(Reading time: 21 - 41 minutes)

"சின்னு வந்துவிட்டானா..?" என்று ஹிந்தியில் கேட்ட சித்தாராவிடம் "வந்துட்டான்.." என சலிப்பாக கூறி விட்டு தன் காய்கறி வெட்டும் வேலையில் மூழ்கினாள். இந்திராவிர்கு நன்றாக ஹிந்தி தெரியாது ஆனால் தேவையான சில வார்த்தைகளின் அர்த்தம் மட்டும் புரிந்து வைத்திருந்தாள். சித்தாராவிடம் குத்துமதிப்பாக தான் எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறுவாள். 'சின்னு' என அவள் ஆர்யனை குறிப்பிட்டதும் இந்த 'பேட்டா, பேட்டி' போன்ற வார்த்தைகள் போல என எண்ணிக் கொண்டாள். மாலை நேரம் பிரபாகரனும் இந்திராவும் ரவீந்தர் வக்கீலை பார்க்க அவர் வீட்டுக்கே சென்றனர். பிரபாகரனின் நெருங்கிய நண்பன் ரவீந்தர். இந்திராவின் வெள்ளந்தியான பேச்சு ரவீந்தர்க்கு பிடித்த போக "இப்போ நடந்திட்டிருக்க கேஸ் முடிந்தப்புறம் ஷீத்தல்னு ஒரு பொண்ணு கூட நீயும் ஜாயின் பன்னிக்கம்மா... அதுக்கப்புறம் டீல் பன்னிக்கலாம்.." என கூறியவரிடம் இருவரும் நன்றி தெரிவித்தனர். கிளம்பும் நேரத்தில் "நீயும் ஆர்யனும் நெக்ஸ்ட் மன்த்  சன்டே பார்ட்டிக்கு கண்டிப்பா வரனும்... நோ எக்ஸ்க்யூசஸ்.." என எச்சரிக்கை போல் அழைப்புவிடுத்தார். காரில் அமர்ந்து வீட்டிர்கு திரும்பி செல்லும் போது "அதென்னப்பா சித்தாராமா ஆர்யன சின்னு னு கூப்பிடறாங்க.. ஹிந்தில சின்னுனா என்ன..?" என கேட்டவளை பார்த்து சிரித்த பிரபாகரன் "ஹா ஹா அது அவனோட செல்ல பெயர்டா பட் அவனுக்கு அந்த நேம் சொல்லி கூப்பிட்டா பிடிக்காது.. நிரஞ்சனா உன்கிட்ட சொல்லவே இல்லையா..?" என்றார் சாலையில் கவனம் செலுத்தியப்படி. இல்லை என்பது போல் தலையசைத்தவள் வெளியே கடந்து சென்ற பானீ பூரி, ஐஸ் க்ரீம் கடைகளை 'ஞே'வென பார்த்தவாறு வந்தாள். இதை கவனித்த பிரபாகரன் காரை ஓரமாக நிறுத்தி அவள் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தார். திண்பன்டங்களை சாப்பிட்டு வயிற்றை நிறைத்தவளின் கண்ணில் அப்போது தான் அந்த பெரிய கடையில் 'ஷோ'வுக்காக வைக்கப்பட்டிருந்த அளவிற் மிகப்பெரிய கரடி பொம்மை தென்ப்பட்டது. சட்டென்று இந்திராவின் தலைக்குள் மணியடிக்க அந்த கரடி பொம்மையும் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்கையில் மணி ஒன்பதாகிவிட்டது. பிரபாகரனும் பல நாள் கழித்து மருமகளுடன் சேர்ந்து சிறுப்பிள்ளை போல் நன்றாக சாப்பிட்டு விட நிரஞ்சனாவிடம் எதுவும் கூறாமல் அமைதியாக சென்று படுத்துக் கொண்டார். தூக்க முடியாமல் "யம்மா... யப்பா..." என முனங்கியப்படி அந்த கரடி பொம்மையை தூக்கியும் இழுத்தும் ஒரு