(Reading time: 22 - 43 minutes)

னால் அடுத்த முறை திருவிழாவிற்கும் நீங்கள் யாரும் வரவில்லையே ?”

“திருவிழாவின் போதுதான் தாத்தாவிற்கு வருஷ திதி ஆதி. ஒரு வருடம் வரை கோவிலுக்கும் செல்ல முடியாத நிலைமை. அதனால் நாங்கள் நேராக அங்கே சென்று விட்டோம். இரண்டு நாட்கள் கழித்து வந்த போது நீ ஊருக்கு திரும்பி விட்டாய். “

“நீங்கள் எல்லோரும் என் மேல் கோபத்தில் இருப்பதால் தான் வரவில்லை என்று எண்ணி விட்டேன். அதற்கு பிறகு நான் இங்கே வருவதே இல்லை. எனக்கு என்னுடைய டீனேஜ் ஆரம்பத்தில் நடந்த சம்பவம் என்பதால் அது ஒரு மாதிரி காயத்தை ஏற்படுத்தி விட்டது. அதன் பிறகு நான் யாரோடும் நெருக்கமாக பழகவில்லை. அம்மா சில முறை உங்களை பற்றி பேச வரும்போது கூட பேச்சை மாற்றி விடுவேன் அல்லது அங்கிருந்து சென்று விடுவேன்”

அப்போது ஜானகி “ஆதி நீ எங்களோடு கூட உன் நெருக்கத்தை குறைத்து கொண்டாய். உன்னை மாற்றிய பின், பத்மா கொஞ்சம் கொஞ்சமாக சூர்யா, அதிதியையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டாள். சில சமயங்களில் இந்த பிள்ளைகளுக்கு நான் அம்மா இல்லையோ, என்ற சந்தேகமே வந்து விடும்.

பல முறை இவர்கள் நம் வீட்டிற்கே வரமால் இருந்து விடுவார்கள்.  நான் ரொம்ப வருத்தபடுவதை பார்த்து நீதான் இவர்களையும் கொஞ்சம் மாற்றினாய். இதை பற்றி உன் அப்பாவோடு பேசிய போது, அவரும் வந்தனா ஒற்றை பெண்ணாக இருப்பதால் , இவர்கள் அங்கே இருந்தால் நன்றாக இருக்கும் என்று பத்மா கேட்டு கொண்டதாக சொல்லி விட்டார்.

அப்போது எல்லாம் மீனாட்சியிடம் பேசுவதுதான் எனக்கு ஆறுதல். அவள் தான் எல்லாம் சரியாகி விடும் என்று சமாதான படுத்துவாள்.” என்று கூறினார்.

இதை எல்லாம் கேட்ட சூர்யாவும், அதிதியும் “அம்மா, நீங்கள் சொல்வது எங்களுக்கு வியப்பாக இருக்கிறது. அண்ணா, அண்ணி சேரக் கூடாது என்பதுதானே பிரச்சினை. எங்களை எதற்காக உங்களிடமிருந்து விலக்கி விட்டார்கள் ?”

You might also like - Enna thavam seithu vitten... A family drama

“பத்மாவை பொறுத்த வரை அவளை எல்லோரும் முக்கியமாக உணர வேண்டும். அவள் லேடீஸ் கிளப், சோசியல் கிளப் என்று சென்று தன்னை நாகரிமாக காட்டிக் கொண்டாள். எனக்கு அதில் விருப்பம் இல்லாததால் நான் இதற்கு எல்லாம் செல்வதில்லை. நீங்கள் வளரும்போது உங்களுக்கு அந்த வித்தியாசம் புரிந்து அத்தையோடு ஒட்டிக் கொண்டீர்கள். இன்னும் சொல்ல போனால் உங்கள் படிப்பு, உடை எல்லா விஷயத்தையும் முடிவு செய்வது பத்மாதான். ஆனால் என்னிடமிருந்து பிரித்தாளே தவிர, உங்களிடம் பாசமாகதான் இருந்தாள். அதோடு ஆதி உங்களை கண்காணிப்பதையும் தெரிந்து கொண்ட பின்புதான் சற்று வருத்தம் குறைந்தது.

