(Reading time: 43 - 85 minutes)

துவும் லியாவிற்கும் ப்ரபாத்துக்கும் எதேச்சையாய் இவளுக்கும் தெரிந்த ஒரு விஷயம் இந்த ஃபோன் பேசும் கிரிமினல்க்கு எப்படி தெரிந்ததாம்? சோ பேசுவது லியாவாகவே ஏன் இருக்கக் கூடாது? முன்பு ஆஸ்த்ரேலியா போய் வர இவள் சொன்ன போதும் லியா மறுத்திருக்கிறாளே…..வெட்டிங்கை வேண்டாம் என்றாள்…..கையில் எங்கேஜ்மென்ட் ரிங் கூட கிடையாது…..வெட்டிங் பின்னும் ப்ரபாத் ஹாஸ்பிட்டலிலும் இவள் வீட்டிலுமாய்….அவனைப் பார்க்க லியா ஆர்வம் காண்பித்தது கிடையாதே….. செக்யூரிடி ஆலன்வேறு லியா விருப்பத்துடன் தான் காரில் ஏறியதாக சொல்கிறார்.

“அவங்க ரெண்டு பேருக்கும் ரிலேஷன்ஷிப் எதுவும் இல்லைனு இந்த ஃபோன்ல பேசுறவ சொல்றாளே ப்ரவிர்? அத எதுக்கு இப்ப சொல்லனும்? அதோட அது உண்மையான இன்ஃபோ…..” ப்ரவிரிடம் இதை இதற்குமேல் என்னவென்று சொல்லி கேட்பதாம்….கேட்க முடிந்தவண்ணம் கேட்டாள் சுகா.

“ஹேய் அதிலெல்லாம் எந்த உண்மையும் இல்ல….அண்ணா கிளம்பினப்ப அண்ணி எவ்ளவு டவ்ண் தெரியுமா? அதைப் பார்த்துட்டு நான்தான் அவங்க டெல்லி போய் அண்ணாவை சென்டாஃப் பண்ணிட்டு வர அரேஞ்ச் செய்து கொடுத்தேன்…..எவ்ளவு சந்தோஷப்பட்டாங்க தெரியுமா? அதைவிட முக்கியமான விஷயம் தன் மேல உள்ள ட்ராக்கரை அண்ணி இன்னும் ரிமூவ் பண்ணலை….அதிலயே தெரியலையா நம்மட்ட இருந்து அவங்க தப்பிச்சு ஓடிட்டு இல்லைனு….நாம ரெஸ்க்யூ பண்ண வருவோம்னு அவங்க நம்புறாங்க…”

  அதற்கு மேல் சுகா ப்ரவீரை கேள்வி எதுவும் கேட்கவில்லை…… அரணை அழைத்திருந்தாள்.

You might also like - Vasantha bairavi... A neat family story...

“விதுக் குட்டி”

அத்தனையாய் துடித்துக் கொண்டிருந்தாலும் அது வரை ஏதோ ஓரளவு தன்னைக் கட்டுபடுத்தி சூழலை கையாள முயன்று கொண்டிருந்த சுகா தன்னவனின் குரலைக் கேட்டதும் உடைந்து கொண்டு போனாள். ஆனாலும் எப்படியோ சமாளித்து விஷயத்தை சொல்லிமுடித்தாள்.

“விதுமா ப்ரவிர் சொல்ற மாதிரி நடந்துக்கோடா….பயப்படாத….நீ பேனிக் ஆகிற டைப்னு நினச்சு தான் உன்னை கூப்டு பேசுறா அந்த கிரிமினில்….சோ டோன்’ட் ஈல்ட் டூ இட்…..ஐ’ல் பை டைம்….அதுக்குள்ள பால்குட்டி லியா ரெண்டு பேரும் சீக்கிரமா நம்ம கைக்கு சேஃபா வந்துடுவாங்க….நீ ப்ரபு லியா ரிலேஷன்ஷிப் பத்தி அந்த கிரிமினல் சொல்றதெல்லாம் வச்சு மனச குழப்பிக்காத….லியா கன்சீவா இருக்றாளோன்னுலாம் இடையில் ஒரு சஷ்பிஷன் போய்ட்டு இருந்தது அவங்களுக்குள்ள….. அப்போ கூட லியாக்கு சந்தோஷம் தான்….இவன்தான் லியாவுக்கு இவ்ளவு சின்ன வயசுல குழந்தையான்னு  புலம்பிட்டு இருந்தான்….. “

அரண் அடுத்து போட்டி முடியும் வரைக்குமே இவளிடம் மட்டுமல்ல யாரிடமும் பேசமுடியாது. ஆனால் அவன் இப்போது சொல்லிய தகவலே கல்ப்ரிட்டை ட்ராக் செய்ய தேவையான நூல் முனையை இவள் கையில் பிடித்து கொடுத்ததாக உணர்ந்தாள் சுகவிதா.

