(Reading time: 11 - 22 minutes)

"நோ இஷ்யூஸ்... எல்லாம் பணம் படுத்தும் பாடு தான்.. நமக்கு பணம் கட்டுபடியாகணும் இல்லையா.. வரவாள்ளாம் இப்போ நூதன முறையிலே கொள்ளையடிக்கத் திட்டம் போடறா.. நேரா குடுங்கோன்னு கேக்காமே இன்டேரெக்டா இது உங்க பொண்ணுக்கு வசதியா இருக்குமே..நன்னா இருக்குமேன்னு.. பேரம் பேசுவா.. என்ன பண்ணறது.. எங்கப்பாவோ ரிடயர் ஆயாச்சு.. முதல் ரெண்டு பேர் கல்யாண கடனே இன்னமும் முடியலை..சோ,, மஹதி வெயிடிங்க் ஃபார் ஹெர் டர்ன்."

அஜய்க்கு நம்பவே முடியவில்லை.. இவ்வளவு அழகா இருக்கா நன்னா பாடவும் செய்யறா.. இவளை கல்யாணம் பண்ணிக்கக் கூட மனுஷா இப்படி யோசிப்பாளா?.. நானா இருந்தா தூக்கிண்டு ஓடியே போயிடுவேன்' என்று நினைத்தவன் சட்டென்று தன் எண்ணப் போக்கை எண்ணி ஒரு கணம் அயர்ந்து விட்டான்.. 'என்னடா இது.. நாம் கூட இப்படி நினைக்கிறோம்..இது நல்லதுக்கில்லை ' என்று நினைத்து கொண்டான்,

அதற்குள் மஹதி காஃபியுடன் வந்து விட சிறிது நேரம் அரட்டையில் கழிந்தது.. அவர்கள் நால்வருக்கும் இதுதான் முதல் சந்திப்பு என்பதே நினைவுக்கு இல்லை.. ஏதோ நீண்ட காலம் பழகிய மாதிரி ஒரு உணர்வு அனைவரும் ஒருமையில் பேசும் அளவுக்கு நெருங்கினர்..

You might also like - Barath and Rathi... A free English romantic series

 

"வசந்த் நீ ஏன் ஏதாவது கோச்சிங்க் கிளாஸ் எதுவும் சேரவில்லை.. உன்னை இன்னமும் ஃபைன் டியூன் செய்து கொள்ளலாமே?", என்ற பைரவியின் கேள்விக்கு,

வசந்தால் பதில் சொல்ல முடியவில்லை.. "இல்லை..நானே செய்து விட முடியும் என்ற நம்பிக்கை இருக்கு..அதான்.. பார்க்கலாம் இந்த வாட்டி நிச்சயம் கிளியர் பண்ணிடுவேன்னு நம்பிக்கை இருக்கு.. இல்லாட்டி பார்க்கலாம்.."

"ஒஹ்.. உனக்கு கான்ஃபிடென்ஸ் இருக்கும் பட்சத்தில்.. தப்பில்லை நீயே முயற்ச்சிப்பதில்.. ஏதாவது புக்ஸ் ஹெல்ப் வேணும்னா கேளு.. நான் செய்யறேன்", என்றவள், "எனக்கு நீ தான் மஹதி கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும் ஏதாவது நல்ல லேபில் எனக்கு கொஞ்சம் இன்ட்டிரோ வேணும்.. ஏன்னா நான் சில பிளட் சாம்பிள்கள் பரிசோதனைக்கு கொடுக்கணும்.. நானேயும் அங்கே போய் அவாளோட பார்க்க முடிஞ்சா இன்னமும் நல்லது.. ஆனா அது பாஸிபிளா தெரியாது.. நீ உங்க ஹாஸ்பிட்டல் வழியா கொஞ்சம் விசாரிச்சு சொல்லு..", என்று ரிக்வெஸ்ட் வைத்தாள்

"என்ன சாம்ப்பிள்? எதுக்கு யாரோடது..?

"வசந்த் அதான் நான் சொன்னேனே என்னோட ரிசர்ச் பத்தி.. அதுக்காக சில மியுசிகல்லி டேலண்டட் குடும்பங்களில் இருந்து சாம்ப்பிள் தேவை.. நீ ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமா?.. உனக்குத் தெரிந்த சங்கீத குடும்பங்களில் இதற்கு ஒத்து கொள்வார்களா?.. எனக்கு ஜஸ்ட் பிளட் சாம்ப்பிள் தான் தேவை.. அதை வைத்து நான் அனலைஸ் பண்ணி ரிசர்ச் செய்யனும்.."..

