(Reading time: 15 - 29 minutes)

" ன் அண்ணி , என் அண்ணா பக்கத்துல நிக்கிறதுக்கு யார் பெர்மிஷன் வேணும் ?" என்றாள்  முகில்மதி ..

" போச்சுடா ஜிங் சக்  ஆரம்பிச்சுட்டா " என்று கதிர் வாயை திறக்க , தர்ஷினி முகில்மதியின் தோளில்  கைபோட்டு  நிற்கவும் வாயை மூடிக்கொண்டான் .. சிரிப்புக்கு பஞ்சமே இல்லாமல் கழிந்தது ஒவ்வொரு நிமிடமும் ..

ன்றிரவு ,

பேஸ்பூக் பார்த்து கொண்டிருந்த கணவனின் அருகில் அமர்ந்தாள்  சங்கமித்ரா ..

" ஷக்தீ .. "

" ம்ம் "

" ஷக்தீதிதிதி "

" சொல்லு டீ என்ன ?"

" உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் "

" ம்ம்ம் சொல்லு "

" என்னை பாரேன் முதல்ல "

" ம்ம் " என்று போனை கீழே வைத்து விட்டு அவளை பார்த்தான் ..

" சரி சொல்லு என்ன விஷயம் ?"

" இல்ல நீ போனை பாரு .. உன்னை பார்த்தா என்னால பேச முடியாது " என்று அவள்  கூறவும் அவள் தலையிலேயே கொட்டு வைத்தான் அவன் ..

" லூசு , என்ன விஷயம்னு சொல்லு "

" ஒரு விஷயம் சொல்லணும்டா .. பட் நீ எப்படி எடுத்துப்ப தெரியல "

" சரி சொல்ல முடியாதுன்னா விடு "

" டேய் , அதான் சொல்ல வரேன்ல ..இவரா பண்ணாத "

" ம்ம் சொல்லு "

" நீ துபாய்க்கு  திரும்பி போக வேணாம் ஷக்தி "

".."

" எங்க கூடவே இருந்திடேன் .."

".."

" அப்போ இருந்த சிட்டிவேஷன் நீ அங்க போனது சரிதான் .. இப்போதான் எல்லாமே சரியாச்சே .. நம்ம குடும்பம் நீ இல்லாமல்   எப்படி பூர்த்தியாகும் சொல்லு ?"

".."

" எனக்கு நீ இருக்கணும் , இங்க என் பக்கத்துலேயே .. என்னதான் நீ டெய்லி  என்கிட்ட பேசினாலுமே , உன்னை பார்த்துகிட்டே பேசாமல் இருக்குற தருணம் கிடைக்குமா ? அந்த சந்தோசம் கிடைக்குமா சொல்லு ?"

" .. "

" அம்மா , அப்பா அத்தை மாமா எல்லாருக்கும் வயசாகுது .. அவங்க நம்மளை பார்த்துகிட்ட காலம் போச்சு .. இப்போ நாம அவங்களை கவனிக்கணும்ல ? எந்த ஒரு கவலையும் இல்லாமல் அவங்க ஜோரா இருக்கணும் .. நாமளும் சேர்ந்திருக்கணும்னு  தோணுது ஷக்தி .. "

"..."

" நான் தைரியமான பொண்ணு தான் .. ஆனா ஒவ்வொரு தடவையும் உன்னை போயிட்டு வான்னு கண் காணாத இடத்துக்கு அனுப்பி வைக்கிற அளவு தைரியசாலி இல்லை .. ரொம்ப நேர்மையா ஒரு உண்மையை சொல்லனும்னா , முன்புவிட , இப்போதான் உன்னை ரொம்ப தேடுறேன் .. ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்கலன்னு சொல்லுவாங்களே ..அப்படிதான் "என்றாள்  காதலுடன் ..

" .. "

" நான் உன் முடிவை எப்பவும் மதிக்கிறேன் ஷக்தி .. சின்ன சின்ன விஷயத்துல உன்கூட சண்டை போட்டாலும் , பெரிய பெரிய முடிவுகள் வரும்போது உன்னை விட்டு கொடுத்ததே இல்ல .. இப்பவும் அப்படிதான் .. உன் சம்மதம் எனக்கு முக்கியம் .. மனசு விட்டு பேசனுமேன்னு  ஒரே காரணத்துக்காகத்தான் நான் உன்கிட்ட இதை எல்லாம் சொல்லுறேனே தவிர, உன்னை கட்டாயபடுத்தமாட்டேன் .. உனக்கும் அது தெரியும்னு நினைக்கிறேன் " என்று அவள் தெளிவாய் முடிக்க அவள் கரம் மீது கரம் வைத்து புன்னகைத்தான் ஷக்தி ..

பதில் கூறவில்லை அவன் .. அவளும் கேள்வி கேட்கவில்லை ..

" தூங்கலாமா ?" என்று அவன் கேட்கவும் புன்னகையுடன் தலையசைத்தாள் மித்ரா .. அவளுக்கு பதில் ஏதும்  தேவைப்படவில்லை.. அவள் பேச்சில் பிழை இருந்திருந்தால் திருத்தி இருப்பான் ..மாற்று கருத்து இருந்தால் கூறி இருப்பான் .. அல்லது அவள் சிந்தனை தவறாய் இருந்தால் தலையிலேயே குட்டு வைத்திருப்பான் .. ஆனால் அவன்  எதுவும் கூறாமல் புன்னகைத்தான் .. அவனுக்கும் அதுவே சரியென்று பட்டிருக்கும் .. அல்லது , அவள்  அவன் மனதில் இருந்ததை அப்படியே சொல்லி இருப்பாள் .. அந்த ஆச்சர்யத்தில் திக்குமுக்காடித்தான்  அவன்  அமைதியாய் இருந்திருப்பான் .. இப்படி அவனது சிறு செயலே அவளுக்கு விளக்கம் தந்துவிட 

" லவ் யூ டா " என்றபடி அவன் தோளில்  சாய்ந்து  உறங்கியே போனாள்  சங்கமித்ரா .. இங்கு இவர்களின் நிம்மதிக்கு  எதிர்மாறாய் அங்கு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான் மதியழகன் .. காவியா வீட்டில் இருந்து  நிலாவுடன் புறப்பட்டவன்  , காரை ஈ சி ஆர் பக்கம் ஓட்டிச் சென்றான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.