(Reading time: 43 - 85 minutes)

ப்ச்…அவன் ஒரு கேடுகெட்ட பொறுக்கி….அவன்ட்ட போய்…..சே….எப்பவும் எதாவது அசிங்கமா தொட ட்ரைப் பண்ணிட்டு இருப்பான்….அவன்ட்ட இருந்து என்னை காப்பாத்திக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிட்டு…..அந்த நாய்ட்ட போய் யார் பேச….? யூ சீ…இட்’ஸ் மை கரியர்….தட் டசின்ட் மீன் ஐ’ல் காம்ப்ரமைஸ் ஆன் திஸ்….அதோட நான் ஹயாவ தூக்கிட்டுப் போய்ட்டேன்னு  சொல்லி அவனை நம்ப வைக்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும்….அவ்ளவு நம்பிக்கை என் லவ்மேல அந்த முட்டாளுக்கு…நீயானா ஹயாவை காணோம்னு சாட்சியோட சொல்லிவியே…..இன்னும் டைம் ரொம்ப கம்மியா இருக்கு…. ”

இந்த பதிலில் சுகாவுக்குள் சுனாமி தாக்கம்….மத்தவிஷயம் எப்படியோ….ப்ரபாத் சுபாவத்திற்கு சர்ச் வெட்டிங் போவதென்றால் அதுவரைக்கும்  நிச்சயமாய் காத்திருந்திருப்பான்……அவர்கள் முதலிரவில்  நடந்த கதை ப்ரபாத் லியா தவிர இவளுக்கு மட்டும் தான் தெரியும்… அப்படியானால்??? லியாவை யாரவது மிரட்டி பேசவைத்தால் யாருக்குமே தெரியாத இதை அவள் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

 இப்பொழுது சுகா தன் மொபைல்களை  பிடித்திருந்த விதத்தில் இந்த சங்கல்யாவின் பேச்சுமே ப்ரவீருக்கு கேட்கிறது….

“அரணோட இ மெய்ல்க்கு ஒரு மெய்ல் அனுப்பி இருக்கேன்….…..அதுல அவன் எந்த பால்ல அவ்ட் ஆகனும்….எந்த ஓவர்ல யாரை பவ்ல் பண்ண சொல்லனும்…..அதுக்கு முன்னால என்ன சிக்னல் கொடுக்கனும்….  அப்படிங்கிற டீடெய்ல்ஸ் இருக்கும்…. அதை அவனை அப்படியே ஃபாலோ பண்ண சொல்லு…. அதோட இந்த மேட்ச்ல இந்தியாதான் ஜெயிக்கும்னு ஹெவி பெட்டிங்காம்…சோ இவன் எனக்கு மேட்ச்சை லாஸ் செய்து தரணும்….. எனக்கு அது போதும்….”

You might also like - Barath and Rathi... A free English romantic series

“வாட் மேட்ச் ஃபிக்ஸிங்கா…?”

“பிறகு வேறென்னவாம்…? க்ரோர்ஸ் அண்ட் க்ரோர்ஸாஃப் பெட்டிங்……பெட்டிங் பீபுள் எனக்கு தர்ற கமிஷன்  படு ஹெவியா இருக்குமே…”

“இதுக்கு ஒத்துக்குற ப்ளேயர் யாரையாவது தேடவேண்டியது தான…?”

“ப்ச் லூசுன்னா சரியாத்தான் இருக்குது…..இது வெறும் பிக்‌ஸிங்காவா உனக்கு தோணுது….இன்னைக்கு மேட்ச் முடியவுமே….அரண் இப்படி நாக் அவ்ட் ரவ்ண்டில் மேட்ச் ஃபிக்ஸ் செய்து இன்டியாவை தோற்கடித்தார்னு ஒவ்வொரு சேனல்லயும் எவிடென்ஸோட டெலிகாஸ்ட் செய்ய வைப்பனே….அதை அரண் சுய விருப்பத்துல செய்தேன்னு ப்ரஸ்ல…க்ரிகெட் போட்ட ஒத்துகிட்ட உடனே ஹயா சேஃபா உங்க கைக்கு வந்துடுவா. இந்த நியூஸ்காக  ஒவ்வொரு சேனலும்  போட்டி போட்டுகிட்டு எனக்கு பணம் கொட்ட மாட்டானா?”

“சோ இது ரெவஞ்ச் எடுக்றதுக்காக செய்ற வேலை….”

