ஐ லவ் யூ அலொட் ... ஆனா , அதுக்காக என் அம்மா அப்பா , உங்க அப்பா அம்மா யாருக்கும் தெரியாமல் நீங்க தாலி கட்டினதை நான் சரின்னு சொல்லவே மாட்டேன் .. சோ   இப்படி ஒரு காரியம் பண்ணதுக்காக நீங்க சொல்லுற  உங்க காரணம்  கண்டிப்பா வலுவானதா இருக்கணும்! அண்ட் பொய் இருக்க கூடாது " என்று அவள் சொன்னதும்  அவள் இதழ்களை சிறைப்பிடித்தான் சந்தோஷ் ..

முதலில் கொஞ்சம் தடுமாறியவள் அவனை மொத்தமாய் தள்ளி விட்டாள் ..

" சந்தோஷ் "

" என்ன டீ ?? நானும் நீ வாய மூடுவ , கொஞ்சம் பேசலாம்னு பார்த்தா நீ பாட்டுக்கு பேசிட்டே போற .. ? "

" .."

" பொய் சொல்லுவேனா ? உன்கிட்ட நான் பொய் சொல்லுவேனா சொல்லு டீ ?"

".."

" எதாச்சும் வலுவான காரணத்தை தேடி பிடிச்சு சொல்லிட்டா எல்லாம் சரி ஆகிடுமா ? அப்போ நான் காரணம் சொல்லிட்டா என்னை மன்னிச்சு ஏற்றுப்பியா ? "

".."

" இங்க என்ன நடந்தது ? நடக்கும்னு உனக்கு தெரியாமல் இருக்கலாம் .. ஆனா எனக்கு எல்லாமே தெரியும் ! எப்பவுமே உன்னை  பத்தியே நினைக்கிற எனக்கு. உனக்காக என்ன செய்யணும்னு யோசிக்க தெரியாதா ?"

" ..."

" உனக்கு ஓவரா கோபம் வந்தா , காரை எடுத்துகிட்டு லாங் டிரைவ் போறது ஒரு ஹெபிட் ..எனக்கு அது பிடிக்கலன்னாலும் , உனக்கு அதுதான் கோபத்தை குறைக்கும் வழின்னு தெரிஞ்சு பெட்ரோல் பில் பண்ணிருக்கேன் பார் " என்றான் சந்தோஷ் தீவிரமாய் ..ஏனோ அவன் சொல்லிய விதத்தில் அவளுக்கு சிரிக்க வேண்டும்  போல இருந்தது ..இருந்தும் அமைதியாய் இருந்தாள் .. தனது பாக்கெட்டில் இருந்த  ஒரு பெண்ட்டிரைவ் வை எடுத்து காரில் வைத்தான் சந்தோஷ் ..

" நீ சொன்ன மாதிரி எல்லாம் இல்லாம , முழுக்க முழுக்க மனசுல இருக்குறதை நேரடியாய் சொல்லிருக்கேன்   கேட்டு பார் .. ரொம்ப தூரமாய் டிரைவ் பண்ணாத .. நான் உன் பின்னாடியே தான் வந்துகிட்டு இருப்பேன் ... பத்திரமா வா " என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு காரில் இருந்து இறங்கினான் ..

ட்டிலில் இருந்து எழுந்த வானதியின் பார்வை அந்த அறை  முழுவதும் படர்ந்தது ..

" அருள் இது ??"  என்று அவள் முடிக்கும்முன் கையில் கோப்பையுடன் அறைக்குள் நுழைந்தார் அவளின் தாயர்ர் ..

" வானதிம்மா " என்று அவர் பாசமாய் அழைக்கவும் , வானதி அருளின் கரங்களை பிடித்து கொண்டாள் ..

" அருள் வா போலாம் "

" வானதி என் கிட்ட பேச மாட்டியா "

" அருள் வா "

" வானதிமா "

" அருள் நீ வர போறியா இல்லையா ?"

