(Reading time: 22 - 43 minutes)

திதி, சூர்யா திருமணம் வரவே அப்போது மீண்டும் கோவிலில் நம் ஜோயசியரை பார்த்தபோது அவர் உன் அத்தையிடம் பேசியதை சொன்னார்.

“நான் உங்கள் நாத்தனார் பத்மாவிடம் வந்தனாவிற்கு ஆயுள் பலம் குறைவாக இருக்கிறது. மேலும் இப்போது அவளுக்கு திருமண வேளையும் வர வில்லை. அதனால் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்று கூறினேன். அதற்கு அவர்கள் என் மாப்பிள்ளை ஆதி சீக்கிரம் வைக்க விரும்புகிறார். நான் அவரிடம் சொல்லி பார்கிறேன் என்றுவிட்டு போய் விட்டார்கள். ஆனால் உங்கள் வீட்டிலிருந்து எனக்கு பத்திரகை வரவும் ஒன்றும் புரியாமல் தான் நான் உங்களிடம் பேசினேன். “ என்றார்.

அப்போது நான் உனக்கும் மதிக்கும் திருமணம் முடிந்ததை சொல்லும் போது, உனக்கு திருமண வேளை தான் எனவும், இந்த இரண்டு வருடங்கள் உனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகி விடும் என்றும் கூறினார். அதற்கு பின் தான் எனக்கு நிம்மதியானது.”  என்று முடித்தார். இதை கேட்ட மதி தன் அத்தையின் அருகில் சென்று அவர் கை பிடித்து அமர, அவர் அவளை அணைத்து விடுவித்தார். சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது.

அந்த அமைதியை கலைத்த ராகவன் “இது எல்லாம் எனக்கு முன்னாடியே தெரியும். அந்த விபத்தில் வாசு ஐ.சி.யு. வில் இருக்கும் போது என்னை அழைத்து பத்மாவின் செயலை பற்றி கூறினான். இரண்டு நாட்களுக்கு முன் பத்மா ஒரு மாதிரி அமைதில்லாமல் இருந்ததாகவும், அதை பற்றி கேட்ட போது எல்லாம் சொல்லியதாகவும் கூறினான். வாசு, அவளிடம் சண்டை போட்டு நீ இப்படியெல்லாம் செய்யலாமா? மதியும் நம் பெண் மாதிரிதானே. மேலும் சுந்தரம் உன்னை தன் தங்கையாகதனே நினைக்கிறார் என்றும் அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வைத்தான். கோவிலுக்கு போய் விட்டு வந்து உண்மையை சொல்லிவிடு. அதற்கு மேல் ஆதி விருப்பபட்டால் வந்தனாவோடு திருமணம் நடக்கட்டும். இல்லை என்றால் அதை ஏற்று கொள்ள நீ தயாராய் இரு என்றும் கூறியிருக்கிறான். ஆனால் விபத்து நேர்ந்து விடவும், என்னை அழைத்து உண்மையை சொல்லி விட்டு, ஆதி மதி திருமணத்தை நடத்துமாறு கேட்டு உயிர் விட்டான். எனக்கு பத்மா உயிரோடு இல்லாத போது அவளை விட்டு கொடுக்க விருப்பமில்லை.

எதுவும் சொல்லாமல் ஆதியிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்டேன். அவன் மறுக்கவும், சுந்தரத்திடம் பேசினேன். அவனும் ஆதி சொல்லியதையே சொல்ல, என்ன செய்ய என்று தெரியாமல் டென்ஷன் ஆகி ஸ்ட்ரோக் கில் விழுந்தேன்.

You might also like - Barath and Rathi... A free English romantic series

பின் ஆதி மதி திருமணம் நடந்தாலும் அவர்கள் இருவரும் சரியாக பழகவில்லை. என்னுடைய உடல்நிலை தேற மதியின் முயற்சி முக்கிய காரணமாக இருந்தது. நானும் இவர்கள் இருவரையும் சகஜமாக்க என்று யோசித்து கொண்டிருந்த போதுதான் ஆதிக்கு விபத்து ஏற்பட்டது. அது இவர்கள் இருவரையும் ஒன்றாக்கியது“ என்றும் கூறி முடித்தார்.

கேட்டுக் கொண்டிருந்த எல்லோருக்குமே யாரை குற்றம் சொல்வது என்ற புரியாத நிலையே. மேலும் சற்று நேரம் அமைதியை இருந்தாவர்களை முதலில் கலைத்தது நம் சூர்யாவின் குரலே.

