(Reading time: 14 - 28 minutes)

"சாரி பைரவி ஏதோ ஃபோன் காலில் பிஸி.. அதான் லேட்", என்றபடி அவளிடம் காஃபியையும், ரவா உப்புமாவையும் கொடுத்தவளை ஒரு கணம் ஆழ பார்த்துவிட்டு,

"மஹதி ரிபோர்டெல்லாம் இன்னும் எத்தனை நாள்ல வரும்.. நான் கேட்ட மாதிரி ஃபோட்டோஸ், பிரிண்ட்ஸ், ஸ்லைட்ஸ் எல்லாம் குடுப்பா இல்லையா?"

"நிச்சயம் பைரவி.. இன்னும் ஒரு வாரத்திலே வந்துடும்.. என்ன கொஞ்சம் எக்ஸ்பென்ஸ் அதிகம் தான் இல்லை", என்றவளிடம்,

"இதெல்லாம் என்னோட லேபே எனக்கு குடுத்துடும்.. சோ..அதெல்லாம் பிரச்சனை இல்லை...", என்றவள்,

You might also like - Kanaamoochi re re... A romantic comedy...

"வசந்த்.. உங்கிட்ட ஒன்னு சொல்லனும்.. நேத்திக்கு டின்னர்க்கு நானும் அஜயும் ஒருத்தராத்துக்கு போனோம் இல்லையா.. அவர் ஒரு பெரிய பிஸினஸ் மேன்.. அவர் கிட்ட ஏதோ வேலை ஒன்னு இருக்கு யாராவது நம்பகமா இருந்தா சொல்லுன்னு அஜய்கிட்ட சொல்லிண்டு இருந்தார்.. நல்லவர்.. ரொம்ப கைண்ட் அண்ட் வெரி சார்மிங்க் பர்சனாலிட்டி.. நீ ஒன்னு பண்ணு அஜய்க்கு ஃபோன் பண்ணி கேளேன்.. உன்னை ரெகமண்ட் பண்ணச் சொல்லி.. இன்ஃபாக்ட் அது பார்ட் டைம் தான்னும் இன்னமும் ரெண்டு மாசத்துக்குதான்னும் சொன்னார் ஏதோ நாலு மணி நேரத்துக்கு தேவையாம்.. உனக்கு ரிசல்ட் வர வரை போயேன்.. உனக்கும் ஏதோ கோர்ஸ் சேரணும்னு சொன்னியே யூஸ்ஃபுல்லா இருக்கும்னு தோணறது..", என்றாள்.

"நானும் கொஞ்ச நாளா யோசிச்சுண்டு தான் இருந்தேன் பார்ட் டைம் பண்ணமும்னு.. நிச்சயமா நான் அஜய் கிட்ட பேசறேன்..", என்றான் வசந்த்.

"சரி வசந்த்.. நீ அஜய் கிட்ட பேசி அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிக்கோ.. நானும் உன் கூட வரேன்.. அவர் கூட ஏதோ எனக்கு ப்ராஜெக்ட்லே ஹெல்ப் பண்ணறதா சொன்னார்.. அவா ஏதோ மெடிகல் எக்யுப்மெண்ட்ஸ் கம்பனி வச்சிருக்கார்.. அஜய் கூட ஒரே யுனிவர்சிடியிலே ஏதோ படிச்சாராம்.. சோ.. நீங்க கட்டாயம் அஜய் கிட்டே பேசி முடிவு பண்ணுங்க... சரி நான் மாமி கிட்டே சொல்லிட்டு கிளம்பரேன்", என்றவள் கிச்சனுக்குள் பார்த்தாள்.. அங்கே சாரதாவை காணவில்லை.

அப்படியே பின்கட்டின் வழியாக கொல்லைபுறத்திற்கு போனவள் கிணற்றடியில் ஏதோ ஒரு சிந்தனையில் சாரதா அமர்ந்திருப்பதை பார்த்தாள்.

"என்ன மாமி இங்கே உக்காந்துண்டு இருக்கேள்.. கிளாஸ்க்கு எல்லாரும் வர நேரமாச்சே.. தயாராகலை?"