“சே….அரணோட ஸ்டார்டம்மை காசாக்குற வேலை…..ஹயா கைக்கு வரவும்….இப்படி என்னை த்ரெட் செய்தாங்கன்னு அரண் திருப்பியும் மீடியாக்குத்தான் வந்தாகனும்….அதுக்காகவும் சில சேனல்ஸ்ட்ட நான் டீல் பேசியாச்சு…..ஐ’ம் அ மீடியா பேர்சன்…எனக்கு தேவை ஹாட் நியூஸ் அவ்ளவு தான்….”

“அப்ப நீ மாட்டிக்க மாட்டியா லியா….?”

“நான் ஏன் மாட்றனாம்….? என் பேரை வெளிய சொல்லாத….இல்லைனா இதெல்லாம் செய்ய சொன்னதே என் ஆசை ஹஸ்பண்ட் தான்னு சொல்லிடுவேன்….அரண் ரிட்டனானதால ப்ரபாத்தோட டெம்பரரி கேப்டன்சி பறி போய்ட்டு….அது தான் மோட்டிவ்னு போட்டுவிட்டுடுவேன்னு உன் ஹஸ்பண்டை த்ரெட் பண்ணுவேன்……. 90% ப்ரபாத்த காப்பாத்தனும்னு நினச்சு அரண் என் மேல பப்ளிக்ல அக்யூஸ் செய்றத அவாய்ட் பண்ணுவான்….இல்லை மீதி 10% ஆப்ஷனா துணிஞ்சு என் பேரை இழுத்தாலும்….அதுவும் அடுத்த ஹாட் நியூஸ்…..சேனல்ல இருந்து பணம் வாங்கிட்டு நானும் பதிலுக்கு பதில் அறிக்கை கொடுப்பேன்….நம்ம லீகல் சிஸ்டம் பத்தி தெரியாதா? கேஸ்னு வந்தா பார்த்துகலாம்….மீடியாவுக்கு வர ரொம்பவே யோசிக்கிற நீங்களே அதை ஃபேஸ் செய்ய இறங்குறப்ப நான் மீடியா பெர்சன்….எவ்ளவு தூரம் இறங்குவேன்….ஐ நோ டு ஹேண்டில்…நீங்க எல்லோரும் பிக் ஷாட்ஸ் உங்கள தொடுற எல்லா நியூஸும் எனக்கு மனி.”

“அப்ப அந்த வல்லராஜன் ப்ளாஸ்ட் இன்ஷூரன்ஸ் பணத்தை வாங்கித் தாரேன்னு சொன்னப்பவே நீ ஒத்துகிட்டு இருக்கலாமே….அதைவிடவா இப்ப உனக்கு பெருசா கிடச்சுட போகுது இதுல?....எதுக்காக இப்படி நடிக்க சங்கல்யா?...ஜஸ்ட் கிவ் மி ய ஹின்ட்….உன்னை இப்படி மிரட்டுறது எத்தனை பேர்…எந்த இடத்துல உன்னை அடச்சு வச்சுறுக்காங்கன்னு தெரியுதா? ஹயா உன் கைல தான இருக்கா?”

சுகாவிற்கு ஏதோ புரியத் தொடங்குகிறது… ஆனாலும்….

 “ஹோய்….நீ முழு லூசுதான்…..அந்த வல்லராஜனை நான் பார்க்கப் போனப்ப நீ கூட வந்தியாமா? சும்மா அதெல்லாம் ஒரு ட்ராமா….உன் ஃபேக்டரி பாம்ப்ளாஸ்ட் நியூஸ் கிடைக்கவும் வந்த ஐடியா இது…. உங்களுக்கு சந்தேகமே வராம என்னை நம்ப வைக்றதுக்கு அப்படி ஒரு சீன் போட்டேன்…….அப்பதான முக்கியமான நேரத்துல என்னை நம்பி என்னை ஃப்ரீயா மூவாகவிடுவ? இல்லைனா ஹயாவ என்ட்ட தந்துட்டு போவியா? ஐ’ம் ஆல்வேஸ் பெர்ஃபெக்ட் இன் ப்ளானிங்…..சரி இப்ப அந்த கதை எதுக்கு…..அரணுக்கு கால் பண்ணு….” அந்த நாள் அழுது வீங்கிய முகமும் ப்ரச்சனை சால்வ் ஆனதில் வந்து விட்ட முழு மலர்ச்சியுமாய் டின்னருக்கு வந்து நின்ற லியா முகம் ஞாபகம்.

