(Reading time: 17 - 34 minutes)

"நான் தனியா போகறதில எனக்கு பயம் இல்ல அத்தை... ஆனால் நீங்க என்னோட நல்லதுக்கு தானே சொல்றீங்க... அதனால நான் இங்கேயே இருக்கேன்... அப்புறம் மாமா கூட போகிறேன்..."

அவள் சொன்னப் பிறகு சுஜாதாவும் மாதவனும்... அதற்கு ஒப்புக் கொண்டு அவளை அங்கு விட்டுவிட்டு சென்று விட்டார்கள்... சிறிது நேரத்தில் பிரணதியும் கம்ப்யூட்டர் கிளாஸுக்கு கிளம்ப... செந்திலும் சிறிது வேலை இருப்பதாக கிளம்ப... தனியாக இருந்தாள் யுக்தா.

வளர்மதி மதிய சாப்பாடு தயார் செய்ய சமையலறைக்கு செல்ல... யுக்தாவும் அவளுக்கு உதவினாள்.

"என்னம்மா யுக்தா... வேண்டான்னு சொல்ல சொல்ல... நீயே முக்காவாசி சமையலை முடிச்சிட்ட... எனக்கு எவ்வளவு சங்கடமா இருக்கு தெரியுமா...???"

"இருக்கட்டும் அத்தை... அப்பா அம்மா வர லேட் ஆகறப்ப நான் சமைச்சிருக்கேன் அத்தை... எனக்கு உங்களுக்கு ஹெல்ப் பண்றதுல சந்தோஷம் தான் அத்தை.."

"பரவாயில்லை யுக்தா... நியூயார்க்ல இருந்தாலும் நம்ம சமையல் எல்லாம் கத்து வச்சிருக்க... இருந்தாலும் ரொம்ப நேரம் சமையலறையில் இருந்ததால வேர்த்து போகுது பாரு... நீ போய் டிவி பாரு..."

"இல்ல அத்தை... டிவி நான் அவ்வளவா பார்க்க மாட்டேன்... பரவாயில்லை நான் இங்கேயே இருக்கேன்..."

"என்னம்மா... விஜிடபிள் பிரியாணி ரெடியாக இன்னும் 15 நிமிஷம் ஆகும்... பேசாம பிரணதி ரூம்ல கம்ப்யூட்டர் இருக்கும் கொஞ்ச நேரம் நோண்டிக்கிட்டு இரு..."

"இல்லை அத்தை... அது அவளோட பர்சனல் கம்ப்யூட்டர் நான் அதை யூஸ் பண்ணா நல்லா இருக்காது... வீட்ல புக்ஸ் எதாவது இருக்கா அத்தை.."

"ஆ..ஆ.. பிருத்வி ரூம்ல புக்ஸ் வச்சிருப்பான்.. நீ போய் பாரேன்.."

"பரவாயில்லை அத்தை..."

"ஏம்மா தயங்குற... பிருத்வி ஒன்னும் சொல்ல மாட்டான்...நீ போய் எடுத்துக்கம்மா..."

"இல்ல அத்தை பிரியாணி ரெடியானதும் எப்படி வந்துருக்குன்னு பார்க்கனும்... இந்த கொஞ்ச நேரத்துல நான் என்ன புக் படிக்க முடியும்..."

"நீ சும்மா போய் பார்த்துக்கிட்டு இரு... நான் ரெடியானதும் கூப்பிடுறேன்.." என்று அவளை அனுப்பிவைத்தாள் வளர்மதி.

பிருத்வியை பார்க்க முடியவில்லை என்றாலும்... அவன் அறையை பார்க்கும் வாய்ப்பாவது கிடைத்ததே என்ற ஒரு அல்ப சந்தோஷம் யுக்தாவிற்கு... அவன் அறைக்குள் சென்றாள்... அவனது அறை சுத்தமாக இருந்தது... எல்லாம் அந்தந்த இடத்தில் இருந்தது... இது அவன் வேலையா... இல்லை அவன் அன்னை வேலையா... என்று தெரியவில்லை.."

செல்ஃபில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்படிருந்தது... நடுவில் அவனது போட்டோ இருந்தது.... அதை சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்... பிறகு புத்தக்கங்களை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்...

தமிழ் புத்தகங்கள் தனியாக... ஆங்கில புத்தகங்கள் தனியாக என்று அடுக்கி வைக்கப்பட்டிருந்தது... ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்...

தே நேரம் வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு... வீட்டிற்குள் வந்தான் பிருத்வி... ஹாலில் யாரும் இல்லாததால் நேராக அவன் அறைக்குச் சென்றான்...

அவனது அறையில் ஒரு பெண் நிற்பதை பார்த்து வியந்தான்....

அதே நேரம் அரவம் கேட்டு திரும்பிய யுக்தாவிற்கு ஆச்சர்யம்... எதிரில் நின்றிருப்பது பிருத்வியா... இல்லை அவனது அறையில் இருப்பதால் அவன் இருப்பது போல் பிரமையா..?? அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்... அவனும் தான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

ஆனால் உடலில் ஏற்பட்ட படபடப்பு அவன் நிஜமாகவே இருப்பதாக தான் தோன்றியது... பனிரெண்டு வருடங்களுக்கு பிறகு பார்க்கிறாள்... இப்போது என்ன செய்வது... கவியை பார்த்த பின் ஓடிப்போய் கட்டிக் கொண்டாளே அதுபோலவா செய்ய முடியும்... அதற்கு அவள் பெண்மை தடுக்கிறதே... இல்லை மதி அத்தை ஓடிவந்து அம்மாவின் கையை பிடித்துக் கொண்டார்களே... அதுபோல் செய்யவா... அவனை பார்த்ததில் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை..

ஆனால் அவன் அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறான்... அவனது பார்வைக்கு அவளுக்கு அர்த்தம் புரியவில்லை... யாரோ தெரியாதவர்களை பார்ப்பது போல் இருக்கிறதா... இல்லை தெரிந்து தான் இவளை போலவே எப்படி அவளிடம் பேசுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறானோ..??

இப்படியே... இவர்கள் நின்று கொண்டிருந்த போது... " யுக்தா என்னம்மா ஏதாவது புக் நீ படிக்கிற மாதிரி இருக்கா.." என்று கூறிக் கொண்டே அந்த அறைக்கு வந்தாள் வளர்மதி... உடனே அங்கே பிருத்வியை பார்த்த அவள்.. "பிருத்வி நீ எப்படா வந்த.." என்ற கேள்வியோடு பேச்சை ஆரம்பித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.