"ஓ.. ஹெல்ப் பண்ணா போச்சு.. முதல்லே நீ உன்னோட குரு கிட்டேயே கேள்.. எங்காத்துலேயே உனக்கு சாம்ப்பிள் கொடுக்க சொல்லறேன் அம்மா கிட்ட.. நான் தயார்.. வசந்த்தும் குடுப்பான்.. அம்மா சொல்லவே வேண்டாம் நிச்சயம் உனக்கு உதவுவார்கள்.. மத்தபடி என் ரெண்டு அக்கா..கொஞ்சம் டவுட்டு தான்.. ஆன அவாளோட சாம்ப்பிளும் உன் ரிசர்ச்சுக்கு ரொம்ப ஒத்தாசையா இருக்கும்.. ஏன்னா அவா ரெண்டு பேருக்கும் பாட்டு சுத்தமா வராது.. அப்பா கிட்ட நான் பேசறேன் இது பத்தி..", என்று முழுமனதுடன் தன் உதவிக் கரத்தை நீட்டினாள்.

"மஹதி.. யு ஆர் அ டார்லிங்க்.. சோ நைஸ் ஆஃப் யு...அஜய் நீ கூட ஏதாவது உன் ஆராய்ச்சிக்கு..தேவைன்னா மஹதியை கேள்..", என்ற பைரவியை பார்த்தவன்,

"ஓ ஷ்யூர்.. அவள்கிட்டதான் நான் கேப்பேன்.. பிகாஸ் ஷி இஸ் ஆல்சோ இன்வால்வ்ட் இன் அவர் மெடிகல் ஃபீல்ட்..கேட்டா போச்சு.. அதுவும் மஹதி மாதிரி ப்ரிட்டி கேர்ள் கூட வொர்க் பண்ணறதே பெரிய ப்லெஷர் ஆச்சே.."என்று வழிந்தவனை ஒரு முறை முறைத்த பைரவி,

"சரி சரி.. நமக்கு இன்னிக்கு வெளியே போகனுமே.. வா போய் கிளம்பளாம்", என்று அவனை வலுக்கட்டாயமாய் அங்கிருந்து அகற்றி இழுத்து கொண்டு போனாள் பைரவி.

மாடியில் அஜையை நன்றாய் வறுத்தெடுத்தாள் பைரவி..

"அஜய் யு ஆர் இன்காரிஜிபிள்.. இப்படியா ஓபனா ஃப்ளர்ட் பண்ணுவே பார்த்த மொதல் நாள்லயே?.. திஸ் இஸ் நாட் யு.எஸ்..இண்டியா மேன்... சோ வாட்ச் யுவர் டங்க்..", என்று பொரிந்தவளை சுவாரஸ்யத்துடன் பார்த்த அஜய்,

"ஏய் நீ ஏன் கோபப்படறே?..ஆர் யூ ஜெலஸ்? ஆஃப் மஹதி..கம்மான்.. அட்மைர் பண்ணேன் அவ்வளவுதான்..நீ ஏன் ரியாக்ட் பண்ணறே?"

"நான் ஆக்டும் பண்ணலை ரியாக்டும் பண்ணலை.. அந்த மாமி ஏதோ சொல்லிண்டு இருந்தா நேத்திக்கு.. அவளுக்கு கல்யாணத்துக்கு பாக்கறான்னு.. நீ ஏதாவது குழப்பம் பண்ணிடாதே..",

"கவலையே படாதே.. ஐ நோ மை லிமிட்ஸ்..எனக்கு ஃப்ளர்ட் பண்ண பிடிக்கும்தான்.. அதுக்காக ரிஸ்கெல்லாம் எடுக்க மாட்டேன்.."

"உனக்கு அவ்வளவு பிடிச்சா புரபோஸ் பண்ணு அவ கிட்ட.. அதை விட்டுட்டு அவளை பார்த்து இளிக்காதே.. ஒரு சமயம் போல ஒரு சமயம் இருக்காது..அவளே உன்னை ஏதாவது தப்பா எடுத்துக்கப் போறா.."

"ஏய்.. ஸ்டாப் ஸ்டாப்.. ஜஸ்ட் கொஞ்சம் ஃப்ளர்ட் பண்ணதுக்கு லெக்ச்சர் குடுக்காதே.. சைட் அடிக்கறதுக்கு ப்ரபோஸ் பண்ணனுமா?.. முடியாதும்மா..அதை விட.. எனக்கு என் சுதந்திரம் ரொம்ப அவசியம்.. இந்த மாதிரி கல்யாணங்கள்லாம் பியாண்ட் மை ஐடியாஸ் .. உனக்கும் அதான் நான் சொன்னேன்.. எல்லாருக்கும் அதான்.. இன்ட்ரெஸ்ட் இருந்தா ஒன்னா இருக்கலாம்.. அவ்வளவு தான் எனக்கு.."

