(Reading time: 15 - 30 minutes)

வர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே, வினிதா எழுந்து வீட்டுக்கு வெளியே செல்பதை கேள்வியுடன் பார்த்தனர் மூவரும்.

"வினிதா எங்க போற நீ?" வாசலுக்கு விரைந்து வந்து வினவினான் அமுதன்..

"வீடுக்கு போறேன் அண்ணா... குளிக்கணும்"

"சரி உங்களுக்கு வேண்டியதை எடுத்திட்டு இங்க வந்துருங்க"

"சரி"

ருவரும் குளித்து உணவு உண்ணும் வரை, அமுதன் அமைதியாக இருந்தான். அன்றொரு நாள் அவன் பார்த்த உருவத்திற்கும் , இதற்கும் ஏதும் சம்பந்தம் இருக்குமா? ஆனால் பக்கத்து வீட்டில் பேய் இருக்கிறது என்று இவர்கள் சொல்வதை எப்படி நம்புவது?

"என்ன அண்ணா ரொம்ப பெரிய யோசனையில் இருக்கீங்க"

"நீங்க இருக்கும் வீட்டுல பேய் இருக்குன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?" மனதில் இருந்த கேள்வியை அப்படியே கேட்டுவிட்டான் அமுதன். வினிதா அந்த வீட்டில் நடக்கும் வித்தியாசமான நிகழ்வுகளையும் நேற்று இரவு சுந்தரம் தாத்தா அவர்களிடம் சொன்ன அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

" அக்கா எனக்கு தூக்கம் வருது, நான் அங்க வீட்டுக்கு போறேன்.. எனக்கு அங்கதான் வசதி அக்கா.. ப்ளிஸ்கா... ஏதும்ன்னா நான் இங்க வந்துடுறேன்" அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் நடந்து சென்றாள்  வினிதா..

அவளுக்காக அங்கு காத்திருக்கும் பேயை ஏமாற்றாமல்!

"வினி எழுந்திரூ உன்னை பார்க்க யாரோ வந்திருக்காங்க"

“யாரு”

“மகேன்னு சொன்னங்க”

“ம்ம்ம்ம் சரி”

"உனக்கு ரொம்ப நேரமாய் போன் பண்ணி இருக்கார் அவர். வீட்டுக்கு வெளியில் அவர் நின்னுட்டு இருக்குறத அண்ணா தான் பார்த்து இருக்கார் வினி".. அதுவரை நன்றாக பேசிக்கொண்டு இருந்த சித்ரா, திடீரென அமைதியாகிவிட அவளை கேள்வியுடன் பார்த்தாள் வினிதா.

"என்ன டீ கன்னம் இப்படி சிவந்து இருக்கு" - சித்ரா

"சுவற்றில் இடிச்சுகிட்டேன்" வினிதா சொல்வதை நம்பாமல் அரை வெளியே இருந்த அமுதாவை அழைத்தாள் சித்ரா.

"அக்கா இங்க வாங்க.. இவ ஏதோ கதை சொல்லுறா"

"உன்னை யார் அறைந்தது வினி?"  -

"ஹான்??"  முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்த்தாள் வினிதா.. அவள் கன்னத்தில் ஐந்து விரலும் பதிந்து இருந்தது. கூடவே, சற்று முன் அந்த உருவம் தன்னிடம் சொன்னது நினைவிற்கு வந்தது. அதை மறைத்து சுதாரித்தவள்,

"ஒன்னும் இல்லக்கா.. காலையில் இருந்தே இருந்தது.. இப்போத்தான் தெரியுது போல. நானே குளிக்கும்போது தான் பார்த்தேன்.." அவர்கள் அடுத்த கேள்வியை கேட்கும் முன்னே அவளே அதற்க்கான பதிலை சொல்லி  விட்டாள். அறையில் இருந்தால் இன்னும் பல கேள்விகள் வருமென அவளுக்கு தெரியும். அதை தவிர்க்க முகம் கழுவிவிட்டு, மகேனை  பார்க்க சென்றாள் .

"வாங்க மகேன்.. சாரி ரொம்ப நேரமா வெயிட் பண்ண வெச்சிட்டேன்"

"இட்ஸ் ஓகே.. உங்களை யாரு அடித்தது.. உங்க முகம் ஏன் இப்படி இருக்கு?" என்று அவன் கவலையாக கேட்க

"என்ன நடந்ததுன்னு இன்னும் எங்களுக்கே புரியல" என்றபடி மீண்டும் அவனிடம் நடந்ததை சொல்ல தொடங்கினாள்..

"மகேன் நீங்க ஏப்படி ஆவி, பேய் எல்லாம் இருக்குன்னு நம்புறிங்க? நான் ஏன் கேட்குறேன்னா, இதபத்தி யாருகிட்ட பேசினாலும், ஒன்னு இதை நம்ப மாட்டுறாங்க.. இல்லன்னா நமக்கு பைத்தியம்னு பட்டம் கட்டுறாங்க... நான்.." என்று தனது ஆதங்கத்தை சொல்ல வந்தவளை கை செய்கையினாலே தடுத்து

"என்னால உங்க நிலையை புரிந்து கொள்ள முடியும்.. நானும் இதை எல்லாம் தாண்டித்தான் வந்திருக்கேன்" என்றான்.

"சின்ன வயசுலேயே பேரன்ட்ஸ் இறந்துட்டாங்க.. உறவினர்கள் யாருமே எங்களை பார்த்துக்க முன் வரவில்லை.. அக்கம் பக்கத்துல அப்பாவுக்கு தெரிஞ்சவங்க அண்ட் ரூபனின் பேரன்ட்ஸ் தான் என்னையும் என் தங்கையையும் பார்த்துகிட்டாங்க...

எப்படியோ நல்லா படிச்சு, நான் பகுதி நேரமாய் வேலை பார்த்துகிட்டே எங்களை பார்த்துகிட்டேன். எனக்கும் தங்கச்சிக்கும் காலேஜ்ல உதவி தொகை கிடைச்சது.. அதை வைச்சே இருவரும் நல்லா படிச்சோம் . நான் காலேஜ் இறுதி ஆண்டு படிக்கும்போது என் தங்கச்சி ஒரு டூருக்கு போனா.. திரும்பி வரும்போது பஸ் எக்சிடண்ட்ல அவ செத்துட்டா"

" .."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.