(Reading time: 15 - 30 minutes)

தன் பின்னர் ரூபனின் அப்பாவிற்கு அவனால் முடிந்த சிறு சிறு உதவிகளை செய்ய தொடங்கினான் மகேன்.. ரூபனுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்று தெரிந்த போதும் அவன் அதை பெருசாக எடுத்துக்கொள்ளவில்லை.. மகேனுக்கு  ஆத்மாவை பற்றி தெரிந்துகொள்ள நிறைய ஆர்வம் இருந்தது.. ஆகையால், ரூபனின் அப்பாவை பார்க்கும்போதெல்லாம் அவரிடம் பேசி கொஞ்சம் கொஞ்சமாய் தெரிந்துகொள்ள தொடங்கினான்..

வன் சொல்லி முடித்த பின்னரும் யாருக்கும் என்ன சொல்வது என தெரியவில்லை.. அமுதனால், இதை ஏற்றுகொள்ள முடியவில்லை.. இவனது கூற்றில் உண்மை எப்படி இருக்க முடியும்?

காலையில் சித்ராவும் வினிதாவும் ஒரு கதை சொன்னார்கள்.. இப்போது இவன்.. இதெல்லாம் எங்கு போய்  முடிய போகிறதோ???.. என்று நினைத்து கொண்டவன், அமுதாவை பார்க்க, அவளோ வேறு சிந்தனையில் இருந்தாள்.. இவர்களில் முதலில் சுதாரித்தது வினிதா தான்..

"ஐ எம் சாரி.. எனக்கு இதெல்லாம் தெரியாது"

"இட்ஸ் ஓகே வினிதா.. யாரும் தெரிந்துகொண்டே இதை கேட்க மாட்டாங்க"

"உங்களுக்கு அந்த வீட்டை பத்தி தகவல் ஏதும் கிடைத்ததா?"

"ஹ்ம்ம் ரொம்ப இல்ல.. போலிஸ்கிட்ட, இந்த வீட்டில் இருந்தவங்க இதுக்கு முன்னாடி கொடுத்த கம்ப்ளைன்ட் தான் இருக்கு.."

"என்ன கம்ப்ளைன்ட்?"

"மூணு வருஷத்துக்கு முன்னாடி இந்த வீட்டில் இருந்தவங்களுடைய குழந்தைய காணோமாம்.."

"யாரு அம்மு குட்டியா?" - அமுதா

"உங்களுக்கு அவங்களை தெரியுமா?"- மகேன்

"நீங்க யாரை சொல்லுறிங்கன்னு சரியாத்தெரியல.. எங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுறோம்.. மூன்று வருடத்திற்கு முன்னாடி இங்க ஒரு குடும்பம் இருந்தாங்க..

கொஞ்ச நாளில் திடீர்னு அங்க யாருமே இல்லை.. ஹவுஸ் ஓனர் அவங்க வீட்டை காலி பண்ணிட்டு போய்விட்டதாக சொன்னாரு.. அவங்க எங்க போனாங்கன்னு யாருக்குமே தெரியாது.. அதன் பின்னால பலபேரு இங்க  வாடகைக்கு வந்தாங்க.. ஆனா யாருமே மூன்று மாதத்துக்கு மேல இங்க இருந்தது இல்லை..

பழைய ஹவுஸ் ஓனர் இந்த வீட்டை விற்று விட்டார்.. புதுசா குடி வந்தவங்களும் இந்த வீடு வேணாம்னு ஒரு மாதத்திலேயே போய்ட்டாங்க.. இந்த வீடு கிட்ட தட்ட அஞ்சு பேருகிட்டயாவது கை மாறி இருக்கும்.. வாடகைக்கு  குடி இருந்த சிலருமே சொல்லிட்டு போய்டுவாங்க.. சிலர் சொல்லாமலே போயிருவாங்க.. கடைசியா  வினிதாவுடைய ஹவுஸ் ஓனர் தான் இந்த வீட்டை வாங்கி இருக்காங்க.."

"இந்த வீட்டுல இவ்வளவு கதை இருக்கா? இந்த வீட்டுக்கு குடிவர்ரவங்க எல்லாரும் ஏன் வீடு மாறி போறாங்கன்னு உங்களுக்கு காரணம் தெரியுமா?"

"அது தெரியாது.. யாருமே சரியான காரணத்தை சொல்றது இல்லை"

"சரி நீங்க ஏன் அம்மு குட்டியான்னு கேட்டிங்க?" -மகேன்

"தெரியல, அவங்க கிளம்பி போனதுல இருந்துதான் என்னென்னமோ நடக்குற மாதிரி தோணுது.."

"அவங்கன்னு  நீங்க யாரை சொல்லுறிங்க?" - மகேன்..

"சாரி மகேன்.. அவங்க நிக் நேம் தென்றல்.. ஹஸ்பண்ட  அண்ட் வைப் ரெண்டு பேருமே அக்கம் பக்கம் யாருகிட்டயும் பேச மாட்டங்க.. எங்களை பார்த்தால், ஒரு சின்ன ஸ்மைல் பண்ணிட்டு போயிருவாங்க. அமுதா கிட்ட மட்டும் அந்த பொண்ணு கொஞ்சம் பேசுவாங்க.. ஆனா அவங்களை பத்தி டீடைல்ஸ் சொன்னது இல்லை" என்றான் அமுதன்.. அவன் பதிலை கேட்டு சிந்தித்தப்படியே, அமுதாவை பார்த்து அடுத்த கேள்வியை கேட்டான்..

"அவங்க போன பிறகுதான் நிறைய விஷயம் நடந்துச்சுன்னு சொன்னிங்களே.. என்னென்னனு சொல்ல முடியுமா?"

"இங்க செக்யூரிட்டி ஒருத்தர் வேலை செய்தார் .. அவர் தென்றல் போனதுல இருந்தே இந்த வீட்டில் யாரோ அழுகுர சத்தம் கேட்குதுன்னு சொல்லிட்டே இருப்பார்.. அவரும் ஒரு நாள் இறந்துட்டார்.. அதுவும் மர்மமான முறையில.. அவர் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்துட்டாங்கன்னு சொன்னாங்க.. அதாவது மாடியில் இருந்து.. இந்த பில்டிங் மொட்டை மாடி பல வருஷமா பூட்டிதான் இருக்கு.. அவர் இந்த வீட்டு பால்கனியில் இருந்து தான் விழுந்து இருக்கணும்னு போலிஸ் சொன்னாங்க.. ஆனா அவங்களுக்கே அது டவுட்டு தான்..

ஏன்னா சுந்தரம் தாத்தா இங்க வந்ததுக்கு எந்த ஒரு ஆதாரமே இல்லை.. சிசிடிவீ பதிவு எதுவும் இல்லை.. அவர் இந்த மாடிக்கும் வந்ததுக்கும், அதுவும் யாருமே வராமல் பூட்டி இருக்கும் வீட்டிற்கு அவர் வந்துருப்பார்ன்னு சொல்லுறதும்  நம்ப முடியாத மர்மம்.. (முதல் எபிசொட்ல நாம பார்த்தது இந்த சம்பவம் தான்)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.