(Reading time: 14 - 28 minutes)

"ங்கிள், அப்பா, ஏன்னா", என்று பைரவி, வசந்த் மற்றும் சாரதாவும் பதறியபடி அவர் அருகில் சென்றனர்.

"அப்பா.. என்னப்பா இது நீங்களே இப்படி கலங்கினால் நாங்க என்ன பண்ண முடியும்.. என்னை மன்னிச்சுடுங்கோப்பா.. எனக்கு நிச்சயம் இன்னமும் நம்பிக்கை இருக்கு இந்த வாட்டி நான் கிளியர் பண்ணிடுவேன்னு.. இல்லேன்னா நான் நீங்க  சொல்லறாப்போல வேற வேலை தேடிக்கறேன்.. கடைசியா ஒரே ஒரு சான்ஸ் தாங்கோ எனக்கு", என்று அவர் காலடியில் அமர்ந்து கண்ணீர் பெருக இறைஞ்சினான்.

"ஏன்னா நீங்க மனசைத் தளர விட்டுடாதீங்கோ.. அவன் தான் சொல்லறானே.. ", என்ற சாரதாவை நிமிர்ந்து பார்த்தவர்,

You might also like - En Uyirsakthi... A family oriented romantic story

"சாரு எனக்கு மட்டுமென்ன என்னோட ஒரே பிள்ளையை எப்பவும் வறுத்து வாய்ல போட்டுக்க ஆசையா.. நான் என்ன பண்ணுவேன் என் நிலமை அப்படி.. நம்ம கிட்ட சொத்து இருந்தும் அதை எடுக்க முடியாத நிலை.. யார் கிட்டயும் இதுவரை கையேந்தினதும் இல்லை.. இப்போ கடனை வாங்கிட்டாலும் அதை எப்படி நான் திருப்பிக் கொடுப்பேன்.. மொதல்ல என்னை நம்பி யார் குடுப்பா.. ஏதோ குத்தகைக்காரன் அப்பப்போ கொஞ்சம் என்னோட அப்பா வழி நிலத்துலேந்து குடுக்கறதையெல்லாம் எம் பொண்களுக்காகத் தானே சேர்த்து வக்கறேன்.",

"அங்கிள்.. சாரி என்னை தப்பா நெனைக்காதீங்கோ.. இந்த ஊருலே எல்லாரும் ஏதோ ஒரு எக்ஸ்ட்ரீம்லே தான் பேசறேள்.. மிதமா வாழ்க்கையை அதன் போக்கிலே எடுத்துக்கவே மாட்டேங்கறேள்.. .உங்களுக்கு என்ன தான் பிரச்சனை.. என்னையும் உங்க பொண்ணா நினைச்சு சொல்லுங்கோ.. நான் என்னாலே முடிஞ்சதை பண்ணறேன்... என் கிட்டயும் சேவிங்க்ஸ் இருக்கு.. என் சொந்த உழைப்புலே சேர்த்த பணம்.. யாரும் ஒன்னும் சொல்ல மாட்டா.. சொல்லுங்கோ உங்களுக்கு என்ன தேவை.", என்று கேட்ட பைரவியை பார்த்தவர்,

"அதெல்லாம் நன்னா இருக்காதும்மா.. நீயும் சின்னப் பொண்ணு.. நாளைக்கு உங்க அப்பா அம்மாவுக்கு பதில் சொல்லனும்..", என்று அவளை நேராய் பார்க்காமல் வேறு பக்கம் பார்த்தார்.

சாரதாவிற்குள் ஒரு சின்ன சலனம்.. 'இவள் பேசுவதை'... என்று மனதில் ஏதோ எண்ணக் குழப்பம்.