“ஹலோ ....தாய்குலங்களே .. பேசி பேசி களைத்ததிலே எங்க வயித்த கவனிக்க மறந்துட்டீங்க. பம்ப் செட்டில் நல்ல குளியல போட்டு வந்துர்க்கோம். கொஞ்சம் எங்கள கவனிங்க. அதோட நம்ம பிரகாஷ் மாப்பிள்ளை வந்திருக்காக, அதி தங்கச்சி வந்துருக்காக ... மற்றும் நான் இந்த வீட்டு இளவரசன் வந்த்ருக்கேன் .. கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கோங்க...” என்று கலாயிக்கவும், எல்லோரும் சிரித்தவாறு அவனை துரத்தினர்.

கையோடு இரவு உணவு முடித்து, பெரியவர்கள் களைப்பிலும், நிம்மதியிலும் உறங்க சென்று விட, இளைஞர் பட்டாளம் மொட்டை மாடிக்கு சென்றது. அங்கே ஒரு போர்வை விரித்து எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்,

சூர்யாதான் முதலில் “ஆதி அண்ணா, அது எப்படிடா ... பதிமூணு வயசிலேயே முத்தம் கொடுத்து கரெக்ட் பண்ண. இதுல உனக்கு நல்லவன் பட்டம் வேற.” என்று அங்கலாய்க்கவும்,

மதியின் மதி முகம் சிவக்க, ஆதியோ மதியை பார்த்தவரே “டேய்.. பார்க்கற எல்லோரையும் கரெக்ட் பண்ண நினைச்சா ரோமியோ னு சொல்லாம நல்லவன்னு சொல்வாங்களா? நாங்கெல்லாம் ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் வகையை சேர்ந்தவங்கடா ..” என்றான்.

வாணி சூர்யாவை முறைக்க, “ஏன் உனக்கு இந்த கொலைவெறி ? உன்னை கிண்டல் பண்ணினேன்னு என்னை போட்டு கொடுக்கறியா? வாணி இதெல்லாம் கண்டுக்கதாடா.. சும்மா அவன் விளையாட்டுக்கு சொல்றான்.” என,

வாணியோ “எங்க மாமா உண்மையதான் சொல்றாரு.. ஏற்கனவே உங்க வண்டவாளத்தை எல்லாம் அதிதி சொல்லிட்டா. நீங்க எத்தனை பேர் கிட்ட கடலை போட்டிங்கன்னு இன்னைக்கு கணக்கு எடுத்துருவோம்” என்று முறைத்தபடி சொல்ல,

“சூர்யா உனக்கு டெபொசிட் காலி. .. அண்ணா .. நீ வாழ்க.. என் அன்பு தங்கையே.. என்னம்மா ... இப்படி பண்ணிட்டியேமா”  என்று நடித்தான்.

மேலும் சற்று நேரம் கலாயித்துவிட்டு, சூர்யாவும், பிரகாஷும் தங்கள் ஜோடியோடு தனித் தனியாக சென்று விட, மதியும், ஆதியும் மட்டுமே அங்கே அமர்ந்திருந்தனர்.

ந்த நிலவின் ஒளியும், சில்லென்று வீசிய காற்றும், வீட்டு தோட்டத்தில் மலர்ந்திருந்த மலர்களின் நறுமணமும் ஆதியை தூண்ட, மெதுவாக மதியின் பக்கத்தில் நெருங்கி அமர்ந்து அவளை அணைத்தான். மதியும் ஒருமாதிரி உணர்ச்சி பிடியில் இருக்கவே, தங்களை நிதானபடுத்த, பேச்சு கொடுத்தான்.

“வினு கண்ணம்மா.. என்னடா நீ ஒன்னும் என்னை கேட்கவே இல்லியே ?”

“எனக்கு உங்களிடம் ஒன்றே ஒன்று தான் கேட்க வேண்டும். நான் எப்படி வேறு ஒருவரை மணக்க சம்மதித்திருப்பேன் என்று எண்ணினீர்கள்?” அவள் சாதாரணமாக பேச நினைத்தாலும் , அவளை மீறி அவள் குரல் கர கரத்தது. 

ஹாய் .. பிரெண்ட்ஸ்..

இந்த எபிசோடில் உங்க சந்தேகமெல்லாம் தீர்ந்திருக்கும்னு நினைக்கிறேன்.. ஆதி மதி பிரச்சினைகளுக்கு அவர்கள் இருவரை விட மற்றவர்களே காரணம் என்பதால் இந்த எபிசொட் முழுக்க அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை எல்லோரும் சேர்ந்து பேசுவதாக முடித்திருக்கிறேன்.

எனக்கு தெரிந்த வரை எல்லார் விஷயத்தையும் தெளிவு படுத்தி விட்டேன்னு நினைக்கிறன். எதாவது விட்டு போயிருந்தா அதையும் தெளிவு படுத்த முயற்சி செய்கிறேன். ஆதி மதியின் தனிப்பட்ட உணர்வுகளை நாம அடுத்த எபிசோடில் பார்க்கலாம். நன்றி.

தொடரும்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:903}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.