(Reading time: 22 - 44 minutes)

புத்தம் புது விலை உயர்ந்த காரை தயக்கத்துடன் ஏறிட்டாள்.

‘இந்தக் காரிலா? அதுவும் இந்த அழுக்கு உடம்போடா?’

அவள் தயக்கத்தை பார்த்த சுஜயா உடனே கிண்டல் செய்தாள்.

“என்ன அவசரப்பட்டு வார்த்தையை விட்டுட்டோம்னு யோசிக்கிறாயா? உண்மையிலேயே உழைக்க தயாரா இருக்கியா இல்லையா?”

“அப்படியெல்லாம் இல்லம்மா. நான் அழுக்கா நிற்கிறேனே. அதான் யோசிக்கிறேன்.”

“மனசு அழுக்கா இருக்கிறவங்களைத்தான் எனக்கு பிடிக்காது. நீ ஏறு.”

அதன் பிறகு அவள் தயங்கவில்லை. அதுவரை நடப்பதை பிரமிப்புடன் பார்த்திருந்த சிந்தனா பின் கதவைத் திறந்து விட தன் குழந்தையுடன் காரில் ஏறினாள். சுஜயாவும் காரை எடுத்தாள்.

சிந்தனா நந்தினியைப் பார்த்து சிநேகமுடன் சிரித்தாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ுக்கு என்ன தயக்கம். இங்கேதான் வேலைக்குப் போகனும் மடையான்னு சொன்னா நான் மாட்டேன்னா சொல்லப் போறேன்?”

“இல்லப்பா.”

“என்ன இல்லை?”

“நீ மடையன் எல்லாம் இல்லை. அப்படி இருந்திருந்தா உனக்கு இரண்டு இடங்களில் வேலை கிடைச்சிருக்குமா?”

அவன் தாயைப் பார்த்து கனிவுடன் சிரித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.