வேறு எங்கோ பார்த்து கொண்டிருந்த வசந்தை தோளில் தட்டி திருப்பிய பைரவி,
"என்ன வசந்த் மஹதிக்கு இது நன்னா இருக்கும் இல்லை", என்று கேட்டாள்.
"எனக்கும் ஓ.கே.. நன்னா இருக்கு.. அஜய் நன்னா இருக்கில்லே இந்தப் புடவை?", என்று வெகுளியாய் கேட்ட வசந்த்தை பார்த்த அஜய்..
"கலர் சஜஷனாவது சொல்லலாமா இல்லை அதுவும் அப்பா அம்மா தான் சொல்லனுமா?, என்றவன், அவனை முறைத்த மஹதியை ஓரக் கண்ணால் பார்த்தவாறு,
“அதை விட இது இன்னும் நன்னா இருக்கு" என்று மற்றொரு தாமரை பிங்கில் நல்ல கருத்த பச்சை பார்டருடன் ஒன்றை காண்பித்தான்..
அனைவருக்கும் அதுவே பிடித்துவிட.. மஹதியும் ஒரு வழியாய், தான் போட்டு வைத்திருந்த பட்ஜெட்டிலேயே அந்தப் புடவை இருப்பதை கண்டு அதையே வாங்கிக் கொண்டாள்..
இவையனைத்தையும் இரண்டு கண்கள் பார்த்து வெறித்தபடி இருந்தது..
வேறு யார்? கவிதா தான்.. அவள் அன்னையோடு கடைக்கு வந்திருந்தவளுக்கு வசந்த் அருகில் நிற்கும் பெண்கள் யார் என்ற கேள்வி மண்டையை குடைந்தது.. பார்த்தால் கல்யாணம் ஆன மாதிரி தெரியவில்லை.. இருக்கட்டும் அவனாகவே சொல்வான் அதுவரை பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டு மேலும் அவன் தன்னை கண்டு விடாதபடி மறைந்து நின்று கொண்டாள்.
You might also like - Vidiyalukkillai thooram... A story that focuses on social problems!
அங்கிருந்து கிளம்பி ஹோட்டலில் நன்றாய் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினார்கள் நால்வரும்.
திரும்பும் வழியில், 'மஹதி நீ பார்லருக்கு போகலியா?.., என்று கேட்ட பைரவியை பார்த்த மஹதி
"அதெல்லாம் எனக்கு பழக்கமில்லை பைரவி.. இதுவரை போனதும் இல்லை.. ஆனா அக்கால்லாம் போவா.. எனக்கு என்னமோ தோனினதே இல்லை."
"ஆனா உனக்கு அவசியமும் கிடையாது மஹதி, இயற்கையாவே உனக்கு புருவம் அழகா இருக்கு மத்தபடி ரொம்ப க்ளியர் ஸ்கின் உனக்கு.. ஒன்னு பண்ணறேன்.. நானே உனக்கு ஃபேஷியல் பண்ணி விடறேன்.. கொஞ்சம் ரிலாக்சிங்கா இருக்கும்.. வீட்டுக்கு போன கொஞ்ச நேரத்துலே நீ மாடிக்கு வா நான் உன்னை எப்படி பள பளான்னு ஆக்கறேன் பாரு", என்று சிரித்தாள் பைரவி..
தொடரும்
{kunena_discuss:909}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.