(Reading time: 17 - 34 minutes)

"ப்ப தான்ம்மா வந்தேன்.. ஃபோன் சார்ஜ் பண்ணலாம்ன்னு ரூம்க்கு வந்தேன்..." என்று யுக்தாவை பார்த்துக் கொண்டே கூறினான்.

"என்னடா அப்படிப் பார்க்கற... நம்ம யுக்தா... புக்ஸ் எடுக்க இங்க வந்தா..."

"ஓ... ஹாய்... ஸாரி அம்மா நீங்க எல்லோரும்  இன்னிக்கு வர்றதா சொன்னாங்க... எனக்கு தான் வேலையிருந்துச்சு... உள்ள வந்தப்போ யாரும் இல்லை... அதான் கிளம்பியிருப்பீங்கன்னு நினைச்சேன்.."

"இருக்கட்டும் பிருத்வி.."

"பிருத்வி... சுஜாதாவும் மாதவனும் வேற ஒரு வேலையா போயிருக்காங்க... அதான் யுக்தா இங்க இருக்கா... அப்புறம் அப்பா கொண்டு போய் விடுவாரு..."

"ஓ..ஓ.."

"யுக்தா குக்கர் விசில் வந்து நிறுத்திட்டேன்... வா போய் திறந்து பார்க்கலாம்.."

"சரி அத்தை.." என்று கூறி பிருத்வியை பார்த்து ஒரு சிரிப்போடு வளர்மதியுடன் சென்றுவிட்டாள் யுக்தா.

அதன்பிறகு பிரணதி, செந்தில் வீட்டுக்கு வந்துவிட்டார்கள்... சாப்பிட அமரும் போது தான் பிருத்வி கீழே இறங்கி வந்தான்.

"அம்மா என்ன இன்னிக்கு யுக்தா இருக்காங்கன்னு ஸ்பெஷலா சமைச்சிருக்கீங்களா... வாசனை ஆளை தூக்குது..."

"பிரணதி... ஸ்பெஷல் தான் ஆனா யுக்தாவுக்காக சமைச்சதால இல்ல... யுக்தாவே சமைச்சதால..."

"மதி... என்ன யுக்தாவை போய் சமைக்க வச்சிருக்க..."

"என்ன மாமா... நான் இதெல்லாம் செய்யக் கூடாதா...??"

"அதில்லம்மா... எவ்வளவு வருஷம் கழிச்சு வீட்டுக்கு வந்திருக்க... வந்த முதல் நாளே உன்னை வேலை வாங்கியிருக்காளே...??"

"என்ன மாமா... நான் என்ன விருந்தாளியா..?? உங்களை எல்லாம் நான் எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா..?? நீங்க யாரோ மாதிரி பேசறீங்களே.."

"அப்படியில்லமா.." அதற்குள் எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

"யுக்தா... நீங்க நியூயார்க்ல இருந்து வந்திருக்கீங்களான்னு எனக்கு சந்தேகமா இருக்கு... உங்க ட்ரஸ்ஸிங் ஸ்டைல், இவ்வளவு டேஸ்டான சாப்பாடு, இதெல்லாம் பார்த்தா இந்த சென்னையிலேயே வேறொரு பக்கம் இருந்தீங்களோ..."

"ஏன் நியூயார்க்ல இருந்து வந்தா அப்படியெல்லாம் இருக்கக் கூடாதா..?? பிரணதி."

"அப்படியில்லம்மா... உண்மையிலேயே எங்களுக்கு ஆச்சர்யம் தான்... பிரணதி சொன்ன விஷயத்துக்காக மட்டுமில்ல... நீ எங்களையெல்லாம் மறக்காம இருக்கியே.. இவங்க ரெண்டுபேரும் பாரு... அதெல்லாம் சுத்தமா மறந்துட்டாங்க..."

வெளிப்படையா அவங்க பேசுவதை கேட்டு சிரித்துக் கொண்டிருந்தாலும்... ரெண்டுபேரும் சுத்தமா மறந்துட்டாங்க என்ற வார்த்தை அவளுக்கு வலியை ஏற்படுத்தியது. ஏற்கனவே வந்ததிலிருந்து பிருத்வி ஒரு வார்த்தை கூட பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்... இதில் இந்த வார்த்தை வேறு அவள் மனதை காயப்படுத்தியது.

"அப்பா... நான் ஒன்னும் அதெல்லாம் சுத்தமா மறக்கல..... எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் இருக்கு... யுக்தா அப்பா சொல்ற மாதிரியெல்லாம் இல்லை... நீ எதுவும் தப்பா எடுத்துக்காத..."

"இல்லை பிருத்வி...எல்லோரும் எல்லாத்தையும் ஞாபகம் வச்சிக்கனும்ன்னு அவசியமில்லையே.. இதுல என்ன தப்பா எடுத்துக்க இருக்கு..."

"அப்புறம் யுக்தா 2 மாசம் சென்னையில் இருக்கப் போற... என்ன பிளான்ம்மா வச்சிருக்க..."

"மாமா... விட்டா ரெண்டு மாசத்துக்கு அப்புறம் நீங்களே என்ன பேக் பண்னி நியூயார்க் அனுப்பிடுவீங்க போலிருக்கே... நான் இங்க இருக்கப் போறதா தான் மாமா பிளான்... அம்மாவும் அப்பாவும் மட்டும் தான் நியூயார்க் போவாங்க..."

"சேச்சேச்சே... நான் அந்த அர்த்தத்துல சொல்லலம்மா... ஊரை சுத்திப் பாக்கற பிளான் இல்லையான்னு கேட்டம்மா..."

"நானும் விளையாட்டுக்கு தான் மாமா சொன்னேன்... எங்க மாமா கவிக்கு லீவ் கிடைக்கல... ஈவ்னிங் தான் சும்மா ஷாப்பிங், கோவில் அப்படி ஏதாவது போலாம்னு பிளான் இருக்கு...

நெக்ஸ்ட் வீக் மேரேஜ்க்கு போகும் போது... 1வீக் அங்க இருக்கலாம்ன்னு பிளான்... அதுக்கப்புறம் சேட்டர்டே சண்டே லீவ்ல தான் ஏதாவது பிளான் பண்ணனும்... மத்த நாளெல்லாம் கவியில்லாம போர் தான்..."

"ஏம்மா போர் அடிச்சிகிட்டு இருக்கனும்... இங்க பிரணதிக்கு செமஸ்டர் லீவ் தான்... காலையில கம்ப்யூட்டர் கிளாஸ் போயிட்டு வந்தா மத்த டைம் அவ ஃப்ரீ தான்... அவ உனக்கு கம்பெனி குடுப்பாமா... நீ இங்க வந்து அவக்கூட டே டைம்ல இரேன்..."

"ஆமாம் யுக்தா... எனக்கும் காலேஜ் இல்லாம போர் அடிக்குது.... நீங்க வந்தீங்கன்னா எனக்கும் டைம் பாஸாகும்..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.