ப்ரவிர் cctv விடியோவை பார்த்துக் கொண்டிருந்தான். லியா குழந்தையும் கையுமாக அந்த பார்வையற்ற பெண்ணுடன் அந்த வெர்னாவைப் பார்த்துச் செல்கிறாள். கார் அருகில் சென்று சற்று குனிந்து அந்தப் பெண்ணுக்காக கதவைத் திறக்கிறாள். இப்பொழுது ஒரு கும்பல் லியாவிற்கு பின் புறமிருந்த பாதையில் பேசியபடி அந்த இடத்தை மிக மெதுவாக கடக்கிறது. லியாவிற்கும் கேமிராவிற்கும் இடையில் அந்த கும்பல். அந்த இடத்தில் நின்று பேசி ஏதோ சொல்லி சிரித்துவிட்டு கடந்து போகிறார்கள். இப்பொழுது குனிந்து கதவை பிடித்தபடி நின்ற லியா அந்த வெர்னாவில் ஏறுகிறாள். அவள் ஏறிப் போன அடுத்த நிமிடம் கிளம்புகிறது வெர்னாவிற்கு இடப்புறம் நின்ற அந்த ஆப்பிள் க்ரீன் வல்வோ ஏர்பஸ். அவனுக்கு லியா எங்கிருக்கிறாள் என தெரிந்துவிட்டது.

மெல்பர்ன்:

 டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை எலெக்ட் செய்கிறான் அரண். ஓப்பனிங்கில் களமிறங்கி அவன் சந்திக்கும் மூன்றாவது பாலில் அவ்ட் ஆக வேண்டும் என்பது அரணுக்கான முதல் கட்டளை……இன்றைய பிட்ச்சுக்கு வழக்கம் போல் ஓபனராக அரணும் ப்ரபாத்தும் களமிறங்கினால்தான் சரியாக இருக்கும். ஆகவே ப்ரபாத்துடன் களமிறங்கினான். ஓபனிங் பாலை வழக்கம் போல் சந்தித்தான் ப்ரபாத்.

சென்னை:

ங்கல்யா முகத்தில் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் ஹயாவை தோளில் போட்டு ஆட்டியபடி தூங்க வைக்க முயன்று கொண்டிருந்தாள். மனதிலோ நடந்த நிகழ்வுகளை அலசி அடுத்து என்ன செய்வது உத்தமம் என ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

அவள் அந்த பார்வையற்ற பெண்ணுக்கு உதவ என வந்து கார் கதவை திறக்க குனிந்த நேரம் தான் கடத்தப் படுகிறமோ என ஒரு உள்ளுணர்வு அவளுக்கு தோன்றிய அதே நொடி…. பார்க்கிங்கில் அந்த வெர்னாவுக்கு அடுத்து அதாவது இவளுக்கு இடப்புறம் நின்றிருந்த ஒரு வல்வோ பஸ்ஸின்  பக்கவாட்டில் இருக்கும் லக்கேஜ் லோட் செய்யும் அடிதள கதவு திறக்க, குழந்தையுடன் குனிந்து நின்றிருந்த சங்கல்யாவை யாரோ முரட்டடியாக உள்ளே இழுக்க….சங்கல்யா ஹயாவுடன் அந்த பஸ்ஸின் லக்கேஜ் கேரியர் பகுதிக்குள் போய் விழுந்தாள்.

சுதாரித்து இவள் எழுந்து கொள்ளும் போது….கதவு பூட்டப் பட்டிருந்ததோடு உள்ளே ஒரு ப்ளாக் மாஸ்க்ட் மேன் கையிலிருந்த கன் பாய்ண்டில் இவள். பஸ் நகர்வதை அதிகமாக உணர முடிகிறது இவளால்.

