(Reading time: 15 - 29 minutes)

" ன்னாச்சு மது ? " என்றாள்  நிலா அவனது வாடிய முகத்தை பார்த்து ..

" என்னம்மோ தெரியல குட்டிமா .. இதெல்லாம் சரியா வருமான்னு கேள்வியாய்  இருக்கு .."

" இந்த நேரத்துல என்னடா ? "

" இல்ல , இந்த டிபார்ட்மண்ட் ஸ்டோர் , ஷக்தி , நிர்வாகம் ..எல்லாம் சரியா வருமா ?"

" ஏன் வராது ? சரிவராத விஷயத்தை என் மது ஆரம்பிக்கவே மாட்டானே " என்றாள்  நிலா உறுதியாய் ..

" அதென்னவோ சரிதான் .. ஆனா , இந்த விஷயத்தை ஆரம்பிக்கவே எவ்வளவு வேலை , எவ்வளவு அலைச்சல் , அதைவிட ரொம்ப முக்கியம் பேச்சு திறமை .. எல்லாரிடமும் ஒரே மாதிரி பேச முடியாது .. அதே மாதிரி , எல்லாரும் நம்ம கேரக்டர் புரிஞ்சு நடப்பாங்கன்னு சொல்ல முடியாது .. "

" ம்ம்ம்ம் "

" ஷக்தி பத்தி நமக்கு தெரியும் .. அவன் பொறுப்பானவன் .. ஆனா பேச்சு திறமை ?? அவனுக்கு சரிவருமா ? அவனுக்கு இதுல சம்மதமான்னு கேட்காமல் இவ்வளவு பண்ணிட்டோமோன்னு கொஞ்சம் பயம்மா இருக்கு "

" இதில் என்ன இருக்கு ? இது ஒரு கூட்டு முயற்சி மது ..ஷக்தி சொதப்பினால் சங்கு இருக்கா , கதிர் இருக்கார் , இவங்க எல்லாரையும் விட நீ இருக்கியே .. நீ உதவி செய்ய மாட்டியா ?"

" ச்ச்ச .. என் தம்பிக்கு நான் துணையாய் இருப்பேன் .. ஆனா உனக்கு புரியல .. பசங்களுக்குன்னு ஒரு சொந்த கனவு , ஒரு சுய கௌரவம் , இப்படி நிறைய விஷயம் இருக்கு .. அவனை கேட்காமல் , நாளைக்கே கடை சாவியை கொடுத்து  இதை நீ பார்த்துக்க ஷக்தி அப்படின்னு சொல்லுறது எந்த அளவுக்கு சரியான விஷயமாய் இருக்கும்  ? ஹீ ஷுட் பீ மெண்டலி ப்ரீபேர்ட் "

" எனக்கு நம்பிக்கை இருக்கு மது .. ஒரு விஷயம் கவனிச்சு பாரேன் .. கதிர் , அன்பு ஷக்தி மூணு பேருக்கும் வயசில் ரொம்ப பெரிய வித்தியாசம் இல்லை , ஆனா ஷக்திகிட்ட இயல்பாகவே ஒரு பொறுப்புணர்ச்சி இருக்கு .. அதுக்காக கதிர் அண்ட் அன்புக்கு அது இல்லைன்னு நான் சொல்ல சொல்ல வரல .. ஷக்தி அவங்கள விட பொறுப்புன்னு தான் சொல்லுறேன் .. தனக்கொரு கடமை கிடைச்சா , அதை சுமையாய் நினைச்சு செய்றவங்க ஒரு ரகம் .. சுமையிலும் சுகத்தை உணர்ந்து வேலை பார்கறவங்க ஒரு ரகம் ..ஷக்தி இதில் ரெண்டாவது ரகம் "

"..."

" நீ சொல்லுற மாதிரியே வெச்சுப்போம் .. ஷக்தி இவ்வளவு நாள் அவன் வீட்டுலேயேவா இருந்தான் ? வெளிநாட்டுல தானே ? ஷக்தி வரபோறான் சோ எல்லாரும் அவனுக்கு பிடிச்ச மாதிரி மாறிடுங்கன்னு துபாய் மக்கள் சொன்னாங்களா ?" என்று கேலியாய் தொடங்கியவள் தனக்கு தோன்றிய கருத்தை முன்வைத்தாள் ..

" அவன் பேச்சு திறமை இல்லாமலா அத்தனை வருஷம் அங்க பேரு வாங்கிருப்பான் ?? உன் தம்பி ஒன்னும் பேச்சு திறமை இல்லாதவன் இல்ல , இடம் பொருள் ஏவல்  பார்த்து சிக்கனமா பேசுறான் அவ்வளவு தான் .. மத்தது எல்லாம்  உன் வீண் கவலை " என்றாள்  தேன்நிலா ..  அவளையே ஆர்வமாய் பார்த்தான் மதியழகன் ..

" என்ன லுக்கு விடுற ?"

" இல்ல பிரசவத்துல இருக்குற சிக்கலைத்தான் நீ சரி பண்ணுறன்னு பார்த்தா , சிந்தனைல சிக்கல் வந்தாலும் சரி பண்ணிடுறியே " என்றான் சிலிர்ப்புடன் ..

" அது பெண்களுக்குன்னு கடவுள் கொடுத்த வரம் டா ..அதுவும் நிலாவுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவே கொடுத்துருகார்  கடவுள் " என்று கண் சிமிட்டினாள் ..

" அதை மட்டுமா உனக்கு அதிகம் கொடுத்தாரு ..அழகும் தானே " என்று அவன் சன்னமாய் விசிலடிக்கவும்

" என்ன பண்ணுறது , அழகோடு அழகு சேர்ந்ததும் நானும் அழகாய் மாறிட்டேன் " என்றாள்  தேன்நிலா ..

சரியாய் அதே நேரம் வானொலியில் அந்த பாடல் வரிகள் ஒலிபரப்பாகியது ..

அழகாய் நானும் மாறுகிறேன்

அறிவாய் நானும் பேசுகிறேன்

சுகமாய் நானும் மலருகிறேன்

உனக்கேதும் தெரிகிறதா

ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிறாய்

என்ன விசித்திரமோ?

நண்பனே எனக்கு காதலன் ஆனால்

அதுதான் சரித்திரமோ....

அவனை பார்த்து கண்சிமிட்டிய படி பேசினாள்  நிலா ..

" உனக்கொரு விஷயம் தெரியுமா மது ? எனக்கு ப்ரண்ட்ஸ்  இருக்காங்க தான் .. ஆனா பெஸ்ட்டின்னு மார் தட்டிகிற மாதிரி நண்பர்கள் ரொம்ப குறைவு .. இருந்த ப்ரண்ட்ஸ் உம் கல்யாணம் குழந்தைன்னு செட்டல் ஆகிட்டாங்க .. நீ வந்தபிறகு , எனக்கு காதலன் மட்டும் இல்ல .. நல்ல நண்பனும் கிடைச்சிருக்கான் " என்றாள்  நிலா ..

அவளது விரல்களை சிறைபிடித்து ஒவ்வொரு விரலாய் இழுத்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.