(Reading time: 16 - 32 minutes)

காலையில் எழுந்தவுடன் மனோவுக்குள் ஒரே பரபரப்பு…..நேற்று இரவு வரை இது இப்படியாய் தோன்றவில்லை… ஆனால் இப்பொழுது இது என்ன? அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தாண்டி…ஐயோ அவனைப் பார்க்க வேண்டுமே என்ற படபடப்புக்கு வந்திருந்தது முழு மனமும் மொத்த சரீரமும்…

வழக்கமாக சல்வார், ஜீன்ஸ் குர்தி அல்லது ஃபுல் ஸ்கர்ட் டாப்ஸ் இதுதான் அவளது ட்ரெஸ் கோட்….இன்னைக்கு என்ன போடனும்? எல்லவற்றிலும் ஒன்றை மாற்றி ஒன்றை போட்டுப் பார்த்து ஒன்றும் சரியாய் படாமல்…. அவன் என்ன ட்ரெஸ்ல வருவான் என யோசித்து அவளோட ஃபேவ் ப்ளாக் ஷர்டில் அவனை நினைத்துப் பார்த்து…… அந்த pear க்ரீன் ஷர்ட்ம் நல்லா இருந்துச்சே என அங்கே தாவி…..  ஃப்ரென்ட் ப்ளகெட் ல மட்டும் குட்டியா த்ரெட் வொர்க் டிசைன் செய்திருந்த  அந்த வைட் ஷார்ட் ரொம்ப பெர்ஃபெக்டா இருந்துது அவனுக்கு என இவள் மனம் ஓடிக் கொண்டிருக்கும் போது….

“அவர்தான் இப்போதைக்கு சி இ ஓன்னதும்  எப்ப வேணாலும் ஆஃபீஸ் போய்க்கிடலாம்னு பார்த்துட்டா போல உங்க பொண்னு….அம்மா சொல்லி வைங்க….. “ எட்டி பார்த்த அகதன் சொல்வது கேட்கவும் தான் டைமையும் தான் உட்கார்ந்திருக்கும் கோலத்தையும் கவனித்தாள் மனோஹரி…

வழக்கமாக இந்நேரம் கிளம்பி வீட்டு வாசல் படி இறங்கி இருப்பாள்….. இன்று ???? அடுத்த ஐந்தாவது நிமிடம் கையில் கிடைத்த …நெக்லைனை சுற்றி  ஆரஞ்சு  வர்ண நெட்டட் ரோஜாக்கள் பூத்திருந்த  ஒரு வைட் சல்வாரில் இவள் கிளம்பி வெளியில் வர ….. வாசலில் காத்திருந்தது ஆஃபீஸ் கேப்….

இது ஓவர் சீனா இருக்காது? ஆனாலும் இவளுக்காக வந்து காத்திருக்கும் ட்ரைவரிடம் மாட்டேன் என எப்படி சொல்லி அனுப்ப? அது சரி வராதே…. இப்பொழுது போய்க் கொள்ளலாம்….அனால் நாளைல இருந்து முடியாதுன்னு சொல்லிடனும்….

‘ம்….சொல்லுவ….அப்ப நானே வரேன் பிக் அப் பண்ணனு சொல்வான்…..இன்னும் சீனா இருக்கும்…’ இடித்தது மனசாட்சி…. ‘அவன் எதுக்காக இப்ப மேரேஜ் கேட்கிறான்னு நினைக்கிற?’

யோசித்தபடியே அவள் ஆஃபீஸை சென்றடைந்தாள்.

இருந்த தட தடப்பை தாண்டி மனதிற்குள் ஒரு சிந்தனை…… மித்ரன் ஏன் மேரேஜை இவ்ளவு ரஷ் அப் பண்றான்?

அவள் காரைவிட்டு இறங்கி தன் ட்ரெய்னிங் ரூமை நோக்கிச் செல்லும் போது அவள் மொபைல் சிணுங்குகிறது.  அவன் தான்.

மீண்டும் பரவசம் தொற்றிக் கொண்டது இவளுள். இணைப்பை ஏற்றாள்…  இவள் எதுவும் சொல்லும் முன் “மனு” என்றான் அவன்.