"சரி நீங்க சொல்ல வேண்டாம் நானே தரேன்.. மஹதி எனக்கு ஒரு அக்கா மாதிரி.. டீச்சர் எனக்கு அம்மா மாதிரி.. சோ அப்பா அம்மாக்கு ஒரு கஷ்டம்னா பொண்ணு உதவத்தானே வேணும்.. அந்த மாப்பிள்ளையாத்துகாரா  கேட்ட காரை நானே என்னோட கிஃப்டா வாங்கித் தரேன் மஹதிக்கு", என்றாள்.

அதற்குள் வசந்த், "பைரவி நீங்க எதுக்கு அவ்வளவு பெரிய கிஃப்ட் தரணும்.. அதெல்லாம் தப்பு", என்று மறுத்தான்.

"தப்பாவது சரியாவது.. அதெல்லாம் அவாஅவா மனசைப் பொறுத்து இருக்கு.. நீங்க சும்மா இருங்க வசந்த்.. நாளைக்கே நானும் மாமாவும் போய் காருக்கு அட்வான்ஸ் குடுத்துட்டு வரோம்" என்று முடித்தாள்.

"இல்லைம்மா..  எதுக்கும் நீ உங்க அப்பா அம்மாகிட்டா..", என்று இழுத்த ராம மூர்த்தியை ஒரு நேர் பார்வை பார்த்த பைரவி,

"மாமா உங்களுக்கென்ன தெரியணும் .. இப்போ எங்க அப்பா அம்மா ஒன்னும் சொல்லக் கூடாது அவ்வளவுதானே.. இருங்கோ நான் உங்க எதிர்லேயே பேசறேன்,", என்று ஃபோனை எடுத்தவள்,

தன் தந்தையை கூப்பிட்டு விவரம் தெரிவித்தாள்.. பின் ஸ்பீக்கரில் போட்டவள், "அப்பா இவா எல்லாரும் நான் கிஃப்டா அதை குடுக்கறேன்னு சொன்னா எங்க அப்பா அம்மா தப்பா நினைச்சுக்கப் போறா ன்னு சொல்லறாப்பா.. நீங்களே மாமா கிட்ட பேசுங்கோ.. நான் ஸ்பீக்கரில் தான் போட்டிருக்கேன்", என்றாள்.

"ஹலோ ராமமூர்த்தி சாரா.. நமஸ்காரம்.. நான் டாக்டர்.விஸ்வநாதன் பேசறேன்.. ரொம்ப சந்தோஷம் உங்க பொண்ணுக்கு நிச்சயம் ஆனதிலே.. நீங்க நிச்சயம் பைரவி தரதை ஏத்துக்கனும்.. அவளும் உங்க பொண்ணு மாதிரி தான்.. அவ எங்களுக்கு பல வருஷம் கழிச்சு கிடைச்சு வரமா வந்தவ.. அவ ஒரு நாளும் தப்பா பேசவோ செய்யவோ மாட்டா.. எங்கப் பொண்ணு மேலே எங்களுக்கு பரிபூர்ண நம்பிக்கை இருக்கு..", என்று மேலும் அரை மணி நேரம் பேசிவிட்டு லைனை கட் செய்தார்.

"என்ன மாமா சரியா.. எங்கப்பாவே சொல்லிட்டா.. இனிமேல் என்ன.. ஜாம் ஜாம்னு மத்த ஏற்பாட்டை செய்யுங்கோ.", என்றவள்,

இதில் எதிலும் பட்டுக் கொள்ளாமல் ஏதோ ஒரு மூலையை வெறித்துக் கொண்டு யோசனையிலிருந்த சாரதாவை உலுக்கி,

"மாமி என்ன யோசனை.. எல்லாம் நல்ல விதமாத்தான் இருக்கும் போங்கோ சூப்பரா எனக்கு ரவா உப்புமா செஞ்சேளே அதை கொண்டு குடுங்கோ", என்று சிரித்தாள்.

மெல்ல எழுந்து உள்ளே போனாள் சாரதா..

சற்று நேரம் கழித்து மஹதி காபியை எடுத்து கொண்டு வெளியே வந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.