'வேறே எப்படி நினைக்கறே... மனசிலே ஒருத்தனை நினைச்சிட்டு அடுத்தவன் கூட குடும்பம் நடத்தறது அசிங்கம் இல்லையா??? அதை விட கேவலம் இந்த உலகத்திலே வேறே ஏதாவது இருக்கா???? அவன் கூட குடும்பம் நடத்தினாலும் உனக்கு என் ஞாபகம் தானே வரும்...' மிகப்பெரிய ஆயுதத்தை அவன் எடுத்து வீச அப்படியே விழுந்தாள் வேதா. அவன் சொல்வதும் உண்மைதானே. இவனுடன் பழகி விட்டு நான் முரளியுடன் எப்படி குடும்பம் நடத்துவேன்????
'கோகுல்...' உடைந்தாள் வேதா 'இப்போ நான் என்ன பண்ணட்டும்???'
'அழாதேடா.. ப்ளீஸ் அழாதே... நீ அழுதா என்னாலே தாங்கிக்க முடியாது... நாளைக்கு மார்னிங் பதினோரு மணிக்கு மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் வந்திடு. நாம எங்கே போறோம்னு அப்புறம் சொல்றேன். நம்ம கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடும் பண்ணி இருக்கேன். கல்யாணம் முடிஞ்ச அப்புறம் நாம நம்மாத்துக்கு போகலாம் சரியா?'
'ச.. சரி கோகுல்..'என்றாள் வேதா கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டபடியே.
மறுநாள் காலை மிக அழகாக விடிந்திருந்தது கோதைக்கு. குளித்து விட்டு வந்தவள் முதல் வேலையாக கைப்பேசியை எடுத்து கோகுலை வாழ்த்துவதற்கு அவன் எண்ணை அழைத்தாள்.
'கோதை பொண்ணு..' என்று ஒளிர்ந்தது அவன் திரை.
அழைப்பை சட்டென ஏற்று அவன் 'கோதை பொண்ணு ... ' என்று சொல்ல
'ஹாப்பி பர்த்டே கோகுல்...' குரலில் மகிழ்ச்சியும், வெட்கமும் வழிய அவள் சொல்லி முடித்த அதே நேரத்தில் அந்த வீட்டில் இருந்த சுவர் தொடங்கி எல்லாவற்றையும் தொட்டு தொட்டு பார்த்துக்கொண்டிருந்தாள் வேதா. மறுபடியும் இந்த வீட்டுக்குள் வருவேனா? இவற்றையெல்லாம் என்னால் மறுபடியும் பார்க்க முடியுமா?
You might also like - Ennai edho seithu vittaai... A family drama...
அப்போது அவள் கண்ணில் பட்டது அவளும் அவளது தங்கையும் அப்பாவுமாக எடுத்துக்கொண்ட அந்த புகைப்படத்தை எடுத்து தனது பைக்குள் சொருகிக்கொண்டாள் அவசரமாக.
'அப்பா ஸாரிப்பா...' அவள் உதடுகள் உச்சரித்தன.
தான் செய்வது தவறு என்று அவள் உள்ளுணர்வு ஏனோ உறுத்திக்கொண்டே இருந்தது. ஆனால் சரவணன் சொன்ன வார்த்தைகளின் தாக்கம் அவளை செலுத்திக்கொண்டிருந்தது. இப்போது அவள் போகவில்லை என்றால் நடக்கபோவது அவள் திருமணமும் தானே!!!! அதன் பிறகு இவனையும் மறக்க முடியாமல்...... அவனையும் நினைக்க முடியாமல்...... நரகம் இல்லையா அது???
ஒரு பெருமூச்சுடன் இரண்டு காகிதங்களை எடுத்தாள் அவள். விறுவிறுவென அப்பாவுக்கு ஒன்று தங்கைக்கு ஒன்று என இரண்டு கடிதங்களை எழுதினாள் அவள். அப்பாவின் கடிதத்தை அங்கே தொங்கிக்கொண்டிருந்த அவரது சட்டை பையில் வைத்துவிட்டு தங்கைக்கான கடிதத்தை எடுத்துக்கொண்டு அவளது அறைக்குள் நுழைந்தாள் வேதா.
அங்கே அழகு சொட்ட சொட்ட தயாராகிக்கொண்டிருந்தாள் தங்கை. கோதை அறியாமல் கடிதத்தை அங்கே இருந்த மேஜையின் மீது வைத்தாள் வேதா.
'நான் அழகா இருக்கேனாகா?' தலை சாய்த்து கோதை கேட்க அவளை இழுத்து நெற்றியில் முத்தமிட்டு 'ரொம்ப அழகா இருக்கேடா' குரல் தழுதழுக்க சொன்னவள் தன்னோடு அவளை அணைத்துக்கொண்டாள். '
'கண்ணா ... என் தங்கையின் திருமணத்தில் எந்த பிரச்னையும் வந்து விடக்கூடாது' வேதாவின் கண்களில் கண்ணீர் வழிய மனம் கண்ணனிடம் மன்றாடியது.
அப்போது அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது கோகுல் வீட்டு கார்.
அதே நேரத்தில் வேதாவின் அலுவலகத்தில் தனது கணினி முன்னால் அமர்ந்திருந்தாள் அவளது தோழி கவிதா.
'ஏன் இந்த வேதா இன்று வரவில்லை. விடுப்பு எடுப்பதாககூட சொல்லவில்லையே?' 'என்ன பிரச்சனை? அந்த கோகுலின் வேலையாக இருக்குமோ? யோசித்தபடியே இருந்தாள் அவள். அவளுக்குள்ளேயே இன்னமும் உறுத்தல்.' இவன் நிஜமாகவே ஜி.கே க்ரூப்ஸ் கோகுல் தானா?
சட்டென எங்கிருந்தோ ஒரு மின்னல். இணையத்தை புரட்டினால் ஜி.கே க்ரூப்ஸ் பற்றிய தகவல்கள் புகைப்படங்கள் ஏதாவது கிடைக்குமா?
விரல்கள் கணினியில் விளையாட சில நொடிகளில் அவள் திரையில் விரிந்தது அந்த புகைப்படம். 'வாசுதேவன்- தேவகி- கோகுல்' என மூவரும் சேர்ந்திருக்கும் அந்த புகைப்படம்.
அப்படி என்றால் ???? அப்படி என்றால்??? வேதாவுடன் பழகுபவன் நிஜ கோகுல் இல்லையா???" அதிர்ச்சியில் விழுந்தாள் கவிதா.
கீதம் தொடரும்.....
{kunena_discuss:890}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.