வழியாக அறைக்குள் கொண்டு வந்து சேர்த்தாள் இந்திரா. மடிக்கணிணியில் தீவிரமாக எதையோ டைப் செய்து கொண்டிருந்த ஆர்யன் இந்திராவையும் அந்த கரடி பொம்மையும் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தவன் "ஏய்... உனக்கென்ன பைத்தியமா..? எதுக்கு இப்படி ரூம் ஸ்பேச காலி பன்ற..? ஒழுங்கா இந்த காண்டாமிருகத்த வெளிய வீசிட்டு வா.. என்னை ஒரு கொலை பன்ன வச்சிடாத..." என அய்யோ லொய்யயோவென வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்தான். அவன் பேசுவதையே அமைதியாக பார்த்தவள் "இது காண்டாமிருகம் இல்ல கரடி..." என்றாள் ஏதோ பெரிய கண்டுபிடிப்பு போல. "என்ன கருமமமோ... ஜஸ்ட் த்ரோ இட் எவே.." என்றான் கடுப்பான குரலில். கொஞ்ச நேரம் அவனின் கோப முகத்தை கண்டு உள்ளுக்குள் தனக்கே சபாஷ் கூறிக் கொண்டவள் "இது பெயர் என்னேனு தெரியுமா...? சின்னு... நைஸ் நேம்ல... மேட்சிங்கா இருக்கு.." என்று பேசியப்படி அதன் கழுத்திலிருந்து 'ஐ லவ் யு' ரிப்பனை அவிழ்த்தாள். "டேய் சின்னு டால்டா டப்பி தலையா... இனி உன்னை நான் சங்கிலில தான் கட்டிப் போடுவேன்  ... பிகாஸ் நீ ஒரு காட்டுக் கரடி... எப்போ யார கடிச்சு வைப்பேனு யாருக்குமே தெரியாது. யு ஆர் வெரி டேன்ஜுரஸ் அனிமல்.. " என தன் பழி வாங்கும் படலத்தை வெகு சிறப்பாக செய்து கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் திரும்பி பார்த்தவள் ஆர்யனின் முகம் கன்றி சிவந்ததை பார்த்ததும் ஏதோ சாதித்தது போல் உணர்ந்தாள். போகிற போக்கில் 'டிஷ்யூம்' மென அதன் மூக்கில் ஒரு குத்து விட்டதோடு அதே சந்தோஷத்துடன் மெத்தையில் சென்று நன்றாக படுத்துறங்கினாள். 'இவகிட்ட யார் இந்த நேம் சொன்னது' என்று ஆர்யனிர்கு உள்ளுக்குள் ஏதோ பற்றிக் கொண்டு வந்தாலும் "பொறு மனமே பொறு" என அடக்கிக் கொண்டான். அடுத்த நாள் காலை இந்திரா எழுந்திருக்கும் போதே கரடி பொம்மையின் தரிசனம் தான். சிரித்துக் கொண்டே இருந்தாள் அன்று முழுதும். இரண்டு மூன்று நாள் இதே கூத்து நடந்து கொண்டிருந்தது. ஆர்யன் அறைக்குள் வந்ததும் கரடி பொம்மையில் பாக்சிங் பழகுவது போல் அவள் மூக்கில் துணியை கட்டிக் கொண்டு "ஹுவாங்ங்ங்.... டிஷ் டிஷ் டிஷ்..." என கராத்தே மாஸ்டர் போல்  முகத்தை முஷ்டியால் குத்தி குத்தி அதன் மூக்கு பக்கம் பகுதி பாகமே பிய்ந்து போனது. அவன் சில நேரம் பொருட்படுத்தாமல் விட்டு விடுவான் பல சமயங்களில் பேசாமல் எழுந்து சென்று பால்கனியில் நின்று கொள்வான்.

You might also like - Krishna Saki... A family oriented romantic story...

