" எனக்கு மட்டும் என்னவாம் ? உன் மூலமாய் ஒரு தோழி , ஒரு அம்மா , ஒரு காதலி , ஒரு மனைவி , ஒரு குழந்தையும் கிடைச்சிருக்கா " என்று ஒவ்வொரு விரலுக்கும் விளக்கம் தந்தான் .. சட்டென அவன் கன்னத்தில் முத்தமிட்டு
" ஆளை மயக்குற மது நீ " என்றான் ..
" பின்ன , மதுன்னா சும்மாவா ? பொய் சொல்லியாச்சும் உம்மா வாங்கிற மாட்டேனா ?" என்று கண்சிமிட்டி அவளிடம் இருந்து அடிகளை தாராளமாய் பெற்றுகொண்டான் ..
மறுநாள் காலை பொழுது நிறைய எதிர்பார்ப்புகளோடு அழகாய் புலர்ந்தது .. ஆண்கள் எல்லோரும் பட்டு வேஷ்ட்டி சட்டையில் அட்டகாசமாய் வசீகரிக்க , பெண்கள் எல்லாம் பட்டு புடவையில் தேவதையாய் வளம் வந்தனர் .. கோவிலுக்கு செல்வதாக ஷக்தியிடம் காரணம் கூறி அவனையும் தயாராக வைத்தனர் .. மித்ராதான் அடிக்கடி அவன் முகத்தை பார்த்து கொண்டே இருந்தாள் .. ஏனோ அவனுக்கு தெரியாமல் மிகப்பெரிய முடிவே எடுத்து விட்டோம் என்ற உண்மை பூதாகரமாய் அவள் கண்முன் தோன்றியது .. அவள் இயல்பாய் இல்லை என்பதை உணர்ந்து அடிக்கடி அவளுடன் பேச்சு கொடுத்தான் ஷக்தி ..அதுவே அவளை கலவரமாக்க , வேறு வழி இன்றி எழிலிடம் கூறி அவளை கவனிக்க சொன்னான் ..
கருணை வடிவாய் நின்ற அழகுவேல் குமரனை கும்பிட்டுவிட்டு , அனைவரின் காரும் அந்த சாலையில் சீறி பாய்ந்தது .. கார் நிறுத்தவேண்டிய இடம் நெருங்கவும் மித்ரா நடுக்கத்துடன் ஷக்தியின் விரல்களை பற்றி கொண்டாள் .. என்ன நினைத்தானோ அவன் , பட்டென அவள் தோளில் கை போட்டு " நான் இருக்கேன் " என்பதை செயலில் உணர்த்தினான் .. அதில் தைரியம் பெற்றவளாய் அவனுடன் காரில் இருந்து இறங்க , அங்கு அவர்களுக்கு தெரியாத சிலரும் வாய் நிறைய புன்னகையுடன் அவர்களை வரவேற்றனர் ..
ஓரளவிற்கு என்ன நடக்கும் என்பதை கணித்து வைத்திருந்தான் ஷக்தி .. (அது எப்படின்னு அடுத்த எபிசொட் ல சொல்றேன் .. இவ்வளவு ப்ளான் போட்டு ,ஷக்திக்கு தெரியாமல் மறைச்சு வைச்சா அதை அவருக்கு சொன்ன அந்த ஓட்டை வாய் யாருன்னு யோசிங்க ) . வசீகரமான புன்னகையுடன் மித்ராவின் கை பிடித்துக்கொண்டே அவர்களோடு இணைத்து நின்றவனின் கண்களில் " லக்ஷ்மி டிபார்மெண்ட் ஸ்டோர் " என்று பெயர்பலகை தெரியவும் , அவன் முகத்தையே ஆவலாய் பார்த்திருந்த மனைவியை பார்த்தான் .. தன்னுடைய கிறுக்கலை ஓவியம் என்று கூறி , பெற்றோரிடம் விமர்சனம் கேட்கும் குழந்தையை போல அப்பாவித்தனமும் ஆர்வமும் மின்னிட தன்னை பார்த்த மனைவியின் மேற்றியில் லேசாய் முட்டி தோளில் கை போட்டு முதுகில் " ஷபாஷ் " என்பது போல தட்டி கொண்டுத்தான் ஷக்தி .. அது போதுமே அவளுக்கு ! அடுத்த நொடி வாயெல்லாம் பல்லாக மலர்ந்து சிரித்தாள் மித்ரா .. இருவரின் கண்களிலும் தெரிந்த களிப்பு அனைவரையும் தோற்றி கொள்ள ,
" ஷக்தி , ரிப்பன் கட் பண்ணு " என்றான் மதியழகன் ..
" ம்ம்ம்ஹ்ம்ம்ம் மாட்டேன் " என்று சட்டமாய் அவன் நிற்க அனைவரும் கேள்வியுடன் பார்த்தனர் .. அட என்ன ஷக்திம்மா நீங்க இப்படி பண்ணுறிங்களேம்மா ! என்ன ஆச்சுன்னு அடுத்த எபிசொட் ல அவரையே கேட்போம் ..பாய் பாய் ..
தொடரும்
{kunena_discuss:777}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.