பைரவியின் குரலில் நிகழ்வுக்கு வந்த சாரதா, "ம்ம் என்னம்மா சொன்னே.. இதோ உனக்கு உப்புமா கொண்டு தரேன்", என்று எழுந்திரிக்க எத்தனித்தவளை கைகளை பிடித்து திரும்பவும் உட்கார வைத்தாள் பைரவி.

"அதெல்லாம் அப்பவே மஹி கொடுத்தாச்சு.. நான் சாப்பிட்டும் முடிச்சாச்சு" என்றவள்,

"ஏன் மாமி என்ன பிரச்சனை உங்களுக்கு.. சுரத்தே இல்லாம இங்கே வந்துட்டேள்?.. நான் ஹெல்ப் பண்ணறது உங்களுக்கு பிடிக்கலையா?

"அய்யய்யோ அப்படில்லாம் ஒன்னும் இல்லைம்மா.. உங்கப்பா பேசினதும் எனக்கு எங்கண்ணா ஞாபகம் வந்துடுத்து.. அவரும் அமெரிக்கால தான் கடைசியா இருந்தார் எங்களுக்குத் தெரிஞ்சு.. அப்புறம் என்னமோ தெரியலை அப்படியே காண்டாக்டே இல்லாம போயிடுத்து.. எங்கப்பா அம்மா போனதுக்கு கூட தெரிவிக்க முடியலை.. அட்ரஸும் இல்லை ஃபோன் நம்பரும் இல்லை... இந்த காலம் மாதிரி வசதியும் இல்லை அப்போ....", என்று கண்களை துடைத்து கொண்டாள்.

"அவர் பேரு என்ன? அவர் என்ன உத்யோகம் பண்ணார்னு சொல்லுங்கோ மாமி.. நான் அப்பா கிட்ட பேசி கண்டு பிடிக்கச் சொல்லறேன்.."

"இனிமேல் தெரிஞ்சு என்ன ஆகப்போறது.. அவன் வரச்சே வரட்டும்.. அது வரைக்கும் அவன் சொத்துக்களை காபந்து பண்ண வேண்டியது என் கடமை.. எதில் எனக்கு துணை இருக்கிறாறோ இல்லையோ என் ஆத்துக்காரர் இந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் ரொம்ப கவனமாக இருக்கிறார்.. யாரும் தன்னை நாளைக்கு கை நீட்டி ஒரு சொல் சொல்லிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்., அந்த வரைக்கும் எனக்கும் ரொம்ப சந்தோஷம்.. என் மாமியார் இருந்த வரைக்கும் அந்த சொத்தை எங்கப்பா அம்மா கையிலிருந்து பிடுங்குவதையே குறிக்கோளா வச்சிண்டு இருந்தா.. நல்ல வேளையா போய் சேந்தா..  நான் படாத துன்பம் இல்லை அவா கிட்ட.. வரிசையா பெண்ணை பெத்து அவா வாய்லே விழுந்தெழுந்தேன்.. எப்படியோ விடிஞ்சிது..", என்று தன் மனக்கிடக்கை கொட்ட ஆரம்பித்தாள்.

"மாமி உங்களுக்கு மூணு பெண்கள் தானே?", என்று நிறுத்திய பைரவியை பார்த்து,

"ஆமாமாம்.. ஆனா நாலாவதும் பொண்ணா பொறந்துட்டா வீட்டுக்கே வராதேன்னு சொன்னா என் மாமியார்.. நல்ல வேளையா வசந்த் வந்தான்.. இல்லாட்டி என் நிலைமையை நினைக்கவே பயமா இருக்கு இப்ப கூட.. குழந்தை பிறந்த பின் ஆண் பிள்ளைன்னு சொன்னதும் தான் இந்தப் பக்கமே வந்தா.. எங்காத்துக்காரரையும் என்னை பார்க்க விடலை..பேச விடலை.. மூணு பொண்களையும் இவர் கிட்ட விட்டுட்டு,  நாலாவதா வயித்து பிள்ளையோட எங்கம்மாவாத்துக்கு வந்தவ வசந்த் பிறந்து அஞ்சாம் மாசம் தான் திரும்பி போனேன்..", என்று பெருமூச்சு விட்டாள் சாரதா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.