 காலண்டர் ஒவ்வொரு நாளாய் வாயில் போட்டு மென்று முழுங்கியது. ஒரு மாதம் கழித்து ஷீத்தல் என்ற பெண்ணுடன் தினமும் ரவீந்தர் அலுவலகத்திர்கு சென்று வர ஆரம்பித்தாள் இந்திரா. ஷீத்தல் திருமணமாகாத பெண். பார்ப்பதற்கு மெழுகு பொம்மை போல் இருப்பாள். தினமும் தமிழில் நான்கு வார்த்தை கற்று வைத்துக் கொண்டு தமிழ் தெரியும் என கூறி இந்திராவை பைத்தியமாக்குவதில் அவளுக்கொரு அலாதி பிரியம். கேஸ் கோப்புகளை பிரித்து படிக்கிறேன் என்ற பெயரில் இருவரும் அமர்ந்து ஊர்க்கதை உலகக்கதை பேசவே நேரம் சரியாக இருக்கும். ஷீத்தல் மும்பைவாசி என்பதால் எல்லா இடங்களை பற்றிய விபரங்கள் விரல் நுனியில் வைத்திருந்தாள். இருவரும் வார இறுதியில் ஊர் சுற்றுவதையும் வழக்கமாக்கி கொண்டனர். இந்திரா வீட்டில் இருக்கும் நேரம் குறைந்து போக ஆர்யன் தன் புது ப்ரோஜக்டில் தீவிரமாக மூழ்கி விட ஆக இருவரும் சரியாக பார்த்து பேசுவதே குறைந்து விட்டது. அப்படி இப்படியென வடநாட்டில் பிரசித்தியாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை வந்து சேர்ந்தது. இந்திரா அன்று தான் நிரஞ்சனா, ஆதி, பிரபாகரன்,ஆர்யன் என மொத்த குடும்பமும் ஒன்றாக வீட்டில் இருப்பதை காண்கிறாள். கொண்டாட்டம் எதுவும் பெரிதாக இல்லையென்றாலும் ஐவரும் காலையில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டதே மனநிறைய சந்தோஷத்தை அளித்தது. எல்லோரும் வரவேற்பயைில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க "டேய் ஆதி யாருடா அந்த பொண்ணு..?" என்றான் ஆர்யன் தீவிரமான குரலில். திருதிருவென விழித்த ஆதி "யாருடா...? எந்த பொண்ணு..?" என்று திணற பிரபாகரனும் நிரஞ்சனாவும் திகைத்து போய் பார்த்தனர். "அதான் அந்த காஃபி ஷாப்ல சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்தீங்களே.." என புருவங்களை உயர்த்தி கேட்ட ஆர்யனை 'வேண்டான்டா' என்பது போல் பார்த்த ஆதி "எனக்கு நியாபகம் இல்ல.." என்றான் பதட்டத்தை மறைத்த குரலில். இவர்களின் உரையாடலை அமைதியாக பார்த்திருந்த இந்திரா ' இந்த லூசு தான் போட்டு வாங்குதுனா இந்த ஆதி லூசு அது தெரியாம உளறிக் கொட்டுது..' என மானசீகமாக தலையிலடித்து கொண்டாள். "டாட் பாத்தீங்களா அவன் எப்படி பம்முறானு...! அப்போ சம்திங் ஃபிஷி... என்னேனு கேளுங்க மாம்..." என சிரித்தவனை கண்டு "அரே பய்யா..." என ஆதி எழுந்து ஆர்யனை அடிக்க வர இருவரும் சிறு பிள்ளைகள் போல் சண்டையிட்டு கொண்டனர். அன்று மாலை நேரம் போகவில்லையென அறையை சுத்தம் செய்த சித்தாராவின் பின்னால் நின்றிருந்தவள் "ஹச் ஹச்" என விடாமல் ஒரு பத்து பதினைந்து தும்மல் தும்மியிருப்பாள். யாருடனோ கைப்பேசியில் பேசி கொண்டிருந்த ஆர்யன் அவள் தும்முவதை ஏதோ பொருட்காட்சி போல் நின்று கொஞ்ச நேரம் பார்த்தான். "என்னமா இது அவள எதுக்கு க்ளீன் பன்ற இடத்துல... அவளுக்கு தான் தூசினா அலர்ஜியாச்சே..." என நிரஞ்சனா சித்தாராவை ஹிந்தியில் திட்டி விட்டு தும்மியப்படி நின்றிருந்த மருமகளை அழைத்து கொண்டு சென்றாள். இந்திராவிர்கு தூசி, பூனை நாய்களின் ரோம முடி போன்றவைகள் சிறு வயதிலிருந்தே அலர்ஜி என்ற விஷயம் ஆதி சொல்லி தெரிந்ததும் ஆர்யனின் வியாபார மூளை எதையோ கணக்கிட்டதின் விளைவாக தன் கைப்பேசியில் ஷ்யாமின் நம்பருக்கு அழைத்தவன் "ஹே ஷ்யாம் உன் டாக் என்ன ப்ரீட்...?" என்றான் குறும்பு வழியும் குரலில்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.