 நிச்சயம் அவன் அழைக்கும் தொனி மாறி இருக்கிறது…. இன்னும் மென்மையாய், ஏற்ற அளவு உரிமை கலந்து….இவளுக்கு தான் பெண் கேட்ட விஷயம் தெரியும் என்பதை அவன் ஊகித்திருக்க வேண்டும்…. இவள் சம்மதத்தையும் தான்….

ஆயிரம் ஆண் தென்றல் அவளுள் அவளுக்காய் அவன் வாசம் சுமந்து….  “நேர என் கேபினுக்கு வந்துடேன்…ப்ளீஸ்…” அவன் தான்.

“ம்” ஒற்றை வார்த்தையில் சம்மதித்தாள்.

நிறைய பேச வேண்டி இருக்கிறது இவளுக்கு….. நேரில் சொல்லிக் கொள்ளலாம்….அதை சொல்லும் போது இப்படி ஆஃபீஸ்ல நுழையவும்  உங்களைப் பார்க்க வான்னு சொல்லாதீங்கன்னும் சொல்லனும்….

“ஸ்டெப்ஸ் வழியா வராத மனு…. லிஃப்ட்லயே வா…. கூட உனக்கு வந்த கேப் ட்ரைவர் வருவார்….”  திரும்பிப் பார்த்தாள். லிஃப்ட் வாசலில் அந்த வெல் பில்ட் கேப் ட்ரைவர்…. ஓ இவளுக்கென பெர்சனல் செக்யூரிட்டி ஏற்பாடு செய்திருக்கிறான்…. இதெல்லாம்…..

“வர்றேன் மித்ரன்…” லிஃப்டை நோக்கி திரும்பியவளுக்கு தனக்காய் திரவியா காத்திருப்பாள் என ஞாபகம் வர மீண்டுமாய் ட்ரெய்னிங் ரூமைப் பார்த்து சென்றாள்.

இவளை தொடர முனைந்தார் கேப் ட்ரைவர் @ பெர்சனல் செக்யூரிடி.

“இல்லை நீங்க இங்க வெயிட் பண்ணுங்க….. ஜஸ்ட் அந்த ஹால் தான்…ரெண்டு நிமிஷத்துல வந்திடுவேன்….”. திறந்திருந்த ட்ரெய்னிங் ஹாலை காண்பித்தாள்.

உள்ளே சென்றாள். திரவியா அங்கு இல்லை…… நேத்து இவள் பாதியில் கிளம்பிவிட்டாள்…..அந்த கிட் நாப் ட்ராமாலாம் யாருக்கும் தெரியாது…திரவியாவுக்குமே தான்…..நேத்து போன நேரத்துல இருந்து இவள் திரவியாட்ட பேசலை….ஒரு வார்த்தை வந்துட்டேன்னு சொல்லிட்டுப் போய்டலாம்….. இப்பொழுது தனக்கு அண்ணியாக வரப் போகிற தோழியை மொபைலில் அழைத்தபடி ஹாலைவிட்டு வெளியே வர எண்ணியவளுக்கு, அந்த ஹாலின் பக்கவாட்டு காரிடாரில் இருக்கும் காஃபி மெஷின் ஞாபகம் வந்தது. ஒரு வேளை திரவியா அங்கு போயிருக்கலாம்…. மெல்ல காரிடாரை எட்டிப் பார்த்தாள். யாரும் இல்லை.

இவள் திரும்பி ட்ரெய்னிங் ஹாலுக்குள் வரப் போகும் நேரம் மித்ரனின் குரல் எங்கிருந்தோ கேட்கிறது. இவளை அவன் கேபின் இருக்கும் ஃப்ளோருக்கு வர சொல்லிவிட்டு இங்கு என்ன செய்கிறான்?

 அவனது அமெரிக்கன் english. அவன் குரல் கேட்கும் ஆசையில் அது வந்த திசை நோக்கி காரிடாரிலிருந்து எட்டிப் பார்த்தாள். இந்த பில்டிங்கிற்கு வெளியில் நின்று கொண்டிருந்தான் அவன். அவளுக்குப் பிடித்த அந்த ப்ளாக் ஷர்ட்…. ஸ்லாண்டிங் வைட் ஸ்ட்ரைப்ஸ்…. வாவ்…இவள் வைட் சல்வார்…அவன் ப்ளாக்…..& ப்ளாக்…. இவள் தங்களை தானே மானசீகமாக ரசிக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.