(Reading time: 43 - 85 minutes)

18. நனைகின்றது நதியின் கரை - அன்னா ஸ்வீட்டி

குளித்து முடித்து வெளியில் வந்த ஜோனத் பார்வையில் மறைக்கப்பட்ட பதட்டத்துடன் தனக்காக காத்திருந்த மனைவி பட்டாள்.

“லியாக்கு சர்ச் வெட்டிங்னா பிடிக்குமோ?” இவனது கேள்வியில் இவனை நிமிர்ந்து பார்த்தாள். இப்ப எதுக்கு இதை கேட்கிறான் இவன் என அவள் நினைப்பது ஜோனத்துக்கு தெளிவாக புரிகிறது.

“நாம நமக்கானவங்க எல்லோரையும் கூப்ட்டு சர்ச்ல வச்சு ஒரு ப்ராப்பர் வெட்டிங் செய்துக்கலாமா?” அவன் கேள்வியில் அவள் முகம் மலர்வதைப் பார்த்தவனுக்கு தன் முடிவில் 100% நம்பிக்கை வந்துவிட்டது. இது தான் சரி.

nanaikindrathu nathiyin karai“செய்தா நல்லா இருக்கும் ஜோனத்….ஆனா…”

“என்ன லியாப்பொண்ணு…?”

“இந்த செயினை திருப்பி கேட்க கூடாது….” தன் கழுத்திலிருந்த அவன் செயினை பிடித்துக் கொண்டாள்.

வாய்விட்டு சிரித்தான்.

அத்தனை ட்ராவல் ஆக உடனே ட்ரைவ் செய்வதை தவிர்ப்பதற்காக 2 நாள் அங்கு தங்கிவிட்டு மூன்றாம் நாள் பேக் டூ சென்னை.

இந்த சர்ச் வெட்டிங் ஐடியா அன்பரசிக்கும் பிடித்துப் போனது. “உன் மேரேஜ் க்ராண்டா நடக்கலையேன்னு எனக்கும் கஷ்டமாதான் இருந்துச்சு….இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்குது….அதோட ஒவ்வொரு பொண்ணுக்கும் தன் கல்யாணத்தைப் பத்தி ஆயிரம் ஆசை இருக்கும்….அப்போ லியாவோட ஆசை எதையும் கண்டுக்காம செய்ற மாதிரி ஆயிட்டேன்னு இருந்துது….இப்ப அவளுக்கு எப்படி பிடிக்கும்னு கேட்டு அப்படியெல்லாம் செய்து கொடுத்துடு ப்ரபு..” என்றார்

சர்ச்சில் இரண்டு ஞாயிறு அறிக்கைக்கு பின் தான் திருமணம் சாத்தியம் என்ற வகையில் அவன் ஆஸ்த்திரேலியா கிளம்புவதற்கு இரண்டு நாள் முன்பு திங்கள் கிழமை திருமணம் என முடிவானது.

ஷாட் நோட்டீஸில் அத்தனை க்ராண்ட் ஃபங்க்ஷன் எனும் போது திருமண ஏற்பாடில் ஜோனத்தும் அவனது லியாப்பொண்ணும் பிஸியோ பிஸி. இதற்கு இடையில் அரண் தன் பயிற்சியை தொடங்கினான். வேர்ல்ட் கப் டீமில் அவன் பெயர் இருந்தது. ஆக்சிடெண்ட் முன்பாகவே டீமை முடிவு செய்திருந்தது க்ரிகெட் போர்ட் அஸ் பெர் த ப்ரொசிசர்.

You might also like - Kanaamoochi re re... A romantic comedy...

இப்பொழுது அரண் ஃபிட்னஸ் அப் டு த மார்க் என நிரூபிக்கபட்டால் அவன் விளையாட அனுமதிக்க படுவான் எனும் நிலை. ஆக அவன் ட்ரெய்னிங்கை தொடங்கினான். அதற்கு அரணுடன் நேரம் செலவழித்தான் ஜோனத்.