" நதி ... என்னை சேர்ந்தவங்கள  வெறுக்க மாட்டேன்னு நீதானே சொன்ன ? இவங்க என் அத்தை .. இது அவங்க வீடு ..  " என்றபடி அவள் அன்னையில் தோளில்  கை போட்டான் அருள்மொழிவர்மன் ,.. வாயடைத்து போனாள்  வானதி .. இப்போது அவள் என்ன செய்ய போகிறாள் ??

காரின் கண்ணாடியில் இருந்து சந்தோஷை பார்த்தாள்  சாஹித்யா .. அங்கு ஏற்கனவே இன்னோர் கார் தயாராய் இருக்க , உடனே காரை இயக்கினான் அவன் ..

" ப்ளான் .... ப்ளான் ... எல்லாத்தையும் பக்காவா யோசிச்சு வெச்சு இருக்கான் இவன் .. என்னதான் வேணும் இவனுக்கு ?? " கோபமாய் காரை ஸ்டார்ட் செய்தபடி அந்த பெண்ட்ட்ரைவை  இயக்கினாள் ...

" ஹேய்  பொண்டாட்டி " மிக உற்சாகமாய் ஒலித்தது அவனது குரல் .. அவள் அருகில் இல்லை என்ற உணர்வில் கொஞ்சமாய் சிரித்து வைத்தாள்  சாஹித்யா ..

" என்ன செல்லம் , மாமா மேல செம்ம கோபமா டா ?"

" மாமா வா ?" என்று வாய்விட்டே கேட்டாள்  அவள் ..

" அஹெம் .. இந்நேரம் மாமாவா ? ன்னு ஷாக் ஆகி இருப்பியே .. முதல்ல என்னை மன்னிச்சிரு டா.. இன்னைக்கு உனக்கு ஏராளமான ஷாக் தந்துட்டேன் .. என்னை வெறுத்துட்டியா ? இல்லன்னா இருக்குற அன்பையும் பொறுமையையும் இழுத்து பிடிச்சுகிட்டு இருக்கியா ? ஐ எம் சாரி டீ பட்டு .. "

" கொஞ்சினது போதும் "  மீண்டும் முணுமுணுத்தாள்  சாஹித்யா ..

" யா யா .. கொஞ்சினது போதும் .. இப்போ நான் சில உண்மையை சொல்லணும் " என்று அவன் பீடிகை போடவும் அவளுக்கு தூக்கி வாரி போட்டது .. " ராஸ்கல் மைக் ஏதும் வெச்சுகிட்டு பேசுறானா ?" மீண்டும் பின்னால் வந்த காரை பார்த்தாள்  .. அவள் கண்களுக்கு ஏதும் சரியாய் தெரியவில்லை ..அதற்குள் சந்தோஷ் பேச தொடங்கி இருந்தான் ..

" ஹே குட்டிமா , நான் உன்னை முதன்முதலில் பார்த்தது கோவில்லன்னு தானே நினைச்ச நீ ? ஆனா இல்லை .. நான் உன்னை உன் காலேஜ்ல தான் முதலில் பார்த்தேன் " என்றான் சந்தோஷ் ..

" இதென்ன புதுக்கதை " வெகுண்டாள் சாஹித்யா ..

" ஹே ஒரு முக்கியமான விஷயம் உன்னை சமதானம் பண்ணனும்னு நான் புது கதை சொல்லுறேன்னு நினைக்காத .. ! இது முழுக்கவும் நிஜம் .. " என்றவன் , " நான் உன்னை முதன் முதல்ல " என்றபடி சில உண்மைகளை சொன்னான் .. அவன் பேச பேச அவள் முகத்தில் ஆச்சர்ய ரேகை படர்ந்தது .. கோபமான மனநிலையில் இருந்தவள் இப்போது தலை கீழாய் மாறி இருந்தாள் .. அது அவளது காரின் வேகம் குறைந்ததிலேயே தெரிந்தது ..  அதை உணர்ந்தவனாய் புன்னகைத்தான் சந்தோஷ் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.