"போதும்.. நிறுத்து.. இனிமே கேர்ஃபுல்லா இரு.. எல்லாரும் என்னை மாதிரி கேஷுவலா எடுத்துக்க மாட்டா.. இது இந்தியா.. இவாளுக்குன்னு சில ப்ரின்சிபல்ஸ் இருக்கு.. கல்ச்சருக்கு எவ்வளவு மதிப்பு குடுப்பான்னு ஹாஃப் இந்தியனான உனக்கும் தெரியும்.. சோ..அடக்கி வாசி.."

"சரி டீச்சர்.. ஆஸ் யு சே மாஸ்டர்னு சொல்லட்டுமா..சரி விடு.. என்ன இருந்தாலும் அவ கிட்ட ஒரு ஸ்பார்க் இருக்கத்தான் இருக்கு.. ஐ கான்ட் பிலீவ்..மேக்னட் மாதிரி ஒரு ஃபோர்ஸ் இருக்கு அப்படியே இழுக்கறா.." என்றவன்.. "சரி நான் வெளியே போகப் போறேன்.. இன்னும் ஹாஃப் அன் அவர்லே நீயும் ரெடியாயிடு போயிட்டு வரலாம்..", என்று உள்ளே போய் மறைந்தான்..

'இவன் திருந்தமாட்டான்.. சரி இவனை அப்புறம் பார்த்துக்கலாம் முதல்ல அம்மா அப்பாகிட்ட பேசணும்', என்று நினைத்தபடி அவள் அறைக்கு சென்றாள்.

றையில், தந்தந்தைக்கு ஃபோன் செய்தவளுக்கு துக்கம் தொண்டையடைத்தது.. ஏதோ ரொம்ப நாளாய் அவர்களை பிரிந்து இருக்கிறார் போல் ஒரு உணர்வு..

"ஹலோ பேபி.. எப்படிம்மா இருக்கே" என்ற விஸ்வனாதனின் குரலை கேட்டவுடன் கண்கள் கலங்கி விட்டது பைரவிக்கு..

"ஹாய் பா..ஃபைன்..நீங்க எப்படி இருக்கேள்.. அம்மா எப்படி இருக்கா?.. ஹௌ இஸ் ஷீ?."

"ஆல் ஃபன் டா குட்டி.. அம்மா ஓ.கே..தூங்கிண்டு இருக்கா.. எழுப்பட்டுமா?.."

"நோ நோ.. வேண்டாம்ப்பா.. நாளைக்கு அம்மாவோட பேசறேன்.. லெட் ஹர் டேக் ரெஸ்ட்.."

"அஜய் எப்படி இருக்கான்..அவனுக்கு இண்டியா அட்ஜஸ்ட் ஆயிடுத்தா.?"

"யா பா வி போத் ஆர் ட்ரையிங்க் ஹார்ட் டு கெட் யூஸ்டு டு திஸ் கல்ச்சர்,.. ஆனா நன்னா இருக்குப்பா.. அப்புறம் மாமாவை இன்னமும் கான்டாக்ட் பண்ணலை நான்.. நிச்சயம் எப்படியாவது அவரை கண்டுபிடிச்சு பார்ப்பேன்னு நினக்கறேன்.. வில் கீப் யூ அப்டேடட். அப்புறம் நான் என்னோட மியூசிக் டீச்சர் ஆத்து மாடியிலேயே போர்ஷனுக்கு ஷிஃப்ட் பண்ணிட்டேன்.. அஜய்யும் மொட்டை மாடியிலே ஒரு ரூமில் இருக்கான்.. அப்பா.. நீங்க நிச்சயம் டீச்சரை பார்க்கணும்.. ஏதோ ஒரு தெய்வீகம் அவா கிட்ட.. அப்படியே அம்பாள் மாதிரி இருக்காப்பா..எனக்கு சரியா தெரியலை.. ஆனா அவாளை பார்த்தா ஏதோ ஒரு ஃபீல் எனக்கு.. புதுசாவே எனக்கு தோனலைப்பா"

"எப்படிம்மா இருக்கா அந்த உன்னோட ஸ்பெஷல் டீச்சர்?"

"மிசர்ஸ். சாரதா ராமமூர்த்தியாப்பா.. சூப்பரா இருக்கா..அவாளுக்கு மூணு பொண்ணு ஒரு பையன் பா டீச்சர்க்கு வசந்த பைரவி ராகம் பிடிக்கும்னு வசந்த்துன்னு பேர் வச்சாளாம்.. உங்களுக்கு பைரவி பிடிக்கும்னு நீங்க எனக்கு வெச்சாப்போலே..அப்பா சீக்கிரம் என் வேலை முடிஞ்சிடும்னு நினைக்கிறேன்.." என்று மேலும் ஒரு கால் மணி நேரம் வளவளத்தவள்.. சட்டென்று கிளம்பவேண்டும் என்பது நினைவுக்கு வர, பை சொல்லிவிட்டு லைனை கட் செய்தாள்.

தொடரும்

Episode 09

Episode 11

{kunena_discuss:909}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.