இரவில் அரண் வீட்டில் அஸ் யூஸ்வல் தங்கினர் தம்பதியினர். அன்பரசி ‘வெட்டிங் செருமனிக்கு பிறகு லியாவை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டுப் போனா நல்லாருக்கும்’ என்றதால்.

சோ ஜோனத் சொன்ன ஹனிமூன் நடக்கவில்லை எனினும் அந்த இரண்டு வாரமும் மனதளவில் ஹனிமூன் தான் இருவருக்குமே….

தன்னவனிடம் உரிமையோடும் தயக்கமின்றியும் மனம்விட்டு பேசிக்கொள்ள இப்பொழுது தானே தொடங்கி இருந்தாள் சங்கல்யா……ஒன்னெஸ் அட் ஹார்ட்…இரு மனம் இணையும் இனிய வசந்த காலம்….

குறிப்பிட்ட நாளில் சர்ச் வெட்டிங்……சங்கல்யா ஆசைப்படி பைபிள் மட்டும் மாற்றிக் கொண்டார்கள்.…..அதன் பின் க்ராண்ட் ரிஷப்ஷன்….டிஸ்சார்ஜ் ஆகி அன்பரசியும் கலந்து கொண்டார். மொத்த இந்திய டீமும் வந்திருந்து வாழ்த்தினர் மணமக்களை.

விழா முடிய முறைப்படி ஜோனத்தின் வீட்டிற்குள் அவனது மனைவியாய் நுழைந்தாள் சங்கல்யா…..என்னதான் முன்பே திருமணமாகி இருந்தாலும் இந்த நிமிடம் இத்தனை பேர் சூழ்ந்திருக்க தன்னவன் வீட்டை தன் வீடாக்கி உள்ளே நுழையும் இந்த தருணத்தில் திக்குமுக்காடிப் போனாள் அவள்.

சற்று நேரத்தில் அனைவரும் விடை பெற அன்பரசிக்கு தேவையான எல்லாம் பார்த்து வைத்துவிட்டு, தரை தளத்திலிருந்த அவரது அறையிலிருந்து வெளியே வந்தவளை தன் இரு கைகளுக்குள் சிறை செய்தான் காத்திருந்தவன்.

“விடுங்க ஜோனத்…..அம்மா இருக்காங்க….” அவன் கைகளின் கட்டளைக்கு அடங்கி மன்னவன் மார்பில் முகம் புதைத்திருந்தவளின் வாய் சொன்ன முனங்கல் வார்த்தைகள் இவை.

“அவங்கல்லாம் இப்ப வெளிய வரமாட்டாங்கன்னு உனக்கே தெரியும்……..” மாலையில் மாலை சுமந்திருந்த மங்கையவள் மென்கழுத்தில் மலரின் மென்மையில் இறங்கிக் கொண்டிருந்தவன்

“ரொம்ப ரொம்ப ஏங்கிட்டேன்டி….அதுவும் இந்த லாஸ்ட் 12 டேஸ்…….” அவளை கைகளில் அள்ளிக் கொண்டு முதல் தளத்திலிருந்த தங்கள் அறைக்கு படியேற…. அவளுள் அவஸ்தை உணர்வுகள்.

தன்னவளை தன் படுக்கையில் வைத்து அவனது பொங்கல் ஃபேக்டரியை கொண்டாடி அவன் துவக்க விழா தொடங்க அவளது கண்கள் இரண்டிலும் அத்தனை செவ்வரிகள். அத்தனை அன்கம்ஃபர்ட் அவள் முகத்தில்.

“என்னாச்சு லியாமா?.... அழுறியா ? “

இல்லை என மறுப்பாக அவள் தலை அசைக்கும் போதே…..கண்ணிலிருந்து உருண்டு ஓடுகிறது கண்ணீர் துளி….

“ஐ கேன் மேனேஜ்….உங்கள ரொம்ப வெயிட் பண்ண வச்சாச்சு ஜோனத்….”

“ஆர் யூ ஃபோர்சிங் யுவர் செல்ப்…?”