சுகாவின் மனது காரண காரியங்களை அலசுகிறது.

“ஸ்பீக்கர் ஆன்ல இருக்கா லியா? எனக்கு சரவ்ண்டிங் சவ்ண்ட் எதுவும் உன்பக்கத்துல இருந்து அவ்ளவா இல்லைனதும் ஸ்பீக்கர் ஆஃப்னு நினச்சேன்…நீ பயப்படாத லியா….வி’ல் டூ த நீட் ஃபுல்…”

“லூசு…” சங்கல்யா ஏதோ தொடங்க….

இதற்குள் புயலாய் அங்கு வந்திருந்த ப்ரவிரின் சைகை படி காலை கட் செய்தாள் சுகா.

இந்த லூசு பதம் ஏதோ ஏனோ நெருடியது சுகாவிற்கு…..

“ சுகா ஜஸ்ட் கிவ் மி ஃப்யூ மினிட்ஸ்……ஐ நோ வேர் ஷி இஸ்…..ஷி இஸ் ஆன் மூவ்… எந்த வெகிகிள்னு மட்டும் பார்த்துடுறேன்……தென் இம்மீடியட்லி ஹயாவையும் அண்ணியையும் ரெஸ்க்யூ செய்துடலாம்…..அரண் மச்சானை அதுவரைக்கும் சமாளிக்க சொல்லு…. முதல்ல அவங்க ரெண்டு பேரும் கைக்கு வரட்டும்…..அப்றமா அந்த கல்ப்ரிட் யார்னு ட்ரேஸ் செய்யலாம்..….….” சொன்னவன் பார்க்கிங்கை மானிடர் செய்யும் cctv விடியோ ரெக்கார்டிங்கைப் பார்க்க ஓடினான்.

அவனோடு சேர்ந்து ஓடினாள் சுகா…. “ கல்ப்ரிட் கூட இல்லையா லியா?....நம்மட்ட லியா வாய்ஸ்ல வேற யாரோதான் பேசுறாங்களா? ஹயா லியாட்ட சேஃபா தான இருப்பா ப்ரவிர்…?....ஒருவேளை குழந்தை கல்ப்ரிட் கைல இருந்தா?” அவளது தாய்மை தவித்தது.

“பயப்படாத சுகா என் கெஸ் குழந்தை அண்ணிட்ட தான் இருப்பா…… இத செய்ற திடுட்டு நாய்  எப்பனாலும் குழந்தையும் கையுமாதான் அண்ணி நம்மட்ட மாட்டனும்னு நினைப்பான்….ஏன்னா அரண் மச்சானை மாட்டிவிட எந்த அளவுக்கு அவன் எஃபர்ட் எடுத்றுக்கானோ….அந்த அளவுக்கு லியா அண்ணிதான் கல்ப்ரிட்னு மாட்டனும்னும் அவன் எஃபெர்ட் எடுத்துறுக்கான்….அதான் பை சான்ஸ் நாம இப்ப அண்ணியை ட்ரேஸ் செய்துட்டா கூட குழந்தை அவங்க கைல இருந்தாதான் அண்ணி ஹயாவை கடத்திட்டு ஓடுறப்ப நாம பிடிச்சுட்டோம்னு ப்ரூவ் பண்ண முடியும்னு யோசிப்பான்….”

ப்ரவிரின் வியூவை அல்மோஸ்ட் ஏற்க முடிகிறதுதான் சுகாவால்……இத்தனை நீள கான்வர்சேஷனில் அத்தனை எஃபெர்ட் எடுத்து லியாதான் குற்றவாளி என இவளை நம்ப வைக்க அழைப்பின் நோக்கத்திற்கு தேவை இல்லாத எத்தனையோ இன்ஃபர்மேஷன் கொடுக்கப்பட்டதாக இவளும் உணர்கிறாள்தான். ஆனால்….அந்த சங்கல்யா ப்ரபாத்தை தவிர்த்ததாக சொன்ன விஷயம்? அது பலமாக நெருடுகிறது…..

லியாவை மோசமாக காண்பிக்க நினைக்கும் ஒருத்தி பணத்துக்காக மட்டும் தான் லியா இதை செய்வதாகவும் மற்றபடி ஒழுக்க விஷயத்தில் தவறவில்லை என ஏன் காண்பிக்க முயல வேண்டும்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.