(Reading time: 14 - 28 minutes)

"ன் மாமி இந்தியாலே இப்படி இருக்கா மனுஷா படிச்சவாளே இப்படி பொண்ணு வேணாம் அப்படி இப்படின்னு சொன்னா எப்படி.. அவா எல்லாருக்கும் ஒன்னு தெரியுமோ.. பொண்ணு பொறக்க மொதல் காரணம் ஜெனிடிக்ஸ் படி ஆண்தான்னு.. அவா கிட்டேந்து வர மரபு வழியிலே வரதுதான் பெண் மரபணுக்கள்...இதுலே பெண்கள் கையிலே ஒன்னும் கிடையாது.. இப்படிக்கூட நடந்துப்பாளோ?.. மாமாவுமா இதையெல்லாம் ஃபால்லோ பண்ணினார்?.. நம்பவே கஷ்டமா இருக்கு..", என்று தன் வேதனையை வெளிப்படுத்தினாள் பைரவி.

"இல்லேம்மா அவர் ரொம்ப பாவம்.. ஆரம்பத்துலேந்து ரொம்ப கஷ்டப் பட்ட குடும்பம்.. ஒரே பிள்ளையா போயிட்டார் அவர்.. அவர் தங்கைகள் எல்லாம் ரொம்ப பொல்லாதவா.. இவர் அம்மா இவர் கிட்டேந்து எல்லாத்தையும் பிடுங்கி பொண்களுக்கு குடுப்பா.. கொஞ்சம் கூட யோசிச்சது இல்லை பிள்ளை கஷ்டப் படறானே.. கிளார்க் உத்யோகம் அதிகமா படிக்கலையேன்னு.. ஏதோ உத்யோகம் கிடைச்சதுமே ஆரம்பிசுட்டா..  இந்த சீர் அந்த சீர்னு பொண்களுக்காக பிடுங்கறதை.. இதை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்.. ஆனா அவாஅவா பொருளாதர நிலையும் பார்க்கனுமே?.. கல்யாணம் ஆகி மூணு பொண்ணு பொறந்தபின்னும் இதுவே தான் தொடர்கதை இந்தாத்துலே.. என்னையும் வெளியே வேலைக்கு போக விடலை.. கௌரவம் அது இதுன்னு பார்த்து கிடைச்ச யுனிவர்சிட்டி வேலையையும் எடுத்துக்க விடலை.. ஏதோ போனாப் போறதுன்னு பாட்டுக் கிளாஸ் எடுக்க விட்டா.. அதுவே அந்த காலத்தில் பெரிய்ய விஷயமா தோணினது எனக்கு.. இந்த காலம் மாதிரி அப்போ சங்கீதக்காராளுக்கு பணமும் யாரும் அதிகமா குடுக்க மாட்டா.. எப்படியோ கஷ்டப்பட்டோம்.. வாழ்க்கையை நடத்தினோம்"...

You might also like - Krishna Saki... A family oriented romantic story...

"மாமி நீங்க நிஜமாவே கிரேட்.. எங்கம்மாவும் இப்படிதான் ரொம்ப கஷ்டப்பட்டா வாழ்க்கையிலே..  ஒரு குழந்தை பிறக்கலைன்னு ரொம்ப படுத்திட்டாளாம் எங்கப்பாவத்துலே.. ஆனா எங்கப்பா எப்படியோ நான் பொறந்ததுக்கு அப்புறம் உறவே வேண்டாம்னுட்டு அமெரிக்கா  போயிட்டா.. எங்கம்மாவுக்கு ஒரே அண்ணன் இருக்கார்.. இங்கே தான் மெட்ராசில் எங்கேயோ இருக்கா.. நான் அவாளை தேடிண்டு போகனும்.. ஒரு வேலை இருக்கு அவா கிட்ட.. அவா ஏதோ டூருக்கு போயிருக்காளாம் அவா பக்கத்தாத்து காரா சொன்னா..  இன்னமும் ஒரு வாரம் ஆகுமாம் திரும்பி வர.. என் கிட்டயும் ஃபோன் நம்பரெல்லாம் கிடையாது.. பழைய அட்ரெஸ்ல போய் விசாரிச்சப்ப தெரிய வந்துது.. அவா வீட்டை வித்து காலி பண்ணிண்டு போய் ரொம்ப வருஷம் ஆச்சுன்னு.. எப்படியோ புது விலாசத்தை கண்டு பிடிச்சு போய் பார்த்தா வீடு பூட்டியிருக்கு.. எதிர்ல குடியிருக்கரவாளுக்கும் ஒன்னும் தெரியலை.. வெளியூர் போயிருக்கா வரதுக்கு ஒரு வாரம் ஆகும்னு சொன்னான் அந்தாத்துல இருந்த பையன்." என்று, பெருமூச்சுவிட்டாள் பைரவி.

"நீயும் உங்கம்மாவோட அண்ணாவைத் தேடற.. நானும் என் அண்ணாவைத் தேடறேன்.. என்ன விசித்திரம் பார்த்தியா.. இருக்கட்டும் ஒரு நாள் நமக்கும் நல்ல செய்தி வரும் அதுவரை பொறுக்கலாம்", என்ற சாரதா மெல்ல எழுந்து வீட்டினுள் சென்றாள்.

'நீங்கள் பொறுக்கலாம் மாமி ஆனா எங்கம்மா பொறுக்க முடியாதே', என்று மனதில் நினைத்தவள் சாரதாவை பின் தொடர்ந்தாள்.

அதற்குள் அஜயிடமிருந்து கால் வந்தது.

"பைரவி.. நான் இங்கே வந்துட்டேன்.. என்னோட சொந்தக்காராளை தேடிண்டு இப்போதான் போயிண்டு இருக்கேன்.. வசந்த் ஃபோன் பண்ணினான்.. ஆனந்த் கிட்ட வேலைக்கு சேர்த்துவிட சொல்லி.. நான் பேசியிருக்கேன்.. நீயும் அவனோட நாளைக்கு போ.. சரி சரி சிக்னல் வீக்காயிருக்கு நான் அப்புறம் பேசறேன்", என்று கூறி லைனை கட் செய்தான்.

அன்று இரவு வெகு நேரம் தன் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தாள் பைரவி.. வந்த வேலையை விரைவாக முடித்து விட்டு வருவதாக சொன்னவள்,  அன்னையை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு போனை வைத்தாள்.

தொடரும்

Episode 15

Episode 17

{kunena_discuss:909}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.