'வேதா..'
'ம்?'
'உங்காத்திலே இப்படி எல்லாம் சாப்பிடுவேளா? நம்ம கல்யாணம் ஆனப்புறம் நீ நேக்கும் இப்படி உருண்டை பிடிச்சு தருவியா?'
'ம்...' வேகமாக சொல்லியும் விட்டிருந்தாள் வேதா. பின்னர் சுருக்கென தைத்தது மனம். மௌனம் குடி கொண்டது அவளிடம்.
'ஹலோ என்னாச்சு மேடம் திடீர்னு சைலென்ட் ஆயிட்டேள்...'
'ம்... அதெல்லாம் ஒண்ணுமில்லை...நான்... நாம அப்புறம் பேசலாமா. நான் வெச்சிடவா'
'இரு இரு என்னோட ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு வெச்சிடலாம் . உனக்கென்ன வயசுமா?'
'27..'
'நிஜமாதானே....'
'நிஜமாதான்... ஏன் கேட்கறேள்?'
'அப்பாடா ....' என்றான் கோகுல். 'ஒண்ணுமில்லை... நேக்கு எப்பவுமே பொண்கள் ராசி கிடையாது. எப்பவும் நான் ஃப்ளைட்லே ஏறி உட்கார்ந்து இருப்பேன். எல்லா ஏர் ஹோஸ்டசும் அழகு அழகா இருப்பா. ஆனா நேக்கு கூல் ட்ரிங் கொண்டு வந்து கொடுக்கிறது மட்டும் 45 வயசு சீனியர் மாமியா தான் இருக்கும். எங்கம்மா நோக்கு பொண்ணு பார்த்தாச்சுடா முரளின்னு சொன்னா.. என்ன வயசுன்னு சொல்லலை. ஒரு வேளை நிச்சியதார்த்ததிலேயும் என் பக்கத்திலே 45 வயசு மாமி வந்து நின்னுடப்போறாளே ஒரே பயம் அதான் கேட்டேன்...' அவன் குரலை பாவமாக வைத்துக்கொண்டு சொல்ல தன்னை மறந்து கலகலவென சிரித்தாள் வேதா...
You might also like - Nesam niram maaruma.. Cute family drama
'குட் கேர்ள்...' என்றான் மெதுவாக. 'நீ எப்படி இருப்பேன்னு நேக்கு தெரியாது. எப்படி இருந்தாலும் நீ இப்படித்தான் எப்பவும் சிரிச்சிண்டே இருக்கணும். கல்யாணத்துக்கு அப்புறமும். அதுதான் நேக்கு பிடிக்கும் சரியா?
அவன் வார்த்தைகள் அவளை இன்னமும் நெகிழ்த்தியது நிஜம். சில நொடி மௌனத்திற்கு பிறகு 'நீங்க என் போட்டோ பார்க்கலையா???.' கொஞ்சம் வியப்பு கலந்த குரலில் கேட்டாள் வேதா. 'அப்படியே சரின்னு சொல்லிட்டேளா?'
'பார்த்துக்கலாம். நிச்சயதார்ததிலே பார்த்துக்கலாம். நீதான் நேக்குன்னு ஆனப்புறம் உரிமையோட பார்த்துக்கலாம் சரியா? இதுதான் என் நம்பர். எப்போ வேணும்னாலும், என்ன வேணும்னாலும் ஒரு மிஸ்ட்கால் கொடு போதும். இப்போ நீ நிம்மதியா தூங்கி ரெஸ்ட் எடு. குட் நைட் ' சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான் முரளி.
எப்போதாவது தேவையாக இருக்கும் என தோன்றியதோ என்னவோ அவன் எண்ணை கைப்பேசியில் பதித்துக்கொண்டு அப்படியே கண்களை மூடிக்கொண்டாள் வேதா. எத்தனை தவிர்க்க பார்த்தும் முடியாமல் மனம் ஏனோ முரளியையும், சரவணனையும் ஒப்பிட்டு பார்த்தது.
'உன் கண்ணையும் லிப்சையும் பார்க்கத்தான் தினமும் வரேன்னு வெச்சுக்கோயேன்' அன்றொரு நாள் சரவணன் சொன்னது நினைவுக்கு வந்தது. 'நீதான் நேக்குன்னு ஆனப்புறம் உரிமையோட பார்த்துக்கலாம்' முரளியின் வார்த்தைகளும் அருகே நின்றது.
'எப்படா இதெல்லாம் எனக்கு சொந்தமாகும்னு இருக்கு எனக்கு. உன்னை அப்படியே. கட்டிப்பிடுச்சு...' அடிக்கடி சொல்வான் சரவணன். திருமண வாழக்கையில் அதுவும் ஒரு அங்கம் தான். ஆனால் அவன் துவங்குவதே அங்கிருந்து தானோ? இது சரியா?
'அய்யோ... என்னவாகிப்போனது எனக்கு? நானும் என் கோகுல் பேசியதை ரசிக்கத்தானே செய்தேன். என் மனம் இன்று ஏன் இப்படி அலைபாய்கிறது' தலையணையில் மறுபடி முகம் புதைத்தாள் வேதா.
மூன்று நாட்கள் கடந்து இருந்தன. சரவணனிடமிருந்து அழைப்பும் வரவில்லை. அவனும் வரவில்லை. அவனை அழைக்கும் தைரியமும் வரவில்லை வேதாவுக்கு, ஒரு வேளை தான் அழைத்து உடனே கிளம்பி வா வென்றால், தங்கையின் வாழ்க்கை?????
அன்று காலை அப்பா எங்கோ கிளம்ப ஆயத்தமாகி கொண்டிருந்தார். மகள்கள் இருவரையும் அழைத்து சொன்னார் அவர்.
'கும்பகோணம் கோவில்லே ஹோமம் பண்றாமா. வரவேண்டிய ரெண்டு பேர் வரலையாம். என்ன கூப்பிடறாமா. நான் போயிட்டு ரெண்டு நாள்லே வந்திடறேன்மா' என்றார் அவர்.
'அப்பா இன்னும் மூணு நாள்லே நிச்சியதார்த்தம். இப்போ நீங்க கிளம்பி போயிட்டேள்ன்னா எப்படிப்பா?'
'இல்லமா. ரெண்டு நாள்லே வந்திடுவேன். இங்கே வேலை ஒண்ணும் இல்லையே. வாங்க வேண்டியது எல்லாம் அனேகமா வாங்கியாச்சு. பெரிய ஹோமம்மா. ரெண்டு நாள் முழுக்க ஹோமம். அம்பதாயிரம் ரூபா குடுப்பாமா. கல்யாண செலவுக்கு உபயோகமா இருக்கும். பெருமாளா பாத்து வழி காமிக்கிறார் போயிட்டு வந்திடறேன்மா.' என்றார் அந்த தந்தை.