ஒருவேளை ஆதி திருமண சமயத்தில் நான் மதியை பற்றி பேச்செடுத்தால், நீங்கள் இருவரும் பத்மாவிற்கு ஆதரவாக இருப்பீர்கள் என்று எண்ணியிருந்தாள். அதனால் தான் முதலிலேயே அவள் உங்களை தன் பக்கம் வைத்துக் கொண்டாள்.”

இப்போது ஆதி, “ஆமாம். நான் பத்தாவது முடித்த போது என்னை இன்ஜினியரிங் எடுக்க பர்ஸ்ட் குரூப் சேர சொன்னார்கள். அப்படி பேசும் போது அவர்கள் சொல்லியது நீயும் வந்தனாவும் தான் இந்த கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக இன்ஜினியரிங் எடு என்றார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. அதனால் காமெர்ஸ் எடுத்து நிர்வாகம் மற்றும் வர்த்தகம் பற்றி படிக்க போய்விட்டேன். ஆனால் அவர்களை வருத்தப் படுத்தியது போல் தோன்றியதால் அவர்களோடு அவ்வப்போது பேசுவேன். அப்போது தான் சூர்யா, அதிதி பற்றி தெரிந்து கொள்வேன்.”

ராகவன் “ஆதி, நீ ஏன் வந்தனாவோடு திருமணத்திற்கு சம்மதம் சொன்னாய்? எனக்கும், ஜானகிக்கும் நீ மதியை விரும்புகிறாய் என்று நிச்சயமாக தோன்றியது. ஆனால் ஏன் ?”

இது வரை சாதாரணமாக இருந்த ஆதி இப்போது உணர்சியற்ற முகத்துடன் “சொல்கிறேன். மதி இதுவரை இதை பற்றி நான் உன்னிடம் பேசியதில்லை. உனக்கு திருமணம் என்று செய்தி வந்ததே. அது என்ன ஆயிற்று?”  என்று கேட்டான்.

திகைத்த மதி “எனக்கு திருமணமா? யார் சொன்னது? உங்களை தவிர யாரையும் நான் எண்ணிக் கூட பார்க்கவில்லையே?”

ஜானகியும் திகைத்த குரலில், “மதிக்கு திருமணமா? என்ன ஆதி சொல்கிறாய்?” என்றார்.

இப்போதும் அதே கல் போன்ற முகத்துடன் “நான் படித்து முடித்த வந்து, தனியாக ஷேர் பிசினஸ் ஆரம்பித்து நடந்து கொண்டிருந்த போது ஒருநாள் அத்தையை பார்க்க வரசொல்லியிருந்தரகள். நான் அங்கே சென்ற போது பத்மா அத்தையும், மாமாவும் பேசிக் கொண்டது என் காதில் விழுந்தது.

அத்தை மாமாவிடம் “ஏங்க, அடுத்த வாரம் மதிக்கு கல்யாணமாமே.. “

“ஏன் .. புதிதாக கேட்கிறாய் .. அன்றைக்கு தான் மதியின் அம்மா, அப்பா வந்து பத்திரிகை வைத்து கூப்பிட்டார்களே .. நினைவு இல்லையா “

“இருக்கிறது. நான் நம் ஆதிக்கு மதியை பார்ப்பார்கள் என்று எண்ணியிருந்தேன். “

“ஹ்ம்ம்.. அப்படி ஒரு பேச்சு இருந்தது. ஆனால் பெண்ணுக்கு வேறு ஒருவரை பிடித்திருக்கிறதே ... “

அண்ணா,அண்ணிக்கும் பத்திரிகை கொடுத்தார்களா?

அங்கே வைத்துவிட்டு தான் இங்கே வந்தார்கள் ..”

