(Reading time: 17 - 34 minutes)

"ன்னால அடிக்கடி வரமுடியுமான்னு தெரியல... முடிஞ்சா வரேன் பிரணதி"

"என்னம்மா யுக்தா... நாங்க யாரோ மாதிரி பேசறோம்ன்னு சொல்லிட்டு நீதான் இப்போ இங்க வர தயங்குற..."

"யுக்தா மாமா சொல்ற மாதிரி தான் நினைக்கிறியா..."

"அப்படி இல்ல அத்தை... அங்க சாவிம்மா கூடவும் டைம் ஸ்பெண்ட் பண்ணனும் இல்ல... முடிஞ்சவரைக்கும் வரேன்.."

சாப்பிட்டு முடிக்கும் வேளையில் சுஜாதாவும் அங்கு வந்து சேர்ந்தாள்.

"என்ன சுஜா... அதுக்குள்ள வந்துட்டீங்க..."

"அவரு வரல மதி... நான் மட்டும் தான் வந்தேன்... அவங்க ஒரே ஆபிஸ் விஷயமா பேசிகிட்டு இருந்தாங்க... அதான் நான் யுக்தாவை சாக்கு சொல்லி கிளம்பிட்டேன்...."

"சுஜா... தோ பிருத்வி வந்துட்டான் பாரு..."

"பிருத்வி... எப்படிப்பா இருக்க...."

"நான் நல்லா இருக்கேன் அத்தை... நீங்க மாமா நல்லா இருக்கீங்களா..." என்று விசாரித்து அவள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டான்.

அதான் பிருத்வி... பெத்தவங்க சொல்லி கொடுக்கனும்ன்னு இல்ல... அவனே பெரியவங்களுக்கு உரிய மரியாதையை கொடுத்துவிடுவான்... இன்றைக்கே சுஜாதா பிருத்வியை பார்த்ததில் வளர்மதிக்கு சந்தோஷம்.... பிறகு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு சுஜாதாவும் யுக்தாவும் அங்கிருந்து புறப்பட்டார்கள்.

வீட்டிற்குள் வந்ததும் அவள் அறைக்கு வந்துவிட்டாள் யுக்தா... கவி இன்னும் அலுவலகத்திலிருந்து வரவில்லை... அதுவும் நல்லதுதான்... எப்படியாவது இவளின் வாடிய முகத்தை கண்டுபிடித்து விடுவாள்... சிறிது நேரம் தனிமையில் இருப்பது தான் இப்போது தேவை என்று தோன்றுகிறது இவளுக்கு...

பிருத்வியை பார்த்தது ஒருபுறம் சந்தோஷம் என்றால்... அவனின் ஒதுக்கம் அதைவிட வருத்தத்தை தான் கொடுக்கிறது.... இவளைப் போல அவனும் இவளையே நினைத்துக் கொண்டிருப்பான்... என்று இவள் உறுதியாக நினைத்திருந்தாள்..

ஆனால் இன்று அந்த உறுதி உடைந்துவிட்டது.... அவன் எனக்கு கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் இருக்கிறது என்று சொன்னதில் இவளால் சந்தோஷப் பட முடியவில்லை... அவளை ஞாபகம் இருக்கிறது... ஆனால் அவளுடன் இருந்த நட்பு ஞாபகம் இல்லையா...?? என்று மனது கேள்வி கேட்டது...

அதற்கு பதிலும் அதுவே சொன்னது... நீ கவி, பிருத்வி மட்டும் போதும் என்று நினைத்து அப்படியே அவர்களை மறக்காமல் இருக்கிறாய்... பிருத்வியும் அப்படியே இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகம் தானே...

ஒருவேளை உன்னை ஞாபகம் இருந்தாலும்... ஒரு பெண்ணோடு இயல்பாக பேச தயங்கலாமே...?? அதை ஏன் ஒதுக்கம் என்று நினைக்கிறாய் என்று மனது ஆறுதல் தேடிக் கொண்டது...

எப்படி இருந்தாலும் இவளுக்கு பிருத்வியின் மேல் இருக்கும் காதல் அவனை இவளிடம் சேர்க்கும் என்ற ஒரு நம்பிக்கை அவளுக்குள் இருக்கிறது.

பிருத்வியை பார்க்கும் சந்தர்ப்பமாவது இப்போது இவளுக்கு கிடைத்திருக்கிறதே... பிரணதியும் மாமாவும் அழைத்தது போல் பிரணதியை பார்க்கும் சாக்கில் பிருத்வியை பார்ப்பதற்கே இவள் அங்கு போக வேண்டும் என்று மனதில் நினைத்தாள்.

ளர்மதி ஏதோ யோசனையோடு அமர்ந்திருந்தாள்... செந்தில் அவள் யோசனையை கலைத்து என்ன என்று கேட்டார்... அதற்கு வளர்மதி அவள் மனதில் நினைத்துக் கொண்டிருந்த அந்த கேள்வியை கேட்டாள்...

"என்னங்க யுக்தாவை ஏன் அடிக்கடி வீட்டுக்கு வான்னு சொன்னீங்க...??"

"இன்னிக்கு யுக்தாவை தனியா வீட்டுக்கு அனுப்பனும்னு சுஜாதா சொன்னப்ப நீ ஏன் வேண்டாம்ன்னு சொல்லி அவளை இங்க இருக்க வச்ச..."

"என்னங்க... என்ன இருந்தாலும் காலம் கெட்டு கிடக்கு ஏன் தனியா அனுப்பனும்... நம்ம ஒன்னும் யாரோ இல்லையே... அதான் இங்க இருக்கட்டும்ன்னு சொன்னேன்..."

"நானும் அந்த எண்ணத்துல தான் சொன்னேன்... பார்த்தியா அந்த பொண்ணு நம்மல மறக்காம இருக்கு... கவியில்லாம போர் அடிக்கும்ன்னு சொல்லுது... அதான் பிரணதி கூட கொஞ்சம் நேரம் இருக்கட்டுமேன்னு அப்படி சொன்னேன்... ஏன் அது தப்பா..??"

"இல்லைங்க... சுஜாதா அதை தப்பா அர்த்தம் பண்ணிக்க கூடாதில்ல... யுக்தாவை இந்த வீட்டு மருமகளா ஆக்க தான் இப்படி செய்யறோமுன்னு... அதாங்க அப்படி கேட்டேன்.."

"நீ ஏன் அதையே நினைச்சு பயந்துக்கிட்டு இருக்க... நல்லதா யோசியேன்... பிரணதி மூலமா யுக்தாவுக்கு பிருத்வி லவ் பத்தி தெரிய வரலாம்... சுஜாதா கோபப்பட்டா கூட யுக்தா எடுத்து சொல்லுவால்ல.. நீ எதுவும் நினைச்சு கவலைப்படாத.." என்று வளர்மதியை ஆறுதல் படுத்தினார்.

யுக்தாவின் காதல் பிருத்வியை அவளிடம் சேர்க்கும் என்று யுக்தா நினைக்கிறாள், யுக்தாவிற்கு பிருத்வியின் காதல் பற்றி தெரிய வந்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று செந்தில் நினைக்கிறார்.

ஆனால் "தான் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்" என்று சொல்வார்கள்.

இந்த விஷயத்தில் தெய்வம் என்ன நினைக்கிறது என்பதை யாரால் அறிய முடியும்..

கடவுள் அமைத்து வைத்த மேடை

இணைக்கும் கல்யாண மாலை

இன்னார்க்கு இன்னாரென்று

எழுதி வைத்தானே தேவன் அன்று.

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:933}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.