(Reading time: 7 - 13 minutes)

05. நீங்களும் துப்பறியலாம் - தேன்மொழி

ஹாய் மக்களே! இது ஒரு திடீர் மினி-துப்பறியும் தொடர்!

வெளியாகும் ஒவ்வொரு சின்னஞ்சிறு கதையிலும் இன்ஸ்பெக்டர் குற்றவாளி என ஒருவரை கண்டுபிடிப்பார். அது சரியா, சரியென்றால் எப்படி கண்டுபிடித்தார் என்று நீங்கள் தான் துப்பறிந்து சொல்ல வேண்டும். தவறாக இருந்தால் உங்கள் கண்ணுக்கு குற்றவாளியாக யார் தெரிகிறார் என்றும் சொல்லலாம்.

சரியாக சொல்பவர்களுக்கு கை தட்டல் உண்டு.

அடுத்த வியாழன், பதிலை நான் பதிவு செய்வேன்.

என்ன துப்பறிய நீங்க தயாரா??? வாங்க வாங்க...

யார் குற்றவாளி??

சார், நைட் ஒரு மர்டர் நடந்திருக்கு”

Detective

பைக்கில் போலீஸ் ஸ்டேஷன் நோக்கி சென்றுக் கொண்டிருந்த தேன், அபினவ் மொபைலில் சொன்ன விஷயத்தைக் கேட்டு, பைக்கை ஓரமாக நிறுத்தினான்.

“மர்டரா? எங்கே? யாரு?”

“கொலை செய்யப் பட்டிருக்கிறது ஒரு வயசானவர் சார். பேரு கதிரவன். வயசு அறுபதுக்கு மேல இருக்கும். இங்கே அவருக்கு பெரிய பங்களா இருக்கு. நைட்டுல கொலை நடந்திருக்கு. காலையிலே அவரரோட மேனேஜர் வந்து பாடியை பார்த்து போலீஸ்க்கு போன் செய்திருக்கார்.”

“ஓஹோ! யாராவது சஸ்பெக்ட்ஸ் இருக்காங்களா?”

“சஸ்பெக்ட்ன்னு சொல்ல முடியாது சார். ஆனால் இந்த பங்களாவில நேத்து கதிரவன் தவிர மூணு பேரு இருந்திருக்காங்க. அவரோட வைப், பானு, மகள் சுமா, அப்புறம் அவரோட பிரெண்ட் குஹன். வீட்டுல இருபத்தி நாலு மணி நேரமும் ஆன்ல இருக்க செக்யூரிட்டி கேமரா இருக்கு. ஒரு வாட்ச்மேன் வேற இருக்கார். வெளியில இருந்து யாரும் வந்த மாதிரி தெரியலை”

“ஓகே அபினவ், நான் ஸ்பாட்டுக்கு வரேன். வந்தப்புறம் மூணு போரையும் விசாரிக்கலாம். நீங்க மத்த பார்மாலிட்டீஸ் கவனிங்க.”

“ஓகே சார்”

சார் இவங்க தான் மிஸர்ஸ் கதிரவன்”

உள்ளே வந்த பெண்மணி தேன் எதிர்பார்த்திருந்ததற்கு மாறாக பின் முப்பதுகளில் இருந்தாள்.

“என்ன இன்ஸ்பெக்டர் என்னை பார்த்து ஷாக் ஆகிட்டீங்க? நான் அவரோட இரண்டாவது மனைவி”

தேன் அமைதியாக அவளை பார்த்தான்.

“என்னடா இவ அழாமல் அமைதியா இருக்காளேன்னு பார்க்குறீங்களா? அந்த கிழம் எப்போ போகும்னு தான் காத்துட்டு இருந்தேன். அப்போ நான் தான் கத்தியால குத்தினேன்னு நினைக்குறீங்களா. அதெல்லாம் இல்லை. அப்புறம் எனக்கு மீதி இருக்க வயசும் ஜெயிலிலேயே போயிடுமே”

“உங்களுக்கு யார் மேலேயாவது சந்தேகம் இருக்கா?”

“சந்தேகத்துக்கு என்ன குறைச்சல் சார். சுமா ஒரு பையனை லவ் செய்தாள். அவ அப்பா பண பலத்தை வச்சு அவனை மிரட்டி துரத்திட்டார்.”

“இது எப்போ நடந்தது?”

“ஒரு வருஷம் இருக்கும்”

“சரி! வேற யார் மேலாவது சந்தேகம் இருக்கா?”

“இந்த குஹன் பத்தி எனக்கு தெரியாது. எனக்கு கல்யாணம் ஆன போது இவர் இந்த மதியூர் பங்களாவில இருந்தார். ஆனால் பதினஞ்சு இருப்பது வருஷத்துக்கு முன்னாடி இவர் திருச்சில இருந்தபோ அவரை ஏமாத்திட்டாருன்னு அந்த ஆள் நைட் வந்த உடனே ஒரே கத்தல். இவ்வளவு வருஷம் கழிச்சு இப்போ தான் எப்படியோ அட்ரஸ் கண்டுபிடிச்சு வந்தாராம்.”

“நைட் தான் வந்தாரா அவர்?”

“ஆமாம். யாரும் கூப்பிடாமலே வந்துட்டு அடிப்பேன் அப்படி இப்படின்னு ஒரே கூச்சல். இவர் இது போல நிறைய பேரை ஏமாத்தி இருக்கார் அதனால எங்களுக்கு இது புதுசில்லை. ஆனால் அப்படி கத்தின ஒருத்தரை நைட் தங்கிட்டு போக சொன்னது தான் ஆச்சர்யம்”

“ஐ சீ”

“அப்புறம் குஹன் கெஸ்ட் ரூம்ல தூங்க போனார். சுமா அவ ரூமுக்கு போனாள். நான் கொஞ்சம் நேரம் அவருக்கு இந்த ரூம்ல கணக்கு எல்லாம் பார்க்க உதவிட்டு போனேன்.”

“கணக்கா?”

“ஆமாம். அந்த மேனேஜர் ஒரு ரூபாய் சுருட்டிடுவான்னு இவருக்கு பயம். ஏமாற்று பேர்வழி மட்டுமில்லை, சரியான கஞ்சப்பிசினாரி. வயசானவர்னாலும் பணக்காரர்ன்னு கல்யாணம் செய்துகிட்டா, பணத்தை கண்ணிலேயே காட்டாமல் பெட்டியிலேயே வச்சிருக்க கஞ்சப்பிசினாரி. ஆனாலும் காலையிலே இந்த ரூம்ல இப்படி பார்ப்பேன்னு கனவுலேயும் நினைக்கலை. இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தா அவரை காப்பாத்தி இருந்திருப்பேன்.”

பானு பேசிக் கொண்டிருந்தபோது, அங்கே மேஜை மீதிருந்த ஒரு பேப்பர் வெயிட்டை கையில் எடுத்து வைத்துக் கொண்டான் தேன்.

“இந்த ரூமுல உங்களுக்கு வித்தியாசமா ஏதாவது தெரியுதா?”

“இல்லையே எல்லாம் அப்படியே தான் இருக்கு.” என்றபடி கண்களால் அறையை சுற்றி பார்த்தவள்,

“இந்த டேபிள்ல ஒரு பேப்பர் வெயிட்டும், அவரோட முதல் மனைவியும்,  சின்ன குழந்தையா இருக்க சுமாவும் இருக்கும் போட்டோவும் இருக்கும். இப்போ காணும்” என்றாள் பரபரப்புடன்.

இவள் மிகவும் கூர்மையானவள் என மனதினுள் கணித்த தேன், அவளை அனுப்பி வைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.