இப்படி பேசினார்கள். மதிக்கு இஷ்டம் இல்லை என்பது எனக்கு பெரிய அடியாக இருந்தது. அவர்கள் சொன்ன நாளன்று நான் கேட்ட போது நீங்களும் திருமணத்திற்கு சென்று வந்ததாக சொன்னீர்கள் .. “ என்று முடித்தான்.

அப்போது ராகவன் “என்ன ஆதி சொல்கிறாய் ? அன்று திருமணம் நடந்தது நம் CK கன்ஸ்ட்ரக்ஷன் ராவ் பெண் சாருமதிக்கு. அவர்கள் நமக்கு நல்ல நண்பர்கள். முதலில் அவர்கள் உன்னை தன் பெண்ணிற்கு கேட்டார்கள். அதற்குள் அந்த பெண் காதலில் விழுந்து விடவே அந்த பையனையே பேசி முடித்தார்கள்.  அதனால் வீடு தேடி வந்து பத்திரிகை வைத்தார்கள். உன் மாமாவிற்கும் நல்ல பழக்கம் என்பதால் பத்மா வீட்டிற்கும் சென்று வைத்தார்கள்.” என்றார்.

“ஆக இதுதான் நீ வந்தனாவோடு திருமணத்திற்கு சம்மதம் சொல்ல காரணமா? ஒரு வார்த்தை எங்களிடம் கேட்டிருக்க வேண்டாமா ஆதி ?” என்றார் ஜானகி.

“அது .. எனக்கு அவளே என்னை மறந்து விட்டபிறகு நான் எதற்காக கேட்க வேண்டும் என்று எண்ணி விட்டேன் அம்மா. அதற்கு பிறகு தான் ஒருநாள் அத்தை , நம் அப்பாவிடம் எனக்கும் வந்தனாவிற்கும் திருமணம் செய்ய கேட்டார்கள். ” என்றான் ஆதி. “ஆனால் நீங்கள் ஏன் வந்தனாவோடு திருமணத்திற்கு தயங்கினீர்கள்?”

“உன் குணத்திற்கு வந்தனா ஒத்து போவது கஷ்டமே. எனக்கு உள்ளூர ஒரு நம்பிக்கை. நீ மதியை விரும்புவதாக. ஆனால் நீ அசைந்து கொடுக்கவில்லை. மேலும் வந்தனாவிற்கு நான் சற்று பட்டிகாடு என்ற எண்ணமும் உண்டு, இது எல்லாம் தான் நான் தயங்கியதற்கு காரணம்” என்றார்.

“நீங்கள் அத்தையிடம் என்ன சொல்லி ஜோசியரிடம் சென்று திருமணதிற்கு நாள் குறிக்க சொன்னீர்கள்?” என்றான். 

“சரி. எப்படியும் வந்தனா தான் என்று முடிவு செய்த பிறகும், சில கெட்ட கனவுகள் வந்தது ஆதி. அப்போதுதான் எதற்கும் நம் குடும்ப ஜோதிடரை பார்க்க போகலாம் என்று எண்ணி பத்மாவை கூப்பிட்டேன். ஆனால் அவள் தான் மட்டும் போய் வருவதாக கூறினாள். நானும் யார் போனால் என்ன என்று விட்டேன். ஆனால் உன் அத்தை உன்னிடம் என்ன சொன்னார்கள்?

“அத்தை என்னிடம் சொன்னது, வந்தனாவிற்கு ஏதோ தோஷம் இருப்பதாக சொல்லி நீங்கள் இந்த கல்யாணத்தை நிறுத்தி விடுவீர்கள் என்று பயப்படுவதாக சொன்னார்கள். அதோடு உங்களுக்கு வந்தனாவை பிடிக்கவில்லை என்றும் சொன்னார்கள். அதற்கேற்றார் போல் நீங்களும் கல்யாணத்திற்கு பத்து நாட்கள் முன்பு இந்த திருமணத்தை நிறுத்தி விடலாமா என்று கேட்டீர்களே?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.