“குழந்தைக்கு தேவையான எல்லாம் இங்க இருக்குது….யாரையும் எதையும் செய்ய மாட்டேன்…… ஃப்யூ அவர்ஸ் நீங்க ரெண்டு பேரும் இங்க இருந்துட்டு திரும்பிப் போய்டலாம்…..அதாவது ப்ரச்சனை செய்யாம நடந்துகிட்டன்னா….” சொன்னவன் இவளை உள்ளிழுத்த கதவில் உட்பக்கம் ஒரு பூட்டைப் போட்டுப் பூட்டிவிட்டு அந்த லக்கேஜ் லோட் செய்யும் பகுதியின் ரூஃபில் அதாவது பயணிகள் அமரும் பகுதியின் தரைப் பகுதியில் இருந்த சிறு கதவின் வழியாக பயணிகள் பகுதிக்கு சென்றுவிட்டான். அவன் சென்றதும் அந்த கதவு மேலே பூட்டப் பட்டது.

பஸ் இப்பொழுது குறைந்தது 170 kmph வேகத்தில் பறந்து  கொண்டிருக்குமாயிருக்கும்.

சுற்றும் முற்றும் பார்த்து தான் காமிரா வழியாக கண்காணிக்கப் படவில்லை என உறுதி செய்து கொண்டு தன் மொபைலை தேடினாள் சங்கல்யா….அவள் ஜீன் பாக்கெட்டில் இருந்து மறைந்திருந்தது அது.

உதவிகேட்டு நாடகமாடிய பெண் இவள் மீது மோதிய போது மொபைலை எடுத்திருப்பாளாய் இருக்கும்.

இப்பொழுது இவள் என்ன செய்ய வேண்டும்? சூழலை ஆராய்ந்தாள்.. வென்டிலேஷன் வரை பக்காவாக இருந்தது அங்கு. சோ இம்மிடியட் ப்ராப்ளம் எதுவுமில்லை….குழந்தையை தூங்கப் போடவென சிறு பெட் கூட இருந்தது.

குழந்தையின் அழு குரல் அன்னெசசரி அட்டென்ஷன்னை இவர்கள் மேல் கொண்டு வரும்…. ஆக ஹயாவுக்குத் தேவையான அத்தனையும் கொடுத்திருக்கிறார்கள் போலும்…

யோசித்த வரை ப்ரவிர் இவளிடம் கொடுத்திருக்கும் ட்ராக்கிங் ஸ்டிக்கர் மூலம் இவளைத் தேடி வரும் வரையும் காத்திருப்பதை தவிர குழந்தையோடு சேஃபாக வெளியேற வேறு வழி இருப்பதாக தெரியவில்லை….. காத்திருக்க ஆரம்பித்தாள்.

மெல்பர்ன்:

ஃபஸ்ட் பால். ப்ரபாத் என்ன நினைக்கிறான் என எதையும் காட்டாத பாவமற்ற முகபாவத்துடன். ஷாட் பிச்…….பால் எழும்பி ப்ரபாத் பேட்டில்  கனெக்ட்டாக அவனது எஃபெர்ட்லெஸ் ஹிட் என தோன்றிய ஒன்றில் ஆன் ட்ரைவ் ஷாட்டில்….ஹேய்ய்ய்ய்ய் என்ற கூச்சலுடன் 4, four போஸ்டர்களை கூட்டம் தூக்கி ஆட…..ஆயிரமாயிரம் அலை சத்தத்தில் ஸ்டேடியம் அதிர….பவ்ண்ட்ரி என அம்பயர் ஆமோதிக்க 4.

ரன்னிற்காக ஓடத் தொடங்கி இருந்த அரண் மீண்டுமாய் தன் க்ரீசிற்குள் போய் நின்றான்.

செகண்ட் பால்: ஃபுல் பிட்ச்……இப்பொழுது ப்ரபாத் பேட்டிலிருந்து ஆஃப் சைடில் எழும்பிய பந்தை காணாமல் ஒரு நொடி தேடியது காமிரா…..ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்….. மக்கள் சுனாமி வந்தால் கூட இப்படி கத்தமாட்டார்கள் தான்….ஆடிப் போனது ஸ்டேடியம்……6.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.