எல்லோரும் முடிய…”இப்ப உங்க ஃப்ரெண்ட் கூட” யாரோ சொல்றது இவளுக்கு புரியும் முன்…. இவள் கையிலிருந்த மொபைல் எங்கு போனதென்று புரியவில்லை…யார் இவள் கை பிடித்தார் என அறியவில்லை…..இவளை இழுத்து அவன் அருகில் நிறுத்தி இருந்தனர்.
இவள் முழித்த முழியிலேயே மித்ரன் சொல்லிவிட்டான்…. “ஜஸ்ட் ரெண்டே ஸ்டெப்…உனக்கு என்ன தெரியுமோ அது…… பட் எல்லோரும் ஆடி இருக்காங்க பாரு…”
“இல்ல மித்ரன்….கண்டிப்பா முடியாது…” இவள் அவன் விழி பார்த்து மறுத்ததுதான் இவளுக்குப் புரிந்தது. இவள் கையைப் பற்றியவன் அங்கிருந்த இசைக்கு எப்படி அவளை என்ன செய்தான் என அவளுக்கு புரியவில்லை…
சில நிமிடங்கள்….தான் ஆடுகிறோம் என்பது மட்டும் தான் அவளுக்கு புரிந்தது. மாறி மாறி இவளது ஒவ்வொரு கையும் அவன் கைக்குள் போய் வருவதை உணர முடிந்தது. அடுத்து இவள் மொபைலில் பார்க்கும் போதுதான் அது எத்தனை அழகாய் இருந்திருக்கிறது எனவுமே அவளுக்கு தெரிகிறது. அவன் இரு கரங்களால் காற்றை ஆட்டுவிப்பது போல் ஆட்டுவித்திருந்தான் அவன் இவளை….
எல்லோரும் கிளம்பிப் போக…..
“மனு கொஞ்சம் தள்ளிக்கோ…..தப்பா எடுத்துக்காத….இவ்ளவு நேரம் ஆடி இருக்கேன்ல ஸ்வெட் ஆகுது….” என்றபடி அவள் அருகிலிருந்த ஃபேன் அருகில் போய் நின்றான் மித்ரன்….ஏசியை தாண்டி வேர்த்திருந்தது அவனுக்கு.
இவள் அந்த நீள ஹாலில் மித்ரன் நின்றிருந்த திசைக்கு எதிர் திசை நோக்கி நடக்க தொடங்கி இருந்தாள். “சென்னை க்ளைமேட்டுக்கு நான் இன்னும் அடாப்ட் ஆகலை….” சொல்லிக் கொண்டே மித்ரன் தன் ஷர்டின் மேல் பட்டனை கழற்றி விட்டுக் கொள்ள முயன்ற நேரம்….
மீண்டும் அந்த சஅன்டி உள்ளே வந்தவன்….சட்டென ப்ளெஷ்ஷான விதத்தில் தான் மனோஹரி அந்த சஅண்டியின் பார்வையை பின் பற்றி பின்னிருந்த மித்ரனைப் பார்த்தாள்.
மித்ரன் ஷர்ட் பட்டனை கழற்றியதையும், இவர்கள் இருவரும் மட்டுமாய் தனியாய் இருப்பதையும் என்னமாய் புரிந்தானோ அவன்…. ஆனால் தப்பாக நினைக்கிறான் என மட்டும் இவளுக்கு தெளிவாக புரிந்தது. சூடு ஏறியது முகத்தில் அவளுக்கு….
ஆனால் யாரிடம் என்ன விளக்கம் சொல்ல? இதற்குள் இன்னொரு கூட்டம்….
“மித்ரன் நான் வெளிய வெயிட் பண்றேன்….. நீங்க அரேஞ்ச் செய்த செக்யூரிட்டிய வர சொல்லுங்க” என அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக சொல்லிவிட்டு வெளியே வந்து அங்கிருந்த வெயிட்டிங் லாஞ்சில் உட்கார்ந்துவிட்டாள்.
இன்னும் மனம் சமனப் படவில்லை…. நடந்த ஒவ்வொன்றாய் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது இவளுக்கு…. அவளுக்கான செக்யூரிட்டி கார்டும் அங்கு தான் இருந்தார்.
அந்நேரம் ஒருவர் வந்து “மேம் இது மித்ரன் சார்க்கான ஃபைல்…ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டேன்….சாரை பார்க்க முடியலை…நீங்க அவர்ட்ட கொடுத்திடுங்க” என கொடுத்துவிட்டுப் போனார்.
கேஷுவலாய் அந்த ஃபைல் முகப்பைப் பார்த்தாள் இவள். மதிபா டிவோர்ஸ் என அந்த ஃபைல் அடையாளப். படுத்தப் பட்டிருந்தது.
அந்த ஃபோன் கால் இந்த கேஸ் விஷயமாத்தான் இருக்கனும்… நினைத்தபடி மெல்ல திறந்து பார்த்தாள் அவள்.
கண்ணில் பட்டது வெட்டிங் சர்டிஃபிகேட்…. கணவன் மித்ரன், மனைவி மகிபா என்றது அது. அடுத்தும் மித்ரனுக்கும் அந்த மகிபாவிற்குமான திருமணத்திற்கான சான்றுகள் கண்ணில் பட்டன….
தொடரும்!
{kunena_discuss:928}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.