அதற்கு மறுப்பான அவளது தலை அசைவு முடியக் கூட இல்லை….தன் கையால் அவசரமாக தன் வாயை மூடிக் கொண்டு எழுந்து ஓடினாள் சங்கல்யா…

அடுத்து அவள் நிற்க கூட தெம்பின்றி கிரங்கி சுருண்டு  தூக்கத்திற்குள் நழுவும் வரையும் அத்தனை அத்தனை முறை வாமிட் செய்து முடித்திருந்தாள். என்னவெல்லாமோ செய்து அவளை தூங்க வைத்தது அவன் தான்.

று நாளும் ஒரு துவண்ட துணி போல் தான் உணர்ந்தாள் அவள். மனமும் மிகவும் சோர்ந்திருந்தது. ஏறத்தாழ இன்னும் 4 மாதங்கள் அவனைப் பார்க்க முடியாது…..கூடவே நேற்றைய நிகழ்வு அவனுக்கு மிகவும் ஏமாற்றமாய் இருந்திருக்கும் என்பது இவளது உணர்வு….

அவன் அப்படி எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை எனினும் இவளுக்கு தெரியாதாமா? இந்த நாளுக்காய் அவன் எத்தனை எத்தனையாய் காத்திருந்தான்..?? திருமணமான மறுநாளிலிருந்து அவனும் இதை கேட்க…இவளும் தடை விதிக்க என ……இதென்ன

இவளது சின்ன சின்ன ஆசைகளையும் எத்தனை எத்தனையாய் கவனித்துக் கொள்கிறான்….? இவள்தான் அவன் புறத்தை கவனிப்பதே இல்லை…. ரிஷப்ஷன் முடிந்து வீடு வந்த நேரத்தில் அவளுக்கு தொடங்கிய வயிற்று பிரட்டல் இத்தனையாய் மாறிப் போகும் என அவள் நினைத்திருக்கவில்லை.

மறுநாள் “லியாபொண்ணு கொஞ்சம் விழிச்சுக்கோடா….கொஞ்சமாவது சாப்டுட்டு படுத்துக்கோ..” என கணவனது அழைப்பில் கண் விழித்தவளுக்கு எதிரிலிருந்த டேபிளில் சாப்பாடு காத்திருப்பதை கண்டவுடன் இருந்த மனநிலையிலும் இழுத்து சாய்த்த உடல் நிலையிலும் அழுகை வெடித்துக் கொண்டு வந்தது.

அவன் எத்தனை பதறியும், என்ன அதட்டியும்,  ஏதேதோ சொல்லியும், கேட்டும் அழுகை அவள் ஸ்டைலில் வார்த்தையின்றி தொடர….சுகாவை அழைத்தான். பெண்ணுக்குப் பெண்ணாய் சில விஷயங்கள் இவனைவிடவும் அவளிடம் மனம்விட்டு பேசுகிறாள் தானே…சர்ச் வெட்டிங் வேண்டும் என அவளிடம் தானே சொன்னாள்.

விஷயத்தை சொல்ல கிளம்பி வந்துவிட்டாள் அவள் ஹயா குட்டியுடன்.

சுகாவைப் பார்த்தவுடன் சங்கல்யாவின் அழுகை கப்சிப்….என்ன சொல்வாளாம் அவளிடம்?

“நேத்து ஃபங்க்ஷன் ஸ்ட்ரெஸ்…நேரத்துக்க சாப்ட்றுக்க மாட்ட…ரொம்ப நேரம் நிக்க வேண்டி இருந்திருக்கும்…அதுவும் பேசிகிட்டே வேற இருந்திருப்ப……எக்‌ஸாஸ்ட் ஆகிருப்ப லியா இதுக்கா இவ்ளவு டென்ஷன்…? இப்ப ஒழுங்கா சாப்டு…நிறைய ஃப்ளூயிட் எடுத்துக்க யூ’ல் பி ரைட் அஸ் ரெய்ன்…..அதோட பாவம் பையன்….பதறிப் போய் இருக்கான்….கொஞ்சம் சிரிச்சு வை”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.